2015 ஆம் ஆண்டு தமிழ்ப்பள்ளிகளில் யுபிஎஸ்ஆர் தேர்வின் முடிவுகளில் 767 மாணவர்கள் 7A க்கள் பெற்றனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவாக உள்ளது. இதனால் சமுதாயம் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது. மொத்த தேர்ச்சி விகிதத்திலும் தமிழ்ப்பள்ளிகள் இவ்வருடம் பின்னடைவையே சந்தித்துள்ளன.
2013 ஆம் ஆண்டு வாக்கில் பிரதமர் தமிழ்ப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறித்து மிகவும் புகழ்ந்து பேசினார். அதனைத் தொடர்ந்து தமிழ்ப்பள்ளிகளின் நிலைமை தொடர்ச்சியாக வீழ்ச்சி கண்டு வருகிறது. குறிப்பாக தேசிய மொழிப்பாடமும் ஆங்கிலமும் தமிழ்ப்பள்ளிகளில் வீழ்ச்சி கண்டுள்ளன. பிரதமர் பேசியதற்கும் தமிழ்ப்பள்ளிகளின் கவலையளிக்கும் வீழ்ச்சிக்கும் ஏதும் தொடர்பு உள்ளதா?
அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு நிதி ஆதரவு கொடுத்திருந்தும் அதன் பலனை தமிழ் மாணவர்கள் முழுமையாக அடையாமல் போனதற்கு சதிநாச வேலைகள் ஏதும் காரணமா என்பது போன்ற பல சந்தேகங்கள் எழுகின்றன.
மலேசிய தேர்வு ஆணையம் சுதந்திரமாக செயல்படுகின்றதா என்ற கேள்வியும் இங்கு எழ வாய்ப்புள்ளது.
அரசாங்கம் 2012 லிருந்து 2015 வரை ஏறத்தாழ 45 கோடி ரிங்கிட்டை தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கியுள்ளது. இவ்வளவு பெருந்தொகையைப் பெற்ற பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் ஏறுமுகமாக இருக்கவேண்டும் என்பது எதிர்பார்த்த ஒன்று. ஆனால் நிலைமை தலைகீழாக உள்ளது. செலவு செய்யபட்ட பணம் விழலுக்கிறைத்த நீராகிப் போகிறதோ என்ற கவலை ஏற்படுகிறது.
தமிழ்ப் பள்ளிகளில் போதனாமுறை, ஆசிரியர்களின் முயற்சி, பெற்றோர்களின் அக்கறை, மாணவர்கள் கல்விமேல் கொண்டுள்ள ஈடுபாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டும் போகும் வேளையில், யுபிஎஸ்ஆர் தேர்வில் மட்டும் எப்படித் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி நிலை கீழ் நோக்கி போய்க் கொண்டிருக்கின்றது?
தமிழ்ப் பள்ளிகளே தங்களின் முதல் தேர்வாக இருக்கவேண்டும் என்று சமுதாயத்தில் உள்ள பலர் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இது போன்ற தேர்ச்சி நிலை மக்கள் மத்தியில் ஒரு ஏமாற்றத்தையும் வெறுப்பையும் தமிழ்ப்பள்ளிகளின் மேல் உண்டாக்காதா?
இதைத்தான் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் விரும்புகின்றனரா? ஒருவேளை இது திட்டமிட்டே தமிழ்ப்பள்ளிகளின் தேர்ச்சி நிலையைக் குறைக்கும் நீண்ட காலத் திட்டத்தின் ஒரு பகுதியா?
தேசியப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் மட்டும் வருடா வருடம் ஏறிக்கொண்டே போகிறது. இதையே காரணமாக காட்டி தேசிய பள்ளிகளுக்கு மற்ற இன மாணவர்களை சுண்டி இழுக்கும் மறைமுக முயற்சியாக இது இருக்குமோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.
துணைக் கல்வி அமைச்சர் கமலநாதனின் தொகுதியான உலு சிலாங்கூரிலேயே ஒரு தமிழ்ப்பள்ளிக்கூடம் கூட சிறந்த அடைவுநிலையை எட்டவில்லை. மஇகாவின் முக்கிய தலைவராகவும் துணைக் கல்வி அமைச்சராகவும் இருக்கும் கமலநாதன் தொகுதியில் ஏற்பட்ட இந்த மாபெரும் பின்னடைவுக்கு அவரின் பதில் என்ன?
கல்வித் துணை அமைச்சர் கமலநாதனோ என் எஸ் ராஜேந்திரனோ உடனியாக ஒரு வட்ட மேசை கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதில்அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ்ப்பள்ளிகளின் மேல் அக்கறையுள்ள எல்லா அரசு சாரா இயக்கங்களும், மலேசிய தேர்வு வாரிய அதிகாரிகள், தமிழ்ப்பள்ளி ஆர்வலர்கள், தலைமை ஆசிரியர்கள், உட்பட அனைவரும் இந்த கலந்துரையாடலுக்கு வரவேண்டும்.
தமிழ்ப்பள்ளிகளின் தொடர் வீழ்ச்சியை கட்டுப்படுத்த என்ன முயற்சிகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும், இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம்? அது அரசியலாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் திறந்த மனதுடன் நம் மாணவர்களின் எதிர்காலம் கருதி வெளிப்படையாக விவாதிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
யு பிஎஸ்ஆர் தேர்வு முடிவுகளை மற்ற சில நாடுகள் போன்று A, B, C ,D, E என்று வரையறுப்பதற்கு பதிலாக மாணவர்கள் பெற்ற உண்மையான மார்க்குகளை வெளியிடும் யோசனையையும் இந்த வட்ட மேசையில் பரிசீலிக்கப்படலாம். இது பல விதமான சர்ச்சைகளுக்கு முடிவு கட்டும் என்று நான் நம்புகிறேன். மாணவர்கள் எடுத்த மார்க்குகள் தாங்கள் போட்ட உழைப்புகேற்ற புள்ளிகள்தானா என்று சுய மதிப்பீடு செய்ய உதவும். இரண்டாவதாக, இது போன்ற வெளிப்படையான செயல் நமது கல்வியின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் என்று நான் எண்ணுகிறேன்.
பல இந்திய பெற்றோர்கள் குடும்பத்தின் எதிர்ப்புக்களுக்கிடையேயும் போராட்டங்களுக்குப் பிறகே தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். இது போன்ற பின்னடைவுகள் அவர்களின் மனநிலையை தமிழ்ப்பள்ளிகளுக்கு எதிராக மாற்றக் கூடும். சில அம்னோ அரசியல்வாதிகள் விருப்பதிற்கேற்ப இது அமைவதோடல்லாமல் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடும்.
இந்த கருத்தரங்கை துணை அமைச்சர் உடனடியாக ஏற்பாடு செய்யவில்லை என்றால், சில இந்தியப் பெற்றோர்கள் தமிழ்ப்பள்ளிகளிலிருந்து விலகி தேசியப்பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்ப இது வழிகோலும் என்று நான் அஞ்சுகிறேன்.
.
வீழ்த்தப்படுகிறது என்பது தான் உண்மை. எல்லாம் அம்னோ அரசியல்வாதிகளின் கைவண்ணம். தமிழ்ப்பள்ளிகள் தலை நிமிர கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள். கமலனாதனால் என்ன செய்ய முடியும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
கவலை படாதீர்கள் 2017 ஆண்டில் நல தேர்ச்சி விகிதம் வரும்.2018 தேர்தல் வருவதால் இந்த அதிர்ச்சி வரும்.
கல்வியில் அரசியலை நுழைக்கும் UMNO சாகும் நாட்கள் வெகு தூரம் இல்லை எனலாம் , நம் தமிழ் பள்ளி மாணவர்கள் சிறந்தவர்கள்தாம் , அதை சிறந்தாக இல்லாமல் காட்ட மாணவர்களின் தேர்ச்சி அறிக்கை மாநில கல்வி இலாகா தமிழனையும் சீனன்யும் மக்கு மடையனாக காட்ட அவர்கள் இஷ்டம் போல அப்பாவி மாணவர்களின் தேர்ச்சி நிலை மாற்ற படுகிறது என்பதுதான் உண்மை.
தேனீ இடம் கேட்டல், இதற்க்கு ஆரியர்களும், மலயாலீகளும், தெலுங்கு வர்கத்தினரும், அவரும் இவரும் கரணம் என்பார். ஆனால் , ஒரு போதும் இந்த தமிழர்கள் கட்சி மா இ கா தான் இதற்க்கு முக்கிய காரணம் என்பதை ஏற்றக்க மாட்டார். ராஜா ராஜா சோழன் தந்து விட்ட சென்ற கடாரமும், மலையகமும், கலிங்கத்து மன்னனிடம் இருந்து எப்படி மஜப்ஹாஹிட் அரசாங்கத்துடன் சென்றது, அங்கிருந்து, 600 ஆண்டுகளாக நான் எப்படி எல்லாம், யாருக்கெல்லாம் ஜால்ரா அடிக்கிறோம் என்று சிந்தித்து பார்த்தல் புரியும். இன்று இருக்கும் எல்லா சொல்துக்களும் 100 ஆண்டுக்கு பின், மீண்டும் எந்த ராஜாவிற்கு சொந்தமாகும் என்பதை கவனித்தால் புரியும்…
முதலில் ஏழு ஏ கொண்டாட்டங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
யாருக்குத் தெரியும் உள்ளே என்ன நடகின்றது என்று?
அது என்னப்பா சும்மா சும்மா வந்து என்கிட்ட மோதறது? நான் கருத்து எழுதுவதற்கு முன்னமே அவர் அப்படி இப்படி சொல்லுவார் என்றால் நான் என் செய்வேன். எஸ்.பி.எம். பரீட்ச்சையில் ‘Add Maths’ பாட தேர்ச்சி பெறுவதற்கான ‘passing graph’ எவ்வளவு என்று தேர்வு மையம் போடுமா? அப்படிப் போட்டால் நமக்கு உண்மை தெரிந்து விடும் என்பதால் அது பரம இரகசியமாகவே காத்து வரப் படுகின்றது. அது போல உள்குத்து வேலை ஏது நடந்தாலும் நம்மிடம் வந்து யாரும் சொல்லப் போவதில்லை. அதனால் அவர் அப்படி சொல்லுவார் இப்படி சொல்லுவார் என்று எல்லாம் எழுத வேண்டாம். இந்த செய்தியில் வரும் ஒவ்வொரு வரியையும் மீண்டும் ஒரு முறை விளாவாரியாகப் படியுங்கள். செய்தியை கொடுத்தவர் எங்கேயாவது தனது கருத்தாக வெளியிட்டுள்ளாரா? எல்லாமே கேள்வி மயமாகத்தான் உள்ளது. இதற்குக் காரணம் என்ன? எல்லாமே ஆருடமாக போடப் படும் கேள்விகள்தாமே ஒழிய அவர்தம் கருத்தாகப் போடவில்லை. அவர் வழக்கறிஞர் என்பதை சொல்லாமல் சொல்லுகின்றார். இதனால் வரும் சட்ட பாதிப்பை எதிர்கொள்ள அவர் தயார் இல்லை. சராசரி அரசியவாதிகளின் வெற்று அறிக்கை இது என்பது இதிலிருந்து தெரியவில்லையா! இதற்குப் போய் மற்றவர்களை இழுத்தால் மதியில்லாதவர் என்று பிறர் முடிவு கட்டி விடுவார்.
ஒரு மாணவர் யு.பி.எஸ்.ஆர் தேர்வில் தோல்வி அடைந்தால் அதற்கு ம.இ.க. காரணம்! தமிழ் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்தால் அதற்கு ம.இ.க. காரணம்! தமிழ் பள்ளி மாணவர்கள் யு.பி.எஸ்.ஆர் தேர்வில் வெற்றி அடைய ஜ.செ.க. இதுவரை போட்ட திட்டங்கள் என்னவென்று அக்கட்சித் தலைவர்கள் சொல்லட்டுமே பார்ப்போம். சும்மா வாய் அளக்கும் வித்தை எனக்கும் தெரியும். இந்த ம.இ.க. உறுப்பினர்கள் எல்லாம் இத்தகைய செய்தியைப் படிக்க மாட்டார்களோ? இப்படி வரும் கேள்விகளுக்கு பதில் கேள்விகளைப் போட்டாலே எதிர் கட்சிகள் வாயடைத்துப் போகும். முதலில் இணையத்தின் வழி எப்படி வாக்காளர்களை கவருவது என்று ஒபாமா தேர்தல் அதிகாரிகளிடம் கற்று வர வேண்டும் இந்த ம.இ.க. காரர்கள்.
இப்போது தேர்தல் காய்ச்சல் இல்லை அல்லவா? எனது வீழ்த்தப்பட்டது. தேர்தல் நெறுங்கும் போது உயர்த்தப்படும். பேரினவாதிகள் தங்கள் திருவிளையாடல் மூலம் இந்தியப் பெற்றோர்களைப் பின்வாங்கச் செய்வதுதான் அவர்களின் நோக்கம்.
அடே தீனி தேன் நி MIC என்னடா கிளிசிட்டான் சொல்லு பார்ப்போம் அடிச்சனா தெறிச்சி காணமல் போயிடுவே.
ஐயா வாய்சவுடால் பெர்விளிகளா, மா இ கா நினைத்தால், தங்களிடம் உள்ள 2,200 கோடியை வைத்து பல திட்டங்களை வகுக்கலாம். உதாரனதிர்க்கு, நன்கு படிக்கும் மாணவர்களுக்கு ஊக்க தொகை, குறைந்த கவனம் உள்ள மாணவர்களுக்கு: அதிக வகுப்புக்கள், அல்லது ஒரு ஆசிரியர் மூன்று, ஆறாம்-ஆண்டு மாணவர்களை தத்தெடுக்கும் திட்டம்; பேட்றோர்கள்-மாணவர்கள் ஆறாம் ஆண்டு கட்டாய கால-அட்டவனையை- பின்பற்றும் திட்டம். எவ்வளவு செய்யலாம். ஆனால், இப்படி ஒவ்வொருமுறையும் தேர்ச்சி விகித-இரக்கத்தை காட்டி, மலாய் ஆசிரியர்களை தமிழ் பள்ளியில் திணிக்கும் திட்டம், இலவச உணவுகளை குறைக்கும் திட்டம், வசதிகளை குறைக்கும் திட்டம், பெற்றொர் ஆசிரியர் சங்கங்களே , அவர் அவர் பள்ளிகளுக்கு வேண்டியதை அவரவர்களே செய்து கொள்ளவேடிய மறைமுக திட்டம்…இப்படி பல மறைமுகமாக செயல் படுதுவதையாவது இந்த மா இ கா மஹா மேதைகள் கவனிக்கலாமே? நான் 6 ஆண்டு படிக்கும் பொழுது, ஒருவாரம் அந்த பள்ளியிலே UPSR மாணவர்கள் அனைவரும் தங்கி, எங்கள் தேவைகளை நாங்களே செய்து, எங்களுக்கு ஒரு மன வலிமையை உண்டு செய்தனர் ULU BERNAM தமிழ் பள்ளி ஆசிரியர்கள். ஆனால் இன்றைய சூலலில், இதுவெல்லாம் பணக்கார கட்சிகளும், அரசாங்கங்களும் நினைத்தால் மட்டும் தான் முடியும். இல்லையென்றால் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் தான் இதை எதிர்பார்க்க முடியும் என்று, அங்கே செல்கின்றனர். நான் கஜாங் ஸ்ரீ முருகன் நிலையத்தில் SPM மாணவர்களுக்கு சில வகுப்புக்கள் எடுத்தேன். அங்கே, ஒழுக்கம், தன் நம்பிக்கை, முறை படுத்த பட்ட வழிமுறைகள் நிறைய தருகிறார்கள். இதையே பள்ளிகளில் நுழைத்தால், கட்டொழுங்கு பிரச்சனையை குறைக்கலாம். பதவியில் உள்ளவர்களே ஒன்றும் செய்யாமல் எமாற்றி திரிகிறார்கள். ஆ ஊ என்றால் DAP கட்சி செய்ய வேண்டியதுதானே என்கிறார்கள். எனக்கு தெரிந்து பினாங்கில் நிறை scholarship தரபட்டிருக்கிறது….. பூனை கண்ணை முடிகொண்டால் உலகம் இருண்டு விடுமாம். அப்படி இருக்கு இந்த மா இ கா கதை …. இதற்க்கு ஜால்ரா வேறு …
அரைவேக்காடு என்று சொல்லுவார்களே அதைப்போல ஒரு சில மட்டிகள் நாட்டில் என்ன நடக்கின்றது என்பதை அறியாமல் கண்மூடித் தனமாக வாழ்வது கருத்து எழுதுவது. ம.இ.க. 10 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் பள்ளி யு.பி.எஸ்.ஆர் தேர்வில் மாணவர்கள் சிறந்த தேர்ச்சிப் பெற ஆற்றிய சில பணிகள்:-
தேசிய ரீதியில்:
(1) யு.பி.எஸ்.ஆர். மாணவர்களுக்கு மாதிரி சோதனைத் தாள் தயாரித்து அனைத்து தமிழ் பள்ளிகளுக்கும் கொடுத்து பயிற்சி செய்வித்தது;
(2) சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகையாக RM500/= பரிசளித்து, அவர்களைப் பாராட்டி ஊக்குவித்தது.
மாநில ரீதியில்: ஒரு சில மாநிலங்களில் அரசாங்க மானியமாகப் பெற்ற பணத்தில் இருந்து யு.பி.எஸ். ஆர் தேர்வில் சிறந்த தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை கொடுத்தது.
கிளை ரீதியில்: ஒரு சில கிளைகள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு தமிழ் பள்ளியை தத்தெடுத்து 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு தன்முனைப்பு பயிற்சி, வெளி ஆசிரியர்களைக் கொண்டு பரீட்ச்சையில் சிறந்த முறையில் பதில் அளிக்கும் வழி வகைகள் என்று கருத்தரங்கு நடத்தியது.
இவையெல்லாம் எந்த எதிர்கட்சிகள் செய்தன? சும்மா வாயிலேயே சுவருக்கு சுண்ணாம்பு அடிக்கும் எதிர்கட்சித் தலைவர்களைத்தான் நாம் பார்க்கின்றோம். அதைப் போல சில அறிவு கெட்ட ஜென்மங்களும் அப்படியே. இப்படியே போனால் தமிழர் முன்னேறுவார்கள்?
வணக்கம். நம் தமிழ் பள்ளி கல்வியிலும் ,வெளி புறப்பாட நிலையிலும் நல்ல நிலையில் முன்னேற்றம் கண்டும் ,காணப்பட்டும் வருகின்றன. ஒவ்வொரு வருடமும் நம் பள்ளியின் முன்னெற்றம் உள்நாட்டிலும் ,வெளிநாட்டிலும் முதன்மையாக திகழும் வேலையில் , இந்த வருட யு பி ஆர் எஸ் தேர்வின் முடிவில் நமது பள்ளியின் அடைவுநிலை எதிர்பார விதமாக குறைந்து,குறைக்கப்பட்டு உள்ளதை நம்பும் படியாக இல்லை என்பது எனது கணிப்பு. ஐந்து எ பெற்று திழகும் தேசிய மலாய் பள்ளிகளை விட, எழு எ பெற்று திகழும் நம் தமிழ் பள்ளி மாணவர்கள் மிக சிறந்த கண்மணிகள் எனலாம். அவ்வாறு இருந்தும் , தமிழ் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தேசிய மொழியை நன்கு உணரவில்லை,ஆங்கிலம் சரிவர பேசிட முடியவில்லை, படிவம் ஒன்று செல்லும் பொது தடங்கள் ஏற்படுகிறது எனக்கூறி ,நம் தமிழ் ஆசியர்களுக்கு மலாய் ,ஆங்கிலம் சொல்லிக்கொடுப்பதில் சுணக்கம் ஏற்படுகிறது எனக்கூறி , தமிழ்ப்பள்ளிகளில் மலாய் ஆசியர்களை புகுத்தி போதிட்டப்பிறகும் தேசிய மொழியில் நம் மாணவர்கள் பின்னோக்கி செல்ல காரணம் என்ன ? அதன் உள்நோக்கம் என்ன ? இதனை நமது சமுதாய கட்சிகள் உணரவேண்டும் . ஒரு தமிழ் ஆசிரியர் மூலமாகவே ஒரு தமிழ் பள்ளி மாணவருக்கு ஒரு பாடத்தை நன்கு விளக்கி கூற முடியுமே தவிர, மற்ற மொழி ஆசியரர் அல்ல. இதனை அனைவரும் அறியவேண்டும் . நாம் ஒன்றுப்பட்டு இதனை கல்வி அமைச்சுக்கு உணர்த்தவேண்டும் . இதனை நாம் செவ்வனே செய்வோம் . நாம் ஒன்று படுவோம் .
ஒரே காமிடியப்பா காமிடி. இப்படிதான் தனக்கு வேண்டியவர்களிடம் சொல்லி புதிது புதிதாக எதையாவது எழுதுவது ……. ம இ கா சிறந்த சேவையை செய்திருந்தால் , ஏன் ஐயா ஸ்ரீ முருகன் நிலையத்திற்கு 20 லட்சம் வெள்ளியை அரசாங்கம் தருகிறது ? இதை கண்டித்து, தானை தலைவர் “இதுதெல்லாம் நல்லாள” என்று புலம்பி தள்ளினார் ? இதற்க்கு முன் இப்படிதான் YSS க்கு 270 லட்சம் தரபட்டது. கல்வியை பாதியில் நிறுத்திய இளைஞர்களை நல்வழி படுத்த, தன்முனைப்பு ஏற்படுத்து, சிறு தொழில் செய்ய என்று நிறைய பிளான் போடபட்டது…..இதனால் ம இ கா தலைவர்கள் நன்மை அடைந்தார்கேலே தவிர எதிர்க்கட்சியினர்கள் அல்ல ….. மக்கள் அல்ல …. ஆனால் பணம் மகாதிரின் அரசாங்காம் தந்தது. இப்படி அடிக்கி கொண்டே போகலாம் ……கலைஞர் சொல்வார் … நங்கள் மாநாடு நடத்தினோம் …. கூட்டம் போட்டு மூட்டம் போந்தோம் என்று …. அப்படி நாங்களும் தந்தோம் .. என்று மார் தட்டி கொள்ளவேண்டியதுதான் இந்த மா இ கா விற்கு ….. MIED என்ற நிறுவனம் , scholarship தரும் தகுதி மட்டும் தான் இருந்தது … பிறகு… 6% நிறுவனமாக மாற்ற பட்டு, இன்று TAFE , AIMST என்ற இரு பணம் கொட்டும் மரங்களாக மாறி இருக்கிறது ….. ஒபெநிங் எல்லாம் நல்ல தான் இந்த மா இ கா கொடுக்கும் …. ஆனா பினிஷிங் தான் கவுத்துருவானுங்க ….. மா இ கா ஹோல்டிங்க்ஸ் போல… 888 தமிழ் பள்ளிகளை 523 ஆக்க உதவிட்டு …. ஒரே ஒரு மாணவருக்கு rm 500 தரைங்கலாம்….. மொதல உங்க கிட்ட இருந்து தமிழர்களை காப்பாத்தனும் ……
ம.இ.கா. வை ஏன் இங்கு இழுக்க வேண்டும்! தமிழ்ப்பள்ளிகளை மட்டும் கவனிப்பது அக்கட்சியின் பணியன்று. அஃது இந்தியர் கட்சி. எனக்குத் தெரிந்து கெடாவில் ஒரு புதிய தமிழ்ப்பள்ளியை நிர்மாணிக்க தொகுதி தலைவர் ஒருவரே தடையாக இருக்கிறாராம்.
