பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
அம்னோ ஹுடுட் ஆதரவு, மசீச-வுக்கு இக்கட்டான சூழ்நிலை
அந்தக் கட்சி பண அரசியலில் மூழ்கியிருப்பதை ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளது. பல ஊழல்களிலும் சிக்கியுள்ளது. இப்போது ஹுடுட் சட்டத்துக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்கின்றது. ஹுடுட் சட்ட அமலாக்கத்தை புத்ரி அம்னோ ஆதரிக்கிறது போத்தாக் சின்: இது குறித்து மசீச என்ன சொல்லப் போகிறது ? டிஏபி தலைவர் வெளிப்படையாக…
ஹூடுட் சட்ட அமலாக்கம்: புத்ரி அம்னோ ஆதரிக்கிறது
ஹூடுட் சட்டம் அமலாக்கப்பட வேண்டும் என்று ஜொகூர் அம்னோ கெமெலா சட்டமன்ற உறுப்பினர் அயுப் ரஹ்மாட் முன்வைத்த கோரிக்கைக்கு அம்னோ புத்ரி தலைவர் ரோஸ்னா அப்துல் ரஷிட் ஷிர்லின் தெரிவித்துள்ள ஆதரவு அக்கோரிக்கை வலுப்பெற்று வருவதைக் காட்டுகிறது. அந்தக் கோரிக்கையை புத்ரி இயக்கம் ஆக்ககரமானதாகக் கருதுகிறது, ஆனால் அதைக்…
சிலாங்கூர் பாஸ்: சினிமா விதிமுறை ஹுடுட் சட்டங்களின் தொடக்கம் அல்ல
திருமணமாகாத முஸ்லிம் ஜோடிகள் சினிமா அரங்குகளில் தனித்தனியாக அமர்ந்து படம் பார்க்க வேண்டும் என கோலா சிலாங்கூர் மாவட்ட மன்றம் விதித்துள்ள புதிய விதிமுறை, பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்வதைத் தடுக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. ஹுடுட் அல்லது இஸ்லாமியச் சட்டங்களை அமலாக்குவதற்கான தொடக்கம் அல்ல என சிலாங்கூர்…
அம்னோ இளம் உலாமாக்கள் ஜோகூரில் ஹூடுட் சட்டத்தை வரவேற்கிறார்கள்
அம்னோவின் இளம் உலாமா செயலகம், ஜோகூரில் எல்லா இனங்களுக்கும் ஹூடுட் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்டிருப்பதை வரவேற்கிறது. அதன் தலைவர் பாதுல் பாரி மாட் யஹயா, அதற்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதம் ஒன்று இன்னும் இரண்டு மூன்று நாள்களில் ஜோகூர் அம்னோவுக்கு அனுப்பி வைக்கப்படும் என சினார்…
ஹூடுட் சட்டம்: சந்தடியில்லாமல் பேசுவோம் என்கிறார் அம்னோ பிரதிநிதி
ஜொகூர் மாநிலத்தில் அனைத்து இனத்திருக்கும் ஹூடுட் சட்டம் அமல்படுத்த வேண்டும் என்று ஒரு சர்ச்சையைக் கிளப்பிவிட்ட அம்னோ கெமெலா சட்டமன்ற உறுப்பினர் அயுப் ரஹமட், இப்போது அப்பிரச்னையை சந்தடியில்லாமல் பேச வேண்டும் என்று கூறுகிறார். இப்போது அவ்விவகாரம் குறித்து பேச அயுப் மறுத்து விட்டார் என்று மலாய் நாளிதழ்…
ஹுடுட் தொடர்பில் அம்னோ தெரிவித்த யோசனையை துணை அமைச்சர் நிராகரிக்கிறார்
ஜோகூரில் எல்லா இனங்களுக்கும் ஹுடுட் சட்டம் அமலாக்கப்பட வேண்டும் என்ற அம்னோ யோசனையை விவசாய, விவசாய அடிப்படைத் தொழிலியல் அமைச்சர் சுவா தீ யோங் நிராகரித்துள்ளார். ஏனெனில் அது மாநிலச் சட்ட மன்ற உறுப்பினர் ஒருவரால் தெரிவிக்கப்பட்டதாகும். "அவர் சாதாரண அம்னோ மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் என்பதால் நான்…
‘அனைவருக்கும் ஹுடுட்’ என்ற அம்னோ பிரதிநிதியைச் சாடினார் மசீச தலைவர்
இஸ்லாமிய ஹுடுட் சட்டத்தை ஜோகூரில் முஸ்லிம்கள், முஸ்லிம்-அல்லாதார் என எல்லாருக்கும் பயன்படுத்த வேண்டும் என்று முன்மொழிந்த அம்னோவின் கெமெலா சட்டமன்ற உறுப்பினர் ஆயுப் ரஹ்மாட்டை மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் சாடியுள்ளார். ஆயுப் “புத்தி கெட்டுப்போய்” அப்படி மொழிந்திருக்கிறார் என்று சுவா நேற்றிரவு தம் டிவிட்டர்…
பாஸ்: கெடாவில் ஹூடுட் சட்டம் இல்லை
கிளந்தான், திரெங்கானு மாநிலங்களுக்கு வெளியில் ஹூடுட் சட்டத்தை நடைமுறைப்படுத்த பாஸ் எண்ணம் கொண்டிருக்கவில்லை. கடந்த வாரம் மலேசியாகினியுடனான நேர்காணலில் பாஸ் தகவல் பிரிவுத் துணைத் தலைவர் அஹ்மட் பாய்ஹாகி அடிகுவாலா இவ்வாறு கூறினார். பாஸ் அதன் இலட்சியங்களை நிறைவேற்றிக்கொள்ளுமுன்னர் மக்கள்தொகை அமைப்பையும் கருத்தில் கொள்ளும். “முஸ்லிம் மக்களைப் பேரளவில்…
பிகேஆராலும் டிஏபி-யாலும் ஹூடுட்டைத் தடுக்க முடியாது, மசீச
கிளந்தானில் ஹூடுட் சட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பதற்கு எதிராக பாஸின் தோழமைக் கட்சிகளான பிகேஆரும் டிஏபியும் எதுவும் சொல்ல முடியுமா என்பது சந்தேகமே என்கிறார் கிளந்தான் மசீச செயலாளர் டான் கென் டென். இன்று ஓர் அறிக்கையில் இதனைத் தெரிவித்த டான், கிளந்தானில் ஒரு காப்பிக்கடை பணிப்பெண் கைகள் தெரிய உடை…
ரித்துவான் தீ: ஹூடுட் சட்டம் “பலாத்காரமாக” அமல்படுத்தப்பட வேண்டும்
இஸ்லாமிய ஹூடுட் சட்டத்தை அமல்படுத்துவதற்கான ஒரே வழி அச்சட்டத்தை "பலாத்காரமாக" அமல்படுத்துவதுதான் என்று மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் ரித்துவான் தீ அப்துல்லா இன்று கூறினார். "இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்துவது மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு (இஸ்லாம் குறித்து) போதிப்பது பலவந்தத்தின் மூலமாக மட்டுமே முடியும்", என்று அந்த…
ஹுடுட், பக்காத்தான் அதிகாரப் பூர்வமான கொள்கை அல்ல
ஹுடுட் சட்ட அமலாக்கம் பக்காத்தான் கூட்டணியின் அதிகாரப் பூர்வமான கொள்கை அல்ல என்பதை கடந்த திங்கட்கிழமை நிகழ்ந்த அந்தக் கூட்டணியின் உயர் நிலைக் கூட்டம் உறுதிப்படுத்தியது. டிஏபி தலைமையகத்தில் நடந்த அந்தக் கூட்டத்தில் ஹுடுட் சட்டத்தை அமலாக்க பாஸ் எண்ணியிருப்பது பற்றி விவாதிக்கப்பட்டதாக டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான்…
ஹுடுட் விவகாரத்தை முஸ்லிம் அல்லாதாருடன் விவாதியுங்கள் என பாஸ் கட்சிக்கு…
