சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு தற்போதைக்கு ஜாமீன் மறுத்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரச் சிறையில் இருக்கும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையில் இந்த உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.
18 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் செப்டம்பர் 27ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நான்கு பேருக்கும் தலா நான்காண்டு சிறை தண்டனையும் ஜெயலலிதா தவிர மற்றவர்களுக்கு தலா பத்து கோடி ரூபாய் அபராதமும் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட இவர்கள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியும் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரியும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
கர்நாடக நீதிமன்றங்கள் தசரா விடுமுறையில் இருந்ததால், இவர்களது மனுக்கள் கடந்த வாரம் விடுமுறைக் கால நீதிபதி ரத்னகலா முன்பாக விசாரணைக்கு வந்தபோது, அவர் இதனை வழக்கமாக விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார். இதையடுத்து, தசரா விடுமுறை முடிந்து நீதிமன்றம் மீண்டும் இயங்க ஆரம்பித்ததும் செவ்வாய்க்கிழமையன்று, 73வது வழக்காக நீதிபதி சந்திரசேகர ராவ் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பு வாதம்
அரசுத் தரப்பின் சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் வாதாடிய பவானி சிங்கே மீண்டும் ஆஜரானார். ஜெயலலிதா சார்பாக ராம் ஜெத்மலானி ஆஜராகி வாதிட்டார்.
ஜெயலலிதா தரப்பில் ஆஜரான ஜெத்மலானி, “ஜெயலலிதா சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கக்கூடியவர். நீதிமன்றம் அழைக்கும்போது அவர் ஆஜராகத் தவறியதில்லை. இந்த வழக்கில் மேல் முறையீட்டு விசாரணை நடந்து முடிய பெரும் கால தாமதம் ஏற்படும். ஆகவே, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென” வாதிட்டார்.
சுமார் ஒரு மணி நேரம் ஜெத்மலானி வாதிட்டார். அதற்குப் பிறகு சசிகலா சார்பில் வழக்கறிஞர் அமித் தேசாய் வாதிட்டார். ஜெயலலிதாவின் பினாமியாக சசிகலா செயல்பட்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அவர் வாதிட்டார். அதற்குப் பிறகு மதிய உணவிற்காக நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
உணவு இடைவேளைக்குப் பிறகு நீதிமன்றம் மீண்டும் கூடியதும், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி சில விளக்கங்களை அளித்தார். அதற்குப் பிறகு இளவரசி தரப்பு வழக்கறிஞர் அஷ்மத் பாஷா வாதாடினார்.
இதற்குப் பிறகு வாதாடிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜெயல்லிதாவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கலாம் எனத் தெரிவித்தார்.
ஜாமீன் வழங்கப்பட்டதாக முதலில் தவறான செய்திகள்
இதையடுத்து நீதிபதி ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்கு பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாக எமது இணையதளம் உட்பட பல்வேறு ஊடகங்களிலும் செய்திகள் முதலில் வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால் நீதிபதியின் உத்தரவானது, ஜெயலலிதாவுக்கு தற்போதைக்கு ஜாமீன் மறுக்கப்படுவதாகவும், அவரது மனு சம்பந்தமான அடுத்த விசாரணை 21ஆம் தேதி எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேல் முறையீடு
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சந்திரசேகரா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை அவ்வளவு எளிதில் வெளியில் விடமுடியாது என்று கூறினார். உடனடியாக சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.
ஊழல் என்பது மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் நீதிபதி கூறினார். வேண்டுமானால், ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதி கூறினார்.
இதற்குப் பிறகு, இந்த மேல் முறையீட்டு மனுக்கள் மீது அக்டோபர் 27ஆம் தேதி விசாரணை நடக்கும் எனவும் நீதிபதி அறிவித்தார்.
தீர்ப்பின் நகல் கிடைத்ததும் உச்ச நீதிமன்றத்தை அணுகவிருப்பதாக ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் தெரிவித்தார்.
வன்முறை
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட செய்தி பரவியதும், தமிழகத்தில் ஆங்காங்கே பஸ்கள் மறிக்கப்பட்டன. சில பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கையையும் ஜெயலலிதா விரும்ப மாட்டார் என்றும் ஆகவே, கடையடைப்பு, வேலை நிறுத்தம் போன்ற எந்த நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கிடையில், விருதுநகர் மாவட்டம் காளையார் கோவிலில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்ததாக வெளியான செய்தியையடுத்து, சிலர் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீப்பொறி, அங்கு உள்ள சொர்ண காளீஸ்வரர் கோவில் கோபுரத்தின் மீது பட்டது. இதில் கோவிலின் இரண்டு கோபுரங்களையும் புதுப்பிப்பதற்காக கட்டப்பட்டிருந்த சாரம், தீயில் எரிந்து நாசமானது. -BBC
ஊழல் என்பது மனித உரிமைகளுக்கு எதிரானது…அதுவும் வகித்த பதவி …???
ஒத்த ரூபாவுக்கு வேலை செய்து அம்மா ரொம்பவும் களைச்சி போயிட்டாங்க. அவர்களுக்கு கொஞ்சம் ஒய்வு தேவைப்படுவதால் எந்த வெளிப்புற தொந்தரவும் இல்லாமால் நன்றாக ஒய்வு எடுக்கட்டும்.
அண்ணா திமூக்கா மடையர்கள் தமிழ் நாட்டில் பண்ணும் அநியாயங்களை தட்டி கேட்க நாதி இல்லை -இந்திய அதிபரும் பிரதமரும் தூங்கி கொண்டிருக்கின்றனர். அதிபர் ஆட்சியை கலவரம் ஆரம்பித்த போதே அதிபர் ஆட்சி அமுலுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் AIADMK உதவி தேவைப்படும் என்ற எண்ணத்தில் மோடி ஒன்றும் செய்ய வில்லை. எல்லாம் நாறிப்போன அரசியல்.
முன்பு ஒருமுறை ஜெயலலிதா ஆட்சியின்போது நிதி பற்றாகுறையால் நீதிமன்றங்களுக்கான பராமரிப்பு நிதி ஒதுக்கீடு செய்ய முடியவில்லை என்று தமிழக செயலாளர் காரணம் கூறியபொழுது, நீதிபதி ஒருவர் அப்படியானால் இந்த அரசு திவாலாகிவிட்டது என்று நீதிமன்றம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யலாமா என்று நேரிடையாகவே கேட்க, ஆடிப்போன அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உடனடியாக நீதிமன்றங்களுக்கான பராமரிப்பு நிதி ஒதுக்கீடு செய்தார்.
அதேபோல் பொதுமக்களில் ஒருவர் தமிழகத்தில் ஆளும் கட்சியினரே அராஜகத்தில் ஈடுபடுவதால் சட்டம் ஒழுங்கு கேட்டு விட்டது, ஆகவே நீதிமன்றம் இந்த ஆட்சியை கலைக்க மத்திய அரசிடம் பரிந்துரைக்க வேண்டும் என்று பொதுநலவழக்கு தொடர்ந்தால்தான் அதிமுக-வினர் அடங்குவார்கள்.
இந்த அம்மாவுக்கு கணவனும் , குழந்தைகளும் இல்லாத போதே இவ்வளவு சொத்து (700 கோடி ச்விச்ஸ் வங்கியில் வைத்திருப்பதாக என் தமிழ் நாட்டு தோழி சொன்னார் ). அது உண்மைய இல்லையா என்று எனக்கு தெரியாது , ஏன் எல்லா அரசியல்வாதிகளும் இப்படி பண பிசாசு போல இருகின்றார் களோ தெரியவில்லை . உண்மை தெரிந்தாலும் இவரை சுற்றி உள்ளவர்களும் அமாம் சாமி போடுவதிலே குறியாக உள்ளனர் . என்ன ஜென்மங்களோ
இதில் அரசாங்க வாகனங்களை அழிப்பது வேடிக்கையான வேதனை .
இந்த 7அரை மடையர்களுக்கு அறிவு வேலை செய்யாத ? இந்த அம்மா வின் தொண்டர்கள் செய்த வேலைக்கு கோபுரமே பற்றி எரிய வேண்டிய நிலை வேறு .
தமிழ் நாட்டை ஆளா இனியாவது ஒரு பச்சை தமிழன் முன் வர வேண்டும் .
நான் ஜெயலலிதா அபிமானி அல்ல. நான் என்றும் மு.க வின் எழுத்துக்கு வசப்பட்டவன். ஆனால் இந்த ‘கைது’ மற்றும் சிறை தண்டனைக்குப் பிறகு நான் ஜெயலலிதாவுக்காக அனுதாபப்படுகிறேன். இப்போது ஜெயலலிதாவுக்கு எதிராக (அவரின் தண்டனைக்கு ஆதராவாக) குரல் கொடுக்கும் அத்தனை வேட்டிகளும் ஒருகாலத்தில் (அதாவது இந்த சொத்துக் குவிப்பு வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே…. இன்னும் சொல்லப் போனால் அவர் ஊழல் ராணி என்று தெரிந்தும் கூட) அவரோடு கூட்டுச் சேர்ந்தவர்களும் கூட்டுச் சேரத் துடித்தவர்களும் தான் இந்த ‘வேட்டிகள் எல்லாம். இந்த ‘கரை’ வேட்டிகள் எல்லாம் ‘கறை’ படியா வேட்டிகளா? ஜெயலலிதா மீது தூவேசக் கல்லெறிய என்ன தகுதி உள்ளது இவர்களுக்கு? இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது ஜெயலலைதாவைப் பற்றி விமர்சிக்க? இந்த கோமாளி காந்த் கூட ஜெயாவுடன் கூட்டு சேர்ந்திருக்காவிட்டால் போன தேர்தலோடு காணாமல் போயிருப்பார். இன்று அவருக்கும் அவரின் கட்சிக்கும் மறைமுகமாக ஓர் அடையாளம் தந்தவர் ஜெயலலிதா. வழக்கில் தீர்ப்பு வ்ழங்கியவர் ‘இது போல ஊழல் பெருச்சாளிகள் இந்தியாவில் மலிந்து கிடக்கின்றன. அவர்களையும் தேடிப்பிடித்து இப்படி தண்டனை வாங்கித்தர போலிஸ் தரப்பும் அரசுத் தரப்பும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று சொல்லியிருந்தால் அவரைப் பாராட்டி இருக்கலாம். ஆனால் எனக்கென்னவோ நீதிபதி ‘தண்ணீர்’ விஷயத்தில் விடாப்பிடியாக போராடி வென்ற ஜெயலலிதாவைப் பழிவாங்கி விட்டார் என்றே தோனுகிறது. இது தமிழக மக்களுக்கு புரிகிறது ஆனால் அரசியல் மாக்களுக்கு மட்டும் புரியவில்லை. இல்லாவிட்டால் நீதியரசர் குறைந்த பட்ச தண்டனையே கொடுத்திருப்பார். ஆனால் இவர் வழங்கிய தண்டனையைப் பார்த்தால் ‘என்னவோ ஜெயலலிதா மட்டும் தான் ஊழல் செய்தவர் என்பது போலவும், அவரை சிறையில் அடைத்துவிட்டால் இந்தியாவே தூய்மையாகிவிடும் என்பது போலவும் அல்லவா தெரிகிறது? ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். ஜெயலலிதா ஏழை மக்களுக்கு நல்லது செய்திருந்தால் அவர் ஓங்கி அடிக்காமலேயே ‘ஒன்னரை டன் வெயிட்’ என்பதும் சிறையில் அடைபட்டாலும் சிங்கம் சிங்கம் தான் என்பதும் விரைவில் தெரியவரும். அல்லது ஏழை மக்களின் பணத்தில் ‘ஆடியிருந்தால்’ சிறையிலேயே அடக்கமாவார்…..
அனா தி மு கா மடையர்கள் என்றால் ,தி மு கா அறிவாளிகாலா ? அண்ணா திமு கா மடையர்கள் என்று சொன்னவன் ஒரு வடிக்கட்டின மடையனாகதான் இருப்பான்
சட்டம் அதன் கடமையை
செய்தது அதில் தவறு இருத
மேல்
முறையீடு
செய்து நீதீக்கு
போர் ஆட
வேண்டுமே
இப்படி பொது சொத்தை
நச படுத்தி அ
ல்ல
மரியாதை தெரியாத உன்னைப்போன்ற வன்களுடன் பேசுவதே வீண். பொது சொத்தையும் சேதப்படுத்தி மக்களுக்கு சொல்ல ஒண்ணா சிரமங்களை கொடுத்த அண்ணா திமுகா பெரிய அறிவாளிகளே.
சட்டம் அதன் கடமையை செய்தது !!!! சட்டத்துக்கு உயிர் இருக்கா ?? சட்டத்தை உருவாகியது சட்டமா ?? மனிதன் இல்லையா ??ஊ ஓஓஓ ஊ ஓஓஓ
உன்னை யாரு பேச சொன்னா ,எ ரொம்ப அலட்டிக்கிற …
குற்றம் என்ற புற்றில் கையை விட்டால் சட்டம் என்ற பாம்பு கடிக்கத்தான் செய்யும்.அது இயற்கை.ஆனால் வட பகுதியில் உள்ள வட நாட்டான் இதே தவறு செய்தால் அவனுக்கு கிடைக்கும் தண்டனையோ மிக குறைவு.ஆனால் தென்னவன் குறிப்பாக தமிழ் நாட்டான் [அல்லது நாட்டசி] இதே தவறு தவறு செய்தால் அதன் தீர்ப்பு இன வாத தன்மை கொண்டதாக இருக்கிறது.நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப் படவில்லை.வருமானதிற்கு அதிகமாக சொத்து சேர்ததாகதான் வழக்கு.இதுக்கே இப்படியென்றால்,தமிழ் நாட்டில் ஸ்பெக்ட்ரம் ஊழல் பெருச்சாளிகளுக்கு இதைவிட பெரிய ஆப்பை வட நாட்டான் வைக்கப் போகிறான்.அப்போதாவது தமிழ் நாட்டானுக்கு இலங்கைத் தமிழன் போல தன்மான உணர்வு வருகிறதா என்று பார்ப்போம் நாராயணா.
உண்ணாவிரதம் இருந்த பொது கழக குஞ்சுகள் எரிக்காத வாகனங்களா ? காட்டாத அட்டகாசமா ? அடித்தடி ,சண்டித்தனம் எல்லாம் தொடங்கியவன் இந்த கோபாலபுரம் குள்ளன் தான் ……இப்பொது மீண்டும் CM கனவில் ….நிச்சயம் கனவாகவே இருக்கும்
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா,ஆனால் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை நம்ம அன்வர் கேஸ் போலவே,வெற்றிப்பெற வாழ்த்துக்கொள் வாழ்க நாராயண நாமம்.
அரசாங்க பதவியில் இருந்துக் கொண்டு வருமானதிற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு கொண்டு வரபட்டால் அது ஊழல் வழக்குதான். அவ்வாறே சிறப்பு ஊழல் வழக்கு நீதிமன்றத்தால் விசாரிக்கப் பட்டார். குற்றவாளி இல்லை என்றால் மேல்முறையீட்டில் வாதிட்டு வெல்லலாமே. அதற்கு இன்னும் வாய்ப்பு நிறையவே இருக்கின்றது. இந்திய அரசியல்வாதிகளுக்கு இதுவெல்லாம் பெரிய கதை ஒன்றும் இல்லை. பாதிக்கப் பட்டவரே கவலை இல்லாமல் காப்பி, டீ, பொங்கல்ன்னு குடிச்சி, சாப்பிட்டுக்கிட்டு நிம்மதியாக இருக்காங்க. சும்மா ஏன் அவங்க நிம்மதியை கெடுக்கப் பார்க்குறீங்க. வேற வேலையைப் பாருங்க. நம்ப வேலையைப் பாருங்க.
அரசியல் களம்
இந்தாப்பா கன்னட காரனே…
உங்க ஊரு மைசூர் மகாராணிய நாங்க தந்துட்டோம்…
நீங்க எங்க ஊரு பொன்னு காவேரிய எப்ப விடுவீங்க…
அப்படியே வேனும்னா உங்க ஊரு சிவாஜி ராவ் சூப்பர் ஸ்டாரையும்
கூட்டிட்டு போயிடுங்க….
இனி நாங்க ஆளனும் எங்க நாட்ட….
ஊழல் பெரிச்சாளிகள் கருணாவும் வேன்டாம் ! ஜெயாவும் வேன்டாம் !!
நாம் தமிழர் கட்சியின் புலி கொடி இனி திசை எங்கும் பறக்கட்டும்…
மூட தமிழர்கள் அரசியல் அறிவொளி பெறட்டும்…
(அவனுங்க இருக்க கோவத்துக்கு சிக்குனேன் ஸ்டூல் க்கு கீழ வச்ச வட மாதிரி ஆக்கிடுவானுங்க)
தமிழ் நாட்டு அரசை கலைக்கவேண்டும் என்று வெளிப்படையாக கூறும் எதிரி சுனா. சாமிக்கும்,
நரித்தனமா ஆறிக்கைகள் விட்டு ஆட்சிய கலச்சுபுட துடிக்கும் துரோகி கருணாநிதிக்கும் , என்ன வேறுபாடு ?,
இனியாவது 25 % வாக்களிச்ச தமிழர்கள் தெரிந்துகொள்ளுங்கள், இவர்கள் கொள்கைகள் யாருக்காக என்று.
பிரதமர் பதவிக்கான போட்டியில் ஜெயலலிதாவின் பெயர் எப்போது அடிபட்டதோ அப்போதே அதிமுகவுக்கு மோடி குறி வைத்துவிட்டார்.
அநியாயத்துக்கு நல்லவனா இருக்காதிங்கடா முள்ளிவாய்க்காளோடு நீதி,நேர்மைய தள்ளிவைங்கடா!
நீதி,நேர்மைன்னு சொன்னா தமிழன் சிலையாகிவிடுகிறான்! இதுதாண்டா உன்னோட வீக்னஸ்…இதை பயன்படுத்தியே எதிரி நம்மை குனியவைத்து கும்முகிறான்!
நமக்கு ஆதரவாக இருக்குறவங்களுக்கு ஆதரவா இருப்போம்…ஜெயாவுக்கு பிறகு வாரிசு இல்லை எனவே அவரை நாம் பயன்படுதிகொள்வதே தப்பில்லை…
நீதி,நேர்மைதான் பார்ப்பேன் என்று அமைதியாக இருந்தால் நாளை தமிழக அரசு கலைக்கப்பட்டு நேரடியாக ஹிந்தியத்தின் ஆதிக்கத்திற்கு சென்றுவிடும்! இதை உணர்ந்து செயல்படுங்கள் தமிழ்தேசியவாதிகளே!
மோடியின் இனஅழிப்பில் இருந்து தமிழகம் தப்புமா?—- வேல்ஸ் இல் இருந்து அருஷ்
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவிற்கு அண்டைய மாநிலத்தில் வைத்து விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் கர்நாடக மாநிலச் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் தமிழ் மக்களுக்கும், தமிழகத்திற்கும் வரப்போகும் பேரழிவுக்கான சமிக்கைகளே.
ஜெயலலிதா அவர்கள் விடுதலைப்புலிகளுக்கு எதிரானவர் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ளத்தேவையில்லை. விடுதலைப்புலிகளுக்கு எதிரானவர் என்றால் அவர் ஈழத்தமிழ் மக்களுக்கும் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் எதிரானவர் என்பதே பொருள்.
mahi-modi (2)
1990 களில் தன்னை சந்தித்த ஒரு முக்கிய பிரமுகரிடம் தமிழீழத் தேசியத்தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் கூட ஜெயலலிதா குறித்த தனது கருத்தை வருத்தத்துடன் தெரிவித்திருந்தார். ‘இந்த அம்மாவுக்கு நாம் என்ன செய்தோம் ஏன் எங்களுக்கு எதிராகவே செயற்படுகின்றார்’ என பிரபாகரன் அவர்கள் தெரிவித்திருந்தார்.
ஆனால் மாற்றங்கள் தான் வாழ்க்கை, எதிரிக்கும் நண்பனுக்கும் இடையில் உள்ள இடைவெளி என்பது நூலிடை தான் அதன் போக்கு எந்த சமயத்திலும் மாற்றமடையலாம். புளொட் என்ற ஆயுதக்குழுவில் இருந்து விடுதலைப்புலிகளுக்கு எதிரான பரப்புரைகளில் ஈடுபட்டுவந்த மாமனிதர் சிவராம் அவர்களிடம் ஏற்றட்ட மாற்றம் இதற்கு சிறந்த உதாரணம்.
