ஏனோ….??? …………..(ஆதிநேசன்)

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  info@semparuthi.com

 

 

ganesanAKarpal Singh1காவலனுக்கு மகனாக பிறந்து
காவலன் ஆனாய் ஏழைகளுக்கு…!
எழுபத்து மூன்று வயது வரை
எதற்கும் துணிந்தாய் குரலோங்கி..!

புலியென்றனர் ஜெலுதோங் மக்கள்
புயலென்றனர் ஜனநாயக தூண்கள்..!
நாற்பத்து நான்கு ஆண்டு அரசியல்
நாடே உன்பெயரால் நிமிர்ந்தது..!

கர்பால் சிங்….கர்ஜிக்கும் சிங்கமே…
கலங்கியது நீதிமன்றம் குரல்கேட்டு…
இன்றைய விடியலிலோ நாடே கலங்கியது..
இனி அந்த குரல் இங்கு கேட்காதோ..? 

புரட்சியில் நீ புரண்டு கொண்டிருக்க
பாதியில் விடை பெற்றது ஏனோ …?
பாதங்கள் களைத்தும் களைக்காத நீ 
பயணத்தை நிறுத்தியதும் ஏனோ..?

-ஆதிநேசன் ,கிமிஞ்செ..நெ.செம்பிலான்.

TAGS: