தமிழகத்தில் சட்டசபை தோ்தல் நெருங்குவதை முன்னிட்டு, பிரதான கட்சிகள் உட்பட பல கட்சிகள் பிரசாரத்திற்காக தொழில்நுட்பத்தினை நாடி வருகின்றன.
அந்த வரிசையில், தமிழர் தான் தமிழ்நாட்டில் ஆட்சி செய்ய வேண்டும் என்ற முக்கிய கொள்கை கொண்ட சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் இணைந்துள்ளது.
அக்கட்சியின் செயல்பாட்டு வரைவுக்கென மட்டுமே ஒரு சிறப்பு ஆண்ட்ராய்டு கைப்பேசி செயலியை வெளிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டு வரைவு-2016 என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அச்செயலியில், நாம் தமிழர் கட்சியின் திட்டங்கள் மற்றும் தொலை நோக்கு பார்வையை விளக்கும் 330 பக்க செயற்பாட்டு வரைவு புத்தகம், நீர்வளம், கல்வி, மருத்துவம், வேளாண்மை, பொருளாதாரம் மற்றும் மரபு சார்ந்த மின்சாரம் போன்ற அத்தியாவசிய பிரச்சினைகளில் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு மற்றும் எதிர்கால திட்டங்கள் அனைத்தும் ஒருங்கே கோர்க்கப்பட்ட வரைவாக வெளியிடப்பட்டுள்ளது.
தரவிறக்கம் செய்ய – https://play.google.com/store/apps/details?id=com.ranup.double.candle
https://www.facebook.com/photo.php?fbid=225491691155215&set=a.161599750877743.1073741828.100010831577831&type=3&theater
நாம் தமிழர் ஆட்சியில் மதுரையிலே — சீனாவில் உள்ளது போல ‘ஷாவலின் டெம்பிள்’ — கலைக்கோவில் ஒன்று கட்டப்பட்டு, அங்கே தமிழ் இளைஞர்கள் அனைவருக்கும் தற்காப்பு கலைகள் கற்றுக் கொடுக்கப்படும். மனநல, உடல்நல பயிற்சிகள் வழங்கப்படும். போர்க் கலையும் பயிற்றுவிக்கப்படும்.
தமிழர்கள் உடற் பயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும்– தமிழ் நாட்டில் ஏழைகள் தான் ஒல்லியாக இருக்கின்றனர்– அரசியல் வாதிகளும் காவல் துறையினரும் மற்றும் அரசு வேளைகளில் உள்ளவர்களும் தொந்தி உடன் மிக நன்றாக இருக்கின்றனர்–வெட்கக் கேடு. அங்கு எவனாவது — ஸ்டாலினை தவர- சீமானை தவிர –பெரும்பாலோர் தொந்தி கணபதி தான். பெண்களும் அதற்க்கு மேல். அத்துடன் தாடிவைத்தால் நன்றாக வைத்திருக்க வேண்டும்– என்னமோ காடு மண்டியது போல் இல்லாமல் இருக்க வேண்டும்.
சபாஷ் ! தமிழனை அழிக்க தமிழனே முற்பட்டு விட்டான்.
சீமானின் கோமாளித்தனமான “ஈழதமிழர் SORRY யாழ்ப்பாணத்தான் ஆதரவு” என்ற பெயரில் தமிழக இளைஞர்களை தினந்தோறும் பலிகடாவாக்கி கொண்டிருப்பது போதாதாம், இப்பொழுது “தற்காப்பு கலைகள்” என்ற பெயரில் தமிழக இளைஞர்களை குருப் குருப்பாக கொல்ல போகிறார்களாம்.
அட கருமமே ! கோமாளிகளின் கூத்துக்கு ஒரு அளவே இல்லையா ?
ஸ்ரீகர, ஏன் நீங்கள் எல்லாவற்றையும் எதிர்மறையாகவே சிந்திக்கிறீர்!தற்காப்பு கலைகள் என்பது நல்ல உடற்பயிற்சி தானே! ஏன்? தமிழன் குடித்துத் தான் சாகவேண்டும் என்று வரம் ஏதும் வாங்கி வந்திருக்கிறானா!
இவன் பெர பார்த்தாலே தெரியலையா கலப்புனு! தமிழ் தாய் மண் தமிழர் ஆட்சிக்கு வரட்டும்…அப்புறம் இதுங்க ip எல்லாம் தேடி நொங்கு எடுத்துருவோம்.எங்கு ஓடிருங்க?
தமிழனை அடிமை மாதிரி வந்தேறி கூட்டங்கள் இது நாள் வரை நடத்தின அதனாலே சீமானை பார்த்த அதுங்க கண்ணுக்கு எதிரியாதான் தெரியும்…தமிழர் நாடு முழுமையா தமிழன் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழனுக்கு எதிரா கருத்து எழுதும் கூட்டம் காணமல் போய் விடும் abraham terah அவர்களே!
abraham terah அவர்களே ! எதிர்மறையாக சிந்திக்கவில்லை ! என்னுடைய கல்லூரி மாணவ பருவத்தில் 1980-ல் இப்படித்தான் தமிழகத்தின் அனைத்து அரசியல் தலைவர்களும் இலங்கை தமிழர் விடுதலை எழுச்சியுரை என்ற பெயரில் மாணவர்களை கவர பல கூட்டங்கள் நடத்தினார்கள். இவர்களுடைய பேச்சில் கவர்ந்து சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்கள் பல பிரிவுகளாக தெரு போராட்டங்களில் கலந்து கொண்டு கைதும் ஆனோம். ஆனால் எழுச்சியுரை ஆற்றிய தலைவர்கள் யாரும் போராட்டத்தில் பங்கு பெற்ற மாணவர்களை பற்றி கவலை படவில்லை. 1980 முதல் இன்றுவரை இலங்கை தமிழர் விடுதலை/இலங்கையில் ஈழ நாடு என்ற அனைத்து கட்சி தலைவர்களும் (தற்பொழுது இறுதியாக சீமானும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளார்) கொக்கரித்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களுடைய நோக்கமே அரசியலில் நிலைத்து நிற்க தமிழக இளைஞர்களை கவருவதுதான் அதற்கு தமிழ் பற்று என்று ஆரம்பித்து இறுதியில் இலங்கை தமிழர் விடுதலை /இலங்கையில் ஈழ நாடு என்று எழுச்சியுரை என்ற ஆயுதத்தை கையில் எடுப்பார்கள். உணர்ச்சிமிக்க சில இளைஞர்கள் இவர்களது எழுச்சியுரையினால் தீக்குளிப்பது/தற்கொலை செய்து கொள்வது என்பது தமிழகத்தில் தினந்தோறும் நடைபெறும் நிகழ்ச்சியாக மாறிவிட்டது. தமிழக இளைஞர்கள் யாரேனும் வேறு காரணுங்களுக்காக தீக்குளித்து விட்டாலோ /தற்கொலை செய்து கொண்டாலோ போதும், அதை இலங்கை தமிழர் விடுதலைக்காக என்று நாம் தமிழர் அமைப்பினர் அவர்களுக்கு மாலை அணிவித்து (அதாவது ஒரு தமிழனை பலிகடாவாக்கி விட்டோமே என்ற மகிழ்ச்சியில்) வீர வணக்கம் செய்வதும் வழக்கமாகி விட்டது.
அதனால்தான் இலங்கை தமிழர் விடுதலை /இலங்கையில் ஈழ நாடு என்று பேசும் கபடதாரிகளின் எழுச்சியுரையில் மயங்கி விடாமல் எதிர்மறையாகவும் சிந்திக்க வேண்டும் என்று தமிழக இளைஞர்கள மட்டுமின்றி மலேசிய இளைஞர்களையும் தூண்டுகிறேன்.
உதாரணத்துக்கு :
சொந்த நாட்டிலே அதாவது தமிழகத்தில் தமிழர்களின் பிரச்சனைகளை களைய முடியாதவர்கள்,அண்டை நாட்டுல
ஒரு பகுதியை பிரித்து “ஈழநாடு” மலர வைக்க முடியுமா ?
ஸ்ரீகர, இருவரும் ஒன்றைத்தான் சொல்லுகிறோம்.நான் எல்லாக் காலங்களிலும் போல இந்தத் தேர்தலைப் பார்க்கவில்லை. திராவிடக் கட்சிகள் இப்போதும் முன்பு சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆனால் சீமான் வேறு படுகிறார். நான் என்னன்ன செய்வேன் என்று ஒரு திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்.அவர் தமிழ் நாட்டுக்கு ஒரு புதிய பாதையைக் காட்டுகிறார்.நான் அவர் நிலையில் இருந்தால் நானும் அவரைப்போல் தான் செயல்படுவேன். அவர் பேச்சில் உண்மைத் தெரிகிறது. அவரை நான் நம்புகிறேன். அவர் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன்! எத்தனையோ பேர்களை நம்பினோம். ஏன்? ஒரு தமிழனை நம்பக்கூடாதா? நான் நம்புகிறேன்; அவ்வளவு தான்!.