சென்னை: தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கிரிஜா வைத்தியநாதன், தஞ்சாவூரைச் சேர்ந்தவர். மதுரை மாவட்ட ஆட்சியராகவும் பதவி வகித்தவர்.
01.7.1959ல் பிறந்த கிரிஜா வைத்தியநாதன், முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 1981ம் ஆண்டு தமிழ்நாடு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்தவர்.
நல்வாழ்வு பொருளாதாரம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற கிரிஜா வைத்தியநாதன், கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருந்த கிரிஜா வைத்தியாநதன், நில நிர்வாகத் துறை ஆணையராக பதவி வகித்தார்.
தற்போது கூடுதல் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதனுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நிர்வாக சீர்திருத்தம் மற்றும் கண்காணிப்பு ஆணையர் பதவிகளையும் அவர் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தியதைத் தொடர்ந்து, கிரிஜா வைத்தியநாதன், புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-http://www.dinamani.com