மலேசிய சோசலிசக் கட்சி, நூசா ஜெயா கிளை ஏற்பாட்டில், ‘The Forgotten Malaysian Indian History in Colonial Era’ (காலனித்துவக் காலத்தின் மறக்கப்பட்ட மலேசிய இந்தியர் வரலாறு) எனும் வரலாற்று நூல் வெளியீடும் கருத்துக்களமும் கீழ்க்கண்டவாறு நடைபெறவுள்ளது :-
நாள் : ஆகஸ்ட் 26, 2017 (சனிக்கிழமை)
நேரம் : மாலை மணி 7.30
இடம் : ஜொகூர் தமிழர் சங்கப் பணிமனை (தாமான் நேசா, ஸ்கூடாய்)
No.19A, Jalan Ronggeng 19, Taman Manickavasagam, Skudai, Johor
சமூக, வரலாற்று ஆய்வாளர் மா.ஜானகிராமன் எழுதியுள்ள 318 பக்கங்கள் கொண்ட அந்த ஆய்வு நூல், ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தாலும், அதிலுள்ள படங்களே நமக்கு நம் வரலாற்றைக் கூறிவிடும் அளவுக்குச் சிறப்பாக தொகுக்கப்பட்டுள்ளது; படங்களின் வாயிலாக, காலனித்துவக் கால இந்தியர் வரலாற்றை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது என்று ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
மேலும், அன்றைய நிகழச்சியில், ‘சிந்திய இரத்தம், மறந்தது தேசம்’ எனும் கருப்பொருளுடன் ஒரு கருத்துக்களமும் நடைபெறவுள்ளதாகவும், எழுத்தாளர் ஜானகிராமனுடன், ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தி, பி.எஸ்.எம். மத்தியச் செயலவை உறுப்பினர் தோழர் எஸ்.அருட்செல்வன் ஆகியோரும் கலந்துகொண்டு, தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள உள்ளதாகவும் ஏற்பாட்டுக் குழுவைச் சார்ந்த சா.திருமாறன் நம்மிடம் தெரிவித்தார்.
காலனித்துவக் காலத்தில் மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கிய சிக்கல்கள், நாட்டின் சுதந்திரத்திற்கு அவர்கள் ஆற்றியப் பங்கு, சுதந்திரத்திற்குப் பின் சந்தித்த சவால்கள், அரசியல் பின்னடைவுகள், இன்றைய மலேசிய இந்தியர்களின் அரசியல் நிலை, அரசியல் தாக்கம், 14-வது பொதுத் தேர்தல் என பல்வேறு விஷயங்கள் அன்று விவாதிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
நிகழ்ச்சியின் இறுதியில், கேள்வி-பதில் அங்கமும் இடம்பெறும் என்றும், பங்கேற்பாளர்கள் தங்கள் சந்தேகங்களைப் பேச்சாளர்களிடம் கேட்டு, தெளிவு பெற்றுக்கொள்ளலாம் என்றும் திருமாறன் தெரிவித்தார்.
ஹிண்ட்ராப் தேசியத் தலைவர் பொ.வேதமூர்த்தி, டாக்டர் மகாதீரைச் சந்தித்தப் பிறகு, கலந்துகொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி இது. மேலும், அண்மையில் அவர் , அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.
பி.எஸ்.எம். அருட்செல்வன் , அண்மைய காலமாக டாக்டர் மகாதீர் – பக்காத்தான் உறவு , பி.எஸ்.எம் – பக்காத்தான் உறவு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் பி.எஸ்.எம். நிலைப்பாடு என பலதரப்பட்ட தகவல்களையும் கருத்துகளையும் பலரின் ஆதரவு, கண்டனம் மற்றும் விவாதங்களுக்கு இடையே தன் முகநூலில் பதிவிட்டு வருகிறார்.
ஆக, இவர்கள் இருவரையும் நேரிடையாக சந்தித்து, கருத்து பறிமாற பலர் ஆர்வம் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இலவச நிகழ்ச்சியில் சுற்றுவட்டார மக்கள், குறிப்பாக, சமூக-அரசியல்-வரலாற்று ஆர்வலர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமென ஏற்பாட்டாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
மேலதிகத் தொடர்புக்கு :- 013 7586881 / 018 9884250
நல்ல நிகழ்ச்சி , இந்தியர்கள் அனைவரும் கலந்துகொள்ளவும் .
