மலேசியா, சிலாங்கூர் மாநிலத்துள்ள மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி அதன் ஆறு வகுப்பறைகளையும் அதிநவீன டிஜிட்டல் வகுப்பறைகளாக மாற்றியுள்ளது. இப்பள்ளியில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் அனைத்தும் டிஜிட்டல் வழியாகவே நடத்தப்படுகிறது
21 ஆம் நூற்றாண்டில் கற்றல் கற்பித்தல் அதிநவீன டிஜிட்டல் வகுப்பறையில் நடத்தப்பட வேண்டும் என்பது மலேசியக் கல்வி அமைச்சின் திட்டமாகும். அத்திட்டத்தை இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே மிட்லெண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி அமலாக்கம் செய்து விட்டது என்று அப்பள்ளி மேலாளர் வாரியத்தின் தலைவர் கா. உதயசூரியன் கூறினார்.
இந்த அதிநவீன டிஜிட்டல் வகுப்பறையில் பொருத்தப்பட்டிருக்கும் ஊடாடு வெண்பலகை மற்றும் காட்சியாக்கர் ஆகியவற்றின் பயன்பாடு மிகச் சிறந்த ஒன்றாகும் என்பதோடு இவை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பல வழிகளில் கற்றல் கற்பித்தலை மேம்படுத்தப் பயன்மிக்கதாக அமைந்துள்ளன என்று அவர் மேலும் கூறினார்.
மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் முதலாம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்கள் தற்போது இப்புதிய டிஜிட்டல் வழி கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
ஆசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து செயல்படலாம்
இப்புதிய டிஜிட்டல் முறையால் கற்றல் கற்பித்தலுக்கு ஏதேனும் பங்கம் விளையும் என்று அச்சப்பட வேண்டியதில்லை. இது கவர்ச்சியும் பயனும் கொண்டதாகும். 82 அங்குல தொடுத்திரை, நேர்த்தியான ஒலி மற்றும் ஒளி, பல வண்ணம் ஆகிய அனைத்தும் மாணவர்களைக் கவரும் என்பதில் ஐயமில்லை என்று விளக்கமளித்த சூரியன், பழுதாகி விடுமே என்ற பயமில்லாமல் எளிமையாக அதனைப் பயன்படுத்தலாம் என்பது அதன் சிறப்பு அம்சங்களில் ஒன்று. இவை அனைத்தும் மாணவர்களின் கவனத்தையும் ஆர்வத்தையும் வலுப்படுத்தும் என்பது உறுதி என்றாரவர்.
மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இனிமேல் புத்தகங்களைச் சுமக்க வேண்டியதில்லை. மாணவர்களின் பாட மற்றும் பயிற்சி புத்தகங்கள் அனைத்தும் இந்த டிஜிட்டல் அமைப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் அவற்றின் வழி கற்றல் கற்பித்தலை மிகச் சிறப்பாக நடத்தலாம், மாணவர்கள் தங்களின் இடுபணியை அனைத்து மாணவர்களும் பார்க்கும் வகையில் இதில் செய்து காட்டலாம் என்று அவர் மேலும் கூறினார்.
மேலும், ஆசிரியர்களும் மாணவர்களும் தனித் தனியாகச் செயல்பட வேண்டியதில்லை. ஆசிரியர்கள் தொடுத்திரையின் வழி, உடனுக்குடன் தங்களின் நடவடிக்கைகளில் மாணவர்களைக் கவரும் வகையில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். மேலும் காட்சியாக்கத்தின் வழி “A”அளவிலுள்ளவற்றை உருப்பெருக்கம் செய்து அதன் உள்ளடக்கத்தை மாணவர்களும் ஆசிரியர்களும் தெள்ளத் தெளிவாகக் காண வழிவகுப்பதோடு அவற்றை உடனுக்குடன் திருத்தி சரி செய்யவும் பேருதவியாக அமைந்துள்ளது என்று சூரியன் மேலும் தெரிவித்தார்.
அதோடுமட்டுமில்லாமல், ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தலுக்கு ஏற்ற திட்டமிடலை இலகுவாக்குகிறது. தற்போது, உலகமயமாகியுள்ள கல்வியை மாணவர்களுக்கு அளிக்க இணையப் பயன்பாடு மிகவும் அவசியமானது. இப்பயிற்றுத் துணைப் பொருள்களின் வழி இணைய வழி கற்றலை மிகவும் எளிமையாக நடத்த முடிகிறது. உடனுக்குடன் தகவல்களைப் பெற்று, வீட்டில் இணைய வசதி இல்லாத மாணவர்களும் பயன் பெற ஏதுவாக உள்ளது. மேலும், அதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பல கருவிகளைக் கற்றல் கற்பித்தலுக்குப் பயன்படுத்தலாம் என்று தெரிவித்த சூரியன், உயர்நிலைச் சிந்தனைக் கருவி , இசைக் குறி, கணித வடிவியல் கருவி போன்றவற்றை எடுத்துக்காட்டாகக் கூறினார்.
21 ஆம் நூற்றாண்டிற்கு பொருத்தமான வகுப்பறைகள்
ஒட்டுமொத்தமாக, இந்த அரிய தொழில்நுட்ப சாதனங்கள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஓர் அரும்பெரும் களஞ்சியமாகவும், அறிவார்ந்தப் பயன்பாடாகவும் அமைகிறது என்றால், அது மிகையாகாது என்றாரவர்.
மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியின் ஆறு வகுப்பறைகளுடன் அதன் அறிவியல்கூடமும் 21 ஆம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான கற்றல் கற்பித்தலுக்குத் தேவையான அனைத்தையும் கொண்டுள்ளன.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆசிரியர்களுக்கு இப்புதியத் திட்டத்திற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன என்பதைத் தெரிவித்த சூரியன், பள்ளி வாரியம், பள்ளி நிருவாகம் மற்றும் பள்ளியைச் சார்ந்த இதர தரப்பினரின் ஒத்துழைப்போடு 21 நூற்றாண்டுக்கான நவீன டிஜிட்டல் முறையிலான கற்றல் கற்பித்தல் திட்டம் மிட்லண்ட்ஸ் பள்ளியில் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
புத்தாக்க முறையில் கணினியின் துணையோடு கற்றல் கற்பித்தலை மேற்கொள்வது மிகவும் பயன் உள்ளதாகவும்,சுலபமாகவும் உள்ளதாக பள்ளியின் தலைமையாசிரியர் திரு மலரவன் கூறினார்.
இத்திட்டத்தின் பயன் கருதி, இப்பள்ளியின் வாரியப் பொருளாளர் கிளாசிக் சுப்பையா, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் இரவீந்திரன், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் குமரவேல் மற்றும் வாரிய உறுப்பினர்கள் கணேசன், மோகன்ராஜ், சீரியநாதன். மற்றும் வேலு போன்றோர் பெரும் ஒத்துழைப்பை நல்கினர் என்று சூரியன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
செலவு நம்முடையது!
மாவட்ட கல்வி இலாகா மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியை 21 ஆம் ஆண்டில் கற்றல் கற்பித்தலில் நவீன டிஜிட்டல் முறையைப் பின்பற்றும் முதல் தமிழ்ப்பள்ளியாக அங்கீகரித்துள்ளது என்று சூரியன் தெரிவித்தார்.
இது போன்ற மல்ட்டி மீடியா அடிப்படையிலான கற்பித்தல் நடவடிக்கை மாணவர்கள் மத்தியில் பெரும் மாற்றத்திக் கொண்டு வரும் என்பதில் தாம் பெரும் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். கல்வி கற்பதில் மெதுவாகக் கிரகிக்கும் நிலையிலான மாணவர்களுக்கு இப்புதியத் திட்டம் பயனானதாக அமையும் என்றும் அவர் கூறினார்.
பாடப்புத்தகங்களின் குறிப்புகளும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருப்பதால் காலப்போக்கில் புத்தகத்தைச் சுமப்பதிலிருந்து மாணவர்கள் விடுதலைப் பெறும் வாய்ப்பு இருப்பதாகவும் சூரியன் நம்பிக்கை தெரிவித்தார்.
இப்புதியத் திட்டத்தின் நன்மைகளைப் பெற்றோர்கள் முன் வைத்து மாணவர்களின் எண்ணிக்கைய அதிகரிக்கும் நோக்கில் செயல்பட பள்ளித் தரப்பினர் முற்படவிருப்பதாகவும் சூரியன் தெரிவித்தார்.
21ஆம் நூற்றாண்டுக்கான இப்புதிய டிஜிட்டல் வழியிலான கற்றல் கற்பித்தலுக்கான ஒரு வகுப்பறையை நிருமாணிக்க ரிம15,450 செலவு செய்யப்பட்டதாக சூரியன் கூறினார்.
valthugal.ella tamil pallium ithai mun utharanamaga kolla vendhum
இதனை செய்து தந்த கா.சூரியனுக்கு நன்றி
வாழ்த்துக்கள் .
இந்த செய்தி மகிழ்ச்சியானது. நானும் தமிழ் பள்ளி மாணவனே. இதற்காக உழைத்தவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும். எல்லா தமிழ் பள்ளிகளும் இதனை நடைமுறை படுத்த முடியுமா?
இதனை செய்ய துணையாகயிருந்த அனைவருக்கும் நன்றியும் வாழ்துக்களும்.
வாழ்த்துக்கள்.சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அணைத்து தமிழ் பள்ளியிலும் இதுபோன்ற திட்டம் செயல்படுத்துவது சிறந்தது.
ஆலயங்களுக்கு லட்சம் லட்சம் செலவு செய்வதைவிட தமிழ் பள்ளிக்கு அந்த லட்சங்களை பயன்படுத்தினால் சிறந்த பள்ளிக்குடம் மற்றும் சிறந்த கல்வி கற்ற மாணவர்களை உருவாக்க உறுதுணையும்.
நன்றி, ஏற்பாட்டுகுழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள். இப்பள்ளியின் புதிய கட்டிடத்தை அமைக்கும் போதே அதனை ஒரு முன்னோடித் தமிழ்ப்பள்ளியாக உருவாக்க வேண்டும் என்ற வேட்கையுடன் செயல் பட்டார் அன்றைய ஆட்சிக்குழு உறுப்பினரான டாக்டர் சேவியர் ஜெயக்குமார். சுமார் மூன்று லட்சம் வெள்ளியில் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் ஆறு வகுப்பறைகளை மட்டும் கட்டிவிட்டு கையைக்கழுவிட முயற்சித்தது ஐ- சிட்டி நிர்வாகம். அதனை எதிர்த்து சகல வசதிகளுடன் 24 வகுப்பறைகளுடன் கட்டபோராடினார் டாக்டர் சேவியர். ஆனால் அதில் ஆறு வகுப்பறைகள் மட்டுமே இன்றும் பயன் பாட்டில் இருப்பது வருத்தம் அளிப்பதாக இருக்கிறது. திரு. சூரியன் குறிப்பிட்டுள்ளதைப் போன்று இந்த டிஜிட்டல் கற்றல் கற்பித்தல் முறை மேலும் அதிகமான மாணவர்களை இப்பள்ளிக்கு ஈர்க்க வேண்டும். சமுதாயம் அப்பள்ளியின் முழு ஆற்றலையும் வசதிகளையும் நன்கு பயன்படுத்திக்கொள்ள வாழ்த்துகள்.
இத்திட்டம் சிறப்பாக செயல் பட வேண்டுமென்றால் பள்ளி ஆசிரியர் நிர்வாகம் , பள்ளி பெற்றொர் சங்கம் , பள்ளி மேலாளர் வாரியம் , முன்னாள் மாணவர் சங்கம் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயல் பட்டால்தான் வெற்றியடைய முடியும் அதற்க்கு முன் உதாரணம் மிட்லாண்ட்ஸ் தமிழ்ப் பள்ளி…!
சுவரின்றி சித்திரம் இல்லை. இப்போது சுவர் இருக்கிறது. சித்திரம் வரைந்தே ஆக வேண்டும். சுவரை எழுப்பியோருக்கு வாழ்த்துகள்.
முன்னாள் ஆட்சி மன்ற உறுப்பினர் மருத்துவர் சேவியர் , மற்றும் வாரிய தலைவர் உதய சூரியனுக்கும் நன்றியும் வாழ்த்துகளும், இப்போது செலங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் கணபதி ராவு என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று யாராவது சொல்லுங்களே !
கணபதி ராவ் பாகாதனில் குறிப்பா DAP யில் MIV வழி அதிக தெலுங்கர்களை வைத்து புது ஆட்சி அமைக்க மாநில நிதிகளை
தெலுங்கர்களுக்கு அல்லியும் வாரியம் கொடுக்கிறார்அடுத்து தெலுக் இந்தான் நாடாளுமன்றம் போய் போட்டி போட சில மண்டைகளை
நக்கி வருகிறார் .அடுத்த சிலாங்கூர் சட்ட மன்றம் ஓட்டையாண்டி என்று தெரிந்து தெலு இந்தான் தமிழர்களை ஓட்டைபோட போகிறார். இந்து அறப்பணி வாரியம் மப்பும் மந்தாரமா முடியும். அரசியல் துப்பு கெட்ட புலப்பு ..ஹிண்டர்ப் ஜெயில் கைதி என்று கட்சி தலைவர்கள் ஏமாந்தனர். ஒரு காலாவதி எட்டப்பன்.
வாழ்த்துக்கள்