சென்னை: தமிழகத்தில் விவசாயிகள் மரணம் தொடருகிறது. இன்றும் 5 விவசாயிகள் மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. பருவமழை பொய்த்து போனதாலும் காவிரி நீரை கர்நாடகா திறக்க மறுத்ததாலும் விவசாயம் கேள்விக்குறியாகிவிட்டது.
இதனால் விவசாயிகள் பெரும் துயரத்தில் இருக்கின்றனர். வேளாண் பயிர்கள் கருகுவதைக் கண்டு விவசாயிகள் அதிர்ச்சியடைந்து மாண்டுபோகின்றனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டுமின்றி பிற மாவட்ட விவசாயிகளும் உயிரிழக்கின்றனர். இதுவரை 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 6 விவசாயிகள் உயிரிழந்தனர். இன்றும் நாகை, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 5 விவசாயிகள் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 11 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாய்களின்தற்கொலைதிராவிட
கட்சிகளின் சாதனை.
இத்தனை மூட மடையர்களை என்ன என்று சொல்வது? தற்கொலைக்கு பதிலாக கடமை ஆற்றாத அரசு அதிகாரிகளை காணாமல் ஆக்கிவிட்டு போவது தானே? அப்படியாவது சில நன்மைகள் கிடைக்கட்டுமே- அங்கு இந்த தற்கொலை கலாச்சாரம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். மடையர்கள். அங்கு தினசரி நடக்கும் போராட்டங்களையும் மற்ற ஈனத்தனங்களையும் என்ன என்று சொல்வது? தண்ணீருக்கு அலையும் மக்கள் வறண்ட நிலங்கள்– அங்கு இதைப்பற்றி யாருக்குமே கவலை இல்லை ஆனால் தற்குறி தலைகளுக்கு ஜே போட மட்டும் நேரம் காலம் இருக்கிறது. கேவலம். நாடு நாறிப்போய் இருக்கிறது ஆனால் பதவிக்கும் பணத்திற்கும் நடக்கும் அநியாயங்களுக்கு அளவில்லை.