எட்டி உதைக்காதே …-பொன்.ரங்கன்

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  info@semparuthi.com
மனக் கதவை தட்டி 
தமிழனுக்கு  தனி அரசியல் 
பாடம் போதிக்க …
நீ ஏன் சாவியின் 
ஓட்டையில் பார்க்கிறாய்donkey-kick 
பல கட்சி பல களம் 
மாணிக்கா சரி இல்லை சாமி 
பண்டிதன் வேண்டாம் 
சுப்ரமணி போ போ  பழனி 
பழனி வசதியா இல்லை  சுப்ரா 
கோவிந்தா ஜன நாயக மகா 
கருப்பன் குண்டுவிடம் விற்றாய் 
ஐ பி எப் நாலாய் குரைக்க
மக்கள் சக்தி மலையாளி மயக்க 
இண்டியன் நீதி கட்சி வர 
கா இன்று இரண்டானது 
இரு தலை பாம்புகள் 
எப்போ கொத்தும் தெரியாது 
தேறுமா இண்டியன் இனம் ?
வெச்ச வேட்டுகள் கொஞ்சமல்ல 
நட்ட வினைகள் நடு தெரு போக 
விட்ட கதைகள் வம்புக்கு  நிற்க 
சுட்டது வீணையின் கம்பி
கொப்பளித்தது குடல் புண் வீக்கம்.
அரை நூற்றாண்டை அரைத்து 
அம்மி சரியில்லை மாவு எனது  
ஏம்சும்  எனது என்றான் புடுங்கவா முடியும்
மயிரே இல்லை மானிடம் பேசாதே 
குரங்கு வாழ் உனது  நீ போ 
இறுகிய மனங்களின் பாவங்கள் 
உன் அரசியல் அசிங்கம் சியால் 
சின்ன இடுக்கில் பெரிய ஓட்டை 
அடைக்க மாலுமி இல்லை 
ஓடி ஒலியும் கூட்டம் 
மனுக்களை போட்டு தின்று 
ஏப்பம் விட்ட முதலைகள் 
இன்று பத்து கோடி கேக்குது 
திருக்குறள் கதை சொல்லி 
இளகிய இனத்தை இட்டிலி சுட்டான் 
தெரிந்த கடவுளை அழைத்தான்
படிகள் ஏறி மலைகள் தாண்டி
வைகாசி சாம்பல்தான் கடைசி
இனியாவது தமிழனுக்கு
தனி கதவு செய்வோம்
தட்டி பார்ப்பவனை எட்டி
உதைக்க வேண்டாம்
அகல திறந்த மனதில்  
வா வா தமிழா 
கடக்க முடியும் தமிழா 
நீ மட்டும் என்னை மடக்கி விடாதே !

TAGS: