அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் விடுமுறை மற்றும் சர்ஃபிங் செய்யும் இடத்தில் உள்ள கடல் பகுதியில் ஒரு சுறா வாலிபரை தாக்கி கொன்றதாக போலீசார் இன்று தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு, யோர்க் தீபகற்பத்தில் உள்ள இன்ஸ் தேசிய பூங்காவில் உள்ள எதெல் கடற்கரைக்கு அருகில், உடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டது…
மியான்மாரில் மேலும் 3 இடங்களில் குண்டுவெடிப்பு
கிழக்கு மியான்மரில் சமீபத்திய ஆண்டுகளில் ராணுவத்தினருக்கும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த புரட்சியாளர்களுக்கும் இடையே ஏற்படும் மோதல்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. மியன்மார் தலைநகர் யாங்கோனில் இருந்த பிரபலமான ஹோட்டல் ஒன்றில் கடந்த 14ம் திகதி நடைபெற்ற வெடிவிபத்தில் அங்கு குடும்பத்துடன் தங்கியிருந்த அமெரிக்கப் பெண்மணி ஒருவர் காயமடைந்தார். பயங்கரவாத செயல்கள்…
வெள்ள நிவாரணத்தை பார்வையிட விவசாயி மீது சவாரி: அதிகாரி பதவி…
பீஜிங்: வெள்ள நிலைமையை பார்வையிட சென்ற அதிகாரி, தன் செருப்பு நனையக் கூடாது என்பதற்காக, விவசாயி மீது சவாரி செய்ததால், அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சீனாவின், ஜேஜியாங் மாகாணத்தில, இம்மாத துவக்கத்தில் ஏற்பட்ட புயல், மழையால், 10 பேர் உயிரிழந்தனர்; 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்; ஏராளமான…
ரகசிய வங்கிக் கணக்கு விவரங்களைத் தர ஸ்விட்சர்லாந்து சம்மதம்
உலகிலேயே மிக ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரும் தங்கள் நாட்டு வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கு விவரங்களை வெளியிட ஸ்விட்சர்லாந்து அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பலரும் தங்கள் கருப்புப் பணத்தை ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் பதுக்கி வைத்துள்ளதாக தகவல்கள்…
குடியரசுக் கட்சியின் திட்டத்தை நிராகரித்தார் ஒபாமா
குடியரசுக் கட்சியின் கடன் நெருக்கடிக்குத் தீர்வு காணும் திட்டத்தை ஒபாமா நிராகரித்ததால் அமெரிக்காவில் நெருக்கடி நீடிக்கிறது. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பட்ஜெட்டுக்கு குடியரசுக் கட்சி ஒப்புதல் தர மறுத்தது. மேலும் அமெரிக்காவில் நிலவும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க கடன் உச்சவரம்பை உயர்த்தவும்…
தொழுகையில் குண்டு வெடிப்பு: ஆப்கன் ஆளுநர் சாவு
ஆப்கானில்தானில் செவ்வாய்க்கிழமை பக்ரீத் பண்டிகை தொழுகையின்போது, நிகழ்ந்த குண்டு வெடிப்பில் அந்நாட்டின் மாகாண ஆளுநர் அர்சலா ஜமால் கொல்லப்பட்டார். காபுல் அருகே லோகார் என்ற இடத்தில் உள்ள பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகை தொழுகையில், ஆளுநர் அர்சலா ஜமால் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு மைக்ரோபோனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததாக ஆளுநரின்…
2014-க்கு பிறகும் ஆப்கனில் அமெரிக்கப் படைகள் நீடிக்க இரு நாடுகளிடையே…
2014க்கு பிறகும் ஆப்கனில் அமெரிக்கப் படைகள் நீடிக்கும் என்ற ஒப்பந்தத்தை நிறைவேற்றினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலிபான் பயங்கரவாத அமைப்பு தலைவர் முல்லா முகமது ஒமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பயங்கரவாத அமைப்பான அல்-காய்தாவை அழிக்க, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையைச் சேர்ந்த 87,000 வீரர்கள் ஆப்கானிஸ்தானில்…
ரஷ்யாவில் பயங்கர வன்முறை : 1,600 பேர் கைது
ரஷ்யாவில் வலதுசாரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து எழுந்த வன்முறைச் சம்பவத்தால் சுமார் 1,600 பேரை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது. அந்த இளைஞரைக் கொன்றது காகசஸ் இனத்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வலதுசாரிகள் ஞாயிற்றுக் கிழமை பிரியுலியோவில் திரண்டு வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் அவர்களில்…
பெரு நாட்டில் பஸ் விபத்து 52 பேர் பலி
லிமா: தென் அமெரிக்க நாடான பெருவில், பயணிகள் பஸ், மலை சரிவிலிருந்து ஆற்றில் கவிழ்ந்ததில், 52 பயணிகள் உயிரிழந்தனர். பெரு நாட்டின், சான்டா தெரசா மாகாணத்தில், பயணிகள் பஸ் ஒன்று மலை பாதையில் சென்று கொண்டிருந்தது. எதிரே வந்த சரக்கு லாரிக்கு வழி விடுவதற்காக, ஒதுங்கிய போது, மலை…
ஐ.நா ஹெலிகொப்டரை சுட்டு வீழ்த்திய தீவிரவாதிகள்
காங்கோ ஜனநாயக குடியரசின் கிழக்குப் பகுதியில் ஐ.நா.வின் ஹெலிகொப்டரை மார்ச் 23(எம்23) இயக்கத் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இந்த சம்பவம் வடக்கு கிவு மாகாணத்தின் ருமாங்காபோ பகுதியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்துள்ளது. இப்பகுதியில் கடந்த 18 மாதங்களாக அரசுப் படையினருக்கும், ஐ.நா அமைதிப்படையினருக்கும் எதிராக மார்ச் 23 (எம்23) இயக்கத்…
அமெரிக்கப் பொருளாதாரம் முடங்கும் அபாயம்!
கடன் உச்சவரம்பை உயர்த்தாவிட்டாலும், நிதிச் செலவினங்களுக்கு ஒப்புதல் அளிக்காவிட்டாலும் அமெரிக்காவின் பொருளாதாரம் முடங்கும் நிலை ஏற்படும் என்று அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா எச்சரித்துள்ளார். நிதி நெருக்கடியால் அமெரிக்காவில் தொடர்ந்து 12வது நாளாக அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்நாட்டு மக்களுக்கு ஒபாமா ஆற்றிய உரையில், "இந்த நிலைமையைக்…
அமெரிக்க படைகளிடம் சிக்கிய தலிபான் தளபதி
கிழக்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளிடம் தலிபான் இயக்கத்தின் முக்கிய தளபதி லத்தீப் மசூத் சிக்கியுள்ளார். ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் தங்கியுள்ள தலிபான், அல்கொய்தா தீவிரவாதிகளை ஒழித்து கட்டும் நோக்கில் அமெரிக்க படைகள் முகாமிட்டுள்ளன. சமீபத்தில் பாகிஸ்தான் தலிபான் தீவிரவாத தலைவர் லத்தீப் மசூத் என்பவர் அமெரிக்க படையிடம் பிடிபட்டார்.…
பாகிஸ்தான் பிரதமராக விரும்புகிறேன்: மலாலா
நாடு முழுவதும் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க செய்ய பிரதமராக விரும்புகிறேன் என பாகிஸ்தான் சிறுமி மலாலா தெரிவித்துள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமி மலாலா யூசஃப்ஸாய் (16), கடந்த ஆண்டு தலிபான் பயங்கரவாத அமைப்பால் தாக்கப்பட்டார். அதிலிருந்து மீண்டு அனைவருக்கும் கல்வி கிடைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்த ஆண்டு…
அழகிகள் மீதான ஆசையால் மாட்டிக் கொள்ளும் அதிகாரிகள்
பதவி, பணத்தின் மூலம் தவறான உறவு வைத்துக் கொண்ட சீன அதிகாரிகள் தற்போது சிக்கலில் மாட்டி வருகின்றனர். சீனாவில் உயர்ந்த பதவிகளை வகிக்கும் அதிகாரிகள், அழகிகளுடன் தவறான உறவு வைத்துக் கொள்கின்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோக் காட்சிகளும் தற்போது வெளியாகி வருவது அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.…
“நெருங்கிய நட்பு நாடு’ அந்தஸ்து இந்தியாவுக்கு தற்போது இல்லை: பாகிஸ்தான்
இந்தியாவில் 2014இல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன், நெருங்கிய நட்பு நாடு அந்தஸ்து (எம்.எஃப்.எஸ்.) அளிப்பது தொடர்பாக இந்தியாவுடன் பேச வாய்ப்பில்லை என்று பாகிஸ்தான் நிதி அமைச்சர் இஷாக் தர் தெரிவித்தார். வாஷிங்டனில் புதன்கிழமை நடைபெற்ற அட்லாண்டிக் கவுன்சில் கூட்டத்தில் அவர் பங்கேற்றுப் பேசியபோது, "இந்தியப் பிரதமர் மன்மோகன்…
லிபியா பிரதமர் கடத்தப்பட்டு விடுதலை
லிபியா பிரதமர் அலி ùஸய்தான், தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, பல மணி நேரம் கழித்து விடுவிக்கப்பட்டார். கடந்த 5-ஆம் தேதி, அமெரிக்க அதிரடிப்படையினர் லிபியா தலைநகர் திரிபோலியில் தாக்குதல் நடத்தி, அனாஸ் அல்-லிபி எனும் பயங்கரவாதியைப் பிடித்துச் சென்றனர். இதற்கு முன்னாள் அதிபர்…
காமன்வெல்த்துக்கான கனடாவின் உதவிகள் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும்!
இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் தான் கலந்துகொள்ளமாட்டேன் என்று கூறியுள்ள கனடாவின் பிரதமரான ஸ்டீபன் ஹார்ப்பர் அவர்கள், அதுமாத்திரமன்றி காமன்வெல்த் அமைப்புக்கான நிதியுதவியையும் கனடா நிறுத்துவது குறித்து பரிசீலிப்பதாகவும் கூறியுள்ளார். காமன்வெல்த் அமைப்புக்கு நிதி உதவி வழங்குவதில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கனடா வருடாந்தம் 20 மில்லியன் டாலர்களை…
காலரா பரப்பிய குற்றச்சாட்டில் ஐநாவுக்கு எதிராக ஹெய்ட்டி வழக்கு
உலகிலுள்ள வறிய நாடுகளில் ஒன்றாக காணப்பட்ட போதிலும் ஹெய்ட்டிக்குள் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் வரை, அதாவது சுமார் ஒரு நூற்றாண்டுக் காலத்துக்குள் கொலரா அங்கு எட்டிப்பார்த்தது கூட கிடையாது. ஒரு காலரா நோயாளி கூட அதற்கு முன்னர் அங்கு பதிவானது கிடையாது. ஆனால், 2010-ம் ஆண்டின் இறுதியில் அங்குள்ள…
சிரியா ரசாயன ஆயுத அழிப்பு நடவடிக்கை பேராபத்து நிறைந்தது
சிரியாவில் ரசாயன ஆயுதங்களை அழிக்கும் பணியில் ஓராண்டு காலம் ஈடுபடவுள்ள நிபுணர்கள் எதிர்பாராத பல பேராபத்துக்களைச் சந்திக்க நேரிடும் என ஐ.நா பொதுச் செயலாளர் பான்-கி-மூன் தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே ராணுவம் நிகழ்த்திய ரசாயன ஆயுத தாக்குதலில் 1400 க்கும் மேற்பட்டோர்…
மலாலாவுக்கு மீண்டும் கொலை மிரட்டல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் தலிபான் தீவிரவாதிகள், மலாலாவுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பெண் குழந்தைகளுக்கு கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக, கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம், 9ம் தேதி, மலாலா, 16, மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது; ஆனால், அந்த தாக்குதலில் இருந்து, மலாலா உயிர் பிழைத்து விட்டார்.…
இனவெறிப் பேச்சுக்கு நஷ்டஈடு: ஜப்பான் நீதிமன்றம் தீர்ப்பு
பள்ளி அருகே இனவெறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்குழுவினர், அந்த பள்ளிக்கு நஷ்டஈடாக 12 மில்லியன் யென் (ஜப்பான் நாணயம்) தர வேண்டும் என ஜப்பான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் இனப்பாகுபாடு காரணமாக கொரிய மக்களுக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரிய மக்களுக்கு…
எகிப்தில் நீடிக்கும் கலவரம்: 50 பேர் சாவு
எகிப்தில் போர் நினைவு நாள் நிகழ்ச்சியின் போது போலீஸாருக்கும், அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்ட முகமது மோர்ஸி ஆதரவாளர்களுக்கும் இடையே நேரிட்ட மோதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். எகிப்தில் உள்ள கெய்ரோ மத்திய சதுக்கத்தில் 1973ம் ஆண்டு நடைபெற்ற அரபு-இஸ்ரேலி போர் நினைவு தின நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.…
தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் சாவு
தெற்கு தாய்லாந்து பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் 2 போலீஸார் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து தென்பகுதி ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் பிரமோத் பிரோம் அளித்த பேட்டியில், "தெற்கு தாய்லாந்தின் நராதிவாத் கிராமத்தில் பயங்கரவாத அமைப்பினர் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருவதைத் தடுக்க, ராணுவமும் போலீஸாரும் இணைந்து…
எகிப்தில் கலவரம்: 15 பேர் சாவு
எகிப்தில் ஞாயிற்றுக்கிழமை போலீஸார்-முஸ்லிம் அமைப்புகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 15 பேர் உயிரிழந்தனர். எகிப்து தலைநகர் கெய்ரோவில் 1973ஆம் ஆண்டு அரேபிய-இஸ்ரேலிய போர் தினத்தை ராணுவ ஆதரவாளர்கள் விழாவாக கொண்டாடினார்கள். அப்போது முன்னாள் அதிபர் மோர்சியின் ஆதரவாளர்கள் மத்திய கெய்ரோ சதுக்கத்தில் போராட்டம் நடத்துவதற்காக குவிந்தனர். அங்கு போலீஸாருக்கும்,…