பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ஜம்மு: பாகிஸ்தான் குண்டுவீச்சில் 3 பேர் பலி: இந்தியாவின் பதிலடியில்…
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்மு மாவட்டத்தையொட்டி சர்வதேச எல்லையில் உள்ள இந்திய கிராமங்கள் மீது பாகிஸ்தான் படையினர் சிறிய ரக பீரங்கிகள் மூலம் வெள்ளிக்கிழமை குண்டுவீசி நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் பலியாகினர். மேலும், 17 பேர் காயமடைந்தனர். இந்திய ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த…
மிளகாய் குண்டின் நெடி தாங்காமல் குகைக்குள் இருந்து வெளியேறிய தீவிரவாதி:…
காஷ்மீரில் குகைக்குள் பதுங்கியிருந்த தீவிரவாதியை மிளகாய் கைஎறி குண்டுகளை பயன்படுத்தி கைது செய்துள்ளனர். பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ரபியாபாத் பகுதியில் நுழைந்த 5 தீவிரவாதிகளில் ஒரு தீவிரவாதியை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். தப்பி ஓடி குகைக்குள் மறைந்த 4 தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கி சண்டையில் 3…
நாடு முழுவதும் திருக்குறள் பாடமாக்கப்பட வேண்டும்: தருண் விஜய்
நாட்டிலுள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் திருக்குறளை கட்டாயப் பாடமாக்க பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவேன் என்று நாடாளுமன்ற பாஜக உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்தார். சென்னை, திருவள்ளுவர் திருநாட்கழகம் சார்பில், கங்கைக் கரையில் ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலையை நிறுவுவதற்கு மாதிரி சிலை ஒப்படைப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழச்சியில்,…
முஸ்லிம் மக்கள்தொகை அதிகரிப்புக்கு மதவாத அரசியலே காரணம்: சிவசேனை
சமீபத்தில் வெளியிடப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது. முஸ்லிம்களின் மக்கள்தொகை அதிகரித்திருப்பதற்கு மதவாத அரசியலே காரணம் என்று சிவசேனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிவசேனைக் கட்சியின் நாளிதழான சாம்னாவில் வியாழக்கிழமை வெளிவந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது. அவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதின் பின்னணியில் மதம்…
கலவர பூமியான காந்தி பிறந்த மண்… குஜராத் கலவரத்தில் பலியானோர்…
அகமதாபாத் : குஜராத் மாநிலத்தில் வன்முறை சம்பவம் இரண்டாவது நாளாக நீடித்து வருகிறது. இச்சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. குஜராத்தில் பட்டேல் சமூகத்தினர் இடஒதுக்கீடு கேட்டு அரசுக்கு எதிராக நடத்திய பந்த், கலவரமாக வெடித்துள்ளது. இதனால் சட்ட ஒழுங்கை பாதுகாக்க முக்கிய நகரங்களில் ராணுவம் அனுப்பி…
அரிய வகை மரபணு நோய்க்கு மருந்து கண்டுபிடித்தது சென்னை ஐஐடி!
சென்னை: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் சிஸ்டினோசிஸ் பவுண்டேஷனுடன் இணைந்து அரிய வகை மரபணு நோயான சிஸ்டினோசிஸுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளனர். அந்த மருந்திற்கு சிஸ்டோமைன் பிடார்டிரேட் எனப் பெயரிடப் பட்டுள்ளது. ‘சிஸ்டினோசிஸ்' என்பது அரிய வகை மரபு சார்ந்த நோயாகும். பெரும்பாலும் உறவுக்குள் திருமணம் முடித்து குழந்தை பெறுபவர்களுக்கு இந்த…
உலகப் பொருளாதார சக்தியாக இந்தியா உயர நீண்ட காலமாகும்
இந்தியா வேகமாக வளர்ச்சியடைந்து வந்தாலும், சீனாவுக்கு மாற்றாக உலகப் பொருளாதார உந்துசக்தியாக உயர்வதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்தார். சீனாவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் உலகச் சந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி உலகப் பொருளாதாரத்தின் மாற்று உந்துசக்தியாக…
ஒடிஷாவிலும் இயல்பு வாழ்க்கை முடக்கம்… கோசல் தனி மாநிலம் கோரி…
சம்பல்பூர்: குஜராத்தில் படேல் சமூகம் இடஒதுக்கீடு கோரி பந்த் நடத்தி அம்மாநில இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதைப் போல ஒடிஷாவிலும் 'கோசல்' தனி மாநிலம் கோரி நேற்று 11 மாவட்டங்களில் நடத்தப்பட்ட முழு அடைப்பு மக்கள் வாழ்க்கையை முடக்கியது. ஒடிஷாவின் ஜர்ஸ்குடா, சம்பல்பூர், ரூர்கேலா, சுந்தர்கார், டியோகார், பர்கார், சோனேபூர்,…
குஜராத்தில் வன்முறை: வடக்கு குஜராத்தில் ஊரடங்கு உத்தரவு
குஜராத்தில் படேல் சமூகத்தின் தலைவர் ஹர்தீக் படேல் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வன்முறை சம்பங்கள் நடந்துவருகின்றன. குஜராத்தில் படேல் சமூகத்தினர் அம்மாநில மக்கள் தொகையில் சுமார் 12 சதவீதம் உள்ளனர். படேல் சமூகத்தினர், தங்களை ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு) பிரிவில் சேர்த்து அதிக இட ஒதுக்கீடு…
2011-ம் ஆண்டின் மதவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு வெளியீடு… இந்துக்களின் எண்ணிக்கை…
டெல்லி : 2011-ம் ஆண்டின் மதவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் உள்ள மொத்த மக்கள்தொகையில் இந்துக்களின் விகிதாச்சாரம் குறைந்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் சமூக, பொருளாதார அடிப்படையிலான விவரங்கள் கடந்த மாதம் 3-ந் தேதி வெளியிடப்பட்டன. பல்வேறு அரசியல் கட்சிகள் கேட்டபோதிலும்,…
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்… இந்திய ராணுவ…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார். பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒபபந்தத்தை மீறி எல்லைப்பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறி வைத்து தாக்குதல் நடத்துவதும், இதற்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுப்பதும்…
எங்களிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை மறந்து பேசுகிறது இந்தியா
எங்களிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை இந்தியா மறந்துவிட்டது என்று பாகிஸ்தானின் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். இந்தியா–பாகிஸ்தான் இடையே பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான 2 நாள் பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்குவதாக இருந்தது. பாகிஸ்தானின் அடாவடி நடவடிக்கையால் பேச்சுவார்த்தை கடைசி நேரத்தில்…
திருச்சி ஈழத் தமிழர் சிறப்பு முகாம் முற்றுகை.. ஆயிரக்கணக்கானோருடன் வேல்முருகன்…
திருச்சி: தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர் சிறப்பு முகாம்களை மூட வலியுறுத்தி திருச்சியில் மத்திய சிறையை முற்றுகையிட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் உட்பட 1,252 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழக சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழ தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும். சிறப்பு…
இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக இருக்கும் 300 தீவிரவாதிகள்… பாகிஸ்தான் ஆதரவுடன்…
டெல்லி : பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. மற்றும் அந்நாட்டு ராணுவத்தின் உதவியுடன் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக உள்ளதாக மத்திய அரசு பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது. 17 இடங்களில் முகாமிட்டுள்ள இந்த தீவிரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முஹமது, ஹிஜ்புல் முஜாகிதீன் தீவிரவாத குழுக்களை சேர்ந்தவர்கள் எனவும்…
திருமணச் சட்டம் இல்லாததால் பாகிஸ்தானில் அவதிக்குள்ளாகும் இந்துப் பெண்கள்
பாகிஸ்தானில் வசித்து வரும் இந்துக்கள் தாங்கள் தொடர்ந்து பாரபட்சமாக நடத்தப்பட்டு வருவதாக குமுறிக் கொண்டுள்ளனர். இதுதொடர்பான போராட்டங்களையும் அவர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான் இந்துக்கள் பல்வேறு இன்னல்களை அங்கு எதிர்கொண்டுள்ளனர். பல கொடுமைகளையும், கட்டாய மதமாற்றம் உள்ளிட்ட சிக்கல்களையும் சந்தித்து வருகின்றனர். இதில் அதிகம் பாதிக்கப்படுவது இந்துப்…
வரலாறு காணாத அளவில் சரிவை சந்தித்த பங்குச் சந்தை: விண்ணை…
இந்திய சந்தையில் சென்செக்ஸ் வர்த்தகத்தில் வரலாறு காணாத அளவில் ஓரே நாளில் 1,100 புள்ளிகள் வரை சரிந்துள்ள தோடு தங்கத்தின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆசிய சந்தையில் நிலவும் மந்தமான பொருளாதார நிலையின் காரணமாக முதலீட்டாளர்கள் தங்களது பங்கு இருப்பைத் தொடர்ந்து குறைத்து வருகின்றனர். மேலும் பங்குச்சந்தையில்…
அறிவியல், தொழில்நுட்பத்துக்கு ஏற்ற மொழி சமஸ்கிருதம் தானாம்: சொல்கிறது மத்திய…
லக்னோ: அறிவியல், தொழில்நுட்பத்துக்கு மிகவும் ஏற்ற மொழி சமஸ்கிருதம்தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்தது முதலே பயன்பாட்டில் இல்லாத சமஸ்கிருத மொழியை திணிக்க முயற்சிக்கிறது என்று குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் லக்னோவில்…
ரோமானியர்களுடன் வர்த்தகம் செய்த தமிழர்கள்: தொன்மையான நகரம் கண்டுபிடிப்பு
சிவகங்கை அருகே சங்க காலத்தில் ரோமானியர்களுடன் வர்த்தகம் செய்துவந்த மிக தொன்மையான நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி கிராமத்தில், இந்திய தொல்பொருள் ஆய்வு துறை கடந்த மார்ச் மாதம் முதல் அகழாய்வாராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு சுமார் 3 இடங்களில் ஆய்வு மேற்கொண்டதில்…
பாகிஸ்தானில் தாவூத் இப்ராஹிம் இருப்பது உறுதி… முக்கிய ஆவணங்கள் சிக்கியது
டெல்லி: மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் வசிப்பதற்கான முக்கிய இதன்மூலம் தாவூத் இப்ராஹிம் இங்கு இல்லை என்று என்று பாகிஸ்தான் கூறி வந்தது பொய் என்பது அம்பலமாகியுள்ளது. 1993ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமான தாவூத்…
இந்தியாவின் நிலையை ஏற்காவிட்டால் பேச்சுவார்த்தை இல்லை… பாகிஸ்தானுக்கு சுஷ்மா ஸ்வராஜ்…
டெல்லி : இந்தியா சொல்வதை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளாவிட்டால் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்தியா சொல்வதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் இங்கு வரவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். நாளையும் (23,…
இந்தியா- பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ரத்து… மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
டெல்லி : பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் ஆஜிஸ் மற்றும் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் சந்திப்பை ரத்து செய்ய வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை ஏற்க மறுத்ததால் இரு நாடுகளுக்கிடையே நடைபெறும் பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டெல்லியில் வரும் 23 ஆம்…
தமிழகத்தில் உள்ள அனைத்து சிறப்பு முகாம்களையும் நிரந்தரமாக மூட வேண்டும்:…
ஈழத் தமிழ் உறவுகளை அவர்கள் விரும்புகிற வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழீழத்தில் சிங்களப் பேரினவாதத்தின் இனப் படுகொலை அழித்தொழிப்பில் இருந்து தப்பி…
புதிய தேடல் பொறி மூலம் கூகுளுக்கே சவால் விடும் இந்திய…
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 16 வயது கனடிய குடிமகன் கூகுள் தேடல் பொறி இயந்திரத்துக்கே சவால் விடுகிறார். கனடாவை சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவர் அன்மோல் டக்ரெல் என்பவர், கண்டுபிடித்துள்ள தேடல் பொறி, கூகுளைவிட 47% துல்லியமாகவும் சராசரியாக 21% அதிக துல்லியமாகவும் இருப்பதை நிரூபித்துள்ளார். அன்மோல் இதை…