ஐயா பகலவன் அவர்களே, ம இ கா தான் தமிழர்களின் ஒட்டு எங்களிடம் தான் உள்ளது என்று சொல்லி காலகாலமாக தமிழர்களின் தன்மானத்தை விற்று 2200 miilion சேர்த்து வைத்திருக்கிறார்கள். ம இ கா தலைவர் என்ன ஆட்டோ ஓட்டினார ? மாட்டு பால் கரந்தாரா ? இல்லை மூட்ட தூக்கினார ? இவ்வளவு பெரிய சொத்து எப்படி ஐயா அவர்களுக்கு கிடைத்தது ? TNB , SIME DERBY , TV 3 , Telecom , இன்னும் ஒரு ஷேர், 150 மில்லியன், தமிழர்களுக்கு தரபட்டது, ஆனால் இன்று மா இ கா மொத்தமாக முழுங்கி விட்டது, சாமீ வேலுவின் தலைமையில் …. பிறகு வந்தவங்களும் அப்படியே ……. முதலில் திருடனை கண்டிக்கவும். பிறகு அறியாத பாமரனை கண்டிக்கலாம். தமிழ் பள்ளி, நம் சமுதாயாத்தின் எதிர்கால தூண்களை உருவாக்கும் கருவறை. அவற்றை பாதுகாக்க ம இ கா வுக்கு நேரம் இல்லை என்றால் , வேறு என்னதான் அவர்களுக்கு வேலை ? கோயில்களை பாதுகாக்க சட்டம் வேண்டும் என்று HINDRAF தான் போராடியது. ம இ கா இல்லை. இப்படி பல பல குற்ற சாட்டுகளை வைக்கலாம் …….எனவே …. DAP என்ன செய்தது ….. YB KULA என்ன செய்தார் என்று கேட்பதை விட்டு , நீங்கள் என்ன செய்யலாம் என்று யோசியுங்கள் … தேனீ … உங்களுக்கும் தான் இந்த மருந்து ….
எந்தெந்த தமிழர் அவர்தம் பிள்ளைகளைத் தமிழ் பள்ளிக்கு அனுப்பாமல் அக்காலத்தில் ஆங்கிலப் பள்ளிக்கும், இக்காலத்தில் மலாய் பள்ளிக்கும் சீன பள்ளிக்கும் அனுப்பி வைத்ததே தமிழ் பள்ளிகள் எண்ணிக்கை குறைந்ததர்க்குக் காரணம். அடுத்து அன்றைய காலத்தில் பிற தென் இண்டியர்கள் அவர்தம் பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்தனர். இன்றோ அவர்களின் எண்ணிக்கை விரல் விட்டு என்னும் அளவிற்கு குறைந்து விட்டது. அவர்களும் இதற்கு காரணம். இதில் ம.இ.க. காரர்கள் மட்டும் காரணமில்லை. ம.இ.கா. காரர் திருடி ஏமாற்றி மக்கள் பணத்தை ஏப்பம் விட்டால் அவ்வாறு செய்திட வழி வகுத்தோர் யார்? கேள்விக் கேட்காமல் ம.இ.க. பேச்சைக் கேட்டுக் கொண்டு அக்காலத்தில் ஓட்டுப் போட்டு வந்த நமது மூதாதையர் காரணம். பல காரணங்கள் காலா காலமாக கண்டு வந்து விட்டோம். இனி நாம் எல்லாம் இங்கே தொண்டை கிழிய கத்துவது போல் நமது குடும்ப உறுப்பிர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று பேசி அவர்களுக்கு தாய்மொழியின் அவசியத்தைத் தெளிவித்துத் தமிழ் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்போம். தமிழ் பள்ளிகளின் எண்ணிக்கை தானாக உயரும். அதை விட்டுட்டு அது நொட்டை இது நொட்டை என்று வீண் பேச்சுப் பேசி காலத்தை வீணடித்தது போதும். இது ‘Dilip 2’ – க்கும் சேர்த்துச் சொன்னது.
கஜானா, மத்திய அரசை ஆளும் பாரிசானிடம் இருக்கும் வேலையில், எதிர்கட்சியிடம் கேளுங்கள் என்பது வேடிக்கையாகத்தான் உள்ளது!!!உடனே, செலாங்கூரையும் பினாங்கு மாநிலத்தையும் சுட்டிக்காட்டி இதில் திணித்து விடாதீர்!!!!. பாரிசான் ஆட்சி காலத்தில் இருந்த நிலையை விட இப்போது எவ்வளவோ மேல்!!! இருப்பினும், ஆட்சியில் உள்ள எவரையும் சிண்டு பிடித்து ஆட்டுவதில் தவறேதுமில்லை!!!
கத்தி கத்தி தமிழ் பள்ளிக்கு அனுப்புவதா ? அல்லது அதன் தரத்தை உயர்த்தி, அதன் மீது மதிப்பு வரவைத்து அனுப்புவதா ? எணிக்கை கை உயர்த்த வேண்டியதில்லை, தரத்தை உயர்த்தினால் போதும். தேடி வருவார்கள். அதை விடுத்து, ஏதேதோ சொல்லி கொண்டிருக்கிறார் தேனீ.
தேனீ சும்மா mIC ய ஊ…………. MIC தமிழ் பள்ளிக்கு ஒரு மசிரும் கிளிக்களே இருக்கறதையும் சுருட்டி தின்னானுங்க 100 மாணவர்க்கு கொடுதையும் தின்னு ஏப்பமிட்ட மனித மிருகங்கள் MIC ………………………..
நண்பர் திலிப் அவர்களே நான் சொல்ல வந்த விடயத்தை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை அல்லது நான் மேலும் வெளிப்படையாகச் சொல்லியிருக்க வேண்டும். உண்மையில் ம.இ.கா. தமிழர்கள் கையில் இல்லை. இதுதான் தமிழ்ப்பள்ளிகளின் அவல நிலைக்குக் காரணம்.ம.இ.கா. தலைவர் ஒருவர் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை தன் இனம் சார்ந்த அமைப்புக்கு மண்டபம் கட்ட முயற்சித்துள்ளார். ஒரு விடயம் நண்பர்களே, ம.இ.கா. இன்று மக்கள் கட்சி அன்று அது தலைவர்கள் கட்சி.
தமிழ் பள்ளிகளின் தரம் உயர்ந்துதான் வருகின்றது. வசதி உள்ள பெற்றோர் தமிழ் மொழி மீது அக்கறை வைத்து தமிழ் பள்ளிக்குத் தத்தம் பிள்ளைகளை அனுப்பி வைத்தாலே போதும் தமிழ் பள்ளி மாணவர்களின் அடைவு நிலை உயர வழி வகுக்கும். ம.இ.க. தமிழ் பள்ளிக்கு ஒரு மசிரும் கிழிக்கவில்லை என்று சொன்னவரு தமிழ் பள்ளிக்காக எத்தனை மசிரு புடுங்கி இருக்கின்ராறு என்று சொல்லட்டும். தமிழ் பள்ளிக்காக ஒரு துரும்பு எடுத்துப் போடாதவனுக்கு எல்லாம் வாய் சவடாலு எதற்கு?
ஐய, குலா அவர்களே, தமிழ் பள்ளிகளின் தலைமை கண்காணிப்பாளரிடம் எழுத்துப் பூர்வமாக கீழ்காணும் தகவல்களைப் பெறுங்கள்:
தமிழ் பள்ளிகளில் மாதிரி பரீட்சையில் (trial exam) மாணவர்களின் தேசிய ரீதியில் அடைவு நிலை என்ன? ஒவ்வொரு பாடத்திலும் மாணவர் தேசிய ரீதியில் பெற்ற அடைவு நிலை என்ன?
அதனை யு.பி.எஸ். ஆர் பரீட்ச்சை முடிவுகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். சரியான தகவல் கிடைத்தவுடன் யுபிஎஸ்ஆர் தேர்ச்சி விகிதம் வீழ்ந்ததா?வீழ்த்தப்பட்டதா? என்று தெரிந்து விடும். இதனை செய்வீர்களா அல்லது வெற்று அறிக்கைகள்தான் வருமா?
என் கருத்து இங்கே முற்றிலுமாக தவிர்க்க பட்டிருக்கிறது….
பினாங்கின் தமிழ் இடைநிலைப்பள்ளி என்னவானது அம்போ சிவசம்போவா மக்களை முட்டாள் ஆக்கியது போதும்,நான் இன்னும் இருக்கிறேன் என்பதற்கு எதாவது சொல்லவேண்டுமா,
நாராயண நாராயண.
அம்னோ குஞ்சுகள் கல்வி அமைச்சில் ஏராளம்– தமிழனுக்கு அவ்வளவு தவை இல்லை என்று குறைத்து இருப்பான்கள்– நாதாரிகள்.
அரசாங்க இடைநிலைப்பள்ளி அமைப்பதற்கு கூட்டரசு அரசாங்கத்தின் அனுமதி வேண்டுமென்பது அனைவரும் அறிந்த ஒன்று என்றே நம்புகிறேன்!!!
கூட்டரசு அரசாங்கத்தின் அனுமதி கிடைக்காது என்பதால் தான் டி எ பி,அரசு இதுபோன்ற அறிவிப்பை செய்தது,எப்படி மலாய் அற்றவருக்கு துணை மந்திரி பேசார் பதவி ஹிந்துவுக்கு கொடுப்பேன் என்று அனுவார் சொன்னாரோ அதுபோல்.பாகாதான் அரசு ஹிந்துக்களை எப்படிவேண்டுமானாலும் ஏமாற்றி விடலாம் என்று பகல் கனவு காண்கிறது அதற்கொப்ப நம் நடுவர்களும் நமக்கு தவறான செய்தியை பரப்பிவருகின்றனர்,
நாராயண நாராயண.
சீன மொழியை தொடர்பு மொழியாகக் கொண்டு MERDEKA UNIVERSITY அமைக்க ஜ.செ.க. ஒரு காலத்தில் உரிமை கேட்டு பின்னாளில் UTAR UNIVERSITY – யைப் பெற்றது சீன இனம். இடைநிலை தமிழ் பள்ளியை கேட்டது சீனர்களை அதிக உறுப்பினர்களாக கொண்ட கட்சி. அதை தடுத்து நிறுத்துவதற்கு ஒத்தூதியது தமிழரை அதிகமாக கொண்ட ம.இ.க. கட்சி. இருக்கும் தமிழ் பள்ளியில் தமிழை அழிக்க ஒரு கூட்டம். தமிழைக் காக்க பாடுபடும் தமிழனுக்கு எதிராக இன்னொரு கூட்டம். எவ்வளவு பேருடா கிளம்பி இருக்கீங்க தமிழையும் தமிழனையும் அழிக்க?
காய் அம்மு BN மலம் கொடுப்பான் வாங்கி சப்பிடுக்கோ எண்டா பண்ணி தமிழன் எல்லாம் உன்னை போல மடையன் என்ற நினைப்போ
காய் அம்மு ரொம்ப அதிகமாகவே நக்குவது வெளிபடயாகவேடேரிகிறது
இங்கே நிறைய நக்கிகள் தோன்றுகின்றனர்,மற்றும் மலம் வுன்னும் பன்னிகளும் திரிகின்றனர்.பி என் ப்ரீம் எனும் நஜிப்பின் மலம் கொடுப்பார் குடும்பத்துடன் சுவைத்து மகிழும்,
நாராயண நாராயண,
தயவு செய்து அநாகரிக வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்…இது ஒரு வேண்டுகோள் …
ஒரு சில பதிப்புகள் தணிக்கை செய்யப்படாமல் பதிப்பு பெறுவது நாகரிகமல்ல!! ஆசிரியர் குழு சற்று கவனிக்கவும்!!!
ம இ கா இவ்வளவு செய்திருக்கிறதா? !!! MIED 500 வெள்ளி கொடுப்பது இருக்கட்டும் . எனக்கு தெரிந்தவரை ம இ கா தலைவர்களின் பிள்ளைகள் 7A எடுத்தால் அந்த அந்த வட்டாரங்களில் அந்த ஆண்டு மற்ற 7A எடுத்த மாணவர்களுக்கும் கணினி மற்றும் மடிக்கணினி கிடைக்க பார்த்திருக்கிறேன். மற்றபடி அடுத்தடுத்த ஆண்டுகளில் 7A எடுக்கும் மாணவர்களுக்கு வெறும் 50 ,100 வெள்ளிதான் சன்மானமாக வழங்கப்பட்டுருக்கிறது. இது எனது அனுபவம் .