இஸ்மாயில் சப்ரி மீது 7 மணி நேர விசாரணை

முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று தனது முன்னாள் மூத்த அதிகாரிகள் நான்கு பேர் சம்பந்தப்பட்ட விசாரணையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (MACC)  ஏழு மணி நேரம் விசாரிக்கப்பட்டார். இன்று காலை 9.52 மணிக்கு இங்குள்ள MACC தலைமையகத்திற்கு வந்து, மாலை 4.30 மணிக்கு சென்றார்.…

மலேசியா யாருக்குச் சொந்தம்?

கி.சீலதாஸ் - மலேசியா யாருக்குச் சொந்தம்? நல்ல கேள்வி, கருத்தாழம் மிகுந்த கேள்வி. இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடும்போது வரலாற்று உண்மைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜப்பானியர் ஆட்சி முடிவுற்றதும் மலாயன் யூனியன் என்ற அரசமைப்பைப் பிரிட்டன் அறிமுகப்படுத்தியது. இந்த அமைப்பை எல்லா மலாய் சுல்தான்களும் ஏற்றுக்கொண்டு அதன்…

சட்டமும், மக்களும், அமலாக்கத்துறையின் பொறுப்பும்

கி. சீலதாஸ் - சட்டம் எதற்காக இயற்றப்படுகிறது? இயற்றப்படுவதின் நோக்கம் என்ன? சமுதாயத்தில் அமைதி வேண்டும், சமுதாயத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். சமுதாயத்தில் பாதுகாப்பு நிலவ வேண்டும். சமுதாயத்தில் குழப்பங்கள், சச்சரவுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பல காரணங்களை உள்ளடக்கியதுதான் சட்டம் இயற்றப்படுவதற்கான…

திரைக்கு பின்னால்தான்  ஜ.செ.க.யின் இந்தியத் தலைவர்கள்

இராகவன் கருப்பையா - இன்னும் சில நாள்களில் நடைபெறவுள்ள ஜ.செ.க.வின் மத்திய செயற்குழுவிற்கான தேர்தல், என்றும் இல்லாத அளவுக்கு இவ்வாண்டு மிகவும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்கட்சியின் மத்திய செயற்குழுவில் உள்ள 30 இடங்களுக்கு மொத்தம் 70 பேர்கள் போட்டியிடவிருக்கின்றனர். அவர்களில், கணபதிராவ், கோபிந் சிங், நேத்தாஜி ராயர்,…

ஒரு தெருநாய் மீது வெந்நீர் ஊற்றிய கடை மேலாளர் பணிநீக்கம்

ஒரு தெருநாய் மீது வெந்நீர் ஊற்றும் வீடியோ வைரலானதை அடுத்து, ஒரு கே கே மார்ட் அதன் மேலாளர் ஒருவரின் சேவையை நீக்கியுள்ளது. ஈப்போவின் மெங்லெம்புவில் உள்ள ஜாலான் பெசாரில் உள்ள கே.கே. சூப்பர் மார்ட்டில் வெள்ளிக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்ததாக விலங்கு ஆர்வலர் சித்தி பௌசியா…

ஸம்ரியை தண்டிக்க வேண்டும் என்பது குற்றவியலா அல்லது அரசியலா?  

இராகவன் கருப்பையா -- கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்தாற்போல் இந்து மதத்தை இழிவுபடுத்தி வரும் ஒரு முன்னாள் இந்துவான ஸம்ரி வினோத் என்றொரு இஸ்லாமிய மத போதகர் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தனது சீண்டலைத் தொடங்கி சர்ச்சையை கிளப்பியுள்ளார். இம்முறை முன்னாள் மனிதவள அமைச்சர் சரவணனும் முன்னாள்  சட்டத்துறை…

சமயத்தை இழிவுபடுத்தினால் அதிகபட்ச தண்டனை வேண்டும்

இராகவன் கருப்பையா- அண்மையில் சிலாங்கூர், செப்பாங் அருகில் இந்தியர்களை இழிவுபடுத்தும் வகையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் தொடர்பான சர்ச்சை முற்றாக ஓய்வதற்குள் மற்றொரு ஈனச் செயல் நம்மை ஈட்டி போல் தாக்கியுள்ளது வேதனைக்குறியது. அதுவும், இந்த அறிவிலித்தனத்தை அரங்கேற்றியது 'எரா எஃப் எம்' எனப்படும் ஒரு வாணொலி நிலையத்தைச் சேர்ந்தவர்கள்…

மலேசியாகினி நிருபர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்

மலேசியாகினி நிருபர் நந்த குமார் நான்கு நாட்கள் தடுப்புக்காவலுக்குப் பிறகு இன்று மதியம் விடுவிக்கப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார். புத்ராஜெயா எம்ஏசிசி தலைமையகத்திலிருந்து பிற்பகல் 3 மணியளவில் அவர் நல்ல நிலையில் வெளியே வந்தார். நந்தாவின் மனைவியும் மலேசியாகினி நிர்வாக…

ஊழல் விசாரணையில் முன்னாள் பிரதமர் சப்ரி

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) புதன்கிழமை முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை மேலும் விசாரணைக்காக அழைக்கும் என்று அதன் தலைமை ஆணையர் அசாம் பாக்கி கூறினார். ஊழல் தடுப்பு அமைப்பின் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அசாம், இஸ்மாயில் நடந்து வரும் விசாரணையில் சாட்சியாக…

சேம நிதி வாரியம் (EPF)6.3 % ஈவு தொகை வழங்கும்

கடந்த ஆண்டின் வருமானத்தின் பிரதிபலுப்பாக  6.3 சதவிகித ஈவுத்தொகையை அறிவித்த சேம நிதி வாரியம் ரிம 732.4 கோடியை அதன் சந்தா காரர்களுக்கு இந்த ஆண்டு செலுத்தும்.  அதோடு ஷரியா சேமிப்புகளுக்கும் 6.3 சதவீத ஈவுத்தொகை விகிதத்தை அறிவித்துள்ளது. இது முறையே RM63.05 பில்லியன் மற்றும் RM10.19 பில்லியன்…

ரிம20,000 லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும்  மலேசியகிணி பத்திரிகையாளர் கைது

மலேசியாகினி பத்திரிகையாளர் பி. நந்தகுமார் நேற்று இரவு புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கையாளும் ஒரு முகவரிடமிருந்து லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக MACC தலைமை ஆணையர் அசாம் பாக்கி தெரிவித்தார். மலேசியாகினியிடம் பேசிய அவர், மலேசியாகினியின் சமீபத்திய புலம்பெயர்ந்தோர் கடத்தல் கும்பலை அம்பலப்படுத்திய கட்டுரையின் எதிரொலியாக  இந்த…

ஆட்டிறைச்சிக்கு ஆசைப்பட்டு அவமதிபுக்கு ஆளாகலாமா?

இராகவன் கருப்பையா - இந்நாட்டில் பல சந்தர்ப்பங்களில் நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம் என்பதுதான் உண்மை. அத்தகையத் தருணங்களில் தான் நாம் எப்படி இந்த ஏளனமான நிலைக்கு வந்தோம் என்ற வினா நமது சுய மரியாதையை உரசி பதம் பார்க்கிறது. பிற இனத்தவர் நம்மை தாழ்த்தி எடைபோடுவதற்கு குண்டர் கும்பல்,…

உரிமை கட்சியின் இந்திய அரசியல் பிரதிநிதித்துவ போராட்டம் – இராமசாமி 

ஹராப்பான்- பாரிசான் கூட்டணியின் கீழ் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மதானி அரசாங்கம், நிலைமையை சமாளிக்கும் போது சீர்திருத்தத்தை தொடர்ந்து பேசி வருகிறது. ஓரங்கட்டப்பட்ட இந்திய சமூகத்திற்கு மிகவும் தேவையான அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்க முற்படுகின்ற உரிமை அல்லது மலேசிய  ஐக்கிய உரிமை கட்சிக்கு பதிவு செய்ய மறுத்ததை…

12 பிரம்படிகள் என்னை கொன்றுவிடும் – தண்டனையை ரத்து செய்யுங்கள்

கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஜே. சிவச்சந்திரனின், வயது 36, தண்டனையான 12 பிரம்படிகளை ரத்து செய்யக் கோருகிறார். "12 பிரம்படிகள் தன்னை கொன்றுவிடும் என்கிறார். அதை மறுஆய்ய  கோரிய மனுவை அடுத்த வாரம் திங்கட்கிழமை நீதிமன்றம் விசாரிக்கும். ஆவணங்களின்படி, கடந்த ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி…

சுல்பர்ஹானின் மரணம்: ஆறு UPNM மாணவர்கள் தூக்கு தண்டனையிலிருந்து  தப்பினர்

2017 ஆம் ஆண்டு கடற்படை கேடட் அதிகாரி சுல்பர்ஹான் ஒஸ்மான் சுல்கர்னைன் மரணம் தொடர்பாக, ஆறு முன்னாள் மலேசிய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்களின் தலைகள் தூக்கு கயிற்றிலிருந்து தப்பின. கொலைக்கான மரண தண்டனையை ரத்து செய்து, கொலைக்கு சமமற்ற குற்றத்திற்காக 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வேண்டும்…

 பதிவு உரிமைக்கு போராடும் ‘உரிமை’ கட்சி

கடந்த ஆண்டு பதிவு செய்வதற்கான உரிமைக் கட்சியின் விண்ணப்பத்தை நிராகரித்த அரசாங்கத்தின் முடிவை மறுஆய்வு செய்யக் கோரும் இராமசாமியின் மனுவுக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. உரிமாயின் பதிவுக்கான விண்ணப்பத்தை சங்கங்களின் பதிவாளர் (RoS) நிராகரித்ததற்கான காரணத்தை இப்போது பிரமாணப் பத்திரத்தில் நியாயப்படுத்த வேண்டியிருக்கும் என்றும், அதன்…

‘குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஒட்டும்’ கல்வியின் நிலை

இராகவன் கருப்பையா-  நம் நாட்டில் பள்ளிக்கூடங்கள் வழக்கமாக 2 அல்லது 3 மாடிக் கட்டிடங்களில்தான் இருக்கும். ஒரு சில இடங்களில் அதற்கு மேலும் உள்ளன. ஆனால் தலைநகரில், புதியத் திட்டங்களின் வழி, பள்ளிக்கூடக் கட்டிடங்களை 17 மாடிகள் வரை உயர்த்துவதற்கு தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கோலாலம்பூரின் நிலப்பரப்பை கருத்தில் கொண்டு,…

கல்வித் தரத்தை உயர்த்துங்கள் கட்டிடத்தின் உயரத்தை அல்ல!

இராகவன் கருப்பையா- நம் நாட்டில் பள்ளிக்கூடங்கள் வழக்கமாக 2 அல்லது 3 மாடிக் கட்டிடங்களில்தான் இருக்கும். ஒரு சில இடங்களில் அதற்கு மேலும் உள்ளன. ஆனால் தலைநகரில், புதியத் திட்டங்களின் வழி, பள்ளிக்கூடக் கட்டிடங்களை 17 மாடிகள் வரை உயர்த்துவதற்கு தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கோலாலம்பூரின் நிலப்பரப்பை கருத்தில் கொண்டு, கூட்டரசுப்…

நஜிப் பலிவாங்கப்பட்டாரா, விடுவிக்க அன்வாருக்கு சவால் – லத்தீபா

முன்னாள் எம்ஏசிசி தலைமை ஆணையர் லத்தீஃபா கோயா, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை சிறையில் இருந்து விடுவிக்குமாறு அன்வார் இப்ராஹிமுக்கு சவால் விட்டார். 2018 ஆம் ஆண்டில் பல உயர்மட்ட வழக்குகள் "அவசரமாக" நடத்தப்பட்டதாகவும் "விஷமத்தனம்’ம் மற்றும் பகைமையால்" கறைபட்டதாகவும் கூறப்பட்ட   அன்வாரின் கூற்றுகளின் அடிப்படையில் அவர் இந்த…

ஜாகிர் நாயக் தடை நீக்கத்தை கடுமையாக சாடுகிறார் முன்னாள் அமைச்சர்…

2019 ஆம் ஆண்டு பொது நிகழ்வுகளில் சர்ச்சைக்குரிய போதகர் பேசியதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதற்காக முன்னாள்  அமைச்சர் பாரு பியான் அரசாங்கத்தை கடுமையாக சாடினார். டாக்டர் ஜாகிர் நாயக் மன்னிப்பு கேட்டு, எரிச்சலூட்டும் கருத்துக்களை மீண்டும் கூறமாட்டேன் என்று உறுதியளித்தால் மட்டுமே தடை நீக்கப்பட வேண்டும் என்று பாக்கெலான்…

கிளினிக்குகளில் மருந்தின் விலை – யார் நிர்ணயம் செய்வது?

கிளினிகுகளில் மருந்துக்களின்  விலையை காட்சி படுத்த வேண்டும் என்ற அரசின் முடிவை தாமதப்படுத்த வேண்டும் என்று மருத்திவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டு தொடங்கி, தனியார் சுகாதார வசதிகள் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் தன்னிச்சையான விலை உயர்வைத் தடுக்கவும் மருந்து விலைகளைக் காட்சிப்படுத்த வேண்டும். தனியார் பொது மருத்துவர்களைப்…

மதமாற்றத்திற்கு எதிராக விழிப்புணர்வு அவசியம்

இராகவன் கருப்பையா - சர்ச்சைக்குரிய அந்நிய மதபோதகரான ஸாக்கிர் நாய்க் தொடர்பாக உள்துறையமைச்சர் சைஃபுடின் செய்த ஒரு அறிவிப்பு நமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கிளந்தான், கோத்த பாருவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்தியர்களையும் சீனர்களையும் தரம் தாழ்த்திப் பேசிய ஸாக்கிருக்கு எதிராக…

ஜாகிர் நாயக்கிற்கு இனிமேல் தடை இல்லை என்கிறார் – அமைச்சர்

சர்ச்சைக்குரிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கின் பேச்சு 2019 ஆம் ஆண்டு கோத்தா பாருவில் நடந்த ஒரு உரையின் போது மலேசியாவில் இந்துக்கள் மற்றும் சீனர்களைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதைத் தொடர்ந்து, அவர் மலேசியாவில் பேசுவதற்கு முன்னர் தடை விதிக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய போதகர் டாக்டர் ஜாகிர்…