தாய் மொழியிலும் அந்த புத்தகம் வெளியிட முயறசி செய்யுங்கள்.அந்த புத்தகத்தில் சொல்லப்படட அவலங்களுக்கு ஆளானவர்கள் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள்தான்.வெள்ளைக்காரர்கள் அல்ல.
இந்தோனேசிய வந்தேறிகள் மலாய்க்காரனான பிறகு காலனித்துவ ஆட்சியை எதிர்த்து விடுதலைக்கு போராடிய வீரமிகு கம்யூனிஸ்ட் வீரர்களையே நாட்டின் துரோகிகளாக ஆக்கி விட்டார்கள்.
இப்போ போய் காலனித்துவக் காலத்தில் மலேசிய இந்தியர்கள் நாட்டின் சுதந்திரத்திற்கு ஆற்றிய பங்கு பற்றி பேசினால் இந்தோனேசிய வந்தேறி மலாய்க்காரர்கள் ஏற்று கொள்வார்களா ?
இருவரின் கருத்துக்களுமே தவறு. ஆங்கிலத்தில் எழுதினால் அது ஆட்சியாளனுக்கும் போய் சேரும். அவசியம் தமிழிலும் எழுதப்பட வேண்டும். வந்தேறிகளைப் பற்றி கவலை வேண்டாம். நமது பள்ளிப் பாடப் புத்தகங்களில் டாக்டர் மகாதீர் மலாய்க்காரர் என்று மாஞ்சி மாஞ்சி எழுதினார்கள். இப்போது சரித்திரம் உண்மையைப் பேசுகிறது. ஒரு வேளை அடுத்து ஆண்டு, பாடப் புத்தகங்களில், அவர் கேரளாவிலிருந்து வந்த இந்தியர் என்று வரலாம்! சரித்திரம் பதிவு செய்யப்பட வேண்டும்.
தமிழன் காடழிந்தான் ! ரோடு போட்டான் ! மரம் சீவினான் ! பழம் வேண்டினான் ! என்ற இந்த பஞ்ச பாட்டை எத்தனை காளம் தான் பாட போகிறார்கள் இந்த இந்திய சமுதாயத்தின் நவீன சமுதாய சிற்பிகள் ! இவர்களிடம் அவலத்தில் கிடக்கும் தமிழனை தூக்கி விட எதாவது உருப்படியான திட்டங்கள் உண்டா ! கேட்ட கோடிகள் கிடைக்க வில்லை என்றவுடன் பதவியை துறந்த தியாகி ! எப்படியாவது எதாவது ஒரு சட்டமன்றத்தை கைப்பற்ற வேண்டும் என்று பாடு படும் ஒரு புரட்சியாளன் ! கேட்ட தொகை கிடைத்திருந்தால் தியாகி வெளிநாட்டில் செட்டெல் ஆகி இருப்பார் ! புரட்சி யாளர் கடந்த தேர்தலில் சட்ட மன்றம் கிடைத்திருந்தால் அமைதியாகி இருப்பார் ! பழங்கதை பேசி இந்த தமிழனை முட்டாள் ஆக்க ஒரு கூட்டம் காத்திருக்கும் போது ! தமிழனும் ஆங்கிலத்தில் எழுதிய நூலுக்கு வாரி வழங்கி அடிமைத்தனத்திலிருந்து இன்னும் மீளவில்லை என்று பறை சாற்றுவோம் ! இந்த நூலை கோமென் வெல்த் திற்கு ( COMMONWEALTH ) அனுப்பி எதாவது தொகை கிடைக்குமா என்று வேதவை முயற்சி செய்ய சொல்லுங்கள் ! indraf வளி தமிழனை இப்படித்தானே எமட்ரினார்கள் ஒரு தமிழனுக்கு ஒரு மில்லியன் கிடைக்கும் என்று ! நாங்களும் நாக்கை தொங்க போட்டு தலைநகரில் நடு ரோட்டில் நின்றோம் ! இலவச குளியல் கிடைத்தது BOMBA தண்ணீரில் !!
‘The Hidden Malaysian Indian History after Colonial Era’ (காலனித்துவக் காலத்திற்குப் பின் மறைக்கப்பட்ட மலேசிய இந்தியர் வரலாறு)என்று ஒரு நூல் வருமானால் அது காலத்தையும் கடந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.
RAHIM A.S.S.சொல்வது முற்றிலும் உண்மை.இந்நாட்டின் விடுதலைக்காக போராடியவர்கள், கம்யூனிஸ்டுகள். கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்புகளை எதிர்கொள்ள முடியாமல், திணறிய வெள்ளைக்காரர்கள், துங்கு அப்துல் ரகுமானை அழைத்து, நாட்டிற்கு சுதந்திரம் கொடுத்துவிடுவதாகவும், ஆனால் கம்யூனிஸ்டுகளை மட்டும் ஆட்சியில் சேர்த்து கொள்ள வேண்டாம், அவர்கள் எங்களது நிறைய பேர்களை கொன்று விட்டார்கள் என்றும் கூறினார்கள். இவ்விஷயத்தை தெரியப்படுத்த, துங்கு, கம்னியூஸ்டு தலைவர் சிம் பெங்கை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். பேச்சுவார்த்தை 1955 ல் பாலிங் நகரில் நடைப்பெற்றது. பேச்சுவார்த்தையில், வெள்ளைக்காரன் சொன்னவற்றை துங்கு, சிம் பெங்கிடம் சொன்னார். அதற்கு சிம் பெங், ‘பிரச்சினையில்லை, அவனை(வெள்ளையனை) நான் பார்த்துக் கொள்கிறேன்’ எனக் கூறி புறப்பட்டு விட்டார். இதனைத்தான் ‘Baling Talk’ என சொல்வதுண்டு. இது சரித்திரம். என் தகப்பனார், அன்றைய கம்யூனிச சித்தாந்தத்தை கடைப்பிடித்தவர் என்பதால், அவர் கூறியது இது. ஆக, இந்நாட்டிற்கு கம்யூநீஸ்டுகளால்தான் நாம் சுதந்திரம் பெற்றோம் என்பதே உண்மை. நாம் சொன்னால் எவனும் கேட்கமாட்டான்.என்றாவது ஒருநாள், மகாதீர் வாயிலிருந்து இவ்விஷயம் வெளிவரத்தான் போகிறது.
நம் காலத்தில் வெளியிடப்பட்டு பள்ளிகளில் படித்து வந்த சரித்திட புத்தகத்தில் நம் நாட்டில் நடந்த உண்மை சம்பவங்கள் , தலைவர்கள் , உலக சம்பவங்கள் , உலக தலைவர்களில் விபரங்கள் , கண்டுபிடிப்புகள் அனைத்தும் மறுக்கப்பட்டு , அளிக்கப்பட்டு புதிய சரித்திர புத்தகம் ஒன்றை உருவாக்கி உள்ளூரில் உள்ள ஒரு இனம் மட்டும் நாட்டுக்காக உழைத்ததாகவும் , சேவைசெய்த்ததாகவும் , நாடு சுதந்திரம் பெறுவதற்கு துணையாக இருந்ததாகவும் குறிக்கப்பெற்று , வெளியிடப்பட்டு அனைத்து உயர்நிலை பள்ளிகளிலும் கொடுக்கப்பட்டு , அதனை படித்து எஸ்.பி.எம் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே படிவம் ஐந்தில் முழு தேர்ச்சி பெற்றதாக சூழ்நிலையை உருவாக்கியவர் முன்னாள் கல்வி அமைச்சர் திரு முகுடின் அவர்கள் . அவரின் அடா செயலின் காரணமாகவே தற்போது அவரின் நிலைமை கேள்வி குறிக்கு இலக்காகி உள்ளார் கடவுளில் தீர்ப்பால். நாம் நம் இனத்தின் குடிமகன் என்ற பேரில் நமக்கு உள்ள சலுகைகளை நாம் பெற வேண்டும் , அதுவே நமது நோக்கமாக இருந்திட வேண்டும் . நமக்குள் உள்ள வன்முறையை விட்டொழித்து , நாம் ஒன்று பட்டு , நம் இனம் காப்போம் , நம் மொழியினை வளர்ப்போம் .
மலேயா விடுதலைக்கு முன் நிகழ்ந்தது சுதந்திர போர்
கம்யூனிஸ்ட் VS ஆங்கிலேயர்
மலேயா விடுதலைக்கு பின் நிகழ்ந்தது சகோதரத்துவ போர்
ஆங்கிலேயர்+அம்னோ+மஇகா+மசிச VS கம்யூனிஸ்ட்
இப்போது சரித்திரத்தில் சகோதரத்துவ போரைதான் சுதந்திர போர் என திரித்து கூறப்படுகிறது.
amma
அம்மா
தலைநகர் லிட்டல் இந்தியா ஜலன் துன் சம்பந்தன் சாலையில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன் ஒரு 30 வயது மதிக்க தக்க ஒரு இந்திய இளைஜனை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது ! செய்யும் தொழிலை பட்ட்றி பேசிக்கொண்டிருந்து நாட்டு நடப்பை பட்றி பேச்சு எழுந்தது ! இளைஜன் கூறினான் , எங்கள் பேச்சும் ஆங்கிலத்தில் தான் அவனுக்கு அவ்வளவாக தமிழ் தெரியாதாம் ! அங்கிள் லாஸ்ட் டைம் திஸ் பிளேஸ் கோல் பிரிக் பீல்ட் ! நவ் திஸ் ஸ்டுப்பிட் கெவர்மெண்ட் சேன்ஜ் டு மேலேய் பிளேவ்ஸ் நேம் !! துன் சம்பந்தன் !! முன்பு பிரிக் பீல்ட் என்று இருந்த பெயரை இந்த முட்டாள் அரசாங்கம் மலைக்காரனின் பெயரில் மாத்தி விட்டதாம் ! அவனின் அறியாமையை நினைத்து அவனிடம் உன் தந்தை எங்கு வேலை செய்கிறார் என்றேன் ! ஹி இஸ் நோ மோர் வித் ஆஸ் ! ஹி வாஸ் வெர்க்கிங் இந்த தமிழ் பேப்பர் என்றான் ! எனக்கு தூக்கி வாரி போட்டு ரத்தம் சூடேறியது ! அரசாங்கம் முட்டாள் இல்லை நாம் தமிழர்கள் இன்னும் முட்டாளாக இருக்கிறோம் ! அது மலாய் பெயரில்லை நமது இந்தியர்களின் முன்னாள் மந்திரியின் பெயர் என்று விளக்கம் சொன்னேன் ! காதில் வாங்கி கொண்டான் ! ஆனால் விளங்கியதா ? தெரியாது ! தமிழனே இந்த நாட்டில் பல துறைகளில் சரித்திரம் படைத்த இந்தியர்களை குறிப்பாக தமிழர்களை பட்றி அறிந்து கொள்ள வில்லை காலனித்துவத்தை பட்றி அறிந்து கொண்டு என்ன சாதிக்கபோகிரோம் ! இந்த நாட்டில் தமிழன் ஏற்படுத்திய சாதனைகளை தமிழனுக்கு போதிக்க கூடாது என்று அரசாங்கம் தடுத்ததா ? ஒரு சிலரின் கால்ப் உணர்ச்சி ! தமிழனே தமிழனை துப்பும் நிலை ! இதை முதலில் மாட்ற முயற்சி செய்யுங்கள் ! பிறகு சரித்திரத்தையும் தரித்திரத்தையும் பட்றி பேசுவோம் !!
திரு s.maniam, தாங்கள் இந்த நாட்டில் தான் வசிக்கிறீர்களா? அல்லது புலம் பெயர்ந்து விட்டீர்களா?
நடராஜ தங்கரதம். எந்த அளவுக்கு முக்கியத்துவம்.அதுதான் தமிழரின் முன்னுரிமை முன்னேற்றம்.
இண்டியன் என ஒரு இனமே அல்ல ! தமிழர்கள் அதிகமானவர்கள் இங்கு வந்தனர்.தமிழர்கள் வரலாறு ஜானகி ராமனுக்கு தெளிவில்லை போலும் ? இந்தியா வரலாற்றிலும் நாடாளுமன்ற அமைப்பிலும் இந்தியன் என்ற சொல் இல்லை …சிட்டிசன் of India என்றுதான் உண்டு. தமிழகத்தமிழர்கள் வரலாற்றுப் பிழையில் ‘காலனித்துவக் காலத்தின் மறக்கப்பட்ட மலேசிய இந்தியர் வரலாறு’ நூல் வெளியீடும் கருத்துக்களமும் ஒரு வணிக மோப்பம் ? தமிழேண்டா மண்ணாங்கட்டிகளா~~!