வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]
எனது மடியிருத்தி
இரட்டைப்பின்னலிட்டு
இடுப்புப்பட்டியிருக்கி
கழுத்துப்பட்டி முடிந்து
புத்தகப்பை தோளில் மாட்டி
உனை முன்னே போகவிட்டு
பின்னே இருந்து
அழகு பார்க்கும்
அப்போதும் இப்போதும்.
தலைவாரிப்பொட்டிட்டு
பிஞ்சுப்பாதங்களுக்கு
கொலுசிட்டு
புத்தாடை உடுத்தி
பொம்மைகள் செய்யும்
உந்தன்
குழந்தைத்தனத்தையே
நேசித்திருக்கிறேன்.
இன்னமும்
விரும்புகின்றேன்.
இருந்தும் நீ
பூப்பெய்து விட்டாய்
உந்தன் சிறுபராயம்
தொலைந்து
சமூகக்கட்டுக்குள் போனதை
ஜீரணிக்க முடியவில்லை.
மொத்தத்தில்
இதுவொரு முரண்பாடான
உலகம் தான்.
மூடத்தை சமூக ஒழுக்கம்
என்கிறது.
அன்று போல
இன்றும் ஆன உன்
அதே அச்சொட்டுச்சிரிப்பை
கனிந்த பேச்சை
“சத்தம்” என்கிறது.
வளைவு, நெளிவு, சுழிவு,
ஆகமொத்தத்தில்
உந்தன் நளினத்தை
“ஆட்டம்” என்கிறது.
அன்று நீ
பொம்மை செய்ததும்
பொம்மை ஆனதும்
உண்மையே.
வெறும் பதின்ம வயது
எந்தன் செல்லமே!
இலங்கை முல்லைத்தீவிலிருந்து…
தாயக கவிஞர்
அ.ஈழம் சேகுவேரா
கருத்துகள் மற்றும் பகிர்வுகளுக்கு:
தமிழ் ஈழத்தில் , முல்லைத் தீவிலிருந்து தாயக கவிஞர் ,அ . ஈழம் சேகுவேரா, வெறும் பதின்ம வயது எந்தன் செல்லமே , இலங்கை போர் விமானம் நம் மண்ணில் குண்டுமழை பொழியும் பொழுது , உயிர் காக்க புத்தகப்பையுடன் , பதுங்குக் குழியில் பதுங்கினாயே செல்லமே , வெறும் பதின்ம வயது எந்தன் செல்லமே ,எந்தன் செல்லமே .
திரு.உதயகுமார் அவர்களே! என்னுடைய மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கவிதை “பசி” (வேட்டைநாய்களின் குரூரம்) மற்றும் டிசம்பர்-10 சர்வதேச மனிதஉரிமைகள் தினக்கவிதை “வன்மநாடு வக்கிரத்தலைவன்” படித்திருக்கின்றீர்களா?
(முள்ளிவாய்க்காலில் ஈவிரக்கமின்றி சிதைக்கப்பட்ட, காமக்கழுகுகளால் கொத்திக்குதறப்பட்ட உரிமைப்போராளி, ஊடகப்போராளி இசைப்பிரியா உள்ளிட்ட பல ஆயிரம் பெண் விடுதலைப்போராளிகளுக்கு உணர்வர்ப்பணம் செய்யப்பட்ட கவிதை அது!)
[email protected] எனும் எனது பிரத்தியேக மின்னஞ்சல் முகவரியூடாகவும் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.
மெத்த கனிவுடனும்… நிறைந்தளவு நம்பிக்கையுடனும்…
இலங்கை முல்லைத்தீவிலிருந்து…
தாயக கவிஞர்
அ.ஈழம் சேகுவேரா
[email protected]
வேதத்தை கொலுத்தியது,கடவுள் உருவம் தெருவில் உடைத்தது மற்றம் பல ஆன்மீக இழிவு நிகச்சிக்கு ஞாயம் கிடைக்குமோ,நாராயண நாராயண.
அ. ஈழம் சேகுவேரா ஆம், [ அ. ஈழம் பிரபாகரன் ], வஞ்சிக்கப்பட்ட இனத்தின்மேல் ஏவப்பட்ட வன்மம், படிக்கவில்லை என்றாலும் , தலைப்பே ,தலையங்கம் தருகின்றதே , இனவாத அரசின் அதிகார போதையில் ,ஒப்பற்ற ஒரு தேசிய இனத்தை அழிக்கப்பட்ட வரலாற்று சுவடுகள் , தமிழன் இதயத்தில் என்றும் அழியாசுவடுகள் ,அணையா சுவடுகள் ,விரைவில் வருகின்றோம் அஞ்சலுக்கு உங்கள் மின்னஞ்சலுக்கு ,முல்லைத்தீவிலும் எமக்கு ஒரு நட்பு , விதைக்கப்பட்ட இனம் உண்மையென்றால் ,பாரெங்கும் பறக்கட்டும் புலிக்கொடி , பிறக்கட்டும் சுதந்திர காற்று , [ மலரட்டும் தமிழ் ஈழம் ].