மைஸ்கில்ஸ் அறவாரியம் சார்புடைய ஒரு காணொளியைத் தனது முகநூலின் வழி பிரபலப்படுத்திய ஒரு நபர் அது சார்பாக காவல் நிலையத்திலும் புகார் செய்துள்ளதாக தி ஸ்டார் இணையத்தளம் நேற்று ஒரு செய்தியை வெளியிட்டது.
அந்தக் காணொளியில் ஒரு மாணவனை மைஸ்கில்ஸ் அறவாரியத்தின் நிர்வாகியான செல்வமலர் இரண்டு முறை அறைவதுபதிவாகியுள்ளது. அந்த மாணவன் கிள்ளானில் உள்ள மைஸ்கில்ஸ் நடத்தும் பேக்கரியில் தொழில் பயின்று வருகிறான்.
இது சார்பாக பதிலளித்த செல்வமலர், அந்த மாணவன் சக மாணவி ஒருவரை தாக்கியதால்தான் அவ்வாறு தண்டிக்கப்பட்டதாகவும், இதற்கு முன்பு ஒருமுறை இதே போன்ற ஒரு சம்பவம் நடந்திருப்பதாகவும் கூறினார். “நான் கோபத்தால் அந்த மாணவனை அடிக்கவில்லை. அவன் செய்த தவறை சுட்டிக்காட்டி அதற்கான விளக்கம் கேட்டேன். அவன் எதுவும் பேசவில்ல. அதன் பிறகு அவன் மூக்குக் கண்ணாடியை அகற்றி விட்டு, முகத்தை சரியாகத் திருப்பி அவனை அறைந்தேன். அதன் பிறகுதான் அவன் பேச முற்பட்டான். அப்போது எங்களுடன் சுமார் 20 பேர் இருந்தனர்” என்றார்.
“மாணவர்கள் சக மாணவர்களிடம் ஒழுங்காகப் பழக வேண்டும். இதை நாங்கள்தான் உறுதி செய்ய வேண்டும். எனவே தண்டிப்பது என்பது தவிர்க்க இயலாதது. இம்மாதிரியான மாணவர்களுக்கு ஏதாவது ஒரு திறன் சார்ந்த கல்வியை வழங்கி அவர்களை சமூகத்தின் வளர்ச்சி பாதையில் இணைப்பதுதான் எங்களின் குறிக்கோள்”, என்கிறார் செல்வமலர்.
மேலும், அந்த மாணவன் தொடர்ந்து பயிற்சி பெற்று வருவதாகவும், அடுத்தமாதம் அவனின் பயிற்சி முடிவடைந்ததும் அவன் பேக்கரி சார்ந்த தொழில் திறன் பெற்றிருப்பான் என்றார் செல்வமலர்.
அந்தக் காணொளியில் காணப்பட்ட மாணவனின் தந்தை சுப்ரமணியம் (வயது 50), தாம் இது பற்றிய முழுமையானத் தகவலை அறிந்துள்ளதாகக் கூறினார். தமது மகன் செய்தது பெரிய தவறு. அவனைத் திருத்த செல்வமலர் மேற்கொண்ட நடவடிக்கையை தாம் ஆதரிப்பதாகவும், ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறினார்.
எனது மகனால் இந்த அரும்பணியைச் செய்துவரும் மைஸ்கில்ஸுக்கு ஏற்பட்ட இந்த நிலைக்கு வருந்துவதாகக் கூறினார். “என் மகனைப் பயன்படுத்தி மைஸ்கில்ஸ் வாரியத்தைச் சாட வேண்டாம்”, என்ற அவர், “பின்தங்கிய மாணவனான அவன் இன்று ஓரளவு திறன் பெற்றுள்ளான். அந்த வாய்ப்பை இவர்கள் வழங்கியுள்ளனர். இது எங்கள் குடும்பத்திற்கும் அவனுக்கும் கிடைத்த ஒரு சாதனையாகும்”, என்றார்.
இது சார்பாக கருத்துரைத்த வழக்குரைஞர் கா. ஆறுமுகம் மைஸ்கில்ஸில் தாமும் தமது மனைவியும் அங்கு பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தியுள்ளதாக கூறினார். “இது புறக்கணிக்கப்பட்ட நிலையிலுள்ள இளையத் தலைமுறையினருக்கு ஓர் எதிர்காலத்தைக் காட்ட ஆவல் கொண்ட அமைப்பு. இதைத் தியாக நோக்கமும் சமூகத்தைச் சீர்படுத்த வேண்டும் என்ற வெறியும் கொண்டவர்களால்தான் செய்ய இயலும்” என்றார்.
“எனது நண்பர்கள் பசுபதி, செல்வமலர், தேவா, கிருஸ்டினா, இராமா, மருத்துவர்கள் மணி மற்றும் சண்முகசிவா போன்றவர்களுடன் பலமுறை பேசும் போது அவர்களிடம் இந்த உணர்வுகளை உணர முடிந்தது”, என்றார் ஆறுமுகம்.
“இந்தக் காணொளி சார்பாக அதிக அக்கரை எடுத்துக்கொண்டு, பகிரங்க பரப்புரை செய்யும் நபர்கள், எதைச் சாதிக்க முற்பட்டுள்ளனர், அவர்களின் நோக்கம்தான் என்ன என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்”, என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அந்தக் காணொளியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும், ஆக்ககரமான ஆலோசனைகள் சொல்லவும் வக்கற்ற நிலையில், சமூக சீர்திருத்த நோக்கம் கொண்ட மைஸ்கில்ஸ் வாரியத்தை சாடுவது ஒரு கேவலமானச் செயலாகும். அது அவதூறு நோக்கம் கொண்டது.
தொடரட்டும் உங்கள் சமூகப்பணி, நற்பணி !
மழை நீரில் கலக்கும் சாக்கடை கொஞ்சம் துர்நாற்றம் வீசவே செய்யும்….!
நீங்க நினைத்தாள் அறைவிங்க அதுக்கு ஒரு கேவலமான விளக்கம் கொடுப்பிங்க செல்வமலர் .
அவர்கள் வெறும் பின் தங்கிய மாணவர்கள் மட்டும் அல்ல. அவர்களில் ஒரு சிலராவது பின்னால் இருந்து தாக்கக்கூடிய மாணவர்கள்! அவர்கள் பின்ணணி அப்படி! ஏற்றுக்கொள்ள வேண்டியது தான்!
வணிகத்திலிருந்து தமிழன் அகற்றபடுகிறான் ..
கல்வித்துறை /அரசியல் /ஆலயம் /தலைமை பொறுப்புக்கள் /தமிழர்களை ஒரு சிறு கூட்டம் பந்தாடுகிறது ..
தமிழன் ஒரு உணவகம் நேர்பையாக நடத்தினால் திட்டமிட்டே சமுக வலைதளங்களில் தீயநோக்கதொடு பரப்புகிறார்கள் ..தமிழர்களே இந்த செய்திகளை நன்றாக பாருங்கள் விருப்பம் தெரிவிக்கிறவர்கள் பகிர்கிறவர்கள் பெரும்பாலானோர் தமிழரல்லாதார் ..ஒருசில கூமுட்டை தமிழனும் என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே ஆமா போடுகிரானுங்க!
அவர்கள் அவர்களின் இன நலனுக்காக வேலைசெய்கிறார்கள் ..
தமிழர்கள் என்றைக்கு விளிப்படைகிறார்களோ அன்றைக்குத்தான் இந்த இனம் உருப்படும் .. முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயகுமாருக்கு என்னமா குடைச்சல் கொடுத்தான் இந்த புரளி .அம்புட்டு இடையுறு தடங்கள் குடைச்சளுக்கும் மத்தியில் நிறைவான சேவை செய்தார் ..தமிழ் பள்ளிகூட பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் அடாவடி காலித்தனம் பண்ணி பதவிக்குவந்து தமிழ் ஆசிரியை ஆபாசமாகபேசி தாக்கியவன் ..பெண்ணை தாக்கிய போ.. ன் இதற்காக நீதிமன்றத்தால் தண்டிக்கபட்டவன் ..
கடந்த திவாளி வியாபார கடைய அம்புட்டையும் தன் அல்லக்கைகளை வைத்து எடுத்து பன்மடங்கு அதிகாமாக விக்கபார்த்தான் இதை இவனோட முள்ளமாரிதனத்தை யாரோ சீனன்கிட்ட சொல்லிப்புட்டான் ..அவன் வியாபாரிகளே நேராக பெற்றுக்கொள்ளவேண்டும் என்றவுடன் தனது அம்புட்டு அல்லகைகளையும் அழச்சிட்டு அடாவடி பண்ணினான் ..அம்புட்டு தமிழனுக்கும் சீனன் எதிரிபோன்று ஆர்பாட்டம் கூச்சல் !
micமோகன் ஆளுங்க வச்ச பஞ்சல கொஞ்சகாலம் அடங்கி இருந்தான் இப்போ மீண்டும் தமிழர்களுக்கு எதிராக இறங்கிட்டான் ..