அண்மைக்காலமாக ஜெயலலிதாவில் ஏற்பட்ட மாற்றம் என்பது அவரது அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கலாம் ஆனால் அதன் மூலம் தமிழ் மக்களுக்கு குறிப்பாக ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவான ஆனால் சிறீலங்கா அரசுக்கு எதிரான பல தீர்மானங்களை அவர் தமிழக சட்டசபையில் நிறைவேற்றியிருந்தார்.
தமிழ் இனத்தை காப்பதற்கான செயற்பாடுகள் தொடர்பில் பணிபுரிந்தாலே தமிழக அரசியலில் தம்மை நிலைநிறுத்த முடியும் என்ற இனஉணர்வு அங்கு ஏற்பட்டதே அதற்கான காரணம். ஜெயலலிதாவின் இந்த மாற்றம் இந்திய நாடாளுமன்ற தேர்தலில் அவரை தனிப்பெரும் சக்தியாக உருவெடுக்க வைத்திருந்தது. மத்தியில் கூட்டணி அரசு அமையுமாக இருந்தால் அதற்கான ஆதரவு ஜெயலலிதாவிடம் தான் இருந்திருக்கும்.
அடுத்த பிரதமர் ஜெயலலிதாவோ? என்ற நிலையில் மோடிக்கு சாவால்விடும் நிலைக்கு அவரை உயர்த்தியதும் தமிழ் மக்களுக்கு சார்ப்பாக, சிங்கள அரசுக்கு எதிராக அவர் செயற்பட்டதுதான்.
ஆனால் மோடி அரசும் அதன் கொள்கை வகுப்பாளர்களும் மிகவும் தந்திரமாக காய்நகர்த்துகின்றனர்.
அதாவது இனத்துவேசத்தை பேசியதற்காக ஹவாட் பல்கலைக்கழகத்தில் இருந்த கலைக்கப்பட்ட எப்போதுமே தமிழ் மக்களுக்கு எதிராக சிந்தித்து செயற்படும் சுப்பிரமணியன்சாமியை சிறீலங்காவுக்கு அனுப்பி தமிழ் விவகாரங்களில் தந்திரமாக அவரை நுளைத்துள்ளது பாரதிய ஜனதாக் கட்சி.
தனக்கும் சாமிக்கும் தொடர்பில்லை என மத்திய அரசு தெரிவித்துவரும்போதும் அவரின் பின்னனியில் இருந்து செயற்படுவது இந்திய மத்திய அரசுதான்.
அதன் பின்னர் தான் ஜெயலலிதா மீதான தனது இரண்டாவது கட்டப் பாச்சலை ஆரம்பித்துள்ளது மோடி அரசு. ஜெயலலிதாவை சிறையில் அடைத்ததன் நோக்கம் அவரின் அரசியல் வாழ்வை அழிப்பது, குறிப்பாக அ.தி.மு.காவின் அரசியல் அடித்தளத்தை அழிப்பது தான் முக்கிய நோக்கம்.
அதுதவிர அவரை கர்நாடக சிறையில் அடைத்ததன் நோக்கம் தமிழ் மக்களின் தன்மானத்தை சீண்டுவதன் மூலம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை குலைத்து ஆட்சியை கலைப்பதே.
jaya23ஜெயலலிதா யாரக வேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால் அவர் தமிழக மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். தமிழகத்தின் முதல்வர் எனவே அவரை வேறு ஒரு மாநிலத்தின் சிறையில் அடைப்பது என்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் ஏற்பட்ட அவமானமாகும்.
இரண்டு வடஇந்திய மீனவர்களை சுட்ட இத்தாலிய நாட்டவர் மீது மேற்கொள்ளப்பட்ட நடைவடிக்கையை நாம் அறிவோம், ஆனால் 500 இற்கு மேற்பட்ட தமிழக மீனவர்களை படுகொலை செய்த சிறீலங்கா அரசு மீது எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள எந்த ஒரு இந்திய மத்திய அரசும் முன்வந்ததில்லை.
இது ஒரு சிறு உதாரணமே தவிர தமிழ் மக்களுக்கு எதிராக இந்திய மத்திய அரசு மேற்கொண்டுவரும் வன்முறைகளும், இனப்புறக்கணிப்புக்களும்,
ஒடுக்குமுறைகளும் ஏராளம். எனினும் மோடி அரசின் செயற்பாடுகள் என்பது தமிழகத்தில் அடுத்த ஒரு முள்ளிவாய்க்கால் நிகழ்வை உருவாக்கி முற்று முழுதாக தமிழ்த் தேசிய உணர்வை அழிக்கும் முயற்சியின் ஆரம்பமாகவே பார்க்கப்படவேண்டும்.
சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சாவை விட மிக மோசமானவர் தான் மோடி என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அவரை முறியடிக்கும் முகமாகவே எமது காய்நகர்த்தல்கள் இருத்தல் வேண்டும்.
modi-rajani
ஜெயலலிதா சிறை சென்ற பின்னர், தமிழக அரசை கலைப்பதற்கு சாமி மேற்கொள்ளும் முயற்சிகளும், நடிகர் ரஜனியை அரசியலுக்கு இழுத்து தமிழக மக்களின் தலைவிதியை கன்னட இனத்தின் கைகளில் கொடுப்பதற்கு தமிழிசை சௌந்தர்ராஜன் மேற்கொள்ளும் முயற்சிகளும், கையில் துடைப்பக்கட்டையுடன் கமலஹாசனை மோடி அழைக்கும் தந்திரங்களையும் நாம் சரிவர புரிந்துகொள்ளவும், உள்வாங்கிக்கொள்ளவும் வேண்டும்.
நாம் தோல்வி அடைந்தோமோ அல்லது வெற்றியடைந்தோமோ என்பதில் எமது அடுத்த கட்ட நகர்வு தங்கியிருப்பதில்லை. கசப்பாக இருந்தாலும் உண்மையை ஏற்றுக்கொள்வதில் தான் எமது அடுத்த கட்ட நடவடிக்கையின் வெற்றி தோல்வி தங்கியுள்ளது.
இந்தியப் பிரதமர் மோடியை பொறுத்தவரையில் சிறுபான்மை இனங்கள் மீது வன்முறைகளை பிரயோகிப்பதிலும், ஒடுக்குவதிலும் சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவை விட மோசமானவர். குஜராத்தில் இடம்பெற்ற இனக்கலவரம் அதற்கு சிறந்த உதாரணம்.
ஆனால் தற்போது அவரின் பார்வை பதிந்துள்ளது, முஸ்லீம் மக்கள் மீதோ அல்லது பாகிஸ்த்தான் மீதோ அல்ல, தமிழ் மக்கள் மீது தான். அதன் வெளிப்பாடே துள்ளித்திரியும் சாமியும், வேற்று மாநிலத்தில் வைத்து தமிழக முதல்வர் மீது மேற்கொள்ளப்பட்ட அவமதிப்புமாகும்.
ஜெயலலிதா மீதான தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை களைந்து பார்ப்போமானால் மோடி அரசின் நகர்வுகளை புரிந்துகொள்ளமுடியும்.
எனவே தமிழகத்தில் இருந்து இந்திய காங்கிரஸ் கட்சியை துடைத்தெறிந்ததுபோல பாரதிய ஜனதாக்கட்சியும் தமிழகத்தில் இருந்து முற்றுமுழுதாக அகற்றப்படவேண்டும்.
எனவே நாம் செய்யவேண்டிய முக்கிய கடமைகள் பல உண்டு, முதலில் தமிழகத்தில் இருந்து பா.ஜ.கவை வெளியேற்றும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவேண்டும்.
அதற்கு அடுத்ததாக தமிழினக்கட்சிகளை ஒருங்கிணைத்து, மாணவர்களை உள்வாங்கி தமிழத்தேசியத்தை பலப்படுத்துவதுடன், அடுத்த தேர்தலுக்கு தயாராக வேண்டும்.
அதனையும் மீறி தமிழினம் இந்திய மத்திய அரசின் புறக்கணிப்புக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாகுமானால் ஸ்கொட்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட தனிநாட்டுக்கான வாக்கெடுப்பை போன்றதொரு நகர்வுக்கான சட்ட நடைமுறை இந்திய அரசியல் அமைப்பில் உள்ளதா என்பதை ஆராயவேண்டும். இல்லை எனில் ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக அதற்கான நகர்வை மேற்கொள்ள முடியும்.
ஏனெனில் ஸ்பெயின் நாட்டின் மாநிலமான கற்றலோனியா தனது சுதந்திரப்பிரகடனம் தொடர்பில் சிந்தித்து வருகின்றது. கடந்த வாரம் வெளிவந்த இந்த செய்திகள் தொடர்பில் ஸ்பெயின் அதிபர் கடும் சினமடைந்ததுடன், அதனை தடுப்பதற்கு தனது நாட்டில் உள்ள சட்டங்களை பயன்படுத்தப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் மொழி உட்பட பல வழிகளிலும் 1938 ஆம் ஆண்டில் இருந்து புறக்கணிப்புக்கும், அடக்குமுறைக்குள் உட்பட்டுவரும் கற்றலோனியா மாநில மக்கள் சுதந்திரப்பிரகடன் தொடர்பான வாக்கெடுப்பு தொடர்பில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவே ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சா ஆட்சிக்கு வந்தபின்னர் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அவலங்களை நினைவில் கொள்ளுங்கள், இனஅழிப்பில் இருந்து தப்புவதற்கும், இனத்தை காப்பதற்குமான நடைவடிக்கைக்கு தயாராகுங்கள்.
ஈழம்ஈநியூஸ் இற்காக வேல்ஸ் இல் இருந்து அருஷ்.
நன்றி அருஷ்
எங்க மாநில முதல் அமைச்சர் சும்மாத்தான் இருக்காரு , வேணுனா ஒரு தவனைக்கு மட்டும் கடன் தரோம்.
தன்மானத்தமிழன் wrote on 9 October, 2014, 13:36 கருத்துக்கு பதில் :-
++++++
malaysian wrote on 29 September, 2014, 21:27
திருடிக்கி என்னடா வக்காலத்து
++++++
Anonymous wrote on 3 October, 2014, 22:54
Thipori wrote on 3 October, 2014, 1:41, கருத்துக்கு பதில் :-
++++++
malaysian wrote on 29 September, 2014, 21:27
திருடிக்கி என்னடா வக்காலத்து
ஜெயலலிதா அம்மையார் இந்த ஜெயில் தண்டனை மூலம் எதனையெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்து செய்ய முடியாமல் போனதோ அதனை பன்னிர்செல்வம் அண்ணாச்சி தொடர்ந்து செய்யலாமே! இதில் என்ன கஷ்டம்? ஒருவரை விட்டால் இன்னொருவர் இல்லை என்னும் நிலை எப்போதும் எங்கேயும் இல்லை. செய்வதற்கு மனம் தான் வேண்டும். ஜெயலலிதா பதவி ஏற்றதும் அவர் செய்த முதல் வேலை என்ன? ஆசியாவிலேயே பெரிய நூலகம் என்று சொல்லப்பட்ட நூலகத்தை தகர்த்தெறிந்தது தான். நூலகம் என்பது கல்வி சார்ந்தது. கல்வி என்றால் சரஸ்வதி என்பர். இதன் மூலம் தனக்கான அழிவு சக்தியை தானே வரவழைத்துக் கொண்டார். அவருக்காக யார் வாதாடினாலும் அன்னையின் அருள் கிட்டாமல் போகும்!
கூட்டாக ஏகபோக வாழ்வு வாழ்ந்த அம்மையார் அங்கு உண்ணஉணவின்றி ,உடுத்த உடையின்றி அல்லல் படும் மக்களுக்கு எவ்வளவோ நன்மைகள் செய்திருக்கலாம் இன்றும் தெரு ஒரிங்களில் மறவு கட்டி உறங்கும் மக்கள் இவற்ற்க்கெல்லம் நல்ல தீர்வு கண்டிருக்கலாம். அதையெல்லாம் விடுத்தது ‘அல்லக்கை ‘களோடு கூட்டு சேர்ந்து நிலங்களையும் ,சொத்துக்களையும் சேர்த்து என்ன சுகம் கண்டார் தனிமாயில் சிந்திப்பாரா jeyalalitha அமையார் ?
மோடி ஜயாவை விடுதலை செய்ய வில்லைன்னா ,மோடியை செருப்பால அடிக்கோணும்
இலங்கை மக்கள் விடுதலை,தூக்குக்கைதி விடுதலை விவகாரங்கள் பற்றி முயற்சி எடுக்க இனி தமிழகத்தில் நாதியே கிடையாது,நாராயண நாராயண.