உலகெங்கிலும் சுமார் 46 மில்லியன் மக்கள் அடிமைகளாக வாழ்ந்து வருவதாக…

ஆஸ்திரேலியேவை சேர்ந்த ஆராய்ச்சி குழு ஒன்று வருடாந்திர உலக அடிமைத்தன குறியீட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகெங்கிலும் சுமார் 46 மில்லியன் மக்கள் அடிமைகளாக வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. ஆசியாவில் மட்டும் இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர், தங்கள் விருப்பத்திற்கு மாறாக நிர்ப்பந்திக்கப்பட்டு தொழிற்சாலைகளிலோ, பண்ணைகளிலோ, பாலியல் தொழிலாளியாகவோ…

புலி கோவில் இனி புத்த கோவில் மட்டுமே

தாய்லாந்தின் கான்சானபுரி மாகாணத்திலுள்ள சர்ச்சைக்குரிய புத்த கோவிலிருந்து 137 புலிகளை அகற்றிவிட டஜன்கணக்கான அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த புலி கோவிலிலுள்ள புலிகளை பிடிப்பதற்கு மயக்க ஊசிகளை துப்பாக்கியில் வைத்து பயன்படுத்த கால்நடை மருத்துவர்கள் தயாராகி வருகிறார்கள். அவற்றை பிடித்து அருகிலுள்ள வனவிலங்கு சரணாலயத்தில் விடவுள்ளனர். கூண்டிலிருக்கும்…

’அகதிகள் வேண்டாம்….ரூ.4 கோடி அபராதம் செலுத்த தயார்’: சுவிஸ் பொதுமக்கள்…

ஐரோப்பிய நாடுகளிலேயே அகதிகளுக்கு ஒருபோதும் புகலிடம் அளிக்க கூடாது என கடுமையாக எதிர்த்து வருவது சுவிட்சர்லாந்தில் உள்ள Oberwil-Lieli என்ற கிராமம் தான் என தற்போது தெரியவந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் சுவிட்சர்லாந்து ஒரு கூட்டணி நாடாக இல்லையென்றாலும் கூட, குறிப்பிட்ட எண்ணிக்கை உள்ள அகதிகளுக்கு புகலிடம் வழங்க தயார்…

சுட்டுக்கொல்லப்பட்ட கொரில்லா: குழந்தையின் பெற்றோர் மீது வழக்கு தொடுக்க பொலிசார்…

அமெரிக்கா நாட்டில் பெற்றோரின் அஜாக்கிரதை காரணமாக தான் கொரில்லா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதால் அவர்கள் மீது வழக்கு தொடுக்க உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். ஓஹியோ மாகாணத்தில் உள்ள சின்சினாட்டில் உள்ள ஒரு விலங்கியல் பூங்கா ஒன்றில் சில தினங்களுக்கு முன்னர் 4 வயது சிறுவன் ஒருவன் தவறி விழுந்துள்ளான். அப்போது, அங்குள்ள…

தலிபான் புதிய தலைவன் இவன்தான்!

முல்லா அக்தர் மன்சூர் கொல்லப்பட்டதை அடுத்து தலீபான் தீவிரவாத இயக்கத்தின் புதிய தலைவராக மவுலவி ஹைபதுல்லா அகுந்த் ஜாதா நியமிக்கப்பட்டார். முல்லா உமர் மகனுக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளது. முல்லா அக்தர் மன்சூர் பலி ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவராக திகழ்ந்து வந்தவர் முல்லா உமர். அவர் உடல்…

“வரலாற்று நிகழ்வு” ஹிரோஷிமா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஒபாமாவின் உருக்கமான…

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா வீசிய அணுகுண்டுகளால் 2 லட்சம் பேர் உயிரிழந்ததை தொடர்ந்து தற்போது முதன் முதலாக ஜனாதிபதி ஒபாமா ஜப்பான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இரண்டாம் உலகப்போர் மூண்டபோது, அமெரிக்காவிற்கு எதிராக ஜப்பான் ராணுவம் பேர்ல் துறைமுகத்தில் பயங்கர தாக்குதலை நடத்தியதால் அமெரிக்க கடும் கோபம் கொண்டது.…

மருத்துவமனையில் திருநங்கை பரிதாப பலி! எவ்வாறு இறந்தார் ? விசித்திர…

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரை சேர்ந்தவர் அலிஷா திருநங்கை ஆவார்.அலிஷா  திருநங்கைகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.மேலும் திருநங்கைகள் ஆலோசனை குழு உறுப்பினராகவும் இருந்தார்.திருநங்கைகள் நலனுக்காக போராடி வந்தார் சம்பவத்தன்று ஞாயிற்று கிழமை இரவு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் வைத்து அலிஷா  துப்பாக்கியால் சுட்டு படுகாயம் அடைந்தார். அவரது உடலில்…

குப்பை என ஒதுக்கிய கிரீடத்தின் மதிப்பு ரூ.67 லட்சம்: வியப்பில்…

பிரித்தானியாவில் குப்பை என ஒதுக்கி வைத்திருந்த பண்டைய கிரீடம் ஒன்றிற்கு 67 லட்ச ரூபாய் மதிப்பு இருப்பதை அறிந்த உரிமையாளர் வியப்பில் உறைந்துள்ளார். பிரித்தானியாவின் சோமர்செட் பகுதியில் குடியிருந்து வரும் முதியவர் ஒருவரை அரிய வகை பொருட்களை ஏலத்தில் விடும் நிறுவனத்தில் இருந்து சிலர் வந்து சந்தித்துள்ளனர். அவர்களின்…

குண்டு வெடிப்பு மூலம் தகர்க்கப்பட்ட எகிப்திய விமானம்: தடயவியல் நிபுணர்கள்…

கடந்த 7 நாட்களுக்கு முன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான எகிப்து பயணிகள் விமானம் குண்டு வெடிப்பு மூலம் தகர்க்கப்பட்டுள்ளதாக தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் இருந்து எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவுக்கு 18ம் திகதி ஈஜிப்ட்ஏர் விமானம் (ஏர் பஸ் ஏ320 ரகம்)…

முஸ்லிம் மாணவர்கள் கை கொடுக்க மறுத்தால் அபராதம்: சுவிஸ் அதிரடி

சுவிஸ் பள்ளிகளில் பயிலும் முஸ்லிம் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கை கொடுக்க மறுத்தால், மாணவர்களின் பெற்றோர் 5,000 பிராங்குகள் அபராதமாக செலுத்த வேண்டும் என சுவிஸ் பள்ளிக் கல்வித்துறை அதிரடி சட்டம் நிறைவேற்றியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பேசலில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டு முஸ்லிம் மதத்தை சார்ந்த…

ரஷியா மீதான பொருளாதார தடைகள் தொடரும்: அமெரிக்கா திட்டவட்டம்

உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் தொடரும் என்று அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்தது. இதுகுறித்து அமெரிக்க பொருளாதாரத் தடைக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பாளர் டேனியல் ஃபிரைடு திங்கள்கிழமை கூறியதாவது: உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை வழங்கி உதவியதற்காக ரஷியா மீது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் விதித்துள்ள பொருளாதாரத்…

வான் எல்லைக்குள் நுழைந்து முல்லா அக்தர் மன்சூர் மீது தாக்குதல்:…

தலிபான் தலைவர் முல்லா அக்தர் மன்சூரைக் கொல்வதற்காக அமெரிக்க ஆளில்லா விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தது குறித்து, தங்கள் நாட்டுக்கான அமெரிக்கத் தூதர் டேவிட் ஹேலை நேரில் அழைத்து பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து வெளிவிவகாரங்களில் பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு ஆலோசகர் தாரிக் ஃபதேமி கூறியதாவது: அமெரிக்க…

வெனிசூலாவில் உணவுத் தட்டுப்பாடு; கொகோ கோலா உற்பத்தி இடைநிறுத்தம்

வெனிசூலாவில் ஏற்பட்டிருக்கும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக அங்கு செயற்பட்டு வரும் கொகோ கோலா நிறுவனம் அதன் உற்பத்திகளை இடைநிறுத்தியுள்ளது.கொகோ கோலா உற்பத்திக்கு தேவைப்படும் மூலப் பொருட்களுள் 90 வீதமாகத் தேவைப்படுவது சீனியாகும்.சீனிக்கும் அங்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெனிசூலா நாட்டின் பொருளாதாரம் எரிபொருட்கள் மீதே தங்கி இருக்கின்றது.சார்வதேச ரீதியில்…

தீவிரவாத தலைவன் முல்லா அக்தர் மன்சூர் ஆளில்லா விமானம் தாக்குதலில்…

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் முல்லா அக்தர் மன்சூர் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதை ஆப்கானிஸ்தானின் உளவு ஏஜென்ஸியும் உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்க சிறப்புப் படையின் ஆளில்லா விமானங்கள் தலீபான் தலைவன் மற்றும் கூட்டாளிகளை…

