தமிழகத்தில் இந்தாண்டு நடந்த ஜல்லிக்கட்டில், காளைகள் துன்புறுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஆதரங்களை திரட்டி வருவதாகவும் பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்திருந்தது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடைசெய்யப்படுவதற்கு முக்கிய காரணம் பீட்டா அமைப்பு என்று கூறப்பட்டது.
அதன் பின் இந்தாண்டு கண்டிப்பாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று இளைஞர்கள் உட்பட பலரும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தினர்.
அதன் பயனாக இந்தாண்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் அப்போது முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் தமிழக சட்டசபையில் அவசர சட்டம் இயற்றினார். பின்னர் அந்த அவசரச் சட்டம் சட்டமாக்கப்பட்டது. அதன் பின் தமிழகத்தின் முக்கிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்நிலையில் பீட்டா அமைப்பின் இந்திய தலைவரான பூர்வா ஜோஷிபுரா மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், இந்தாண்டு நடந்த ஜல்லிக்கட்டின் போது காளைகள் துன்புறுத்தப்பட்டு மிருகவதை நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கான ஆதாரங்களை அவர் சேகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். பூர்வா ஜோஷிபுராவின் பேச்சு மீண்டும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மற்றும் தமிழர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறப்படுகிறது.
-http://news.lankasri.com
இனி இவளை நாம் ஒரு ஜென்மமாகவே பார்க்க வேண்டாம் காரணம் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் வெளிநாட்டு குளிர்பானத்திற்கு தடை விதித்துள்ளதால் அந்தக் குளிர்பானக் கம்பெனியே இவளை கவனித்துக் கொள்ளும்.உன்னால் நான் கெட்டேன் என்னால் நீ கெட்டேன் என்று அவர்களே அடித்துக் கொள்வார்கள்.
இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு! தமிழர் நாடு தமிழர் ஆட்சி!!!
மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு ஆப்பு என்று பேசுவதே தவறு. அரசாங்கம் சட்டம் கொண்டு வந்துவிட்டது. இனி பீட்டாவுக்கு ஆப்பு என்பதே சரி. அதனை மறைக்க அடிக்கடி இப்படி ஏதாவது சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள்!
இது ஒரு டம்மி பீசு !!
அப்படி என்றால் எந்த விலங்குகளையும் குதிரையையும் ஒட்டகத்தையும் சேர்த்து வேலை வாங்கக்கூடாது. அவைகளை அவைகளின் போக்கில் விட்டுவிட அவேண்டும்–அவைகளை கட்டிப்போடுவதும் அந்த மிருகங்களின் உரிமையை மீறுவதாகும். தமிழகத்தில் தான் மாடுகளும் காளைகளும் குடும்பத்தில் ஒருவராக இருக்கின்றன. வேறு என்ன சொல்வது?