பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சசிகலா முதல்வராக பதவியேற்க தடை கோரி சட்ட பஞ்சாயத்து இயக்கம்…
டெல்லி: தமிழகத்தின் முதல்வராக சசிகலா பதவியேற்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற உள்ளது. அதிமுக எம்.எல்.ஏ..க்கள் கூட்டத்தில் சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதையடுத்து சசிகலாவும் தாம் முதல்வர் பதவியை ஏற்கப் போவதாக கூறியுள்ளார். சசிகலா…
ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது.. தொடரும் இலங்கையின் அட்டூழியம்
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ளது. அவர்களுடைய 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் 2 படகுகளுடன் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். நெடுந்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியல் ரோந்து…
தமிழகத்தின் முதல்வராகிறார்… மக்களுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத சசிகலா!
சென்னை: ஜெயலலிதா மறைந்து சரியாக இரண்டாவது மாதங்கள் ஆன நிலையில் தமிழக முதல்வராக சசிகலா தேர்தெடுக்கப்பட்டுள்ளார் . கடந்த டிசம்பர் 5ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். 30 நாட்கள் முடியும் முன்பாகவே பொதுச்செயலாளரான சசிகலா, இரண்டே மாதத்தில் ஆட்சியை…
முதல்வர் கனவு சசிகலாவுக்கு பேரிடி- சொத்து குவிப்பு வழக்கில் ஒருவாரத்தில்…
டெல்லி: முதல்வர் பதவியில் உட்கார்ந்துவிட தயாராகிவிட்ட சசிகலாவுக்கு டெல்லியில் இருந்து இன்று வந்துள்ள செய்தி பேரிடியாகத்தான் இருக்கும். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் விடுதலையை எதிர்த்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை ஒருவாரத்தில் வழங்க இருக்கிறது உச்சநீதிமன்றம். 1991-96-ம் ஆண்டு முதல்வராக இருந்த…
சசிகலா முதல்வராவதை தடுங்கள்.. ஜனாதிபதிக்கு கோரிக்கைவிடுத்து கையெழுத்து இயக்கம்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராக அனுமதிக்க கூடாது என்றும், தமிழக அரசை கலைக்க வேண்டும் என்றும் குடியரசு தலைவருக்கு கோரிக்கைவிடுத்து, கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளது. தமிழ் அரசன் என்பவர் change.org என்ற பிரபல கையெழுத்து இயக்க வெப்சைட் மூலம் இக்கோரிக்கையை வைத்துள்ளார். ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்தியாவின் ஒரு மாநிலத்தை…
பண மதிப்பு நீக்கத்தால் கருப்புப் பணம் ஒழியவில்லை: ப. சிதம்பரம்
மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் கருப்புப் பணம் ஒழியவில்லை என மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார். தஞ்சாவூரில் மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற பண மதிப்பு நீக்கம் - மக்கள் படும் வேதனை என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தில் அவர்…
ஜல்லிக்கட்டு விழா.. அதிரும் அவனியாபுரம்… அதிகாலையிலேயே காண குவிந்த பொதுமக்கள்!!
மதுரை: அவனியாபுரத்ததில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பல தடைகைள தாண்டி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைப்பெற்று வருவதால் அதனை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்து வருகின்றனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் கடந்த 3 ஆண்டுகளாக தடைவிதித்திருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும்…
காவிரியில் திறந்துவிடப்பட்ட கழிவுநீர்… இடித்து தரைமட்டமாக்கப்பட்ட 50 சாயப்பட்டறைகள்
நாமக்கல் அருகே கழிவுநீரை காவிரியில் திறந்துவிட்ட 50க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. வருவாய்த்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கையால் அனுமதியின்றி சாயப்பட்டறைகளை நடத்தி வரும் உரிமையாளர்கள் பீதியடைந்துள்ளனனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 200 சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. இதில் 50 சாயப்பட்டறைகள் மட்டுமே சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, அரசு…
தமிழ்நாட்டின் ஆறுபடை வீடு அறக்கட்டளை, மலேசிய நாட்டுக்குள் மூக்கை நுழைக்க…
மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில், தண்ணீர்மலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில் கடந்த 230 ஆண்டுகளாக பினாங்கு தமிழ் மக்களால் போற்றிப் பாதுகாக்கப்படுகின்றது. தமிழர்கள் வழிபடும் முருகக் கடவுளை அறக்கட்டளை பராமரித்து வருகின்றது. ஆலயக் குழுத் தலைவராக பினாங்கு மாநிலத் துணை முதல் அமைச்சரும், ஈழத் தமிழர்களின் காவல் அரணுமான…
சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிக்க உதவிய தொழிலதிபர்… விஜயகுமார் புத்தகத்தில்…
சென்னை: சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க தொழிலதிபர் ஒருவர் உதவியதாகவும் கண் அறுவை சிகிச்சைக்கு வந்தபோது வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அதிரடிப்படைத் தலைவராக இருந்த விஜயகுமார் தம்முடைய புத்தகத்தில் எழுதியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. 30 ஆண்டுகாலம் தமிழகம், கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு சவாலாக விளங்கியவர் சந்தனக் கடத்தல் வீரப்பன்.…
இழுத்தடித்த அதிகாரிகள்: நெல் மூட்டையிலேயே உயிரை விட்ட விவசாயி!
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அடுத்த மருங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (68). 3 ஏக்கரில் நெல் பயிரிட்டிருந்தார். அறுவடை முடிந்து 35 மூட்டைகளை விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு கடந்த 29ம் தேதி கொண்டு வந்திருந்தார். ஆனால், விற்பனை கூடத்தில் மூட்டைகளை வைக்க குடோன் வசதி இல்லை.…
நாகாலாந்தில் வன்முறை: துணை ராணுவத்தினர் குவிப்பு
போராட்டக்காரர்களால் வியாழக்கிழமை கொளுத்தப்பட்ட நகராட்சி கவுன்சில் அலுவலகம். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வந்த போராட்டத்தில் வியாழக்கிழமை வன்முறை வெடித்தது. சுமார் 1,000 போராட்டக்காரர்கள் அந்த மாநிலத்தின் தலைநகர் கோஹிமாவில் உள்ள…
விரைவில் இந்தியா-பாக்., எல்லையில் நவீன வேலிகள்: கிரண் ரிஜிஜூ
புதுடில்லி : இந்தியா-பாக்., எல்லையில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் விரைவில் நவீன வேலிகள் அமைக்கப்படும் என மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். நவீன வேலிகள்: இதுகுறித்து டில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது: பாக்., பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவும் சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது. எல்லைகளிலுள்ள வேலியை…
தரமற்ற உணவு வழங்கப்படுவதாக வீடியோ வெளியிட்ட வீரரை சிறையில் தள்ளிய…
எல்லைப் பாதுகாப்பு படையில் தரமான உணவுகள் வினியோகிக்கப்படவில்லை என, சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு வெளியிட்டு புகார் தெரிவித்த வீரர் தேஜ்பகதுர் சிறை வைக்கப்பட்டுள்ளதாக, அவரது மனைவி புகார் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் எல்லைப் பாதுகாப்புப்படையை சேர்ந்த தேஜ்பகதுர் என்ற வீரர், முகாம்களில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாகவும்,…