ஐரோப்பா, அமெரிக்க நாடுகளுக்கு எச்சரிக்கை: ஐ.எஸ் வெளியிட்ட புது ஓடியோ

ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு புதிதாக வெளியிட்டுள்ள ஓடியோ ஒன்றில் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அரை மணி நேரம் கொண்ட இந்த புது ஓடியோவில் அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளரான அபு முகமது அல் அத்னானி என்பவர் பேசுகின்றார். தமது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் இந்த ஓடியோவில் அமெரிக்கா…

பாக்தாத்தில் பிரதமர் அலுவலகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள்: துப்பாக்கி சூட்டில் 4…

ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் போராட்டக்காரர்கள் 4 பேர் பலியாகி விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. பாக்தாத் : ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் உயர் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட பகுதி பசுமை பிரதேசம்.…

உக்ரைன் விமான விபத்து: ரூ.1,440 கோடி(RM99 கோடி) நஷ்டஈடு கோரி…

சிட்னி : உக்ரைன் விமான விபத்தில் பலியான 298 பேருக்கும் ரூ.1.440 கோடி நஷ்டஈடு கோரி ரஷிய அதிபர் புதின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை 17-ந்தேதி மலேசிய விமானம் உக்ரைனில் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் விமானத்தில் பயணம் செய்த சிப்பந்திகள் மற்றும்…

சீனா சூப்பர் மார்க்கெட்டுகளில் மாட்டிறைச்சிக்கு பதிலாக மனித இறைச்சிகளா? அச்சத்தில்…

சீனாவில் மாட்டிறைச்சி என்ற பெயரில் மனித மாமிசங்கள் விற்கப்படுவதாக வெளியான தகவல்கள் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாட்டிறைச்சியினை துண்டு துண்டாக வெட்டி அதனை பதப்படுத்தி கேன்களில் அடைக்கப்பட்டு "corned beef" என்ற பெயரில், சீனாவில் இருந்து தென் ஆப்பிரிக்க நாடான சாம்பியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், இந்த corned beef…

கனேடிய பாராளுமன்றத்தில் தமிழ் மரபுத் திங்கள்! பிரேரணை சமர்ப்பிப்பு

'கனடாவில் தை மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக உத்தியோக பூர்வமாக பிரகடனம்செய்யக் கோரும் மனுவை, ஸ்காபரோ -றூஜ் றிவர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி சமர்ப்பித்துள்ளார். இந்தப் பிரகடனமானது, நாடு பூராகவும் தமிழ் மக்கள் தமது செழுமைவாய்ந்த தமிழ் பண்பாடு, கலாசாரம், மொழி மற்றும் வரலாற்றை சார்ந்து…

வங்கி அதிகாரியின் கணனி வழியாக ரூ.535 கோடி திருட்டு: வங்கதேசத்தில்…

வங்காளதேசத்தில் மத்திய வங்கி அதிகாரி ஒருவரின் கணனி வழி சட்டவிரோதமாக புகுந்து 81 மில்லியன் டொலர் திருடப்பட்டுள்ளது. வங்காளதேசத்தில் மத்திய வங்கி அதிகாரி ஒருவரின் கணனியில் சட்டவிரோதமாக புகுந்து 81 மில்லியன் டொலர் (சுமார் ரூ.535 கோடி) திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மணிலாவில் வங்காளதேச தூதர் ஜான் கோம்ஸ்…

புகலிடம் கோரி வரும் அகதிகளை அன்புடன் ஏற்றுக்கொள்ளும் முதல் 10…

சர்வதேச அளவில் புகலிடம் கோரி வரும் அகதிகளை அன்புடன் வரவேற்று ஏற்றுக்கொள்ளும் முதல் 10 நாடுகளின் பட்டியலை சர்வதேச மன்னிப்பு சபையான அம்னாஸ்ட்டி வெளியிட்டுள்ளது. உலகளவில் 27 நாடுகளை சேர்ந்த 27,000 நபர்களிடம் இது தொடர்பாக ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், சுமார் 80 சதவிகித மக்கள்…

ஈக்வடாரில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.8…

ஈக்வடார் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் இருந்து 83 கிலோமீட்டர் தொலைவில் வடமேற்கே உள்ள இடத்தை மையமாகக் கொண்டு தற்போது சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர்அளவுகோலில்…

அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுவெடிப்பு: ஐஎஸ் தீவிரவாதிகள் வெறிச்செயல்

ஈராக்கில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 இடங்களில் ஐஎஸ் தீவிரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பு சம்பவத்தில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். பாக்தாத்தின் வடகிழக்கு பகுதியில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சாப் என்ற இடத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தைப் பகுதியில் குண்டுவெடித்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து…