செவிகளுக்கு சிம்மாசனம் கொடுத்த என் இனியப் படைப்பாளன் இல்லை இல்லை!

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.

இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும்.

 

raja rajaசீராக செதுக்கி வைத்த
சீர்கழியாரே
எங்கள்
மலேசிய மண்ணின்
மாந்தமிழ்ச் செல்வமே….

இசைஞானம் உனக்கு
இயல்பாகப்
பற்றிக் கொண்டதால்
நீ…..
திசை எங்கும்
பறந்துச் சென்று
பாட்டுத் தோணியை
சங்கீதக் கடலில்
பயணிக்க வைத்தாய்…!

உன் குரல் பாட்டு
கேட்டு கேட்டு
நூற்றாண்மை
கடந்து
வாழும்
அந்த
சீர்காழி வெண்கல
குரலோனை
இனி யார் பதிவிறக்கம்
செய்வாரோ……

இராஜ சபையில்
நீ…
இராஜ இராஜனானபோது…
உன் பரம்பரை
தமிழ் இரத்தம்
உன்னை
இராஜ இராஜ சோழனாக
இனித பூமிக்கு
அடையாளப் படுத்தியது….?

பொழுதுகள் தொடர்ந்து
விடிந்துக்கொண்டே
இருந்தாலும்
ஒவ்வொரு மொழுதிலும்
ஒரு ஜீவனை
அறுவடை செய்யும்
கால தேவனை
எண்ணி
எண்ணி
நிமிடங்களை
வருடங்கலாக்கிக் கொள்கிறேன்…
என்
செவிகளுக்கு
சிம்மாசனம்
கொடுத்த
என் இனியப்
படைப்பாளன்
இல்லை இல்லை
பாட்டாளன்
இராஜ இராஜ சோழனின்
இனி அய்யோ
இதுவும் கடந்துப் போகட்டும்…..!

-அலி ஜின்னா 

TAGS: