விரைவில் வேற்றுகிரக வாசிகளை சந்திப்போம்! விஞ்ஞானிகள் தகவல்

வருகிற 2040ம் ஆண்டில் வேற்றுகிரக வாசிகளை மனிதர்கள் கண்டறிவார்கள் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா, அப்படி இருந்தால் எப்படி இருப்பார்கள் என்பது போன்ற கேள்விகள் நம் மனங்களில் எழக்கூடும். வேற்றுக்கிரக வாசிகள் உண்மையாகவே வசிக்கின்றனர் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். தாமஸ் ஹேர் என்ற விஞ்ஞானி…

மதக் கலவரத்தால் மத்திய ஆப்பிரிக்க குடியரசு பிளவுபடும்: பான் கீ-மூன்…

மத்திய ஆப்பிரிக்க குடியரசில் நிகழ்ந்து வரும் மதக் கலவரத்தால் அந்நாடு இரண்டாக பிளவுபட்டுவிடும்; எனவே, அங்கு மதக் கலவரம் தீவிரமாவதைத் தடுப்பதற்கான நடவடிக்கையை உலக சமுதாயம் மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ-மூன் வலியுறுத்தினார். இதுகுறித்து பான் கீ-மூன் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: மத்திய…

வடகொரியா- தென்கொரியா சமாதான பேச்சுவார்த்தை

கொரிய தீபகற்ப போருக்கு பின்னர் வடகொரியாவும், தென் கொரியாவும் பகை நாடுகளாகி விட்டன. இப்போது இரு தரப்பிலும் உறவை வலுப்படுத்த புதிய முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இரு நாடுகளின் உயர்மட்டக்குழுவினர் முதல் முறையாக அமைதி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளனர். தென்கொரிய…

பெரும் கொடையாளியாக முதலிடம் பிடிக்கும் பேஸ்புக் நிறுவனர்

பேஸ்புக் நிறுவனர் மார்க் மார்க் ஜுக்கர் பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிஸில்லாசான் இருவரும் அதிக நன்கொடை வழங்கிய அமெரிக்கர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். இந்த இளம் தம்பதி 2013 ஆம் ஆண்டு 97 கோடி அமெரிக்க டொலர்கள் சமூகப் பணிகளுக்காக நன்கொடையாக வழங்கியுள்ளனர். 2013 ஆம் ஆண்டு…

அதிநவீன ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது ஈரான்

கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் இரண்டு ஏவுகணைகளை ஈரான் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணைகள் 2,000 கி.மீ தொலைவுக்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டவை. தரையில் இருந்து தரையில் மற்றொரு இலக்கை தாக்கக்கூடிய ஏவுகணை, விமானத்தில் இருந்து பாய்ந்து சென்று விமானத்தை தாக்கக்கூடிய…

தற்கொலை படை வீரருக்கு பயிற்சி : எதிர்பாராமல் குண்டு வெடித்து…

ஈராக்கில் தாக்குதல் நடத்துவதற்காக தற்கொலை படை வீரர் ஒருவருக்கு பயிற்சி அளித்த போது எதிர்பாராதவிதமாக வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் தற்கொலை படை வீரர் உட்பட 22 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளின் பயிற்சிக் கூடத்தில் நடந்த இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், சம்பவ இடத்துக்குச் சென்ற ராணுவத்தினர், பொதுமக்களை…

அமெரிக்காவை எச்சரிக்கும் வடகொரியா

கொரிய வளைகுடாவில் அமெரிக்கத - தென் கொரியத் துருப்புக்களின் இணைந்த பலம் வாய்ந்த வருடாந்த இராணுவ போர்ப்பயிற்சி இந்த மாதம் இடம்பெறவுள்ளது. இநநடவடிக்கையானது வட கொரிய அமெரிக்க உறவில் நிலவி வரும் முறுகல் நிலையை மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வட கொரிய சிறையில் கடும் துன்பத்தை அனுபவித்து…

நவீன ஃபேஸ்மேக்கர்: அமெரிக்க வாழ் இந்திய மருத்துவர் சாதனை

அமெரிக்காவில் புதுமையான ஃபேஸ்மேக்கரை அறுவை சிகிச்சையின்றி நோயாளியின் உடலில் பொருத்தி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் விவேக் ரெட்டி சாதனை புரிந்துள்ளார். சிறிய மெட்டல் சில்வர் டியூப் வடிவில் உள்ள இந்த ஃபேஸ்மேக்கர், சில சென்டிமீட்டர் நீளம் மட்டுமே கொண்டது. இது, தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஃபேஸ்மேக்கரின் அளவில்…

அமெரிக்காவை நோக்கி நகரும் ஈரானிய யுத்த கப்பல்கள்

ஈரானின் பல யுத்தக்கப்பல்கள் அமெரிக்க கடற்பரப்பு எல்லையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக ஈரானிய கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பாரசீக வளைகுடாவில் அமெரிக்க கடற்படை கலங்கள் தரித்து நிற்பதற்கு பதிலடியாக ஈரானிய யுத்த கப்பல்களை அமெரிக்க கடற்படை எல்லையை நோக்கி நகருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவலை ஈரானிய கடற்படை…

ஆபத்திலிருந்து உயிர் தப்பிய ஜோர்டான் மன்னர்

ஜோர்டான் நாட்டு மன்னர் அப்துல்லா பயணம் செய்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக மெக்சிகோ நாட்டில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. மெக்சிகோ நாட்டில், பெயர் வெளியிடப்படாத இடத்திற்கு, ஜோர்டான் நாட்டு மன்னர், ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டிருந்தார். அந்நாட்டின் கடற்கரை மாகாணமான வெராக்ரூஸில் உள்ள, கியூட்லாஹுவாக்கில் ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தது. அப்போது நிலவிய…

8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் கால்தடங்கள் கண்டுபிடிப்பு

ஆப்ரிக்காவில் சுமார் 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் கால்தடங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆப்ரிக்காவில் சுமார் 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 50க்கும் மேலான கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், 12 தடங்கள் மட்டுமே முழுமையாக உள்ளன. இதனை முதன்முதலாக பார்த்த போது,…

ஸ்காட்லாந்து எங்களுடன் இருக்கட்டுமே! பிரதமர் கேமரூன்

ஸ்காட்லாந்து மக்களை தம்மோடு தொடர்ந்தும் இணைந்தே இருக்குமாறு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் கேட்டுக்கொண்டுள்ளார். கிழக்கு லண்டன் ஒலிம்பிக் பார்க் அரங்கில் உரையாற்றிய கேமரூன், 2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் 65 பதக்கங்களை வென்ற பிரிட்டன் ஒலிம்பிக் அணியின் ஒற்றுமை உணர்வை நினைவுகூர்ந்தார். மேலும் ஆளும் ஸ்காட்லாந்து தேசியக்…

வெள்ளை மாளிகைக்குள் பாய்ந்த மர்ம மனிதனால் பரபரப்பு

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையின் மதில் சுவரை தாண்டி குதிக்க முயன்ற மர்ம நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையின் மதில் சுவரின் ஓரமாக நேற்று நடந்து சென்ற ஒரு மர்ம மனிதன், மதில் சுவரின் மீது…

டூத்பேஸ்ட்களில் வெடிபொருட்கள்: ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

டூத்பேஸ்ட் டியூப்களில் வெடிபொருட்களை கடத்தி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவின் சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்கி 23ம் திகதி வரை நடக்கிறது. இதனை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதால், ரஷ்யா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.…

ஈராக்கில் சித்திரவதை செய்து கற்பழிக்கப்படும் பெண்கள்

ஈராக் நாடு தீவிரவாத தாக்குதலால் அல்லல்பட்டு வருகிறது. தினமும் அப்பாவி மக்கள் குண்டு வெடிப்பில் பலியாகிறார்கள். இந்நிலையில், மனித உரிமை கண்காணிப்பு குழு புதிய பேரதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்க மனித உரிமை குழு துணைத்தலைவர் ஜோஸ் ஸ்டோர்க் என்பவர் ஈராக்…

இந்தியாவுடனான அனைத்து பிரச்சனைகளுக்கும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண…

பாகிஸ்தானில் இன்று காஷ்மீர் ஒருமைபாட்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பாகிஸ்தான் பிரதமர் முகமத்நவாஸ் ஷெரிப் கூறும் போது காஷ்மீர் நமது உரிமை என பேரணி மற்றும் பிற நிகழ்ச்சிகள் மூலம் முன்னிலைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது ஜம்முகாஷிமீர் உட்பட இந்தியாவுடனான அனைத்து பிரச்சனைகளுக்கும் பேச்சு வார்த்தைமூலம்…

பனியால் அவதிப்படும் கனடா

கனடாவில் பனிப்பொழிவின் தாக்கத்தால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கனடாவின் ரொறன்ரோ மாகாணத்தில் தொடர்ந்து நிலவிவரும் பனிப்பொழிவால் சாலைகளில் வாகனங்களை வேகமாக ஓட்டவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைதொடர்ந்து Golden Horseshoe, north of Lake Ontario பகுதிகளுக்கு செவ்வாய் நடுஇரவு வேளையில் பரவும் பனிப்பொழிவு…

சவூதி மன்னரை சந்திக்க ஒபாமா திட்டம்

சவூதி மன்னர் அப்துல்லாவை அடுத்த மாதம் சந்தித்து பிராந்திய பாதுகாப்பு, இருதரப்பு நல்லுறவு மற்றும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்து ஆலோசிக்க அமெரிக்க அதிபர் ஒபாமா திட்டமிட்டுள்ளார். அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாக சவூதி அரேபியா விளங்கி வருகிறது. இந்நிலையில் ஈரானுடன் அணு…

தாய்லாந்தில் 3 சிறுவர்கள் சுட்டுக் கொலை

தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள நராதிவாட் மாகாணத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் உயிரிழந்தனர். பாச்சோ மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு ஒரு முஸ்லிம் குடும்பத்தினர் மசூதியில் இருந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த தீவிரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 6,9…

வயிற்றுக்குள் ஒன்பது கிலோ போதைப்பொருள்: கடத்தல் கும்பல் கைது

வயிற்றுக்குள் ஹெராயினை மறைத்து கடத்திச் செல்ல முயன்ற ஐந்து நைஜீரிய இளைஞர்களை, அபுதாபி விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரேசில், லாகோஸ், கானோ மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்து வயிற்றுக்குள் மறைத்து 9.34 கிலோ ஹெராயினை அபுதாபிக்கு கடத்த முயன்ற ஐந்து நைஜீரிய இளைஞர்கள் கடந்த 12 நாட்களில் கைது…

யானைத் தந்தம் கடத்தினால் பொருளாதார தடை: ஐ.நா அதிரடி

உலக அளவில் ஆப்பிரிக்கக் காடுகளில்தான் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவற்றின் தந்தங்களுக்கு இருக்கும் கிராக்கியினால் அவற்றை சட்டவிரோதமாக வேட்டையாடுவதும் இந்த நாடுகளில் அதிகமாகக் காணப்படுகின்றது. இவ்வாறு சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் கும்பல்களுக்கு நிதியுதவி செய்வதன்மூலம் இந்தப் பகுதிகளில் வன்முறைக் கும்பல்களும் அதிகரிக்கின்றன என்று ஐ.நா அமைப்பு கருதுகின்றது.…

நேரடிப் பேச்சுவார்த்தைக்கு சிரியாவை அழைக்கவில்லை

ஜெனீவா பேச்சுவார்த்தையின்போது அமெரிக்கா தங்களை நேரடிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாக, சிரியா வெளியுறவுத் துறை அமைச்சர் கூறிய குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது. ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிந்து நாடு திரும்பும் வழியில், சிரியா வெளியுறவுத் துறை அமைச்சர் வாலித் முவாலம் விமானத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, "தங்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தை…

என் இளமைக்காலம் எப்படி இருந்தது தெரியுமா? மனம் திறக்கிறார் ஒபாமா

அதிகாலையில் எழுந்து படித்தாலும் கூட தான் பொறுப்பற்ற மாணவராகவே இருந்ததாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் டென்னெஸ்கி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அதிபர் ஒபாமா , அங்கு நிகழ்த்திய உரையில் தனது மாணவப் பருவத்தை குறித்து நினைவு கூர்ந்தார். அப்போது பேசிய அவர், என்னுடைய…