மராட்டிய மாநிலம் புனேயில் கல்வி நிறுவன விருது வழங்கும் விழா நடந்தது. இதில் சாமியார் குருவானந்த் சுவாமி கலந்து கொண்டு அனைவருக்கும் ஆசி வழங்கினார்.
விழாவில் கலந்து கொண்ட மராட்டிய முதல்– மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா மேடை ஏறி சாமியாரிடம் ஆசி பெறச் சென்றார். அப்போது சாமியார் திடீர் என்று தங்க நெக்லஸ் ஒன்றை கையில் வரவழைத்து அம்ருதாவிடம் கொடுத்தார். இதை அங்கிருந்தவர்கள் பார்த்து ஆச்சரியமும் வியப்பும் அடைந்தனர்.
இந்த சம்பவத்துக்கு மராட்டிய மூட நம்பிக்கை ஒழிப்பு இயக்க தலைவர அவினாஷ் பட்டேல் கண்டனம் தெரிவித்தார். ‘‘முதல்–மந்திரி இதுபற்றி விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த சாமியாரை எனது கட்டுப்பாட்டில் வைத்து இதுபோல் நெக்லஸ் வரவழைத்து கொடுத்தால் அவருக்கு ரூ.21 லட்சம் பரிசு தருகிறேன்’’ என்றும் சவால் விடுத்தார்.
முதல்–மந்திரி மனைவி அம்ருதா கூறுகையில் சாமியாரிடம் ஆசி பெறவே சென்றேன். அவர் நெக்லஸ் வரவழைத்து கொடுத்ததை நம்ப முடியவில்லை’’ என்றார்.
-http://www.athirvu.com
இப்பொழுது உள்ள சாமியார் தெ……..மவணுங்க சு…….சாமியார் பெபயணுங்க சாமியார் இதை அப்படியே போடுங்கள் சார்
சக்கம்மா பல்கலைகழக மாணவனாக இருப்பானோ !!
முதன்மந்திரி மனைவி பணக்காரி!.. இதேபோல் இந்தியாவில் வாழும் ஏழைமக்களுக்கு வீட்டுக்கு ஒரு ஐந்து பவுன் வீதம் ஒட்டியாணம் வரவழச்சி கொடுங்க சாமி யாரு ! இந்தியாவில் பன்சபரதேசிகள் இல்லாதநாடாக மாறிடும் .அதுமட்டுமில்ல உங்க அதிசயத்தை பார்த்து உலகமே கிந்து மதமாகிடும் .. அப்புறம் மன்னன்/ காயு /டிலிப்2 இவங்க எல்லாரும் ரொம்ப எப்பி ஆயடுவாபில !
தங்கம் எதற்கு ? இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம் ,ஆளுக்கு ௨ லிட்டர் பெற்றோலை தனது சக்தியால் பெற்றோலை வரவழைக்க சொல்லுங்க . ஆனால் ஒன்று அப்படி செய்தால் ராமர் பிள்ளையை போல் சாமியாருக்கு ஜெயில் நிச்சயம் .
காவி உடை உடுத்திய, போலி சாமியார்களின் மந்திர வாசகமே இதுதான் ”ஒருவனின் அறியாமை இன்னொருவனுக்கு ஆதாயம்”
இதை போன்ற வற்றை நம்பும் மக்களை என்ன என்று சொல்வது? இவனை வைத்தே இந்தியா பணக்கார நாடாக முடியுமே! இது கூட புரியாத மக்களை என்ன என்று கூறுவது? இந்த சாமியார்கள் வருமான வரி கட்டாமலேயே எல்லாவற்றையும் சுகமாக அனுபவித்து கொண்டிருக்கின்றனர். எனக்கு பொறாமை ஒன்றும் இல்லை. நம்முடைய சுய மரியாதையே இந்தியாவின் பொருளாதார வளப்பத்த்தில் தானே சார்ந்திருக்கின்றது- நாம் மலேசியர்களாக இருந்தும்.