இவ்வருடம் தேர்தலா?  ​வெள்ளம் மிகவும் மோசமாக இருக்கும், நிபுணர்கள் எச்சரிக்கை

பருவநிலை மாற்ற நிபுணர் ஒருவர், பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு 15வது பொதுத் தேர்தலை (GE15) நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார், ஆண்டு இறுதியில் மழைக்காலத்தின் வெள்ளப்பெருக்கு நிலைமை 2021 ஐ விட மோசமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளார். மலேசியா பல்கலைக்கழக புத்ரா விஞ்ஞானி ஹலிசா அப்துல் ரஹ்மான் மலேசியாகினியிடம்…

அரசு அறிவித்த உதவித்தொகை உருப்படியாகச் சென்று சேருமா?

இராகவன் கருப்பையா - இந்தியச் சமூகத்தின் மேம்பாட்டுக்குப் பல்வேறு முன்னெடுப்புகளை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது எனப் பிரதமர் சப்ரி யாக்கொப் கடந்த வாரம் செய்த அறிவிப்பு நம்மில் எத்தனை பேரை உற்சாகப்படுத்தியிருக்கும் என்பது ஒரு கேள்விக்குறி. வறுமையில் வாடுவோரின் இன்னல்களைத் துடைத்தொழிப்பதற்கும் இதர வளர்ச்சித் திட்டங்களுக்கும் மித்ராவின் வழி ஒதுக்கப்பட்டுள்ள 100…

நஜிப் வங்கி கணக்கில் ரிம 208 கோடி இருந்தது –…

முன்னாள் பிரதமர் நஜிப் கடந்த 2013 இல் சுமார் 208 கோடி ரிங்கிட் மலேசிய பணத்தை தனது வங்கி கணக்கில் பெற்றதாக ஒரு வங்கியின் நிர்வாகி  இன்று நீதிமன்றத்தில் கூறினார். தற்போது நடைபெறும்  1எம்டிபி வழக்கு விசாரணையின் போது கோலாலம்பூர் நீதிமன்றத்தில் சாட்சி அளித்த எம்இஸ்லாமிக் வங்கி நிர்வாகி…

நாடாளுமன்றத்தைகலைக்க நல்ல நேரம் இன்னும் வரவில்லை – சப்ரி

15வது பொதுத் தேர்தல் (GE15) எப்போது அறிவிக்கப்படும் என்ற ஊகங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், நாடாளுமன்றத்தை எப்போது கலைப்பது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். செப்டம்பர் 30 அன்று அம்னோவின் உயர்மட்டத் தலைமையின் விவாதத்தின் முடிவைப் பொறுத்தே, பார்லிமென்ட் கலைப்பு…

ஊழலை விரட்டுவோம், நியாயப்படுதுவதை நிறுத்துவோம் – பேராக் சுல்தான்

"ஊழல்" மற்றும் "போலித்தனம்" ஆகிய சொற்களை மலாய் அரசியலுடன் இணைத்து தனது புத்தகத்திற்கு பெயரிடும் ஒரு ஆசிரியரின் நடவடிக்கை தைரியமானது என்று பேராக் சுல்தான் நஸ்ரின் முய்சுதீன் ஷா கூறுகிறார். பேராக் ஆட்சியாளர் மலாய் அரசியலில் ஊழல் மற்றும் போலித்தனம் என்று தவறுகளை அம்பலப்படுத்த முயலும் போது ஒருவரின்…

அன்வார்: சகிப்புத்தன்மையற்ற, அரசியல் உள்நோக்கம் கொண்ட infidel  சொற்களை நிராகரிக்கவும்

மற்றொருவரின் நம்பிக்கையை யாரும் கேள்வி கேட்கும் நிலையில் இருக்கக்கூடாது என்ற பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், அரசியல் போட்டியாளர்களை "காஃபிர்கள்" அல்லது "Infidel” நம்பிக்கையற்றவர்கள் என்று முத்திரை குத்தும் தொடர்ச்சியான கலாச்சாரத்தை வன்மையாக கண்டித்தார். (“Infidel” என்றால் அவிசுவாசி, நம்பிக்கையற்றவர், புறமதத்தவர்,  நாத்திகர், விசுவாசதுரோகம், சுதந்திர சிந்தனையாளர், சுதந்திரவாதி,…

திருமண விருந்தும் – தர்மசங்கடமும் – இராகவன் கருப்பையா

நம் குடும்பத்தில் ஒரு திருமண வைபவம் நடைபெறும் போது, அந்நிகழ்ச்சிக்கு நிறைய பேர் வர வேண்டும், ஆரவாரத்துடன் மகிழ்ச்சி ததும்ப அந்நிகழ்வு அமைய வேண்டும் என்று நாம் எதிர் பார்ப்பது இயல்பான ஒன்றுதான். முன்பெல்லாம் உறவினர்கள், நண்பர்கள் ஆகிய எல்லாருடைய இல்லங்களையும் அதிகச் சிரத்தை எடுத்துத் தேடிச் சென்று…

முஹைடின் கருத்து நாட்டை நாசப்படுத்தும் – ஜஹிட் ஹமிடி

முன்னாள் பிரதமரான முஹிடினின் நாட்டை நாசப்படுத்தும் வேலையில் ஈடுபட்டு உள்ளார் என்று குற்றம்சாட்டியுள்ளார் தேசிய முன்னணியின் தலைவர் ஜஹிட் ஹமிடி. முஹிடின் கருத்துக்கள் பிரதமரின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக அமையும் என்றும் கடுமையாக சாடியுள்ளார். ”இதுபோல் அரசாங்கத்தை குறை கூறினார் நாட்டின் மீது நம்பிக்கை வைத்து முதலீட்டாளர்கள் எப்படி நாட்டுக்குள்…

15- வது பொதுத் தேர்தல் எப்போது?

அமைச்சரவை 15வது பொதுத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று அறியப்படுகின்றது. அம்னோ இந்த வருடத்தில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று நெருக்குதல் கொடுத்து வரும் வேலையில் பெர்சத்து மற்றும் பாஸ் கட்சியில் இருக்கும் அமைச்சர்கள் பொதுத் தேர்தலை அடுத்த வருடத்திற்கு…

நஜிப் உடல்நிலை பற்றி சுகாதார அமைச்சர் பகிர இயலாது

நீதிமன்ற உத்தரவு இல்லாமல் நஜிப் அவர்களின் உடல்நிலை சார்பான விடயங்களை சுகாதார அமைச்சர் பகிர இயலாது. இது சார்பாக இன்று கருத்து சொன்ன சுகாதார அமைச்சின் டைரக்டர் ஜெனரல் டாக்டர் ஹிஷாம் அப்துல்லா, இனிமேல் நஜிப் சார்பான தகவல்களை பகிர இயலாது என்று அறிவித்தார். கடந்த காலங்களில் அவர்களின்…

மலேசியாவின் எதிர்காலம் –  கி.சீலதாஸ்

அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, 31.8.1957ஆம் நாள், அப்போது மலாயாவில் வாழ்ந்த எல்லா இன மக்களும் இன, சமய, மொழி, கலாச்சார வேறுபாடுகளைக் களைந்து ஏற்றத்தாழ்வு மனப்பான்மைக்கு இடம் தராது தோளோடு தோள் நின்று, கூட்டொருமையோடு சூழ்ச்சியான முறைகளால் பிற நாடுகளை ஆக்கிரமித்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, மக்களை அடக்கி,…

சாமானியரைக் கவனித்த சாமிவேலு, சமுதாயத்தை எவ்வாறு கவனித்தார்!

இராகவன் கருப்பையா - ம.இ.கா.வின் முன்னாள் தலைவர் மறைந்த சாமிவேலு அக்கட்சியின் கடந்த காலத் தலைவர்களிலேயே தனித்துவம் வாய்ந்த ஒருவர் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. தனது 31 ஆண்டுகாலத் தலைமைத்துவத்தில் நிறைய பேருக்குத் தனிப்பட்ட முறையில் உதவிகளை வாரி வழங்கியுள்ளார் என்பதும் எல்லாருக்கும் தெரியும். ஆனால் அவருடைய…

ஹிண்ட்ராப் பேரணி உருவாக்கமும், சாமிவேலுவின் சரிவும்

இராகவன் கருப்பையா- கடந்த 2007ஆம் வருஷம் இந்நாட்டு இந்தியர்களின் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒரு ஆண்டாகும். ஏனெனில் அவ்வாண்டின் பிற்பகுதியில் நிகழ்ந்த இரு சம்பவங்கள் தெரிந்தோ தெரியாமலோ நம் சமூகத்தைச் சேர்ந்த பலருடைய வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றியமைத்தது. தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 3 நாள்களே இருந்த வேளையில், சிலாங்கூரின் கிளேங் மாவட்டத்தில் உள்ள பாடாங் ஜாவா பகுதியில் அமைந்திருந்த மாரியம்மன் ஆலயம்…

ஹிண்ட்ராப் கணேசனின் நினைவஞ்சலி

கடந்த 11.9.2022-இல் காலமான ஹிண்ட்ராப் இயக்கத்தில்  ஆலோசகராக இருந்த கணேசன் நாராயணனின்  கரும கிரியை, வருகின்ற 25.9,2022 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 7.00 மணியளவில் நடைபெறும். அன்னாரின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டவர்களை நினைவு கூறும் குடும்பத்தினர், இந்த அழைப்பையும் அன்னாரின் நினைவஞ்சலியாக ஏற்று இந்த ஆத்ம சாந்தி பிரார்த்தனையில் கலந்து கொள்ளுமாறு உற்றார் உறவினர் மற்றும் அவருடன் கலத்தில்…

நஜீப்பை மாமன்னர் மன்னிப்பாரா? – கி.சீலதாஸ்

நஜீப் ரசாக் பிரதமராக இருந்த காலத்தில் நிதி அமைச்சர் பதவியையும் தன் வசமே வைத்துக் கொண்டார். அச்சமயம் அவர் நம்பிக்கை மோசடி செய்தார் என்று உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு பன்னிரண்டு ஆண்டு காலம் சிறைத்தண்டனையும், இருநூற்றுப்பத்து மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது. அவரின்…

இரும்புக் கரங்களில் ம.இ.கா: சாமிவேலு ஒரு சகாப்தம்தான்

இராகவன் கருப்பையா - தனது 86ஆவது வயதில் இயற்கை எய்திய முன்னால் ம.இ.கா. தலைவர் சாமிவேலு நம் சமுதாய மேம்பாட்டிற்குச் செய்த, செய்யாத சேவைகளை விட 31 ஆண்டுகளாக இரும்புக் கரங்களைக் கொண்டு எவ்வாறு கட்சியை வழிநடத்தினார் மற்றும் நாடாளுமன்றத்தில் எப்படிப் பேசுவார்  என்பதை வைத்தே பலரும் அவரை…

நடாளுமன்றதிற்கு வராமல் ‘கட்டடிச்ச’ எம்.பி-க்கள்

பாகோ எம்பி முகைதின் யாசின் கடந்த ஆண்டும் மற்றும் இன்று வரையிலான வருடத்தில் மிக மோசமான நேர்வரலை கொண்டுள்ளார். இது MyMP என்ற இயக்கத்தின் முன்முயற்சியின் பயனாக நேற்று மோசமான 15 " எம்.பி.க்களின் பட்டியலை வெளியிட்டது. "பட்டியலில் முதலாவது இடத்தில் நமது முன்னாள் பிரதமர் முகைதின் யாசின்…

“அம்மா உண்மையில் நஜிப்பின் குரலையும் சிரிப்பையும் மிஸ்-பன்றாங்க: முன்னாள் பிரதமரின்…

தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மகள், தனது தாயின்  சோகத்தைப் படம்பிடிக்க முயற்சிக்கும் வகையில், தனது தாய் ரோஸ்மா மன்சோர் பிரார்த்தனை உடையில் காட்டும் சமூக ஊடகப் பதிவை வெளியிட்டுள்ளார். “அப்பா நம்மிடம் இல்லை, அவர்  இப்போது வீட்டிலும் இல்லை. “நான் முடிந்தவரை மம்மிக்கு…

புத்துணர்ச்சி பெற்றுள்ள லங்காவி சுற்றுலா துறை

இராகவன் கருப்பையா - சுமார் 2 ஆண்டுகளுக்கு மேல் கோறனி நச்சிலின் கோறத் தாண்டவத்தினால் வாழ்வாதாரம் அதிக அளவில் பாதிக்கப்பட்ட இடங்களில் லங்காவி தீவும் ஒன்று. ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுப் பயணிகளை ஈர்த்து வந்த அத்தீவு நடமாட்டக் கட்டுப்பாட்டின் போது  முடக்கம் கண்டு இலட்சக் கணக்கானோரின்…

சமூகப் போராளி ஹிண்ட்ராப் கணேசன் காலமானார்

ஹிண்ட்ராப் (2007) போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இந்தியச் சமூகத்தின் சிக்கலைத் தீர்ப்பதற்கு வழிமுறைகளை முன்வைத்த அந்த இயக்கத்தில்  ஆலோசகர் கணேசன் நாராயணன் தனது 71-வது வயதில், கடந்த 11ஆம் தேதி நோய்வாய்ப்பட்டுக் காலமானார். அவரின் இறுதி அஞ்சலியில் அவரின் வேண்டுகோளுக்கு இணங்க "Freedom" என்ற அவரின்…

மூடாவை புறக்கணித்தால் எதிர்மறை விளைவுகள் 

இராகவன் கருப்பையா- அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றிபெற வேண்டுமாயின் முடிந்த அளவுக்குத் தனது பலத்தை அது வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். பி.கே.ஆர்., ஜ.செ.க. அமானா மற்றும் கிழக்கு மலேசியாவின் அப்கோ, ஆகிய 4 கட்சிகள் உறுப்பியம் பெற்றுள்ள அக்கூட்டணியில் இணைவதற்கு 'மூடா' அண்மையில் செய்த விண்ணப்பம் இன்னமும்…

மக்கள் சக்தி மாநாடு நஜிப்புக்கு ஆதரவு மாநாடாக மாறியது  

தனேந்திரனின் மக்கள் சக்தி கட்சியின் 14வது ஆண்டு பொதுக் கூட்டம், ஊழலுக்காக சிறை சென்ற முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு ஆதரவும் பாராட்டும் நிரம்பிய மாநாடாக மாறியது. முக்கிய பிரமுகர்கள் அனக்வரும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கைப் புகழ்ந்தும், அனுதாபத்துடனும் உரையாற்றினார்கள். நிகழ்வின் தொடக்கத்திலிருந்தே, "ஒற்றுமை" மற்றும் "போஸ்கு"…

அழிந்து கொண்டிருக்கும் கோலசிலாங்கூரின் அலையாத்தி காடுகள் – ம. நவீன்

மலேசியாவின் கடலோரப்பகுதிகளில் காணப்படும் அலையாத்தி காடுகள் (மாங்குரோவ் காடுகள்) நமது நாட்டுக்கு இயற்கை கொடுத்த ஒரு பாதுகாப்பு அம்சமாகும். இவை சூறாவளி போன்ற இயற்கை பேரிடர்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன. அதோடு நில அரிப்புகளை நிவர்த்தி செய்கின்றன, காற்றில் உள்ள கரியமிலவாயுவை வடிகட்டுகின்றன, எண்ணற்ற கடலோர உயிரியலின் பன்முகத்தன்மையைப் பாதுகாத்து…