பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா உள்ளிட்ட 8…
ஈரான் நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு அளித்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததுடன், அந்த நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது எனக் கூறியது. நவம்பர் 4-ம் தேதிக்கு பிறகு…
மஹாராஷ்டிராவில் ஆட்கொல்லி பெண் புலி சுட்டுக்கொலை
மஹாராஷ்டிராவில் 13 பேரை கொன்றதாகக் கூறப்பட்ட பெண் புலி ஒன்று நேற்று இரவு சுட்டுக்கொல்லப்பட்டதாக அம்மாநில வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த தேடுதல் வேட்டையில் அந்தப் புலி சிக்காமல் இருந்தது. கடந்த மாதம், புலிகளைக் கவரும் வாடையை உண்டாக்கி அதைப் பிடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியும்…
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் இந்திய பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பு என்ன?
டாலர் மதிப்பு வலுவாகியிருப்பது 2018ம் ஆண்டு உலக நாடுகளின் வளரும் நாணய சந்தையை மிகவும் பாதித்திருக்கிறது. இவ்வாறு பாதிப்பு அடைந்திருக்கும் நாணயங்களில் ஒன்றான இந்தியாவின் ரூபாய், கடந்த சில மாதங்களில் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. 2018ம் ஆண்டு இந்திய நாணயம் அதன் 15 சதவீத மதிப்பை இழந்து, ஆசிய…
ஆச்சரியம், ஆனால் உண்மை.. டெல்லிக்கு வடக்கேயும் கொடி நாட்டிய தமிழ்
சண்டிகர்: தமிழகத்திலிருந்து வெகு தொலைவில், டெல்லிக்கு வடக்கே உள்ள ஒரு மாநிலத்தில், தமிழ் 2வது அதிகாரப்பூர்வ மொழி என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? பஞ்சாப்பிலிருந்து பிரிந்து தனி மாநிலமாக உருவானதுதான், ஹரியானா. பல மாநிலங்கள் உருவாக்கப்பட்ட நவம்பர் 1ம் தேதிதான் அம்மாநிலமும் உதயமானது. ஆனால் அப்போது பஞ்சாப்…
இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கடும் எச்சரிக்கை
மாயமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிலைகள் தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டது நிரூபணமானால், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் புன்னைவன நாதர் சன்னதியில் உள்ள மயில் சிலை மாற்றப்பட்டுள்ளது தொடர்பாக ரங்கராஜன் நரசிம்மன்…
அசாமில் 5 பேர் சுட்டுக்கொலை: உல்பா பயங்கரவாதிகள் வெறி
கவுகாத்தி: அசாமில் மேற்குவங்க மாநிலத்தவர்கள் 5 பேரை உல்பா தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.இதற்கு முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். அசாமில் அரசுக்கெதிராக உல்பா என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற உல்பா-1 என்ற அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள்,நேற்று மாலை 7 மணியளவில்…
முசிறி பட்டினம்: 2,000 ஆண்டுகளுக்கு முந்திய தமிழர்களின் பானைக் கழிவறைகள்…
கேரளாவின் கடலோர நகரமான முசிறி பட்டினம் பகுதியில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் மத்தியில் தனிநபர் கழிவறைகள் பயன்பாட்டில் இருந்தன என்று தெரியவந்துள்ளது. மனித இனம் பரிணாம வளர்ச்சி பெற்றுவந்த ஒவ்வொரு காலத்திலும் குறிப்பிட்ட அளவு தொழில்நுட்ப அறிவு உயர்ந்துகொண்டே வந்துள்ளது. கற்காலம் தொடங்கி இன்று…
கீழடி அகழ்வாய்வு அறிக்கையை தயார் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு அனுமதி:…
கீழடி முதல் இரண்டு கட்ட அகழ்வாய்வு அறிக்கையை தயார் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளோம் என மத்திய அரசு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது. மதுரை மீனாட்சி நகரை சேர்ந்த பிரபாகர் பாண்டியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "கீழடியில் 2013…
காஷ்மீர் சிறுவர்களுக்கு பயங்கரவாத பயிற்சி அளிக்கும் பாக்.,
புதுடில்லி : பாக்., பயங்கரவாத அமைப்பினர் காஷ்மீர் சிறுவர்களுக்கு பயங்கரவாத பயிற்சி அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பாக்.,கில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகள் காஷ்மீரில் உள்ள சிறுவர்கள் பலரை கடத்திச் சென்று, கட்டாயமாக பயங்கரவாத பயிற்சி அளித்து வருவது தெரிய வந்துள்ளது. காஷ்மீரின் டிரால் மாவட்டத்தை…
கோழிகளை கூண்டில் அடைத்து வளர்ப்பதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை பிறப்பித்திருப்பது…
கோழிகளை கூண்டில் அடைத்து வளர்ப்பதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை பிறப்பித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுத்து கோழிப்பண்ணை தொழிலை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன். இது குறித்த அவரது அறிக்கை: ‘’தன்னார்வ அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் கோழிகளை…
காற்று மாசுவால் பாடாய்படும் டில்லிவாசிகள்: துணை நிலை கவர்னர் ஆலோசனை
புதுடில்லி: தலைநகர் டில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் காற்று மாசினால் டில்லிவாசிகள் சுவாசக்கோளாறால் அவதியுறுகின்றனர்இந்நிலையில் காற்று மாசினை கட்டுப்படுத்துவது குறித்து துணைநிலை கவர்னர் தலைமையில் உயரதிகாரிகள் கலந்து கொண்ட உயர்மட்டக்குழு…
சபரிமலை: உண்மை நிலவரம் என்ன?
சபரிமலை: சபரிமலை விவகாரம் பற்றியும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு பற்றியும், பக்தர்களின் நம்பிக்கை பற்றியும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் மனோஜ்குமார் சொந்தாலியா எழுதிய கட்டுரையில் கூறியுள்ளதாவது: செல்ல கூடாத பாதை மதம் வேண்டுமானால் சட்டத்துடன் மோதலாம். ஆனால், நம்பிக்கை மோதக் கூடாது. இந்தியா போன்ற பழமையான…
வட்டெழுத்துகளை சரளமாக எழுதும், படிக்கும் பள்ளி மாணவி ‘கோகிலா’
சமீபத்தில் திரை உலகில் அதிக வைரலான பெயர் 'கோலமாவு கோகிலா'. ராமநாதபுரம் மாவட்டத்தில் தொல்லியல் துறையினர் மற்றும் மாணவர்கள் அதிகம் உச்சரிக்கும் பெயராகியுள்ளது 'வட்டெழுத்து கோகிலா'. வட்டெழுத்து என்றால் என்ன? வட்டெழுத்துகள் பிராமி எழுத்து எனப்படும் தாமிழி எழுத்து முறையில் இருந் து தோன்றியதாக கூறப்படுகிறது. கி.பி 8ஆம்…
பழவேற்காடு முகத்துவாரம் அமைக்கும் திட்டம்- மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு…
பழவேற்காடு ஏரியில் நிரந்தர முகத்துவாரம் அமைக்கும் தமிழக மீன்வளத்துறை திட்டத்தை மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு நிராகரித்ததுள்ளது. பழவேற்காடு ஏரியில் 27கோடி மதிப்பில் முகத்துவாரம் அமைக்க தமிழக மீன்வளத்துறை மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழுவிடம் அனுமதி கோரி இருந்தது. இந்த முகத்துவாரத்தின் இடதுபக்கம் 160மீ, வலதுபக்கம் 150மீட்டருக்கு பெரும்…
‘ஸ்டெர்லைட்டை மூடிய பின் காற்றில் மாசு குறைவு’
சென்னை: 'ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பின், துாத்துக்குடியில், காற்றில் கலக்கும், வேதிப்பொருட்களின் அளவு குறைந்துள்ளது' என, தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த குழுவிடம், மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்து உள்ளது. துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்ய, தேசிய பசுமை தீர்ப்பாயம், நீதிபதி, தருண் அகர்வாலா தலைமையிலான…
“ராஜபக்சே பதவியேற்பது இந்திய அரசுக்கு எதிரானது” – பழ.நெடுமாறன்
