வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : info@semparuthi.com
உலகத்தார் அறிமுகப்படுத்தி..
உருவாகவில்லை இந்த சேய்….!
உடலுக்குள் வாழும்…
உயிரின் ஓசை சொல்லும்..
உன்னைதான் படைத்த தெய்வமென்று…!
உயிர்வாழும் கருவறையிலிருந்து..
உதைத்தப்போதும்…
உணரவில்லை உன் வலியை நான்..!
உணர்ந்து கொண்டாய்..
உள்ளுக்குள் என் பசியை நீ…!!
உயிர்புகுந்த உடலாகி உலகில் உருவானேன்….
உனக்கு துயர் கொடுத்து…!
உறவானாய் உயிரால் எனக்கு உயிர் கொடுத்து..!
உன் இரவுகள் உறங்கவில்லை…!
உன் கனவுகள் உனதுமில்லை…!
உன்னிடமிருந்து நான் பிரிந்தும்..
உன் உணர்வுகள் உடையவில்லை…!
உறைந்து நிற்கிறேன் உனையன்றி உலகில் எதுவும் இல்லை…!
உன்னை ஒருநாள் விழாவில் கொண்டாடி…
வரும் நாட்களில்..
உதாசினப்படுத்தும்..
உயர்ந்த மகுடமாவது ஏன்..?
உயிர்வாழும் வரை உனக்காக
வாழ நினைக்கிற உன் செருப்பு நான்…!!
உருகிக் கேட்கிறேன்..
உன்னை அம்மா எனும்நான்..
உனக்காக இனி………
உன் அம்மாவாக வாழ உரிமையுண்டா….?!!
-ஆதிநேசன் ,கிமிஞ்செ..நெ.செம்பிலான்.