இலங்கை வறட்சியின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கும் மூன்று லட்சம்…

இலங்கையில் ஏற்பட்டுள்ள வறட்சியுடனான காலநிலையினால் 75,416 குடும்பங்களைச் சேர்ந்த 3,21,127 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. இலங்கையில் 12 மாவட்டங்கள் வறட்சியினால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கேகாலை, புத்தளம், குருநாகல், வவுனியா, யாழ்ப்பாணம், மாத்தளை, கண்டி, மாத்தறை, கம்பஹா,…

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குவது நாட்டுக்கு அச்சுறுத்தல் அல்ல: எரான்…

“யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு நட்டஈடு வழங்குவது நாட்டுக்கு அச்சுறுத்தல் அல்ல. அது கட்டாயம் செய்யப்பட வேண்டிய விடயமாகும்.” என்று இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ண தெரிவித்துள்ளார். இன, மத, மொழி பேதமன்றி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்காக ஆணைக்குழு அமைக்கப்பட்டமை தவாறானதா? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.…

இரண்டாம் தரப் பிரஜைகளாக வாழ்வதற்கு தமிழ் மக்கள் தயாரில்லை: இரா.சம்பந்தன்

“பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வொன்றை வழங்காவிட்டால், தமிழ் மக்கள் இலங்கையில் இரண்டாம் தரப் பிரஜைகளாக வாழத் தயாரில்லை. அவ்வாறான சூழ்நிலையில் தமிழர்களின் இறைமைக்கு புத்துயிரளித்து அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக 50 வீதமான தமிழ் மக்கள் நாட்டைவிட்டு…

மண்டைதீவில் கொல்லப்பட்ட 119 தமிழ் இளைஞர்கள்: சிறிதரன் எம்.பி சாட்சியம்!

காணாமல்போனோருக்கான அலுவலகத்தில் சாட்சியத்தை பதிவுசெய்தார் சிறிதரன் எம்.பி. யாழ். மண்டைதீவில் அமைந்துள்ளது எனக் கருதப்படும் மனிதப் புதைகுழிகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இன்று வியாழக்கிழமை காணாமல்போனோருக்கான அலுவலகத்தில் சாட்சியம் பதிவு செய்தார். இன்று மாலை கொழும்பிலுள்ள காணாமல்போனோருக்கான அலுவலகத்தில் இந்த சாட்சியத்தை அவர் பதிவு செய்தார்.…

ஈழ மக்களை சோகத்தில் ஆழ்த்திய விடுதலைப்புலி தலைவர் ஒருவரின் தாயார்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவராக விளங்கிய வன்னி மாவட்ட தளபதி மேஜர் பசீலன் அவர்களின் தாயார் இன்று மாலை காலமாகியுள்ளார் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு தனது மகனை உவந்தளித்த பெருமைமிகு தாயாக இவர் கருதப்படுகின்றார். கடந்த இரண்டு ஆண்டுகளாக முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில்…

இலங்கை தொடர்பிலான சர்வதேச விசாரணையை இந்தியா தடுத்து வருகிறது: அ.வரதராஜப்பெருமாள்

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையை இந்தியாவே தடுத்து வருகின்றது என்று வடக்கு- கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வரதராஜப்பெருமாள் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை தொடர்பான விடயம் ஜெனீவாவில் பேசப்படும்…

த.தே.கூ தமிழ் மக்களுக்கு பாரிய துரோகம் இழைக்கிறது: அங்கஜன் இராமநாதன்

“வடக்கு- கிழக்கு தமிழ் மக்களுக்கு எந்த விதமான நன்மையும் அற்ற வரவு - செலவுத் திட்டத்திற்கு முழுமையான ஆதரவளிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாராகவுள்ளனர். இது, தமிழ் மக்களுக்கு இழைக்கும் பாரிய துரோகமாகும்.” என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.…

நிகரற்ற தளபதிகள் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட நாள் இன்று!

