கோவை: தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் குழப்பத்திற்கு மத்திய அரசே காரணம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கோவை அருகே சின்னியம்பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சூலூர் வட்டார மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், தற்போது தமிழகத்தில் நடக்கும் அரசியல் குழப்பங்களுக்கு மத்திய அரசு தான் காரணம். வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி இவை நடத்தப்படுகிறது என குற்றம்சாட்டினார்.
மேலும் அவர் கூறுகையில், முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தலைவர்களுக்கு இல்லை. முதல்வர் பொறுப்பு என்பது மலர் கீரிடம் அல்ல அவை முட்கீரிடம் ஆகும். தமிழக சட்டப் பேரவையில் இனிவரும் காலங்களில் ஒவ்வொரு நாளும் சோதனைகளை சந்தித்து தான் பொறுப்பில் நீட்டிக்க முடியும்.
சட்டசபையில் உறுப்பினர்கள் தங்களது உடல் வலிமையின் பலத்தை காட்டக்கூடாது. தங்களுக்கு சட்டப்படி வழங்கப்பட்ட வாக்குரிமையை மட்டுமே பயன்படுத்தி இருக்க வேண்டும். ரகசிய வாக்கெடுப்பு என்று இல்லாமல் எப்படி வாக்கெடுப்பு நடத்தி இருந்தாலும் அந்தந்த கட்சிக்கு உள்ள பலம் தான் நிரூபிக்கப்பட்டு இருக்கும். எதிர்கட்சிகள் இல்லாமல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு செல்லாது என்பதை ஏற்க முடியாது என்றார்.
வட நாட்டு காரனும் பக்கத்தில் இருக்கும் மாநிலமும் மெல்ல மெல்ல தமிழ் நாட்டை சுடுகாடாய் மாற்றி வரானுங்க . இதல்லெ தமிழ் நாட்டு அரசியல் பன்றி மலத்தில் பிறந்தவனுங்க இருக்கிற மலத்தையும் திங்கிறானுங்க .
இளைஞர்கள் எழ வேண்டும் . சினிமா சாக்கடையிலும் மது மோகத்திலிருந்து எழுந்து தங்களின் வாழ்வாதாரத்திற்கும் வருங்காலம் மக்கள் அழிவிரிந்தும் காப்பாற்ற வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு எப்படி போராட்டம் இந்த இளைஞர் கூட்டம் எழுந்தார்களோ , இன்னும் விவேகத்தோடு எழுந்து எல்லா அரசியல் ஈனர்களை விரட்ட வேண்டும் . தமிழ் நாட்டை படித்த நல்ல இளைஞர்கள் ஆழ வேண்டும்.
இவனுங்களுக்கு ஒற்றுமை கிடையாது வடக்கத்தியனை குறை கூறி ஒன்றும் ஆகப்போவது இல்லை. பக்கத்தில் இருக்கும் சுண்டக்காய் சிங்களவன் தமிழர்களை கொன்று குவித்தும் இன்று மீனவர்களை அடித்து துன்புறுத்தும் போதும் வெட்கம் மானம் ஈனம் இல்லாமல் கை கட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் சொரணை இல்லா பிண்டங்களை என்ன என்று சொல்வது?