கிளந்தானில் ஹுடுட் சட்டத்தை அமலாக்குவது தொடர்பில் பாஸ் கட்சி, கூட்டரசு அரசியலமைப்பையும் கட்சியின் அமைப்பு விதிகளையும் பின்பற்ற வேண்டியது அவசியம் என அந்தக் கட்சிக்கு நினைவுபடுத்தப்பட்டுள்ளது. கூட்டரசு அரசியலமைப்பை பின்பற்றுவதாக அந்தக் கட்சியின் அமைப்பு விதிகள் கூறுகின்றன. அதில் ஹுடுட் சட்ட அமலாக்கமும் அடங்கும் என பாஸ் ஆதரவாளர்…
ஹுடுட்: நாடாளுமன்ற பெரும்பான்மை கிடைக்க வேண்டும்; நிக் அஜிஸ்
இந்த நாட்டில் ஹுடுட் சட்டத்தை அமலாக்கும் பொருட்டு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைப்பதற்கு இறைவன் கருணை புரிய வேண்டும் என பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அஜிஸ் நிக் மாட் வேண்டிக் கொண்டுள்ளார். தொழுவது, நோன்பு இருப்பது, ஹாஜ் பயணம் மேற்கொள்வது போன்ற இஸ்லாத்தின் மற்ற…
முஸ்லிம் அல்லாதாருக்கு ஹுடுட் இல்லை என ஹாடி வாக்குறுதி
பாஸ் கட்சி, முஸ்லிம் அல்லாதவர்கள் மீது ஹுடுட் சட்டத்தை திணிக்காது என அந்தக் கட்சியின் 60வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஹுடுட் சர்ச்சையை கிளறி விடுவது அம்னோவே என்றும் அது பழி சுமத்தியது. அம்னோவும் அது 'பணம் கொடுக்கும்' ஊடகங்களும் அதனைப் பெரிய சர்ச்சையாக மாற்றி விட்டதாக…
பாஸ்: கிளந்தான் மக்கள் ஹூடுட்டுக்குத்தான் வாக்களித்தனர்
கிளந்தான் அரசுக்கு ஹூடுட்டை அமல்படுத்தும் அதிகாரம் ஜனநாயக முறைப்படி கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, அதற்கு ஜனநாயக உணர்வுடன் உரிய மதிப்பளிக்க வேண்டும். இதை இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்த பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான், பாஸ் இஸ்லாமியக் குறிக்கோள்களைக் கொண்டிருப்பதால்தான் அக்கட்சியைக் கிளந்தான் வாக்காளர்கள்…
பக்காத்தான் ஹுடுட் மீது இணக்கம் காணத் தவறியது
ஹுடுட் சட்டத்தைப் பொறுத்த வரையில் கூட்டரசு அரசியலமைப்பை தான், நிலை நிறுத்தப் போவதாக பக்காத்தான் ராக்யாட் அறிவித்துள்ளது. ஆகவே அந்தச் சட்டம் அமலாக்கப்படுவதற்காக அது அரசியலமைப்புத் திருத்தங்களை நாடாது என்பது அதன் அர்த்தமாகும். என்றாலும் கிளந்தானிலும் திரங்கானுவிலும் ஹுடுட் தொடர்பாக நடப்பில் உள்ள சட்டங்கள் மீது இணக்கமில்லை என்பதை…
“கிளந்தானியர் பலரும் ஹூடுட் சட்டத்தை விரும்புகிறார்கள்”
கிளந்தானுக்கு மேற்கொண்ட வருகை ஹூடுட் சட்டம் பற்றி அம்மாநில மக்கள் கொண்டுள்ள கருத்தை அறிந்துகொள்ள உதவியதாகக் கூறுகிறார் அரசமைப்பு வல்லுனர் ஒருவர். “ஹூடூட் பற்றி தோக் குருவிடம் (கிளந்தான் மந்திரி புசார் நிக் அப்துல் அசீஸ் நிக் மாட்) எடுத்துரைக்க கிளந்தான் சென்றேன். அங்கு சாதாரண மக்களிடம் பேசிப்…