வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]
அந்நிய நாட்டில் பிறந்தோர் எல்லாம்’
ஐசியொடு அலைகின்றார்
இந்நாட்டில் பிறந்தும் ஐசியின்றி அல்லாடும்
நிலையேன் தோழா
ஒருநாளாவது சிந்தித்தாயா அதற்குத் தீர்வென்ன
ஒருநாட்டில் பிறந்த எவரும் அந்நாட்டுக் குடிமக்கள்
அன்றோ அதையேன் யாரும் உணரவில்லை
பதியவில்லை பதியவில்லை என்றே பழி போடுகின்றீர்
அதனை அரசாங்கம் பதிவு செய்யத் தவறியதேன் என
ஒருமுறையாவது யோசித்தாயா
இந்தியா போன்ற பெரிய நாடுகளில் வீட்டுக்கு வீடு
கதவைத் தட்டி புதிதாய்ப் பிறந்த
குழந்தையை பதிவார்கலாம் அங்கு ஐசியில்லை
ஆயினும் அலட்சியம் இல்லை
இங்கு ஐசி உண்டு அதை தர அலட்சியமும் உண்டு
இந்நிலை என்று மாறும் என் தோழா
– புலவர் கோமகள் , கோலாலம்பூர் , மலேசியா
என் தோழா இந்நிலை மாற வேண்டுமானல்
நம்மிடையே நிலவும் அக்கறையின்மை ஒழிய வேண்டும்.
வாய்ப்பு வந்த போது அலட்சியம் செய்தனர்
அக்கறையுடன் அலையும்போது அலட்சியம் வெளிப்படுகிறது
உலகத் தமிழனுக்கு அடிப்படையில் தனி நாடு
கிடைக்கும் வரை நாம் பரதேசிகள்தாம் !
இந்த பாடல் வழி புதிய தமிழர் நாட்டுக்கு
உரமிடுவோம்.இது செழித்தால் தான்
உலக தமிழனுக்கு அங்கீகாரம் இல்லையேல்
அநீதிகள்தான். நல்லத் தமிழன் யாரேனும்
பாடல் ஒலி/ஒளி பெற உதவலாம்.
++++++++++++++++++++++++++++++++++++++++
தமிழன் நாடு வேலி இலா காடா காடா
வந்தேறிகள் ஏய்க்கும் முதலாளி மேடு மேடு
இன்று நாடு என்றான் அது பொய் பொய்
மாநில மண் என்றான் விலைபோகுது பூமி பூமி
இதரவன் நம் நாளங்களை அறுத்து அறுத்து
அரசியல் சுருதி பாடுகிறான் பார் பார்
குருதிகளை குடித்தே ஏய்ககிறான் ஏய்ககிறான்
மண்ணை டில்லிக்கு குட்டகை விட்டான் விட்டான்
திராவிட அரசியல் கூத்து அது மடமை மடமை
எழுதிபோனான் முட்டாள் கூற்று மறு மறு
தமிழன் மட்டும் திராவிட கூலியாம் இல்லை இல்லை
தெளிந்தவன் தப்பித்துபபோனான் போகட்டும் போகட்டும்
ஆடியவன் எவனும் தமிழனில்லை சொல் சொல்
ஆளா இல்லை தமிழா நீ எழு எழு
பின்னணி உனக்கு சுதந்திரம் முழங்கு முழங்கு
தமிழன் முன்னணி ஆக்கம் பெற வைகையில் வை வை
சீரழியும் தமிழையும் தமிழனையும் காப்போம் காப்போம்
காப்பு கட்டு சத்தியம் உனக்கு உரிமை உண்டு உண்டு
எட்டு திசை அதிலே நீ காவல் நிற்க நிற்க
எதிர்த்தே நில் நீ நிலையாய் வெல்க வெல்க
வட வெங்கட தென் குமரி உனதடா உண்மை உண்மை
உன் தமிழ் மொழி அதிலே முதலடா கொள் கொள்
இன்டியத்திற்குள் சிக்கியது மடைமைடா மாற மாற
தமிழ்தான் அங்கே முதன்மையடா எழுது எழுது
இந்தியமும் திராவிட பார்ப்பன்யமும் பொய் பொய்
ஆதியின் பரம்பரை நாமடா நடத்து நடத்து
தமிழன் சாதியே சிவனின் போதனை சரணம் சரணம்
நீ இயற்கையின் வளமட சூரியன் உன் சொந்தம் சொந்தம்
தனிநாடு விடுதலை தரிசிக்க நீ தா தா
ஐக்கிய நாடு ஆதரிக்க கோடிகள் அதிகம் அதிகம்
உன்னவன் தமிழன் ஐக்கியம் தேடு தேடு
தமிழவன் உனக்கு ஆதரவு தருவான் பாடு பாடு
மாற்றான் கட்சிகளின் தனிநாடு இல்லை இல்லை
தமிழன் தேசியத்தில் மட்டும் அதனைக கேள் கேள்
தாயிடம் சொல்லு தமிழினம் காக்க போ போ
தரணி வாழ் தமிழனே தனியாய் வா வா
தமிழன் கூட்டணி குடியரசாக மலர மலர
தமிழர் தேசியம் உனது உடமையாக நட நட
இதரவன் அருவருடிகள் பதறி ஓட ஓட
நிலையாய் உன்னை உடனே மாற்று மாற்று
தமிழர் நாடு உலகத தமிழனுக்கு வித்திட வித்திட
நீ உரக்க பாடி தமிழர் களமதில் சேரு சேரு
தமிழீழம் தானா வரும் தமிழகம் அங்கே அங்கே
அங்கீகார பெற தாயக தாய் மேல் சத்தியம் சத்தியம்.
ஆக்கம். ம. அ. பொன் ரங்கன்
இயக்குனர் உலகத தமிழர் பாதுகாப்பு இயக்கம்
து .தலைவர் . நாம் தமிழர் மலேசியா
உலகத் தமிழனுக்கு அடிப்படையில் தனி நாடு கிடைக்கும் வரை நாம் பரதேசிகள்தாம் -நன்று. முதலில் இந்த நாட்டில் இந்தியர்கள் (தமிழர்கள்) இடையே ஒற்றுமை, பொருளாதார முன்னேற்றத்துக்கு எதாவது செய்யுங்கள். இந்த நாட்டில் இந்தியர்கள் (தமிழர்கள்) எதிர்கொள்ளும் பல பிரச்சனைகள் அவற்றை களைந்து தன்மானத்துடன் வாழும் நிலை ஏற்படுத்துங்கள். பிறந்துவிட்டோம், வாழ்ந்தே ஆகவேண்டும், ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். அந்த இடைப்பட்ட காலத்தை உலகத் தமிழனுக்கு அடிப்படையில் தனி நாடு வேண்டும் என்று காலத்தை வீணாக்க வேண்டாம். ஒற்றுமை, பொருளாதார முன்னேற்றத்துடன், தன்மானத்துடன் வாழும் நிலை ஏற்பட்டால் நாம் இல்லாவிட்டாலும் நம் சந்ததியினர் வழி தமிழனுக்கு தனி நாடு கனவு நிலைப்பெறும். அதைவிடுத்து ஒற்றுமைக்கு, பொருளாதார முன்னேற்றத்துக்கு, தன்மானத்துடன் வாழும் வாழ்விற்கு போராட்டமே என்றால் ஏப்படி? இப்போது இந்த நாட்டில் இந்தியர்கள் (தமிழர்கள்) தேவை ஒற்றுமைக்கு, பொருளாதார முன்னேற்றத்துக்கு வழி அதைதவிர்த்து புதிய அரசியல் தலைவரோ, அரசியல் கட்சியோ அல்ல. இக்கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் மன்னிக்கவும். இது எனது கருத்து.
வாய்ப்பு வந்த போது அலட்சியம் செய்தனர்
அக்கறையுடன் அலையும்போது அலட்சியம் வெளிப்படுகிறது
நிமிர மறுக்கும் வானவில்லே !
+++++++++++++++++++++++++++++
மழை ஓய்வில் வருவாய்
துவைக்கமாலே காய்வாய்
அலசுகிறாய் மழையில் நீ
அஸ்ட்ரோவும் அப்படிதான்
சாயங்கள் அதிகம்
உன் ஊடகவியலில் தமிழன்
இன்றும் கருப்பு வெள்ளைதான்
நீ மாற்றி துவைத்தாலும்
நிறம்மாறாத என் இனம்
24 மணி நேரமும் விடியும் வரையும்
நனைந்து கொண்டே இருக்கிறது
அசுத்தம் மட்டும் நிற்கிறது
நீ பாலைவன வறட்சிக்கு போ
காய்ந்த மணலில் போதிமரம் செய்
அதுவாவது ஏழாம் அறிவை தரும்
உன்னை நீ நிமிர்த்த பார்
இனத்தை அறிவில் வளைத்து வா
போதுமே பேடிகள் பண்ணது
பணம்தான் உன் கேடித்தனம் என்றால்
என்னவர்கள் என்ன பாவமோ
புதிய சமுதாய சேனல் உண்டு
போய் உன் படிப்பை தொடரு
அஸ்ட்ரோ வான் வில்லியே போ போ
வசந்தம் மீட்டு வா வா
நாம் பூமி புத்ராக்கள் இல்லை மண்ணின் மைந்தர்கள் இல்லை . பின எதற்கு ஐ. சி உலகம் பரந்து கிடக்கிறது ஆனால் சுருங்கி விட்டது.