சென்னை: ஐஏஎஸ் அதிகாரி சகாயம் முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னையில் இன்று ஒரு பேரணி நடத்தப்பட்டுள்ளது. இலக்கு என்ற அமைப்பு இந்த பேரணியை நடத்தியுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த இலக்கு அமைப்பானது சகாயம் முதல்வராக வேண்டும் என்று கோருவோர் சென்னையில் திரண்டு பேரணியில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தது. அதை ஏற்று இன்று பலர் வந்திருந்தனர்.
எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து இந்த பேரணி தொடங்கியது. வெள்ளை நிற உடையில், சகாயம் தான் எங்கள் முதல்வர் என்ற பதாகைகள ஏந்தியபடி இவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
தமிழகத்திலிருந்து ஊழல் அழிக்கப்பட, தமிழக மக்களின் உரிமை காக்க, ஊழலற்ற சமுதாயத்தை, ஆட்சியை நிர்மானிக்க சகாயம் முதல்வராக வேண்டும் என்று பேரணியில் கலந்து கொண்டவர்கள் முழக்கமிட்டனர். A Rally for Sagayam IAS பேரணியெல்லாம்.. சரி.. சகாயத்துக்கு சிக்கல் வந்துடாம இருந்தா சரித்தான்.
ஊழலற்ற ஆட்சி வேண்டுமென்றால் அது சரி தான். ஆனால் சகாயத்திற்கு ஆப்பு வைக்கிறீர்களே! நடப்பது குண்டர்கள் ஆட்சி. அவரை விட்டு வைப்பார்களா? அல்லது அவர் மீது வேண்டுமென்றே சதி பின்னப்படுகின்றதா?
அங்குள்ள மக்கள் எல்லாவற்றையும் அரசியல் நோக்கோடு தான் பார்க்கிறார்கள்.