வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]
மடமை கலந்த ஆரிய உடை அணிந்து
உலக வீதியில் உலா வரும் தமிழா !
அது உன் (தன்) மானத்தை காக்கவில்லை
மாறாக நீ
மண்னிழந்து, மதியிழந்து,
உறவுயில்லா ஆண்டியாக
அனாதையாக நிற்பதை,
அம்மனமாக காட்டுகிறது.
சுத்த தமிழனாக மாறிப்பார்
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
என்ற வார்த்தைக்கு அர்த்தம் பிறக்கும்
நீ செல்லும் பாதையிலும்
ஓர் ஒளி பிறக்கும்
உன் பின்னால் வரும்
உன் தலைமுறைக்கும்
ஒரு வழி பிறக்கும்
உன் வம்சத்துக்காக ஒரு நாடும் பிறக்கும்.
அறிவாயா தோழா
தைரியமாக அவுத்து போடு.
( படிக்கும் தமிழர்கள் அவுத்து என்ற வார்த்தைக்காக என்னை மன்னிக்க வேண்டும். என் மன கொந்தழிப்பினால் உருவான வார்த்தையே அது. முகம் சுழிப்பவர்கள் கழட்டி என்று மாற்றி படிக்கவும். நன்றி )
-உழவன்
உழவரே தங்கள் பா-வை படித்து யாம் உவகை கொண்டோம்
-இப்படிக்கு,
புழுவர்
தமிழனின் ஆண் உடை எது என்றும்
கவி பாடலாமே ..தீர்வு கிடைக்கும் !
அவுத்து போடுவதோடு நிற்பதும் தமிழனுக்கு
அழகா …உழவரே?
“தையிரியமாக அவுத்து போடு”. தமிழன் மாற வேண்டுமானால் இந்த தைரியம் அனைத்து தமிழர்களுக்கும் உடனே வர வேண்டும். நாம் யார், நமது பாரம்பரியம் என்ன, நாம் இப்பொழுது எங்கே இருக்கின்றோம், இனி எங்கே போக வேண்டும் என்ற இலக்கு நமக்கு வேண்டும். முதலில் தனி நபரில் இருந்து ஆரம்பித்து, பின்னர் நாம் தமிழர் என்று கை கோர்ப்போம். நிச்சயம் விடியலை நாம் காண்போம். தங்களின் அறிவுப் பொருந்திய கருத்துக்களுக்கு நன்றி. மீண்டும் வருவோம்.
கழுத்து அழகு ..காலர் வைத்த சட்டை
நெஞ்சி வரை மூன்றே பாட்டன் வகை “பட்டென்”
அரை கை முட்டியுடன் சுருக்கி வைத்த வாகு
பக்க வாட்டில் பணம் /மனம் /மானமுள்ள பை
முட்டி வரை நீண்டு விழும் சட்டை
ஜாதி செய்தி சொல்லாத வெள்ளை கம்சி
கட்டிக்க வேட்டி வித்தைக்கு(வீரத்துக்கு ) ஒரு துண்டு
உடுத்தியாச்சி… இனி வாழ ஒரு வழி
மகிழ ஒரு குடும்பம்
கூட பல உறவுகள்
கற்க சில வள்ளுவம்
ஆட சில சிலபம்பம்
அமைதிக்கு சைவ சித்தாந்தம்
உறங்க ஒரு வீடு
மனை… கற்பியல்… பெண்டு …
மழலை பேறும் ..குழல் இனிது யாழ் இனிது
குடும்பம் சமூகம் மொழி வீரம்
என்று வகு…இனம் மருவும் !
உழவரே.அருமை அருமை …
உண்மை கொந்தளிப்பின் பிறப்பு. வாழ்த்துகள் உழவரே!!!!
அருமையான ஆழமான வரிகள் ….வாழ்த்துக்கள்
உழவர் அருமையான வரி ..
மான தமிழா அவுத்துபோடு ஆரிய ஆடையை!
மான தமிழனுக்கு அசிங்கமான ஆடை ..