ஈழப் போர்களின் ஒவ்வொரு காலக்கோட்டிலும் மிகப்பெரும் சாதனைகளைச் செய்த தளபதிகள் ஈராளமானோர் வரலாற்றில் ஆழப் பதிந்துவிட்டனர். ஒரு போராட்ட அமைப்பு தொடர்ந்தும் போர் செய்துகொண்டிருக்கிறதெனில், அது வென்றுகொண்டிருக்கின்றதென்று போரியல் ஆய்வாளர்கள் சொல்வார்கள். அந்த தொடர் வெற்றியைச் சம்பாதித்துக்கொண்டிருந்த பெரும் பங்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகள் பலரைச் சாரும்.…

நீதி, பொறுப்புக்கூறல் இல்லாமல் சிறிலங்காவில் நிலையான அமைதி ஏற்படாது –…

நீதியும் பொறுப்புக்கூறலும் இல்லாமல் சிறிலங்காவில் நிலையான அமைதி ஏற்படாது என்று பிரித்தானிய வெளிவிவகாரச் செயலர் ஜெர்மி ஹன்ட் தெரிவித்துள்ளார். சிறிலங்கா விவகாரம் தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில், கரேத் தோமஸ் என்ற உறுப்பினர், பாரிய…

வெளிநாட்டு மோகத்தால் நாசமாகப்போகும் ஈழத்து பெண்களின் வாழ்க்கை?!

வெளிநாட்டில் உள்ள கணவன் சந்தேகப்பட்டதால் வவுனியாவில் இளம்பெண் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் மேலும்., வவுனியாவை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கும், லண்டனை சேர்ந்த 32 வயது இளைஞனுக்கும் பெரியோர்கள் இணைந்து கடந்த மாதம் இந்தியாவில் வைத்து திருமணம் செய்து…

இலங்கை அமைச்சர் ஹக்கீமின் வெளிநாட்டு நீதிபதிகள் பற்றிய கருத்து: தமிழ்…

வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு வந்து இலங்கை விவகாரத்தைக் கையாள்வது அரசியலமைப்புக்கு முரணானது என, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்த கருத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றும் போதே, மேற்படி கண்டனத்தை…

தமிழர் அரசியல்: கண்கட்டி வித்தையின் உச்சம்

தனி மனித வாழ்வியலில், ஒருவனது நடத்தையின் பாங்கு, அவனது முன்னேற்றத்திலும் வெற்றியிலும் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகின்றதோ, அதனிலும் மேலாக, ஒரு நாட்டின் அதிகாரபீடத்தில் இருக்கின்றவர்களின் கருத்துகளும் செயற்பாடுகளும் அந்த நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்திகளாக அமைகின்றன. இலங்கையில், நாட்டினுடையதும் மக்களினுடையதும் நலன்களைப் பின்னிறுத்தி, வெறும் சுயநல அரசியலை, கட்சி…

பிரான்சுக்கு செல்ல முயன்ற தமிழர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

சட்டவிரோதமாக பிரான்ஸ் நாட்டுக்குச் செல்ல முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வகையில், பெண் ஒருவர், இரு சிறுவர்கள் உள்ளிட்ட பதினொரு பேரையும் நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதிபதி அனுர இந்திரஜித் புத்ததாச நேற்று மாலை உத்தரவிட்டார். யாழ்ப்பாணம்,…

தமிழ் அரசியல் கைதிகள் 54 பேருக்கு மீண்டும் வந்த கொடுமை

தமிழ் அரசியல் கைதிகள் 54 பேர் தொடர்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும் 3 பேர் தொடர்பாக சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாவும், மேலும் 6 பேர் தொடர்பாக…

ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்க இந்தியாவின் நடுநிலை தேவை: சி.வி.விக்னேஸ்வரன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்குவதற்கு, மூன்றாம் தரப்பு நடுநிலையை தமிழர்கள் கோருவதாக, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மூன்றாம் தரப்பு நடுநிலையாளராக இந்தியாவுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அவர் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு கூறியுள்ளார். சி.வி.விக்னேஸ்வரன்…

சுமந்திரன் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளைப் புரிந்து செயற்பட வேண்டும்: க.அருந்தவபாலன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளைப் புரிந்து செயற்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை பரப்புச் செயலாளரான கந்தையா அருந்தவபாலன் தெரிவித்துள்ளார். “நிறைவடைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40வது அமர்வில், எமது மக்களை இனப்படுகொலை செய்த இராணுவத்தைக்…

இலங்கை வருகிறது ஐ.நா துணைக்குழு

சித்திரவதையைத் தடுப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணைக்குழுவொன்று, இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம், குறித்த துணைக்குழு, எதிர்வரும் 2ஆம் திகதி, இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் 12ஆம் திகதி வரை, அக்குழு இலங்கையில் தங்கியிருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இக்குழுவில், மோல்டோ,…

தவறிழைத்தவர்களைக் கண்டறிய சர்வதேச நீதிப் பொறிமுறை வேண்டும்

இறுதி யுத்தத்தின்போது, இரண்டு தரப்பினரும் குற்றமிழைத்துள்ளதாக குற்றச்சாட்டப்படும் காரணத்தினாலே, உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிக்க வேண்டும் என வலியுறுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மேலும், இந்த விடயத்தில் உண்மை நிலவரம் சர்வதேச நீதிப் பொறிமுறை ஊடாகவே வெளிவரும் என்றும் அவர் கூறினார். கொழும்பில்…

தமிழ்க் கட்சிகளுக்கு ஆதாயம்; தமிழ் மக்களுக்குச் சேதாரம்

போட்டிபோட்டுக் கொண்டு அலைபேசிக் கம்பனிகள் வெகுமதிகளை அறிவித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால், அநேக மக்கள் அது குறித்து ஆர்வம் இல்லாது இருக்கின்றார்கள்.  அதைப்போலத்தான் சேதாரங்களை நினைத்தே, அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கும் நிலைப்பாட்டில் தமிழ் மக்களின் இருக்கிறார்கள். பொதுவாகவே, அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்பதில் நாம் எல்லோரும் கெட்டிக்காரர்கள்தான். ஆனால், பதில்களைக்…

‘தமிழர்களுக்கு ஐ.நா தீர்மானம் ஏமாற்றத்தை அளித்துள்ளது’ – சி.வி. விக்னேஸ்வரன்

இலங்கையின் அரசியல் அமைப்பின் பிரகாரம் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை அமைக்க முடியாது என்ற அரசாங்கத்தின் கூற்று பொருத்தமற்றது. நீதியரசர் பகவதி தலைமையிலான சர்வதேச சுயாதீன குழுவை உதாரணமாக கொண்டு கலப்பு நீதிமன்றம் அமைக்க முடியும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன்…

அன்று தலைவர் பிரபாகரன் சொன்னது இன்று நடக்கிறது; இனியாவது விழித்துக்கொள்…

கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில்.தமிழீழத்தில் இருந்து பரீட்சைக்கு தோற்றியவர்களில் 70 வீதத்திற்கு குறைவானவர்களே க.போத.உயர்தரத்திற்கு தெரிவாகியிருக்கும் துர்பாக்கிய நிலை உருவாகி இருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். தமிழீழ நிழலரசின் கீழும் போர்க்காலத்திலும் தமிழீழம் கல்வியில்…

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக விரைவில் அலுவலகம்

வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் காணமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை விரைவில் அமைக்கவுள்ளதாக வடக்கு மாகாணத்தின் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரவித்துள்ளார். காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதிகோரி தொடர்சியாக போராடி வரும் நிலையில் காணமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே சுரேன் ராகவன் இதனை தெரிவித்தார். மேலும், காணாமல் ஆக்கப்பட்டோர்…

இலங்கையை வதைக்கும் வறட்சி; பாதிப்பில் பல்லாயிரம் குடும்பங்கள்

இலங்கையில் தொடர்ந்து நிலவிவரும் வறட்சியினால் 12 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. நாட்டின் பல பகுதிகளின் இன்னும் வறட்சியான காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அனுமானித்து அறிவித்துள்ளது. சப்ரகமுவ, வடமேல், வடக்கு, கிழக்கு, மத்திய,…