சென்னை, இலங்கை பிரதமராக இராஜபக்சே மீண்டும் அதிகாரத்திற்கு வந்திருப்பது ஈழத் தமிழர்களுக்கு எதிரானது என்பது மட்டுமல்ல, இந்திய அரசுக்கும் எதிரானது என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இலங்கை பிரச்சனையில் சீனா மீண்டும் வெற்றி பெற்றுவிட்டதாகவும் இந்தியாவின் அணுகுமுறை தோல்வியை சந்தித்துள்ளதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.…
பிரதமர் மோதிக்கு சோல் அமைதி விருது – எதிர்த்து தென்கொரியாவில்…
இந்தியப் பிரதமர் மோதிக்கு "சோல் அமைதி விருது" (Seoul Peace Prize) வழங்கப்பட்டதை எதிர்த்து தென் கொரியாவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தென்கொரிய தலைநகர் சோலில் கொரிய மனித உரிமைகள் குழு, ஆசிய தகுதி அமைப்பு மற்றும் அரசு சாரா மனித பாதுகாப்பு குழு என பல்வேறு அமைப்புகள்…
சபரிமலையில் கம்யூனிஸ்ட் படை களமிறக்க கேரள அரசு திட்டம்
சபரிமலை: சபரிமலை சன்னிதானத்தில் போராட்டக்காரர்களை எதிர்கொள்ளும் வகையில், ஊழியர்கள் என்ற பெயரில் கம்யூனிஸ்ட் கட்சியினரை களமிறக்க, மாநில அரசு திட்டமிட்டுள்ளது.கேரளாவில், உள்ள, சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களும் செல்ல, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. இந்நிலையில், சபரிமலையில், ஐப்பசி மாத பூஜையின் போது, தரிசனத்துக்காக,…
’இப்பச்சைத்துரோகத்தை இனமானத்தமிழர்கள் இனியும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்’- சீமான்
முல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை: ’முல்லைப்பெரியாறு அணையின் கீழ்ப்புறத்தில் புதிய அணைக் கட்டுவதற்கானப் பணிகளை முடுக்கிவிட்டுள்ள கேரள அரசின்…
இன்னும் 39 நாள்தான்.. பொன் மாணிக்கவேலிடம் சிக்கி சிதற போவது…
சென்னை: சிலை திருட்டுப் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் இன்னும் 39 நாட்களில் ஓய்வு பெறவுள்ளார். அதற்குள் அவர் அதிரடியான நடவடிக்கைகளை வேகப்படுத்துவார் என்ற பெரும் பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது. நம் நாட்டில் மதங்களை சார்ந்த கலைப்பொக்கிஷங்களும் காலகாலத்துக்கும் மதிக்கப்பட்டும், மரியாதைக்குரியதாக வணங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில…
முல்லைப் பெரியாறு அணை: புதிய அணை குறித்த அனுமதியும், சர்ச்சைகளும்
தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணைக்கு கீழே புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான வரையறைகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்திருப்பது தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களின் பாசனத்திற்கும் குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு…
முல்லை பெரியாறு அணைக்கு மாற்றா!!! இப்போதாவது தமிழக அரசு விழிக்குமா???
தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ளது கர்னல் பென்னிகுயிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணை உள்ளது. தென்தமிழகத்தில் உள்ள தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக முல்லைப் பெரியாறு அணை தண்ணீர் இருந்து வருவதால் அப்பகுதியை சேர்ந்த மக்கள்…
புதிய அணை : கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி
புதுடில்லி : முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை நடத்த நிபந்தனைகளுடன் கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை 7 நிபந்தனைகளுடன் மேற்கொள்ள கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி மத்திய சுற்றுச்சூழல் துறை விதித்துள்ள நிபந்தனைகளில்,…