வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]
தடிக்கி விழுந்தால் புது கட்சி
சாதிக்கொரு கட்சி
வீட்டுகொரு கோவில்
வீதியிலே சமூதாயம்……
கட்சிக்குள் பிளவு
சாதிகளுக்கு முன்னுரிமை
சங்கத்திலே சங்கடம்
இயக்கங்களும் சிதறிபோக
ஒற்றுமையோ கேள்விக்குறியானது…..
ஆளுக்கு ஒரு இலக்கு
அடிதடியில் இளைஞர்கள்
கூடி வாழ வழியில்லை
சிதறிப்போன தேன்கூடாய்
இந்தியர்கள்……
எண்ணிக்கையில் கட்சிகள் பல
சமூகத்தின் அவலம் தொடர்கதை
பிரித்தாளும் போக்கில் ஆட்சி அதிகாரம்
வாக்குக்காக கையூட்டாய்
அவ்வப்போது மானியம்……
ஒற்றுமை கொண்ட பசுக்களை
குள்ளநரி பிரித்த கதையானது
நமது நிலைமை
பிரித்தாளும் போக்கின்
மந்திர சொல்லால்
மதிமயங்கி தொலைந்துபோனது
நமது ஒற்றுமை!!!
– சிவாலெனின்,சுங்கை,பேராக்.
ஒற்றுமைக்கு இப்படி ஒத்துவராத ஓலம் ஏனோ ?
ஒவ்வாமை அரசியல் என்று சொல்லி இருக்கலாம்!
எதிர்மறைகள் மட்டும் விளைவுகளை தராது
அது வெறும் ஒப்பாரி,,, சாவுக்கு பாடும் பக்க வாத்தியம்.
தீர்வுகள் புத்தி நமக்குத தேவை தேடுங்கள் …
அழுகிற பிள்ளைக்கு கோச போத்தல் போதாது
கொஞ்சமாவது பாலூட்டி இருக்கலாம்.
விழும் கிளை பக்கம் உட்கார்ந்து வெட்டாமல்
மரத்து பக்கம் வெட்டினால் சொத்தைகள் விழும்
நீயாவது தப்பிக்கலாம் விழுந்த கிளையில்
உரமாகவாவது வளரும் யோசி சிவா சிவா !