பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
நியாயம் கிடைக்காவிடின் ஜெனீவா சென்று தீ வைத்துக் கொள்வேன்!- அனந்தி…
தற்போதைய அரசாங்கம் தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் உரிய நியாயம் பெற்றுக் கொடுக்காவிடின் தான் ஜெனீவா சென்று உடலுக்கு நெருப்பு வைத்துக் கொள்ளப் போவதாக அனந்தி சசிதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது கணவர் எழிலன், அப்போதைய தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழி தொலைபேசியில் அழைத்து கூறிய பின்னரே இராணுவத்திடம்…
சமாதான கட்டியெழுப்பலுக்கு ஐக்கிய நாடுகள் நிதி
சிறிலங்காவில் சமாதானத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை நிதி வழங்கவுள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறிலங்காவுக்கான வதிவிட இணைப்பாளர் சுபை நண்டி இதனைத் தெரிவித்துள்ளார். 3 மில்லியன் டொலர்கள் இவ்வாறு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுசீரமைப்பு மற்றும் பொறுப்புக்கூறும் செயற்பாடுகளின் ஊடாகவே சமாதானத்தை கட்டியெழுப்ப முடியும். இதற்கு ஐக்கிய நாடுகள்…
கனிமொழியிடம் தொலைபேசியில் பேசிய பின்னரே என் கணவர் சரணடைந்தார்!- அனந்தி…
விடுதலைப் புலிகள் இராணுவத்தினரிடம் சரணடையும் நிகழ்வானது சர்வதேச ஏற்பாட்டில் இடம்பெற்றது என்றும், குறிப்பாக இந்தியாவும் இதில் பங்கெடுத்திருந்தது என்றும் அனந்தி சசிதரன் தனது சாட்சியத்தில் தெரிவித்திருந்தார். இலங்கை இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் சரணடைவு என்பது சர்வதேசத்தின், குறிப்பாக இந்தியாவின் ஏற்பாட்டில் இடம்பெற்றதாகவும், அவ்வாறு இலங்கை இராணுவத்திடம்…
தமிழ் இளைஞர்கள் மீண்டும் எழுச்சியடைவதை தடுப்பதற்கே போதைப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன…
ஆயுதம் ஏந்தி அரசாங்கத்தை ஆட்டிப்படைத்த எமது தமிழ் இளைஞர்களை உலக நாடுகளின் உதவியுடன் மகிந்த அரசாங்கம் அழித்தது. இவ்வாறான இளைஞர் படை மீண்டும் எழக்கூடாது என்பதற்காகவே எமது இளைஞர்களிடையே போதைப்பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இதன் பின்னணியில் பெரும் அரசியல் சதி…
மனோ கணேசன் தலைமையில் இன்று உதயமானது தமிழ் முற்போக்கு கூட்டணி!
இலங்கை அரசியல் பரப்பில் இன்று உதயமாகும் தமிழ் முற்போக்கு கூட்டணி, காலத்தின் பணிப்பை பூர்த்தி செய்து நம்நாட்டு அரசியல் பரப்பில் புதிய வரலாறு படைக்கும் என்று நான் திடமாக நம்புகின்றேன் என மனோ கணேசன் தெரிவித்தார். இன்று கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்…
கருணா குழுவினரால் கிழக்கு சமுக செயற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல்
கருணா குழுவினரால் கிழக்கு மாகாணத்தில் சமுக சேவையில் ஈடுபடுகின்றவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சமுக சேவையாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். அண்மையில் மண்டூரில் வைத்து சமுக செயற்பாட்டாளர் மதிசயன் சச்சிதாநந்தம் சுட்டுக் கொல்லப்பட்டார்.பதிவு இணைய செய்தி அவரின் கொலைக்கு பின்புலத்திலும், கருணாவின் குழுவினரே செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பதிவு இணைய செய்தி…
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு அழைப்பு!
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும், அதிபர் ஆணைக்குழு, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை விசாரணைக்கு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது புதுடெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, கற்கைநெறி ஒன்றை மேற்கொண்டு வருகிறார். அவரை மக்ஸ்வெல்…
வடக்கில் போதைவஸ்து திட்டமிட்டு அறிமுகப்படுத்தப்படுகிறது: விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு
வடக்கில் போதைவஸ்து பாவனை திட்டமிட்டு அறிமுகப்படுத்தப்படுவதாக மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். எனவே இதற்கு எதிராக இளைஞர்கள் எழுச்சிப் பெறவேண்டும் என்று அவர் கோரியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அவர், தமிழ் இளைஞர்கள் மத்தியில் புரட்சி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக சில அமைச்சர்கள்…
‘இருப்பவர்கள்’ இருந்தால் இப்படி நடக்குமா? – புகழேந்தி தங்கராஜ்
புங்குடுதீவில் வித்யா என்கிற அப்பாவி மாணவி கூட்டுப் பாலியல் வன்முறைக்குப் பின் கொலையும் செய்யப்பட்ட கொடுமையான செய்தியைப் படித்தவுடன் அதிர்ச்சியாக இருந்தது முதலில்! அடுத்த நொடியே அச்சம் எழுந்தது. ஒரு திட்டமிட்ட நாடகத்தின் முதல் காட்சியோ – என்கிற அச்சம். அது, நமது எதிரிகள் வஞ்சகர்கள் மட்டுமல்ல… நயவஞ்சகர்கள்…
தொழிலுக்காக மத்திய கிழக்கு நாட்டுக்குச் சென்று திரும்பும் முன்னாள் போராளிகள்…
தொழிலுக்காக மத்திய கிழக்கு நாட்டுக்குச் சென்று இலங்கை திரும்பும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் இலங்கையின் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்படும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெறுகின்ற செயற்பாடு மக்கள் மத்தயில் அச்ச நிலையை ஏற்படுத்தியுள்ளது. இரு தடவைகள் இலங்கைக்கு வந்து சென்றவர். மீண்டும் மூன்றாவது…
மனோகணேசன் தலைமையில் புதிய கூட்டணி
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் தலைமையிலான புதிய தமிழர் கூட்டணி ஒன்று நாளைய தினம் முதல் இயங்கவுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் உள்ள அனைத்து மாவட்ட தமிழர்களையும் இணைக்கும் வகையில் இந்த கூட்டணி செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்களான திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரின்…
மீண்டும் இனந்தெரியாத ஆயுததாரிகளா? டக்ளஸ் தேவானந்தா அதிர்ச்சி
மீண்டும் இனந்தெரியாத ஆயுததாரிகள் தலைதூக்குகின்றனரா? கடந்த காலங்களில் இனந்தெரியாத நபர்களின் பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளினால் எமது சமூகம் பட்டிருந்த வேதனைகள் ஏராளம். அந்த நிலை தற்போது மாறியுள்ள சூழலில் மீண்டும் இனந்தெரியாத ஆயுததாரிகள் தலைதூக்கியுள்ளமை எமது சமூகத்தை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தும் செயலாகவே உள்ளது என ஈழ…
மீனவர் விவகாரத்தில் சிறிலங்கா தரப்பு கருத்துக்களால் இந்தியா கடும் சீற்றமடைந்துள்ளது!
மீனவர் விவகாரத்தில் சிறிலங்கா தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட கருத்துக்களால், இந்தியா கடும் சீற்றமடைந்துள்ளதுடன், இதுகுறித்து சிறிலங்காவுக்கு இராஜதந்திர முறைப்படி கவலையைத் தெரிவிக்கவுள்ளது. புதுடெல்லியில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மீனவர் விவகாரம் தொடர்பாக சிறிலங்கா தரப்பில் இருந்து…
யாழ்.நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு 34 ஆண்டுகள் நிறைவு
யாழ்ப்பாண நகருக்கு பெருமை சேர்க்கும் விடயமாகட்டும், அழகாய் கூறும் விடயமாகட்டும் எது என்றாலும் எமது பொது நூலகம் தலை நிமிர்ந்து நிற்கிறது. யாழ்பாணம் கல்வி கலாச்சாரத்துக்கு முக்கியமான ஒரு நிலையம் என்றால் அது மிகையாகாது. அதைவிட கலாச்சாரம் இன்று கேள்விகுறியானாலும் சில பல இடங்களில் அது வாழ்ந்து கொண்டு…
தமிழ் மக்களுக்கு உதவும் எண்ணம் சிறிலங்காவிடம் இல்லை – சீ.வி.விக்னேஸ்வரன்
வடக்குக்கு நீர் வழங்குதல் என்ற போர்வையில் வெளி இடங்களில் இருந்து சிங்கள மக்களை கொண்டு வந்து குடியேற்றுவது தீவிரமான ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. இது குடிப்பரம்பலை பெரிதும் பாதிக்கிறது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் வடக்கு, கிழக்கில் போருக்குப் பிந்திய மனித உரிமைகள் நிலை…
