இறந்தவரின் இறுதி ஆசையை நிறைவேற்ற மோட்டார் சைக்கிளில் அமர வைத்து…

நியூயார்க், பிப். 1-மத்திய மேற்கு அமெரிக்காவின் ஓஹியோ மாநிலம், மெக்கானிக்ஸ்னர்க் பகுதியை சேர்ந்தவர் பில் ஸ்டான்ட்லி. சிறு வயது முதல் பைக் பிரியராக இருந்த இவர் காலப்போகில் பைக் வெறியராகவே மாறி விட்டார். அதிவேகமாக செல்லும் விலையுயர்ந்த 'ஹார்லி டேவிட்சன்' மோட்டார் சைக்கிளை வாங்கி, அமெரிக்க வீதிகளை கலக்கிவந்த…

தோல்வியில் முடிந்த சிரியாவின் அமைதி பேச்சுவார்த்தை

ஜெனிவா, பிப்.1- கடந்த மூன்று ஆண்டுகளாக சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுக் கலவரங்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் கடந்த வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் ஒரு அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது. சிரியாவின் அரசுத் தரப்பு பிரதிநிதிகளும், எதிர்தரப்பு பிரதிநிதிகளும் முதன்முறையாக நேருக்குநேர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையின் தொடக்கம்…

இந்தியாவுக்கு ஆயுதம் கடத்திய இஸ்லாமியக் கட்சித் தலைவருக்கு மரண தண்டனை

பங்களாதேஷின் மிகப் பெரிய இஸ்லாமியவாதக் கட்சியான, ஜமாத் இ இஸ்லாமிக் கட்சியின் தலைவர், மொய்துர் ரஹாம் நிஸாமி, இந்தியாவில் இயங்கும் கிளர்ச்சிக் குழு ஒன்றுக்கு ஆயுதங்களைக் கடத்தி வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்திய மாநிலமான அஸ்ஸாமில் இருந்து செயல்படும் பிரிவினைவாதிகளுக்கு 4,000க்கும் மேற்பட்ட ஆயுதங்களை…

பயங்கரவாதச் சந்தேக நபர்கள் பிரிட்டிஷ் குடியுரிமையை இழப்பர்

பயங்கரவாதச் சந்தேக நபர்களின் பிரிட்டிஷ் குடியுரிமையை பறிப்பதற்கான திருத்தம் ஒன்றை குடிவரவு சட்டமூலத்தில் இறுதி நேரத்தில் உள்துறை அமைச்சர் தெரேஸா மே கொண்டுவந்துள்ளார். அதேவேளை, பிரிட்டனில் உள்ள வெளிநாட்டுக் குற்றவாளிகள் தம்மை நாடு கடத்துவதற்கு எதிராக, இங்கு ஐரோப்பிய மனித உரிமைச் சட்டங்களை பயன்படுத்துவதை தடை செய்வதற்கான அழுத்தத்தை…

சுயநினைவுக்கு திரும்புகிறார் ஷூமேக்கர்

மைக்கேல் ஷூமேக்கரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக பிரான்ஸ் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. கார்பந்தய போட்டியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து வெற்றியை நிலை நாட்டியவர் ஜேர்மனியை சேர்ந்த மைக்கேல் ஷூமேக்கர்(வயது 44). கடந்தாண்டு நவம்பர் 29ம் திகதி, ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கு விளையாட்டில் கலந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக…

சிரியா சமாதான பேச்சுவார்த்தை: முன்னேற்றம் இல்லை

சிரியாவில் சமாதானத்தை ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் முதல்சுற்றில் எந்த இணக்கப்பாடுகளும் ஏற்படுத்திக் கொள்ளப்படவில்லை என பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகிக்கும் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி லக்தார் ப்ராஹிமி இதனைத் தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் மூலம் எந்த தீர்க்கமான முடிவுக்கு வரமுடியும் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.…

தலிபான்கள் மிரட்டல்: மாலலா புத்தக வெளியீடு ரத்து

பெஷாவர்: தலிபான்கள் மிரட்டல் காரணமாக பாகி்ஸ்தானை சேர்ந்த மாலலாவி்ன் புத்தகவெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக பல்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் பெஷாவர் பல்கலை கழகம் சார்பில் மலாலா எழுதிய நான் மலாலா என்ற புத்தக வெளியீட்டு விழா பல்கலைகழகம் சார்பில் நடத்தப்பட இருந்தது. இவ்விழாவை நடத்தக்கூடாது என தலிபான்கள்…

சீனாவை பின்னுக்கு தள்ளியது அமெரிக்கா: ஒபாமா

சீனாவை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதலிடத்தை பெற்றுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பேசுகையில், 2014ம் ஆண்டு அமெரிக்க பொருளாதாரம் நிச்சயம் வளர்ச்சி பெறும். பொருளாதார நிலையற்றத் தன்மையை சீராக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பெண்களுக்கு வேலைக்கேற்ற ஊதியம்…

பிலிப்பைன்ஸ் நாட்டில் முஸ்லீம் கிளர்ச்சியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டனர்

பிலிப்பைன்ஸ் நாட்டில் அமைதி உடன்படிக்கையை எதிர்த்த முஸ்லீம் கிளர்ச்சியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு ராணுவதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சுமார் 1500க்கும் மேற்பட்ட பங்ஸ்மாரோ இஸ்லாமிய சுதந்திர போராட்டகாரர்கள் விவசாய பகுதிகளில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர. கத்தோலிக்க நாட்டின் முஸ்லீம் தென் பிராந்திய இராணுவ செய்தி தொடர்பாளர்…

பாகிஸ்தான் எதிர்காலத்தில் பொருளாதாரத்தில் வலுவான நாடாக மாறும்: ஜான் கெர்ரி

பாகிஸ்தான் எதிர்காலத்தில் பெண்கள் மற்றும் சிறுபான்மையினர்களை சேர்த்து சீர்திருத்தங்கள் செய்து பொருளாதாரத்தில் வலுவான நாடக மாறும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஜான்கெர்ரி தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதல்முறையாக சந்தித்து பேசினர். இந்த சந்திப்பை அடுத்து இந்த…

தாய்லாந்து எதிர்ப்பு இயக்கத் தலைவர் சுட்டுக் கொலை

தாய்லாந்தில் தலைநகர் பாங்காக்கில் அரசாங்க ஆதரவாளர்களுடனான மோதல் ஒன்றின் போது அரச எதிர்ப்பு போராட்ட இயக்கத்தின் தலைவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது சுதின் டரட்டின் அவர்கள், துப்பாக்கியால் சுடப்பட்டார். அடுத்த வாரம் நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலுக்காக, வாக்காளர்கள் முன்கூட்டிய வாக்களிப்பில் கலந்துகொள்வதை தடுக்கும் நோக்கில் தலைநகரிலும்,…

இ-சிகரெட்டை 18 வயதுக்கு கீழ் தடைசெய்ய பிரிட்டன் சட்டம்

இங்கிலாந்தில் இலக்ட்ரோனிக் சிகரெட்டுகளை (மின்னணு மூலம் புகை போன்ற வாயுவை உருவாக்கும் நவீன சிகரெட்) 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு விற்பனை செய்வதை தடைசெய்து பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய சட்டத்தைக் கொண்டுவரவுள்ளது. இ- சிகரெட் மூலம், இளம் பராயத்தினர் நிக்கோட்டின் சுவைக்கு பழகிவிடக்கூடும் என்று மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால்,…

மரணத்தின் பின் நடப்பது என்ன? சுவாரஸ்ய தகவல்

மரணம் குறித்த பயம் சரியானது தானா? மரண அனுபவங்கள் எப்படி இருக்கும்? இதுகுறித்து அமெரிக்காவை சேர்ந்த ஒரு செவிலியர் ஒருவர் தான் பார்த்த மரணங்கள் குறித்து வெளியிட்டிருக்கும் அனுபவங்கள் குறித்து ஒரு புதிய புத்தகம் எழுதி உள்ளார். மனிதனில் மரணம் மற்றும் இறுதி தீர்ப்பு நாட்கள் மற்றும் அப்போது…

முஸ்லிம் இளைஞர்கள் பிரிட்டனை தாக்கலாம்!

சிரியாவுக்கு செல்லும் முஸ்லிம் இளைஞர்கள் பிரிட்டனில் வந்து தாக்குதல் நடத்தக்கூடும் என அதிகாரி ஒருவர் அச்சம் வெளியிட்டுள்ளார். சிரியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் பலியானதுடன், மில்லியன் கணக்கானவர்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் சிரியாவில் போராடுவதற்காக…

மதத்தை இழிவுபடுத்திய இங்கிலாந்து பிரஜைக்கு மரண தண்டனை

பாகிஸ்தானில் மதத்தை இழிவுபடுத்திய வழக்கில் மனநிலை பாதிக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பாகிஸ்தான் வாழ் இங்கிலாந்து நாட்டவரான முகமது அஸ்கர், இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கடிதம் எழுதியதாக கடந்த 2010ம் ஆண்டு ராவல்பிண்டியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கு விசாரணையின் போது, அஸ்கர்…

அத்துமீறும் போர் விமானங்கள்: சீனா கடும் எச்சரிக்கை

தென் சீனக் கடலில் உள்ள குடியேற்றமில்லாத தீவுகளின் உரிமைப் பிரச்சினை உட்பட ஜப்பான் தனது அண்டை நாடுகளான சீனா, தென் கொரியா ஆகியவற்றுடன் தொடர்ந்து எல்லைப் பிரச்சினையில் ஈடுபட்டுவருகின்றது. கடற்பரப்பு எல்லைகளிலும் சீனா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கும் உரிமை மீறல் பிரச்சினைகள் தொடர்ந்து வருகின்றன. இந்த…

நியூயார்க் சுகாதார துறை அமைச்சராக தமிழர் நியமனம்

அமெரிக்காவின் நியூயார்க் நகர சுகாதாரத்துறை தலைவராக தமிழர் ராமநாதன் ராஜூ நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வருபவர் டாக்டர் ராமநாதன் ராஜூ, சென்னை தமிழர். சென்னை மருத்துவக்கல்லூரியில் படித்து எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர், உயர் படிப்பை இங்கிலாந்து நாட்டில் படித்தார். அமெரிக்காவில் பிரசித்தி பெற்ற மருத்துவராக விளங்குகிறார்.…

மத்திய ஆப்ரிக்க குடியரசில் இனப் படுகொலை நிகழும் அபாயம்: ஐ.நா.,…

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய ஆப்ரிக்க குடியரசு நாட்டில் இனப்படுகொலை நிகழ்வதற்கான வாய்ப்புக்ள் அதிகரித்து வருவதாக  ஐ.நா.வின் இனப்படுகொலை தடுப்பு ஆலோசகர் ஆடமா டைங் எச்சரிக்கைவிடுத்துள்ளார். இன்று மத்திய ஆப்பிரிக்க குடியரசில் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட ஆடமா டைங், இங்கு வாழும் இரு பிரிவினர் இடையே நிலவும் வெறுப்புணர்வு…

எதிர்கட்சியினரின் தொடர் போராட்டம் : தாய்லாந்தில் அவசர நிலை அமல்

பாங்காக்: தாய்லாந்தில், எதிர்கட்சியினரின் தொடர் போராட்டத்தால், அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. தாய்லாந்து முன்னாள் பிரதமர், தக் ஷின் ஷினவத்ரா. இவரது தங்கை, யிங்லக், தற்போது, தாய்லாந்து பிரதமராக உள்ளார். இவரது ஆட்சி, தக் ஷின் ஷினவத்ராவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக, எதிர்க்கட்சியினர், புகார் தெரிவித்துள்ளனர். சகோதரனின் கைப்பாவையாக உள்ள யிங்லக்,…

மனித வெடிகுண்டாக மாற்றபடும் சிறுமிகள்

ஆப்கானில் லக்‌ஷ்கார்கா நகரில் ஷ்போஸ்மாய் என்ற சிறுமி உள்ளூர் பொலிஸில் தஞ்சம் அடைந்து, தன்னை தாலிபான்கள் மனித வெடிகுண்டாக மாற்ற முயற்சிப்பதாக முறைப்பாடு செய்தார். ஹெல்மாண்ட் மாகாணத்தில் உள்ள ஒரு சோதனை சாவடியில் வெடிகுண்டு ஆடை அணிந்து சென்று அதை தகர்க்குமாறு அவளது தந்தையும் சகோதரனும் வற்புறுத்தியதாக அச்சிறுமி பொலிஸில்…

அதிக தகவல்களாலேயே வயதானவர்களின் மூளை மெதுவாக செயல்படுகிறது

அதிகமான தகவல்களை தெரிந்து வைத்திருப்பதன் காரணமாகவே வயதானவர்களின் மூளை மெதுவாக செயல்படுவதாக தெரியவந்துள்ளது. ஜெர்மனி நாட்டில் உள்ள துபின்ஜென் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மிக்கேல் ராம்ஸ்கர் என்பவரின் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் இதை கண்டறிந்துள்ளனர். சேமிக்கப்படும் தகவல்கள் அதிகமாகும்போது, கணிப்பொறியின் செயல்பாடு தாமதமாவது போன்று வயதானவர்களின் மூளையும் மெதுவாகச் செயல்படுவதாக…

தேவாலயத்தில் தஞ்சமடைந்துள்ள முஸ்லிம்கள்

மத்திய ஆப்ரிக்க குடியரசில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் 700 பேர் தேவாலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர். மத்திய ஆப்ரிக்க குடியரசு நாட்டில் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் இராணுவ புரட்சி ஏற்பட்டதில் இருந்து வன்முறைச் சம்பவங்கள் தொடர்கதையாகி விட்டன. குறிப்பாக கடந்த ஒரு மாதமாக கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் வெடித்துள்ளது.…

ஹிந்துக்களை தாக்குபவர்களுக்கு வங்கதேச பிரதமர் எச்சரிக்கை

வங்கதேசத்தில் சிறுபான்மையாக உள்ள ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா எச்சரிக்கை விடுத்துள்ளார். வங்கதேசத்தில் சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலையொட்டி நிகழ்ந்த தாக்குதலில் சத்கிரா மாவட்டத்தில் உள்ள ஹிந்துக்கள் அதிக அளவில் தாக்கப்பட்டனர். தேர்தலில் வெற்றி பெற்ற பின் அப்பகுதியை ஹசீனா திங்கள்கிழமை பார்வையிட்டார்.…