மலேசியா எல்லாம் போலே

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும்.

 

சங்க கால புதிய கவிதை
இந்த கால் மரபு எதுவும் வேகல !

modernartஅரசியல் அது நம்ப தலைவன்கள்
நமக்கே சுத்தன அம்மி
தேய்ந்து நாமே இடிச்ச
உலக்கையும் உரலும்  உடைய

ஆட்டி விட்ட பம்பரம் கால குத்த
கயிறு கழுத்தை இறுக்க
தமிழன் மீது ஓட்டைபோட்ட
வடுக சீரியல்

சூட்ட கிளப்ப சூத்திரன்
சாமிகள் ஏசி கேற்க
வெளியில் சூடம் சுத்த
ஆசாமிகள் ஆட்டம்

அடுத்த PR 14 கு
கும்பல் சேர்க்குது
சேர சோழன் பாண்டியன்
சோத்துக்கு விற்றான்

கலந்து போன இந்தியன்
தமிழன போட்டான்
கொடி கட்டி காய்ந்த
காயில் அரசியல் வீரியம் இழந்தான்

வாங்கடா என்றால்
என்ன என்னான்னு
கேக்கிறான்

தலைவன் எல்லாத்தியும்
கௌண்டிங்கல போடுறான்
கேட்டால் தமிழேன்பா
செப்புறான் !!!

ஹிப்பி ஹீ ஹீ என்றான்
சப்பி ஹிப் ஹாப் ஆடுறான்
துட்டு  குடுத்தா அபாங் போடுறான்
கேட்டுபுட்டா கொதிப்புடறான்

கபாலி சொன்னா மகிழ்ச்சி
அவன்தான் தமிழன் என்று வேற
பிதா மகன்போல பிணத்தை தேடுறான்

மிச்ச எழும்ப காட்டி பால் ஊத்றான்
கேட்டா அவரு  எழுப்புதான்
என்று யாருக்கோ பால் போவுது

தப்பு தப்பா பேசி ஏய்க்கிறான்
டைம்ல  ஒட்டு போடுங்க என்பவன்
எல்லாம் அரசியல் பேச்சன்
கொடி தூக்கும் போக்கனாக்கள்

கூட்டமா வைபி வைபீர்
தந்தா ஊர கூட்டி  கொடுத்து
குருதி வாங்குறான்
மலேஷியா எல்லாம் போலே
அப்பா ளாகி அப்பா செய்ஞ்சதுதான்

-பொன்.ரங்கன்

TAGS: