ஒரே வார்த்தையில் உடைந்த வாழ்கை – சுகுமாரன் பெரியசாமி

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  info@semparuthi.com

 

நாட்களின் பயணத்தில்,
மாதங்களையும் வருடங்களையும் கடந்தோம்,
முதுமை பயணத்தில்
அனுபவத்தையும் அறிவையும் பெற்றோம்,
 
இளமையில் கிடைத்த பட்டறிவை,
உரசிப்பார்க்க எண்ணங்கள் வார்த்தையாக
உண்மைகள் நாவிலும் விரலிலும்
தானாக அம்பலமாகின
 
பேச்சும் எழுத்தும் மெய்மறக்க செய்தன
அதில் உண்மை மட்டுமே திரையில்
 
பிடிக்காத குறையீட்டாளன்
உண்மையின் உஷ்ணத்தால் குதிக்கிறான்
அவனுடிய குதிப்பில் என் கால்கள் காயமாகியது
 
ஒரு நாள்
வாசலில் விசாரணைக்காக காவல்
காயபட்ட கால்களும் பின்தொடர்ந்தது
 
உண்மைகளின் அம்பலத்தில்
என் நிலை அலங்கோலம்
 
உனக்கு சகல உரிமையும் உண்டு…
உரக்க பேச, வலுவாக எழுத,
சாசனத்தில் மட்டுமே
 
உண்மை உண்மையாகவே இருந்தாலும்
வேந்தனை மதியாவிடில்
வருங்கால
சட்ட பையில் நீ !!! எச்சரிக்கை !!!
-சுகுமாரன் பெரியசாமி
TAGS: