தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமை செயலாளராக இருந்த ராம்மோகன்ராவ் வீட்டில் வருமானவரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில் புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார், இதற்கான உத்தரவை தமிழக ஆளுநர் இன்று பிறப்பித்துள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரியான கிரிஜா வைத்தியநாதன், முனைவர் பட்டம் பெற்றவர்.
மதுரை மாவட்ட கலெக்டர் உள்பட பல்வேறு அரசு துறைகளில் உயர் பதவிகள் வகித்தவர்.
தற்போது தலைமை செயலர் பொறுப்பு உள்பட, ஊழல் கண்காணிப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.
-http://news.lankasri.com