தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு- கர்நாடகாவில் பந்த் தொடங்கியது-…

பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் கர்நாடகத்தில் இன்று காலை முழு அடைப்புப் போராட்டம் தொடங்கியது. காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து மாண்டியா மைசூரு, பெங்களூரில் கன்னட அமைப்புகள், விவசாய சங்கங்கள் தொடர்ந்து 5-ஆவது நாளாக…

பெங்களூரில் தமிழ் நாளிதழ்கள் தீயிட்டு எரிப்பு!!

பெங்களூர்: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து கன்னட அமைப்புகள் இன்று கர்நாடகா பந்த் நடத்துகின்றன. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பந்த் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசுக்கு எதிரான பந்த்தாக இல்லாமல், சில அமைப்புகள் இதை தமிழர்களுக்கு எதிரான…

அப்துல் கலாம் இறக்கவில்லை. கொலை செய்யப்பட்டார்? பரபரப்பை கிளப்பிய தகவல்கள்

இந்தியாவில் மக்களின் ஜனாதிபதி என்று அன்போடு அழைக்கப்பட்டவர் அப்துல் கலாம் அவர்கள். விஞ்ஞானியான இவர் பதவிக்காலம் முடிந்தும் இந்தியா முழுவதும் சென்று மாணவர்களுக்கு எழுச்சியூட்டினார். இவர் கடந்த வருடம் ஜுலை மாதம் 27ம் தேதியன்று கல்லூரி நிகழ்ச்சிக்கு சென்றபோது உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்தார். இந்நிலையில் இவரின் மரணம் பற்றிய…

கர்நாடகா பந்த்… மைசூர், மாண்டியா மட்டுமல்ல பெங்களூருவையும் முடக்கும் கன்னட…

பெங்களூர்: தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட்டதைக் கண்டித்து நாளை மறுநாள் நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றியடைய செய்வதில் கன்னட அமைப்புகள் மும்முரமாக உள்ளன. தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக நாளை மறுநாள் கர்நாடகா தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என…

கர்நாடகா: விநாயகர் சிலையை கரைத்தபோது பரிதாபம்.. 12 பேர் ஆற்றில்…

ஷிவ்மோகா: கர்நாடகாவில் உள்ள துங்கபத்ரா ஆற்றில் விநாயகர் சிலைகளை கரைக்கும் போது நீரில் மூழ்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களை தேடும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் ஷிவ்மோகா மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது.…

அடிப்படை வசதிகள் இல்லாததால் 20 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம்!

பாட்னா: பீகார் மாநிலத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத கிராமத்தில் இருந்து பெண் எடுக்க யாருமே முன் வராத காரணத்தால் அங்கு 20 ஆண்டுகளாக திருமணமே நடக்கவில்லை என கூறுவது அனைவரையும் வேதனை அடையச் செய்துள்ளது. பீகார் மாநிலம் பஹகல்பூரில் இருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது சன்ஹவுளி…

கேள்விக்குறியாகும் இந்திய பெண்களின் பாதுகாப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் வேலைக்குச் செல்லும் பெண்களில் பெரும்பாலோர், மாலை நேரத்துக்குப் பிறகு பாதுகாப்பு இல்லை என உணர்வதாக தொழில்துறை அமைப்பான அசோசெம் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அசோசெம் ஆய்வில் பங்கேற்ற பெண்களில் பெரும்பாலோர் தகவல் தொழில் நுட்பம், ஹோட்டல் வரவேற்பு, விமான போக்குவரத்து மற்றும் செவிலியர் துறைகளில் பணியாற்றுபவர்கள் என்று அதில்…

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது! கர்நாடகாவில் பதற்றம்

உச்சநீதிமன்ற உத்தரவின்படி கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று இரண்டாவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்திற்கு காவிரியில் 10 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு…

இஸ்லாமிய சிறுவர்களுக்கு குரான் கற்பிக்கும் இந்து மாணவி

உத்திர பிரதேசத்தில் 18 வயது மாணவி ஒருவர், இஸ்லாமிய சிறுவர்களுக்கு குரான் கற்றுத்தருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உத்திர பிரதேசத்தின் ஆக்ரா பகுதியில் உள்ள சஞ்சை பகுதியை சேர்ந்தவர் பூஜா குஷ்வாகா(18). இவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாலை நேரத்தில் இவரிடம் 35 க்கும் மேற்பட்ட…

கர்நாடகாவில் பதற்றம்…. அச்சத்தில் தமிழர்கள்… பாதுகாப்பு தர அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: காவிரி நதிநீர் பிரச்சனையால் கர்நாடகாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது; அங்கு தமிழர்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர்; அவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 15,000 கன அடி வீதம்…

காவிரி விவகாரம்: வெங்கையா பதில்

நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு உடனடியாக தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கர்நாடகாவில் மைசூர் மற்றும் மாண்டியா பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது. இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய…

காவிரி நீர் திறப்பு: சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிராக கர்நாடகத்தில்…

பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட உத்தரவிட்ட உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கர்நாடகாவில் வரும் 9-ந் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராக கர்நாடகாவில் போராட்டங்கள் வெடித்தன. பாஜக, மஜத உள்ளிட்ட…

அன்னை தெரசா புனிதராக பிரகடனம்- வாடிகனில் போப் பிரான்சிஸ் அறிவிப்பு

வாடிகன்: அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவை போப் பிரான்சிஸ் இன்று புனிதராக அறிவித்தார். வாடிகனில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற விழாவில் அன்னை தெரசா புனிதராக பிரகடனம் செய்யப்பட்டார். அல்பேனியாவில் பிறந்து 1929-இல் கத்தோலிக்க மதச் சேவைக்காக இந்தியா வந்தார் அன்னை தெரசா. கொல்கத்தா நகரில் உள்ள ஏழைகளுக்கு…

சினிமா பாணியில் போதை மருந்து கடத்திய இலங்கை பெண்! அதிர்ந்து…

கொழும்பில் இருந்து சென்னைக்கு ரூ.2½ கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை நூதன முறையில் கடத்தி வந்த இலங்கை பெண்ணை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். கொழும்பில் இருந்து சென்னை வந்து செல்லும் விமானத்தில் போதைப்பொருள் கடத்தப்பட இருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு…

முதன்முறையாக எய்ட்ஸ் வைரசை கண்டுபிடித்த தமிழச்சி

30 வருடங்களுக்கு முன்பே, எய்ட்ஸ் நோயின் ஹெச்.ஐ.வி. பாஸிட்டிவ் வைரஸ் கிருமி ரத்தத்தில் இருப்பதை ஒரு இளம் மருத்துவ மாணவிதான் இந்தியாவில் முதன்முதலாக கண்டுபிடித்தார். இது நடந்தது 1986 ல். அப்போது எய்ட்ஸ் நோய் பரவல் பற்றி, பயம் கலந்த ஒரு விழிப்புணர்வு அலை உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருந்தது.…

இந்திய ராணுவத்தினருக்கு காஷ்மீர்தான் சுடுகாடு… ஹிஸ்புல் பயங்கரவாதி சலாவுதின் மிரட்டல்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு அனைத்துக் கட்சி குழு செல்லும் நிலையில், இந்திய ராணுவத்தினருக்கு காஷ்மீர்தான் சுடுகாடு... எண்ணற்ற தற்கொலைப் படை தீவிரவாதிகளை ஊடுருவச் செய்திருக்கிறோம் என்று ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்க பயங்கரவாதி சலாவுதீன் மிரட்டியுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதி ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை…

உச்சநீதிமன்றம் விளாசல்… தமிழகத்துக்கு காவிரியில் ரகசியமாக நீரை திறந்துவிட்ட கர்நாடகா

சென்னை: உச்சநீதிமன்றத்தின் காட்டமான உத்தரவால் தமிழகத்துக்கு காவிரி நீரை ரகசியமாக திறந்துவிட்டுள்ளது கர்நாடகா. காவிரியில் தற்போது 11,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட்டிருக்கிறது. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசின் சார்பில் கடந்த மாதம் 23ந் தேதி உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.…

பசுவின் வயிற்றில் 100 கிலோ குப்பை: மருத்துவர்கள் அதிர்ச்சி

குஜராத்தில் பசு ஒன்றின் வயிற்றில் இருந்து 100 கிலோ எடை அளவிலான பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அகமதாபாத்தில் உள்ள ஜிவ்தா அறக்கட்டளை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்ட பசு ஒன்று வயிற்றுப் பகுயில் வீக்கம் காணப்பட்டது. இதனால் பசு கர்ப்பம் தரித்திருக்கிலாம் என்று கருதிய…

வாழு- வாழ விடு… காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு சுப்ரீம்கோர்ட் சுளீர்

டெல்லி: காவிரி நீர் கிடைக்காமல் தமிழகத்தின் 7 மாவட்டங்கள் பாதிப்பை சந்தித்துள்ளன; ஆகையால் வாழு... வாழவும் விடு அதாவது மனிதாபிமான அடிப்படையில் காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறக்கலாம்... என்று கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. காவிரியில் தமிழகத்துக்கு 50 டி.எம்.சி. நீரை ஏன் திறந்துவிட முடியாது என்று கர்நாடகாவுக்கு…

தீ வைத்து கொளுத்தப்பட்ட தமிழக இளைஞர்: மலேசியாவில் அதிர்ச்சி சம்பவம்

பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த கண்ணன் மலேசியாவில் துங்குகில்லான் என்னுமிடத்தில் தனியார் உணவகத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் உரிமையாளருடன் ஏற்பட்ட தகராறில் கண்ணன் மீது பெட்ரோல் ஊற்றித் தீவைத்துக் கொளுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் தீக்காயம் அடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மலேசியாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர…

மகளின் உடலை சுமந்தபடி 6கி.மீ நடந்த தந்தை! தொடரும் அவலம்

ஒடிசாவில் தனா மஜி என்பவர் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால், தனது மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்று 10 நாட்கள் கூட ஆகாத நிலையில், இதேபோன்ற சம்பவம் ஒடிசாவில் மீண்டும் நடந்துள்ளது. மல்காங்கிரி மாவட்டம் குசாபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தினபந்து கேமுது. இவருடைய மகள் பார்ஷா (வயது 7) உடல்நலக்குறைவால்…

ஜாதி மாறி காதலித்த ஜோடியை ஊர்க் கூட்டம் போட்டு “கொல்ல”…

திருச்சி: ஜாதி மாறி காதலித்ததால் ஊர்க்கூட்டம் போட்டு எங்களை ஆணவக் கொலை செய்ய முடிவு செய்துள்ளனர் என்று திருச்சி போலீசில் இளம்பெண் ஒருவர் பகீர் புகார் கொடுத்த சம்பவம் அதிர வைத்துள்ளது. திருச்சி மாவட்டம் பூலாங்குலத்துப்பட்டி செட்டியூரணிப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் மகள் உமா, திருச்சி மாவட்ட…

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை… கட்டுமான பணிகளை தொடங்கியது கேரளா

கோவை: தமிழகத்தில் எதிர்ப்பு நிலவும் நிலையில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணைக் கட்டுவதற்கு கேரளா முதல்கட்ட பணியை தொடங்கி உள்ளது. அணைக்கட்ட திட்டமிடப்பட்டுள்ள பகுதியில் கட்டுமானப் பொருட்கள் குவிக்கப்பட்டு வருகிறது. பவானியின் துணை ஆறான சிறுவாணி ஆறு கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உருவாகிறது.…