பாம்பிலும் கொடியவன் பார்ப்பனன் என்று சொன்ன ஈனத்திராவிடமே எனக்கொறு பதில் சொல்!

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

அன்னைத்தமிழ் ஓங்கவும்
bharathyபெண் அடிமை விலங்கொடியவும்
ஆயிரம் பாடல்பாடிய என் அய்யன் பாரதியை
பார்ப்பனன் என்று நீ பழித்துரைப்பாயா?

வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும்

சாம்பல் நிறத்தொரு குட்டி,
கரும் சாந்தின் நிறம் ஓரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி
வெள்ளை பாலின் நிறம் ஓரு குட்டி

எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஓரே தரம் அன்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ

வண்ணங்கள் வேற்றுமை பட்டால்
அதில் மானுடர் வேற்றுமை இல்லை
எண்ணங்கள் செய்கைகள் யாவும்
இங்கு யாவர்க்கும் ஒன்றென காணீர்!

சமத்துவம் பேசிய அவனை தமிழன் இல்லையென்று 
ஒதுக்கிவைத்துவிட்டு திராவிடப்பதர் நீ எதை பயிரிடவந்தாய் எம்மிடையே?

வள்ளுவரும், வள்ளலாரும்,பாரதியும் போதிக்காத பகுத்தறிவையா நீ போதித்தாய்?
ஆரியனையும் தமிழனையும் மோதவிட்டு 
இடையில் நின்று இரத்தம் குடித்து வெற்றி முழக்கமுட்ட
வெங்காயம் நீ தமிழனின் தந்தையா?

ஆடையற்று அம்மணமாய் நிர்வாணச்சங்கத்தில் 
பெண்டிர் அங்கம் பார்த்து ரசித்தவன் 
சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவனுக்கு 
பகுத்தறிவு கற்பித்தானாம்! யாரும் யாரோடும் 
எப்படியும் உறவு கொள்ளலாம் இதைத்தானே கற்பித்தான்
கன்னடப் பெரியார்! இதுதானா பகுத்தறிவு?

திராவிடப்பருப்பு தமிழ்நாட்டில் இனி வேகாது
இத்தனை நாட்கள் தமிழன் இரத்தம் குடித்தது போதும்
திருட்டு திராவிடமே நிறுத்தும் உம் பச்சோந்திதனத்தை ..

– நன்றி பாரதியின் பேராண்டி

TAGS: