சென்னை சாலையில் உள்ள குப்பைகளை தூய்மைப்படுத்தும் பெல்ஜியம் நபர்

belgium_volunteer_001பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பீட்டர் வெய்ன் கெய்ட் தலைமையிலான குழு தற்போது சென்னை நகரை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

‘சிஸ்கோ’ நிறுவனத்தில் திட்ட இயக்குனராக பணியாற்றி வரும் பீட்டர் வெய்ன் கெய்ட் கடந்த 2008-ம் ஆண்டு ‘சென்னை டிரெக்கிங் கிளப்பை உருவாக்கியுள்ளார்.

அவரது தலைமையிலான குழு மழை வெள்ளத்தால் சென்னை தத்தளித்தபோது, மக்களை மீட்கும் முயற்சியில் இறங்கி பள்ளிக்கரணையில் 130 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது, பீட்டர் தலைமையிலான குழு சென்னை நகர் முழுவதும் குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணியில் இறங்கி உள்ளது.

ஆழ்வார்ப்பேட்டை, எம்.ஆர்.சி.நகர், காந்திநகர், கோட்டூர்புரம், முகப்பேர், கீழ்ப்பாக்கம், வேளச்சேரி, அசோக் நகர் ஆகிய பகுதியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இவர்களின் சேவை சென்னை மக்களை வியப்படைய செய்துள்ளது.

-http://www.newindianews.com

TAGS: