வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]
+++++அன்று +++++
ஆரியனும், பிராமணனும் சேர்ந்தே வெட்டிய குழியில்——
உன் இறை நெறியை தொலைத்து விட்டு, ——–
மூட பழக்கத்தை வளர்த்துக்கொண்டாய்.———
+++++நேற்று++++++
கலைக்கூத்தாடி வடுகன்கள் காட்டிய குழியில்———
உன் கலை, கலாசாரத்தை தொலைத்து விட்டு, ——–
வன்முறையும், பிரிவினவாதத்தையும் வளர்த்துக்கொண்டாய்.———
+++++இன்று+++++
மேலை நாட்டு நாகரிக முன்னேற்றம் என்ற மாயக் குழியில்———
உன் உணவு பழக்கத்தையும், தாய் மொழியையும் தொலைத்து விட்டு,———-
உன் உடலுக்கு நோயையும்,
உன் தலைமுறைக்கும் டமிங்கிலிசையும் வளர்த்துக் கொண்டாய்.———-
+++++நாளை+++++
இனி உன்னிடம் மிஞ்சி நிற்பது பண்பாடு மட்டுமே.———-
அதையும் யாரிடம் தொலைத்து விட்டு, ——–
அம்மனமாய், பரதேசியாய் திரிய போகிறாய்?———-
சொல் தமிழா! சொல், ———–
ஆறறிவு கொண்ட, சிந்திக்கும் மனம் கொண்ட
தமிழா சொல்?
தமிழை கிண்டினால் மணக்கும்,———
தமிழை சீண்டினால் வெடிக்கும்——–
தமிழுடன் வாழ்ந்தால் வாழ்வு சிறக்கும்.———
ஆனால் சிலருக்கு————-
தமிழில் பேசினால் வாய் கசக்கும்.———-
டமிலில் பேசினால் வாய் இனிக்கும்———-
தமிழே எல்லா மொழிக்கும் தாய் மொழி——–
டமிலா! எதுதான் உன் தாய் மொழி?
-பொன்.ரங்கன்
நல்ல படைப்பு. நன்றி
தாய்ப்பாலில் தமிழைக் கண்டேன்
+++++++++++++++++++++++++++++
தாலாட்டில் வீரம் கொண்டேன்
இன்று விவேகானந்தா ஆஸ்ரம
போராட்டம் போறேன்
உணர்வில் பழைய பாக்கியாம்..!.
350 மிலியன் மன கணக்கில்
யாரு யாரு என்ன அடிச்சானுங்களோ
ஆனால் இந்த ஏழை சமுதாயம்
தெருவில் நியாயம் தேடுகிறது….!
அமைச்சர்கள் ஒளிந்து படம் பார்ப்பானுங்க !
இந்தியன் எவனும் இருக்க மாட்டான்
தமிழன் தொலைத்த இடத்தில் மீண்டும்
மயிர் முளைக்குமா என்று சரிக்கப்போறோம்,,,?
மொட்டை அடிச்சவன் மேல் மாடியில்
இருக்க கல்லு மைதானத்தில் BF
மணல் தடவி விவேகாந்தாவை
மீண்டும் செய்யப்போறோம்…. !
முடியாது என்றால் என்ன செய்வோம்
சூ தையும் வாயையும் மூடிகிட்டு
அரசியல் வாதிகள் காணமல் போக
பின் கதவில் காசு கீசு எல்லாம் …!
எறும்பு ஏறி எருமை கதையாய்
அம்மன எலிகள் ஜிப்பா போட்டு
அட்டகாசமாக அலொ சொல்லும்
தெலுங்கர் மலையாளம்…!
ஜபனா தமிழன் சிங்கலத்தவன்
எல்லாம் எட்டி நின்று மெர்டேக்க
சதுரங்கத்தில் இன்று தமிழனின்
தெலுக்கானா கோலாட்டம் ஆடுவான்….!
பிரதான் முதல்வன் பிரித்தாளும்
கண்ணியில் கையும் காலும் எக்குறி
தெரியாமல் தவிக்கிறான் இந்தியன்
இக்குறியால் தமிழன் மண்குதிரையானான்…!
சாமியும் பழனியும் பிளாடி இந்தியன் போல
குருதி காய்ந்த துவப்பு நீர் நோயாளிகள்
இவன் மண்டையில் பெண்டீர் சமரசம்
மக்கியவன் தமிழன் தெருவில் தவிக்கிறான்..?!
தமிழ் வேறு திராவிடம் வேறு என்பதுடன்,ஆரியமும் திருவிடமும் ஒன்றேயென அறிக – செந்தமிழ் ஞாயிறு தமிழர் தந்தை பாவாணர்
பொன் ரங்கன் அவர்களே, வணக்கம். நல்ல கருத்தாழமுள்ள கவிதை, என்ன செய்வது? நம்மிடம்தான் ஒற்றுமை இல்லையே?
பொன் ரங்கன் அவர்களே, வணக்கம். நல்ல கருத்தாழமுள்ள கவிதை, என்ன செய்வது? நம்மிடம்தான் ஒற்றுமை இல்லையே? தமிழனுக்கு எத்தனை அரசியல் கட்சிகள், எத்தனை அரசு சாரா இயக்கங்கள் ( பதிவு பெற்றவை ) பதிவு பெறாதவை எத்தனையோ? முதலில் இந்து என்கிறான் பிறகு வேறு நம்பிக்கை கொள்கிறான் இப்படி பல. ஒட்டுமொத்தமாக நம்மில் ஒற்றுமை இல்லை.
ஐயா..ஜெயகாந்தரே !
அமிழ்து தமிழ் இலக்கியம்
அழகுற படைத்தாய் ..தமிழ் தாகம் வென்றாய்
இலக்கியம் விற்காத வெள்ளை உளம்தான்
உன் மீசையே அதற்கு ஆதாரம்!
சிறுகதை அறிவு எங்கு தேடுவேன்
பண்பு முக்தியில் புது உலா வரவும்
நீர் தமிழனுக்கு தமிழ் புகழ் தந்தை
உம்மை இழந்தோம் இல்லை !
நீ தமிழில் வாழ்வாய் உன்னை
மீதமுலோர் அதாரமாய் வணங்குவோம்
உங்கள் ஆத்மா அவுலகம் மீலட்டும்
இவ்வையம மீண்டும் தலாட்ட வா தமிழா!
பொன் ரங்கன் அவர்களே ,மிக அருமையான படைப்பு .வாழ்த்துக்கள் .
தமிழை கிண்டினால் மணக்கும்,———
தமிழை சீண்டினால் வெடிக்கும்——–
தமிழுடன் வாழ்ந்தால் வாழ்வு சிறக்கும்.———
காரணம் உலகம் தமிழால் ஆனது