மாணவர்கள், பொதுமக்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்
மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம் 01.02.2017 சல்லிக்கட்டு மீதான தடையை நீக்கிடக்கோரி தமிழகமெங்கும் அறவழியில் இன எழுச்சியோடு போராடிய மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை மற்றும் இளைஞர்…
பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த சட்ட…
பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கேரள அரசின் முயற்சியைத் தடுத்து நிறுத்த சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இதுதொடர்பாக சட்டப் பேரவையில் அவர் ஆற்றிய உரை:- காவிரி நடுவர் மன்றமானது 2007-ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிட்ட இறுதி உத்தரவில், பாம்பாறு உப படுகைக்கென 3…
வீழ்வானோ வீரத் தமிழன்.. வைரலாகிறது நாடி நரம்பை முறுக்கேற்றும் ஜல்லிக்கட்டு…
சென்னை: குரு கல்யாண் இசையில், வீர தமிழன் என்ற பெயரில் வெளியாகியுள்ள தமிழர் பண்பாடு மற்றும் பொங்கல் குறித்த ஒரு பாடல் வைரலாகியுள்ளது. பொங்குக.. என தொடங்கும் அந்த பாடலில், "வீழ்வானோ வீரத்தமிழன் வீழ்வானோ, சாய்வானோ இவன் சாய்வானோ, மண்ணின் பிள்ளை மாய்வானோ" என்று உணர்ச்சி பொங்கும் வரிகள்…
ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை.. தமிழிசை யோசனை
சென்னை: ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் அரசு வேலை வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகமெங்கும் பல இடங்களில் ஜல்லிக்கட்டு மகிச்சியோடு கொண்டாடும் வேளையில் ஆங்காங்கே நடக்கும் சில விபத்துகளும், உயிரிழப்புகளும் கவலை அளிக்கிறது.…
நிலையற்ற அரசு, உடையும் கட்சிகள்.. தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக…
சென்னை: தமிழகத்தை மிகப் பெரும் அரசியல் குழப்பங்கள் நெருக்கிக் கொண்டிருக்கின்றன. தற்போதைய ஆளும் அரசின் எதிர்காலம் என்ன? ஆதிக்கம் செலுத்தும் கட்சிகளின் எதிர்காலம் என்ன? என ஏகப்பட்ட கேள்விக்குறிகள் தமிழகத்தில் விஸ்வரூபமெடுத்து வருகின்றன. நாடு விடுதலை அடைந்த காலம் முதல் தமிழகத்தில் வலிமை மிக்க தலைவர்கள், அசைக்க முடியாத…
சென்னை வன்முறை: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன்..…
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று விதி எண் 110ன் கீழ் அறிக்கை வாசித்த முதல்வர் ஒ. பன்னீர்செல்வம், சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட 36 மாணவர்களும் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். சென்னையில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக…
இந்த அழகான புரட்சிப் பெண்ணின் கதி..? அம்பலமான சூழ்ச்சி…
ஜல்லிக்கட்டு போராட்டம் இளைஞர்களின் எழுச்சியால் பெரும் வெற்றி பெற்றது. ஓர் அகிம்சையான போராட்டத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். உலக மக்களுக்கும், இந்திய தேசத்திற்கும் ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். இதில் உலகமே வியந்த விஷயம் என்னவென்றால் நான்கு நாட்கள் போராட்டத்தில் பொலிஸார் கொடுத்த அபார ஒத்துழைப்பு. காவலர்கள் மாணவர்களுக்கு செய்த…
ஆட்டோவுக்கு தீவைத்த பொலிஸ் சிக்கினார்: நடவடிக்கை பாயுமா?
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஆட்டோவுக்கு தீ வைத்த பெண் பொலிஸ் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் சிக்கியுள்ளார். சென்னை, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 17ஆம் திகதி முதல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடையை நீக்கும் வகையில் அவசர சட்டத்தை…
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம்: அதிரடி உத்தரவு- தமிழர்களுக்கு வெற்றி
தமிழக அரசின் ஜல்லிக்கட்டு தொடர்பான சட்டத்திற்கு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாபெரும் போராட்டம் வெடித்ததை தொடர்ந்து, மத்திய அரசு உதவியுடன் தமிழக அரசு ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் அவசர சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றியது. முன்னதாக இந்த சட்டத்திற்கு…
