வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]
இந்த பூமியில் உனுக்கு மட்டும்
எத்தனை சோகங்கள் ?
அத்தனை சொந்தங்கள் இருந்தும்
சட்டம் உன்னை ஆணியில் அடிக்கிறதே !
உன்னை ஈன்ற தாய்க்கும்
தந்தைக்கும் மனைவிக்கும் மக்களுக்கும்
இந்த அரசியல் தன பண்புகள்
என்ன நியாயம் சொல்லபபோகிறது ?
இந்த வயதில் உனக்கு ….
நாங்கள் உறைந்து விட்டோம்
உனக்கு இனி என்ன சொல்வோம் ?
நீதானே சொல்வாய் புழுங்கி விடாதே என்று !
அங்கே நீ தூங்கப்போவதிலை
நீ விடும் மூச்சு காற்று சூடாகதான்
நீ காணும் கனவுகள் நாடாகத்தான்
உன் சரித்திரம் சாதனை படைகத்தான்
உன்னை சொல்லி குற்றமிலை
உன் சோதனை சாலையில் நீ
மீண்டு வர சபதமிடுகிறோம்
நமது பேரரசு உன் உரிமையை கை விடாது !
உன் இதயத்தில் ஏறி தைரியமாக் ஊஞ்சலாடு
அங்கே நம் இமையம் தெரியும் வரை போராடு
நீ புலம்புவான் அல்ல எழுவான்
அந்த வானவில்லும் உனக்கு மாலையிடும் !
நடந்தது ஒரு பட்டி மன்றம்தான்
உன் உணர்வின் உச்சமன்ற கதை ஒன்று உண்டு
தூங்கி விட்ட பட்டிமன்றம்
நாளை கும்ப கர்ணன் கதை சொல்லும்!
மக்கள் இலட்சியத்தை ஆட்சியாக கொள்
அது சாட்சியாக ஆட்சி ஆளும்
நீ பார்க்காத மாட்சிமைகள் வேகமாக வரும்
நீ சிங்கம்தான் என்பதை இந்த பூமி சொல்லும் !
உன் உழைப்புக்கு சற்று ஓய்வு தேவை
தேடி தந்தார்கள் தெளிவை மெருகூட்டு
நீ தூங்கும் நேரம்கூட உனக்கு லாபம்தான்
உன் நெற்றிக்கண் தூங்காது வெற்றி பிறக்கும் !
உன் தடைகளே உன் விடைகள்
கைதி என்ற அகராதி உனக்கில்லை
நீ எழுதப்போகும் அதிகாரம்
சகதிகளை சந்தனமாக்கும்
அடிப்பணிவது உன் வேலை இல்லை
நீ தன்மான சிங்கம் சீறி எழு
சிறைப்பட்ட சிந்தனை உனக்கு வேண்டாம்
உன் சிறகுகள் பீனிக்ஸ் பறவை போல !
அந்த சூரியனும் நிலவும் வானும்
நட்சத்திரங்களும் மாலைகள் கோர்க்கும்
மனிதம் உன்னை வரவேற்கும்
நியாங்கள் வென்று தரணி உன்னை அணைக்கும் வா !
அன்புள்ள அன்வார் நீ அரசியல் வாதி அல்ல
உன் இதயம் அது பண்பட்ட பல்கலைகழகம்
நீ பல கலை ஆசான் நீதி உன்னை சார்ந்து
உன் தலைமை ஒளி வீசும் இருள் மங்கும்
நீ எங்கும் போகவில்லை இந்த மண்ணின்
புதுமைகளை தோண்டி இன பசுமை எனும்
உரம் தர புத்தாக்க புதுமை ஊற்றாய் உருவெடுக்க்
புதிய மலேசியா மாநாடு நடத்த வாழ்த்துகள்.
அன்பில்
ம. அ.பொன். ரங்கன்
தலைவர் ,தமிழர் தேசியம் பேரவை மலேசியா
ஒரு நடிகரோ நடிகையோ எந்தவிதமான கதாபாத்திரத்தில் நடித்தாலும் ரசிகர்கள் விரும்பும்வரை நடிக்கலாமே என்பது என் கறுத்து.
சரியான ஐஸ் .இப்படிதான் ம.இ. கா கெட்டது .
நல்ல தலைவர்கள் சிறைக்கு சென்றவர்களே , திருடி சிறை செல்லகூடாது