பெரும்பான்மை தமிழர்கள் இந்த அடாவடி கும்பல்களால் வியாபார உரிமைகள் ,தலைமை பொறுப்புக்கள் ,பல இடங்களில் குழப்பங்கள் சண்டிதனன்களால் அப்புறபடுத்தபடுகிரார்கள்..
மைஸ்கில் அறவாரியத்துக்கு எதிராக போலிஸ் ரிப்போர்ட் பண்ணினார்
தொரட்டும் உங்கள் பணி.சில ஓநாய்களுக்கு ஊளை இட மட்டும் தான் தெரியும்.பின் தங்கிய மாணவர்களை முன்னுக்கு கொண்டுவரும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் .
இங்கு என்ன நடக்கிறது? யாராவது உண்மையை கூற முடியுமா?
தொடரட்டும் உங்கள் சேவை ! இந்த புச்சோங் புரளி பண்ணி எப்பவும் இப்படிதான் !
மைஸ்கில் அறவாரியத்தின் பணி சிறப்புக்குரியது. சம்பந்தப் பட்ட மாணவனின் பெற்றொர் அமைதியாக இருக்கும் போது மற்றவர் தலையிடுவது அவசியமற்றது. மைஸ்கில் பணிகள் தொடர வாழ்த்துவோம்.
ஒரு மாணவனை அறைந்தால் தான் திருத்தே முடியும். நல்ல அணுகுமுறை. வாழ்த்துக்கள் மைச்கில். தொடரட்டும் உங்கள் அரையும் பனி.
சீரயஸ்சா இல்லாமல் இந்த காமெடியை கொஞ்சம் பாருங்க சார்.
1 Malaysia Comedy : MIC Mohan vs Puchong புரளி
http://www.dailymotion.com/video/x2v69tw
செல்வமலர் வானொலியிலும் தொலைகாட்சியிலும் பேசும்பொழுது பல முறை இவரது உரையைக் கேட்டிருகின்றேன். அறிவார்ந்த செயல்மிக்கப் பெண்மணி. ஒரு மாணவன் செய்த குற்றத்திற்காக அவனை தண்டிப்பது என்பது அவன் திருந்த வேண்டும் என்பதற்காகத்தான். அவன் கெட்டுப் போய்விட வேண்டும் என்பதற்காக. அல்ல. பெற்றோராகிய நாம் இதனைப் புரிந்துக் கொண்டு பேச வேண்டும். ஏன் நம் பிள்ளைகள் தவறு செய்தால் நாம் கண்டிப்பதில்லையா? எதற்காக கண்டிக்கின்றோம்? தண்டிக்கிறோம்? அப்பிள்ளை திருந்த வேண்டும் என்பதால்தான். அப்பிள்ளையின் எதிர்கால நல்வாழ்விற்கு நாம் வழிகாட்ட வேண்டும் என்ற அக்கறையால்தான் இவ்வாறு செய்வது. இவ்வாறு ஆசிரியர்கள் தண்டிக்கும் உரிமையை அவர்களிடம் இருந்து பறித்ததால்தான் இன்று மாணவர்கள் ஆசிரியர்களை மதிப்பதில்லை. இதில் மனநோயால் பாதிக்கப்பட்டும், இன வெறியால் பாதிக்கப் பட்ட ஆசிரியர்கள் செய்யும் செயல் அடக்கமில்லை. அவன் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்று பல ஆசிரியர்கள் மாணவர்கள் செய்யும் தவற்றை கண்டுக் கொள்ளாமல் போவது காரணம் இவ்வகையான எதிர்மறை விமர்சனத்தால்தான்.
“அந்தக் காணொளியில் காணப்பட்ட மாணவனின் தந்தை சுப்ரமணியம் (வயது 50), தாம் இது பற்றிய முழுமையானத் தகவலை அறிந்துள்ளதாகக் கூறினார். தமது மகன் செய்தது பெரிய தவறு. அவனைத் திருத்த செல்வமலர் மேற்கொண்ட நடவடிக்கையை தாம் ஆதரிப்பதாகவும், ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறினார்.”
இதுதான் உண்மை என்று சொல்லியும் இதனையறியாது சுய விளம்பரம் தேடிக் கொண்டு காலாடித்தனம் பண்ணும் பன்னாடைக்கு எல்லாம் மைஸ்கில்ஸ் அறவாரியம் பதில் சொல்லிக் கொண்டு காலநேரத்தை வீணாக்குவதை விட்டு தங்கள் சமூகத் தொண்டை தொடர்ந்து செய்து வாருங்கள். மலையைப் பார்த்துக் குலைக்கும் நாய் போன்ற செயலாகும் இந்த ‘போலிஸ் ரிப்போர்ட்’ கதை எல்லாம். .
பிள்ளைகளை பெற்றோர்களே அடிக்கூடாதுன்னு சட்டம் இருக்கு . செல்வமலருக்கு அடிக்க யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது ? நல்லபடியா சொல்லி கொடுக்க தெரியாதா? இப்படி எல்லோரும் கையை ஓங்குவதால்தான் வன்முறை தலை விரித்து ஆடுது ….
பிள்ளைகளை அடிக்கக்கூடாதுன்னு சட்டம் ஏதும் இல்லை. சித்திரவதை செய்யக் கூடாதுன்னுதான் சட்டம் இருக்கு. இவ்விரண்டின் நோக்கமும் வேறு. இந்த வேறுபாட்டை அறிந்து கருத்து எழுதுவது அவசியம். யாம் நல்லப் பிள்ளையாக வளர வேண்டும் என்று எண்ணித்தான், ஒரு முறை பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் எம்மை அடித்ததால் அவரைத் திட்டி விட்டு வகுப்பை விட்டு வெளியேறியதை அறிந்த எம் தகப்பனார் எம்மைத் தண்டித்து மறு நாள் அதே பிரத்தியேக வகுப்புக்கு அழைத்துச் சென்று அவ்வாசிரியரிடம் எம்மை மன்னிப்பு கேட்க வைத்து மீண்டும் அவ்வகுப்பில் சேர்த்து விட்டுப் போனார். பெற்ற மகனுக்கு நல்வழியைக் காட்டிய இவரல்லவோ எம் தந்தை. அவ்வாறே செல்வமலர் அம்மாணவனுக்கு அன்னை.
தமிழர்களே நடக்கும் அனைத்தையும் கூர்ந்து கவனியுங்கள் ..
இந்த முரளியார் ?இவனின் கடந்தகால தமிழின எதிர்ப்பு ஏன்?அடிவாங்கிய மாணவனின் பெற்றோர் இதுபற்றி மகன் செய்தது தவறு ..இதை மற்றவர்கள் பெரிது படுத்துகிறார்கள் என்று சொல்லிவிட்டார் ..
இவன் ஏன் அதிகமாக துள்ளுறான் !
மைஸ்கில் அறவாரியம் மிகவும் அவதானமாக செயல்படனும் ..
இன்னும் சில காலி பயல்களைகூட மாணவர் போர்வையில் அனுப்பி பிரச்சினை பண்ணுவானுங்க ..ஏன்னா இவனுங்க டிசைன் இந்தமாதிரித்தான் ..
இன்னுமொரு செய்தி முகநூலில் ஆலயங்களில் காலி பயல்களும் பெண்களும் ஆடும் காட்சிகளைபோட்டு தமிழ்ன் பறியா பரச்சின்னு வடுககூட்டம் தமிழர்களை இழிவுபடுதிகிரானுங்க ..
அங்கங்க இந்த போம்பளவேசம்போட்டு ஆடுறது அம்புட்டும் வடுக பீப்புங்க … காம ஆட்டம் கபோதியாட்டம் எல்லாம் இந்த …
எல்லாம் இலக்க சட்டயபோட்டுகிட்டு அட்டகாசம் ..
நேரா உங்க இன அடையாளத்தோடுவா …தமிழன் போர்வில் ஒளிந்து வந்து மாட்டினீங்க ….
கருத்து சொல்றேன்னு சிலர் சுய தம்பட்டம் அடிக்குறாங்க .. செல்வமலர் அடிச்சது தப்பா சரியானு கேள்வி . எதுக்கு சுய தம்பட்டம்? உன் அப்பன் என்ன செஞ்சன்னு யாருக்குக் தெரியும்? இதே தேனீ சின்ன வயதில் தண்ணி அடித்து கூத்து அடித்தை பத்தி சொன்னார் .. இதையும் உன் அப்பன் தான் சொல்லி கொடுத்தாரா ? என்ன மாதிரி உன் அப்பன் ?
இந்த சின்ன புத்தி ஊழ்வினைப் பயனால் அதன் வழியே போகிறது. ஒரு கருத்தைப் படிப்போருக்கு விளங்க வைக்க வேண்டுமானல் சில நேரங்களில் உதாரணம் தேவைப் படுகிறது. அது தன் சுய வரலாறானால் உள்ளதை உள்ளபடிச் சொல்லலாம். தப்பாகாது. தண்ணி அடித்ததை சொல்வது எதனால்? தவற்றைத் திருத்திக் கொள்ள. எம் தந்தை எமக்குத் தண்ணி அடிக்க கற்றுக் கொடுக்கவில்லை. எம் நண்பர் ஒருவர் பின்வருமாறு ஒரு கருத்தைச் சொன்னார் எவன் ஒருவன் உம் பெற்றோரை தப்பாக பேசுகிறானோ அவனப்பன் அப்படிதான் அவனை தப்பாக வளர்த்துள்ளார் என்று அறிந்து கொள் என்றார். இதற்கு மலாய் மொழியில் ‘Kurang ajar’ என்று சொல்லுவார்கள். இப்படிப் பட்டவரெல்லாம் செல்வமலருக்கு புத்திப் புகட்ட கிளம்பியதுதான் ஆச்சரியம்.
தம்பி சின்னபையன் ,பெயருக்கு ஏற்றாற்போல் ,சின்ன புள்ள தனமா கருத்து சொல்லியிருக்க .அதோடு விட்டுருக்கலாம் .ஆனால் நண்பர் தேனீயையும் அவர் தந்தையையும் இவ்வளவு கீழ்த்தரமாக விமர்சிப்பது அழகல்ல ,உங்களுக்கு அதிகாரமும் இல்லை .உங்களுக்கு படித்துக் கொடுத்த ஆசிரியர்களும் பெற்றோர்களும் இதைத்தான் கற்றுக் கொடுத்தார்களா ? .எனக்கும் தேனீ அவர்களுக்கும் சில வேளைகளில் கட்டுரையின் வழி கருத்து வேறுபாடு வருவது உண்டு ,ஆனால் அவரின் தந்தை பற்றி கேவலமாக விமர்சிப்பதில்லை . தயவு செய்து பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் .
அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்
Anonymous ….. அது தன் சுய வரலாறானால் உள்ளதை உள்ளபடிச் சொல்லலாம், எப்படி ?. உன் ஸ்ரீலங்காவில் யாழ்பாண தமிழன் மட்டகளப்பு தமிழனை மட்டக் களப்பு மடையினு சொல்றதா ? எங்கண்ட ஆட்கள் அப்படின்னு பேசி மலேசிய தமிழனை எப்படி மட்டமா பேசினாயே.. இது தான் உன் சுய வரலாறா ? ஒரு தமிழனே தமிழனை இழிவா சொல்றதுதான் உன் வரலாறு . இப்படிதான் உன் அப்பன் உனக்கு சொல்லி கொடுத்ததா? இதுதான் Kurang ajar…..
தேனீயின் அப்பாவை பத்தி இங்க பேசவரவில்லை .. அதோடு மற்றவர்களின் சுய விளம்பரம் தேவையில்லை … வெள்ளியூர் முருகன் …..உங்களுக்கும் தேனீக்கு கருத்து வேறுபாடா அது உங்க பிரச்சனை . .உங்களுக்கு படித்துக் கொடுத்த ஆசிரியர்களும் பெற்றோர்களும் இதைத்தான் கற்றுக் கொடுத்தார்களா? சம்பந்தம் இல்லாம மூக்கை நுழைகிறியே .. இது யாரு சொல்லிகொடுத்தது? கொஞ்சம் பொறுப்புடன் பேசவும்…. உன் ஆசிரியர் உனக்கு எப்படி கத்து கொடுத்தார்னு பிரச்சனை இல்லை .. பிரச்சனை செலவமலர் அடித்தது சரியா இல்லையா ? அதை விடுத்து சொந்த பிரச்சனை பத்தி பேச உங்களுக்கு அதிகாரம் இல்லை ..
Anonymous ..இந்த சின்ன புத்தி ஊழ்வினைப் பயனால் அதன் வழியே போகிறது. எப்படி ? சீதனம் என்ற பேரில தமிழ் பெண்களிடம் கொள்ளை அடிக்கீறிங்க்களே .. அப்படியா ? மற்றவர்கள் புத்தி புகட்டுவது இருக்கட்டும் .. உங்க புத்தி எங்கட போய்டுச்சி ? வெக்கமா இல்லை . பெண்களிடம் பணம் கேக்குறிங்க்களே .. என்ன பொழப்புட இது ? Kurang ajar ஸ்ரீலங்கா தமிழன் ….