வடக்கில் தாய்மார் வடிக்கும் இரத்தக் கண்ணீர் ராஜபக்ச குடும்பத்தை சாபமாக…
வடக்கில் ஒவ்வொரு தாயும் தமது பிள்ளைகளின் சீரழிவுகளைப் பார்த்து சிந்தும் இரத்தக் கண்ணீர் ராஜபக்சவின் குடும்பத்தை சும்மாவிடாது. ஒவ்வொரு தாயும் வடிக்கும் இரத்தக் கண்ணீர் இவர்களுக்கு சாபமாக அமைவது நிச்சயமாகும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் சண். குகவரதன் தெரிவித்துள்ளார். வடக்கில் சமூகச்…
போர்க்குற்றம் தொடர்பில் சாட்சியமளிக்க தயார்: சந்திரநேரு சந்திரகாந்தன்
இலங்கையின் இறுதிப்போர் காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் சாட்சியமளிக்க தயாராகிறார். இந்தத் தகவலை இலங்கையின் ஆங்கில இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது. இறுதிப்போர் காலத்தில் விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் தகவல் பரிமாற்றத்தை சந்திரகாந்தன் மேற்கொண்டிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள…
வடக்கில் 14 நாட்களில் 10 மாணவிகள் மீது வன்கொடுமை! அதிர்ச்சி…
கடந்த 14 நாட்களில் மாத்திரம் வடமாகாணத்தில் 10 பாடசாலை மாணவிகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவலை இராஜாங்க கல்வியமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். https://youtu.be/ZCD2FhO7rXI பாடசாலைக்கு வெளியிலுள்ள சிலரால் இந்த பாலியல் வன்புறுத்தல்கள் நடத்தப்பட்டுள்ள போதிலும், இதில் பாடசாலைகளில்…
தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள்! !2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி…
இலங்கை பேரினவாத அரசால் கொடூரமாக அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலை ஐந்தாண்டுகளைக் கடந்திருக்கிறது. இறுதிக்கட்ட போரின் போது காணாமல் போனவர்கள் மற்றும் இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் நிலை குறித்த மர்மம் இன்னும் விலகவில்லை. இந்த நிலையில், அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்களா என்ற கேள்வியை சிறிசேன அரசுக்கு எதிராக உரக்க எழுப்ப ஆரம்பித்துள்ளனர்…
போர்க்குற்ற விசாரணை! சரத் பொன்சேகாவுக்கு உருத்திரகுமாரன் சவால்
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இலங்கை இராணுவத்தின் குற்றமிழைக்காத செயற்பாட்டை நிரூபிக்க வேண்டுமானால், சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு உடன்பட வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் சவால் விடுத்துள்ளார் தெ காடியன் செய்தித்தாளுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில், தமிழ் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை மற்றும்…
வித்தியாவின் படுகொலையின் பின் எற்பட்ட அதிர்வலைகள்! அடக்குமுறைக்குள் வாழ்ந்த எமக்கு…
புங்குடுதீவு மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் அதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை கொடுக்க வேண்டும் என்ற போராட்டம் சம்பவம் நடந்த பகுதியில் மட்டுமல்ல நாட்டின் சகல பகுதிகளிலும் இன மொழி பேதமின்றி நடந்துள்ளது. இப்படியொரு போராட்டத்தை மூன்று சகாப்தங்களாக பலர் பார்த்திருக்கமாட்டார்கள் ஜனநாயகப்…
சமூக குற்றங்களை களையும் நடவடிக்கை ஆரம்பம்!
பரந்தனில் ஏழு வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து சமூக குற்றங்களை களையும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது. கூட்டமைப்பு பா.உ. சி.சிறிதரன் தலைமையில் மாகாண கல்வி அமைச்சர், கி,ளிநொச்சி பிரதேச பொலிஸ் அதிகாரி, கரைச்சி பிரதேசசபை உபதலைவர், கண்டாவளை சிறுவர் நன்னடத்தை அதிகாரி, பிரசைகள் குழு உறுப்பினர், மனிதஉரிமைகள்…
இலங்கையில் இன்னமும் மௌன யுத்தம் தொடர்கிறது
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் முடிந்திருக்கும் நிலையிலும் அங்கு மௌன யுத்தம் ஒன்று தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக அமரிக்க ஆய்வு மையமான ஓக்லாண்ட் இன்ஸ்ட்டிட்யூட் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கூறுகிறது. தமிழர் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது இலங்கை அரசு திட்டமிட்ட வகையில் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டு…
