வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : info@semparuthi.com
எங்கள் குடும்பம் தமிழ்க் குடும்பம்
எங்கள் குடும்பம்
தமிழ்க் குடும்பம்
ஒவ்வொருவர்
ஒவ்வொர் இனம்
மாமியார்
கசடதபற
மாமனார்
ஙஞணநமன
மணவாழன்
யரலவழள
மருமகள்
நான் மட்டும்…
அவர்களுக்கு ஆகாத
அக்கனாவாக (ஃ)
அடுத்த வீட்டுத் தோழியிடம்
என் அவலத்தை சொன்னேன்
அவள் சொன்னாள்
அடியே அக்கனா
தானடி ஆயுத எழுத்து
அடுத்த நாளே
நான் ஆயுத எழுத்து
என்பதை அவர்களுக்கு புரியவைத்தேன்
இப்பொழுது…
மாமியார்
மாமனார்
மணவாழன்
மூவரும் என்
முந்தானைக்குள் !
-கவிஞர் வாலி.
ஐயா வாலியின் பிறந்தநாள் இன்று அக்டோம்பர் 29/1931
முந்தாணி முடிச்செல்லாம் கூட்டு குடும்பத்தில் செல்லாது,வுங்களுக்கு தெரியாததுவா கவிஞரே,
வாழ்க நாராயண நாமம்.