நாடாளுமன்றத்தின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக PAS கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இவர் பெர்சத்து கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ஹம்சா ஜைனுதீனுக்குப் பதிலாகப் பொறுப்பேற்பார். சேராஸில் இன்று நடைபெற்ற பெரிக்கத்தான் நேஷனல் (PN) உச்சமன்றக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதன் புதிய தலைவர்…
பிரதமர் வேட்பாளர்களை சந்திக்க மலேசிய மருத்துவ சங்கம் ஆர்வம்
இராகவன் கருப்பையா- மலேசிய சுகாதார கட்டமைப்பில் தேவைப்படும் சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு பிரதமர் வேட்பாளர்களை சந்திக்க மலேசிய மருத்துவச் சங்கம் திட்டமிட்டுள்ளது. அந்த வேட்பாளர்கள் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன் இச்சந்திப்பை மேற்கொள்ள சங்கம் எண்ணியுள்ளதாக அதன் தலைவர் டாக்டர் முருக ராஜ் குறிப்பிட்டார். பக்காத்தான் கூட்டணியின் அன்வார்,…
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்? – கி.சீலதாஸ்
மலைக்கள்ளன் திரைப்படத்தைப் பார்க்காதவர்களோ அறியாதவர்களோ மிகக் குறைவாகத்தான் இருக்க வேண்டும். ஏறத்தாழ இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம். கடந்த நூற்றாண்டில் தமிழ் இலக்கிய உலகில் மிகச் சிறந்ததாகச் சொல்லப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட, போற்றப்பட்ட நாமக்கல் கவிஞர் எனப் புகழ்வாய்ந்த இராமலிங்க பிள்ளையின் படைப்பு தான் அது. இராமலிங்க பிள்ளை…
இளையோர் வாக்குரிமையின் வலிமையை உணர வேண்டும் – குலசேகரன்
இராகவன் கருப்பையா- நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக வாக்களிக்கத் தகுதியுடைய இளம் வாக்காளர்களில் நிறைய பேர் தங்களுடைய வாக்குரிமை குறித்து இன்னமும் தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர். குறிப்பாக இந்திய இளைஞர்களில் ஏராளமானோர் தங்களுடையப் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இயல்பாகவே இடம்பெற்றுள்ளதை உணராமல் இருக்கின்றனர் என ஜ.செ.க.வின் தேசிய உதவித்…
தேர்தல் காலங்களில் மட்டுமே தோசை சுடும் அரசியல்வாதிகள்
இராகவன் கருப்பையா- பிரதமர் சப்ரி தனது பெரா தொகுதியில் இந்தியர் ஒருவரின் இல்லத்தில் தோசை சுடுவதைப் போலவும் முறுக்குப் பிழிவதைப் போலவும் பாசாங்கு செய்தக் காட்சிகளை கடந்த வாரத்தில் பத்திரிகைகளிலும் சமூக வலைத் தலங்களிலும் காண முடிந்தது. இத்தகைய அரசியல் 'டிராமா'க்கள் மலேசியர்களைப் பொறுத்த வரையில் புதுமையான ஒன்றல்லை. காலங்காலமாக…
ஆசியாவை சார்ந்த முதலாவது பிரிட்டன் பிரதமராக ரிஷி சூனக்
பிரிட்டன் பிரதமராகும் முதலாவது பிரிட்டிஷ் ஆசியராக ரிஷி சூனக் வரலாறு படைத்துள்ளார். அவர் புதிய கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக வாக்களித்து தேர்வான பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. முன்னதாக, கடந்த கோடை காலத்தில் கட்சிக்குழுவுக்கு தலைமை தாங்கும் போட்டியில் சூனக் தோல்வியுற்ற பிறகு, லிஸ் டிரஸ் கன்சர்வேட்டிவ் கட்சியின்…
எங்களின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
மலேசியாஇன்று -வின் ஆதரவாளர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! நமது பண்பாடு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற இலக்கணமற்ற சூழலில் வாழ்வதால், அனுசரித்துச் செல்வது என்ற வகையில் எதையும் தாங்கும் இதயமாக நாம் மாறிக்கொண்டுருப்பதால், இதயத்தின் துடிப்பும் அதிகமாகி வருகிறது! இந்த தீபாவளி…
15வது பொதுத் தேர்தல் – தேசிய முன்னணிக்குக் கடுமையான பரீட்சை
கி. சீலதாஸ் -மலேசிய கூட்டரசின் பதினைந்தாம் பொதுத் தேர்தலை உடனடியாக நடத்திட வேண்டுமென அம்னோ தலைவர்கள் கடுமையாக வற்புறுத்துவதை அறிந்திருப்பீர்கள். இன்றையப் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி அம்னோவின் துணைத்தலைவர், அம்னோவின் தலைவர் டத்தோ ஶ்ரீ சாஹிட் ஹமீடி பல குற்றவியல் வழக்குகளில் தொடர்புடையவர். ஒரு வழக்கில்…
சுங்கை சிப்புட்டில் விக்னேஸ்வரன் போட்டியிடுவாரா?
இராகவன் கருப்பையா - எதிர்வரும் பொதுத் தேர்தலில் பேராக்கின் சுங்கை சிப்புட் தொகுதியில் ம.இ.கா.வை பிரதிநிதித்து யார் போட்டியிடுவார் எனும் கேள்வி தற்போது மீண்டும் எழுந்துள்ளது. ஒரு காலத்தில் ம.இ.கா.வின் இரும்புக் கோட்டையாக விளங்கிய அத்தொகுதியில் அதன் தலைவர் விக்னேஸ்வரன் போட்டியிடுவார் என கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலிருந்து…
பட்டது போதும் வேண்டாம் மகாதீர் – பாக்காத்தான் ஹரப்பான்
பெஜுவாங் மற்றும் அதன் தலைவர் டாக்டர் மகாதீர் முகமது இல்லாமல் 15வது பொதுத் தேர்தலை (GE15) எதிர்கொள்ள பக்காத்தான் ஹராப்பான் தயாராக உள்ளது என்று சைபுடின் நாசுதியோன் கூறினார். அந்த ஹராப்பான் பொதுச்செயலாளரைத் தொடர்பு கொண்டபோது, ஒத்துழைக்க கோரும் மகாதீரின் அழைப்பை தனது கூட்டணி மதிப்பதாகக் கூறினார்.…
வீரமான விவேக கஸ்தூரி பட்டு, விட்டு கொடுக்கிறார்
கஸ்தூரி பட்டு 2013 முதல் பினாங்கில் உள்ள பத்து கவான் நாடாளுமன்றத் தொகுதியின் நடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர், இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். மறைந்த மூத்த டிஏபி தலைவர் பி பட்டுவின் மகளான அவர், தான் புதிய தலைவர்களுக்கு இடம் கொடுக்க விரும்புவதாகவும், தான் வேட்பாளராக…
அரசாங்க ஊழியர்கள் யாருக்கு வாக்களிப்பர்?
இராகவன் கருப்பையா - நம் நாட்டின் அரசாங்க ஊழியர்கள் காலங்காலமாக தேசிய முன்னணிக்குதான் விசுவாசமாக இருந்து வந்துள்ளனர். ஒவ்வொரு பொதுத் தேர்தலின் போதும் கிட்டதட்ட எல்லா அரசு ஊழியர்களின் வாக்குகளும் தங்கு தடையின்றித் தங்களுக்குக் கிடைக்கும் எனும் மமதையில் இருந்துவந்த அக்கூட்டணிக்கு 14ஆவது பொதுத் தேர்தலில் எதிர்பாராத வகையில் அதிர்ச்சி…
இந்திய அமைப்புகளின் 15ஆம் பொதுத் தேர்தலுக்கான கோரிக்கைகள்
‘இந்தியர்கள் 25’ (I25) என்ற இந்திய சமூக அமைப்புகளின் கூட்டமைப்பு 15 -வது பொதுத்தேர்தலை முன்னிட்டு இந்திய சமூக மேம்பாட்டுக்கான தேர்தல் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இந்த கோரிக்கை மனு அனைத்து அரசியல் தரப்பினர்களிடமும் சமர்பிக்கப்படும் என்று கூறுகிறார் இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் கருப்பையா. “எங்களின் நோக்கம் இந்திய…
சார்லஸ் சந்தியாகோவே மீண்டும் கிள்ளானுக்கு வேட்பாளராக வேண்டும்
கிள்ளான் மக்களுக்காக சிறப்பாக சேவைபுரியும் சார்லஸ் சந்தியாகோ மீண்டும் கிள்ளானுக்கே வேட்பாளராக தேர்ந்துடுக்கப் படவேண்டும் என்று கிள்ளான் இந்திய அரசு சார இயக்கங்கள் சூளுரைத்தன. கிள்ளான் தொகுதியில் கடந்த 3 தவணைகளாக நாடாளுமன்ற உறுப்பினராக சார்லஸ் சந்தியாகோ தேர்ந்தெடுக்கப்பட்டு இவ்வட்டார மக்களுக்கு அவரின் ஒப்பற்ற சேவையை ஆற்றியுள்ளார். இவரின்…
காற்றுள்ள போதே தூற்றவில்லை: நட்டாற்றில் வேதமூர்த்தியின் கட்சி
இராகவன் கருப்பையா - முன்னாள் ஒற்றுமைத்துறை அமைச்சர் வேதமூர்த்தி தொடக்கிய மக்கள் முற்போக்குக் கட்சி தற்போது இலக்கற்றுத் தவிப்பதாகத் தெரிகிறது. அக்கட்சியின் அரசியல் சித்தாந்தம் அறிவு பூர்வமாக இருந்தாலும் அதன் பின்னணியில் ஒரு மக்கள் விழிப்புணர்ச்சி நிலையும் அதன் உந்துதலுக்கு ஏற்ற காரணிகளும் வேண்டும். மலேசிய சோசியலிஸ்ட் கட்சி அடித்தளத்தில்…
ஒருமைப்பாட்டு நிகழ்வில் இஸ்மாயில் சப்ரி – ஜஹிட் ஹமிடி ஒன்றாக…
அம்னோவின் இரண்டு போட்டி முகாம்களும், அதாவது பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மற்றும் அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, இன்று ஒன்றாக இணைந்து, அவர்களின் விரோதத்தை புதைக்க தயாராக இருப்பதாக தெரிகிறது. பார்லிமென்டை எப்போது கலைப்பது என்பது உட்பட பல்வேறு விஷயங்களில் பிளவுபட்டிருந்த இரு பிரிவு தலைவர்களும்…
1எம்டிபி வழக்கு: நீதிமன்றத்தை அவமதித்ததிற்காக ஜோ லோ மற்றும், அவரின்…
தொழிலதிபர் லோ டேக் ஜோ மற்றும் அவரது தந்தை லாரி லோ ஹாக் பெங் ஆகியோருக்கு எதிரான தடை உத்தரவை பின்பற்றாததற்காக கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் சிறை தண்டனையை விதித்துள்ளது. இன்று நீதிபதி ஹயாத்துல் அக்மல் அப்துல் அஜீஸ், நீதிமன்ற விசாரணையின் போது ஜோ லோ மற்றும் ஹாக்…
சேவை மனம் கொண்ட சார்ல்ஸ் சந்தியாகோவுக்கு தொகுதி வழங்கப்பட வேண்டும்…
சிறந்த முறையில் மக்களுக்கு சேவை செய்த பிரதிநிதிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அவ்வகையில் கிள்ளான் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக மூன்று தவணைகள் செயலாற்றிய சார்ல்ஸ் சந்தியாகோவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஐ25 என்ற இந்திய அரசு சாரா இயக்கங்களின் ஒன்றியம் (I25) ஜன…
அன்வார்: இனி ஏமார மாட்டோம், ஹராப்பானுக்கு புதிய ‘தலைவர்’ இருக்கிறார்
தற்போது கூட்டணிக்கு ஒரு புதிய "தலைவர்" இருப்பதால், பக்காத்தான் ஹராப்பான் செயலாக்கம் பற்றி மக்கள் இனி கவலைப்பட வேண்டியதில்லை, என்றார் அன்வார் இப்ராகிம். ஹராப்பான் தலைவரின் கூற்றுப்படி, கூட்டணியில் இனி "பழையன" இல்லை, மேலும் முந்தைய வாக்குறுதிகள் முடிந்தவரை நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தார். “ஹரப்பான் 22 மாதங்கள் மலேசியாவை…
15வது பொது தேர்தல்: பெர்சத்து – ஹராப்பான் கூட்டணி வேலை…
வரவிருக்கும் 15வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து செயல்படப் போவதில்லை என்பதை பெர்சத்து உறுதிப்படுத்தியது. ஹராப்பான் கவுன்சில் தங்களுடன் ஒத்துழைக்கப் போவதில்லை என்ற முடிவையும் பெர்சது கவனத்தில் எடுத்துள்ளதாக கட்சியின் தலைவர் முகைதின் யாசின் தெரிவித்தார். "பெர்சாத்து மற்றும் ஹராப்பான் இடையேயான ஒத்துழைப்பு குறித்த அறிக்கையைப் பொறுத்தவரை,…
தமிழை வளர்க்கும் மாணவர்களை உதாசீனப்படுத்துகிறது சமுதாயம்
இராகவன் கருப்பையா - இந்நாட்டில் தமிழ் மொழி தொடர்ந்து செழித்தோங்கி இருப்பதற்கு அயராது பாடுபடும் தரப்பினரில் உயர் கல்வி மாணவர்களின் பங்கு அளப்பரியது. ஆனால் அவர்களுக்கு ஊக்கமளித்து உற்சாகப்படுத்தக் கடப்பாடு கொண்டுள்ள நம் சமூகத்தின் பங்கு, குறிப்பாக அரசியல் தலைவர்களின் அலட்சியப் போக்கு பெருத்த ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளது. மலாயா…
தேசிய நீரோட்டத்தில் மீண்டும் இனத்துவேசம்!
இராகவன் கருப்பையா - ஒரு நாட்டின் வரவு செலவுத்திட்டம் இன ரீதியாக வரையப்படுவது மலேசியாவில் மட்டுமே நிகழும் ஒரு அதிசயம் என பொருளாதார வல்லுநர்கள் அண்மைய காலமாக கருத்துரைத்து வருவதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாகக் காண முடிகிறது. 'சத்து மலேசியா', 'கெலுவார்கா மலேசியா', போன்ற…
இந்தியர்களுக்கென்றே ஒரு ‘லோ யாட் 3’ சாத்தியமாகுமா?
இராகவன் கருப்பையா - சுமார் 7 ஆண்டுகளுக்கு முன், தலைநகர் புக்கிட் பிந்தாங் பகுதியில அமைந்துள்ள 'லோ யாட்' பேரங்காடியில் நிகழ்ந்த ஒரு கசப்பான சம்பவத்தை நம்மில் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வளாகத்தில் மின்னியல் பொருள்களை வியாபாரம் செய்யும் ஒரு கடையில் விவேகக் கைத் தொலைபேசி ஒன்றைத் திருடியதற்காக…
வெள்ளத்திலும் தேர்தலா? – முற்றிலும் அறிவிலிதனம்!
இராகவன் கருப்பையா - வெள்ளம் வந்தால் என்ன, மக்கள் எக்கேடு கெட்டால்தான் என்ன, பொதுத் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும் என ஒற்றைக்காலில் நிற்கும் சில சுயநல அரசியல்வாதிகளின் அறிவிலித்தனத்தால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர். கடந்த ஆண்டு இறுதியில் நாட்டை உலுக்கிய வரலாறு காணாத வெள்ளம் மக்கள் மனங்களிலிருந்து இன்னமும் அகலவில்லை. 50க்கும்…























