புதிய அமைச்சரவை வரிசை குறித்த விமர்சனங்களை எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுடின் மேலும் வலுப்படுத்தியுள்ளார். ஏற்கனவே பொதுமக்களால் செயல்திறன் கேள்விக்குள்ளாக்கப்பட்ட அமைச்சர்கள் அமைச்சரவையில் தக்கவைக்கப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். "சந்தேகத்திற்குரிய பின்னணி கொண்ட நபர்களின் புதிய நியமனங்களுக்கும் இது பொருந்தும்," என்று பெர்சத்து கட்சியின் துணைத் தலைவரான அவர் இன்று…
‘குழாய் இணைப்பு திட்டம் ஏன் புத்துயிர் பெற்றது?’ எம்ஏசிசி விசாரிக்க…
சிங்கப்பூர்-கோலாலம்பூர் அதிவேக இரயில் திட்டத்தை (எச்.எஸ்.ஆர்.) நிறுத்திய நிலையில், சபா எரிவாயு குழாய் போக்குவரத்து (திஎஸ்ஜிபி) மற்றும் பல தயாரிப்பு குழாய் இணைப்பு (எம்பிபி) திட்டங்களைப் புதுப்பிக்க முனைந்துள்ள புத்ராஜெயாவின் காரணங்களை விசாரிக்க வேண்டுமென மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை (எம்ஏசிசி) பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) வலியுறுத்துகிறது. "தோல்வியடைந்த…
எம்ஏ63 திருத்தம் தொடர்பான மசோதா அக்டோபர் 26-ல் தாக்கல் செய்யப்படும்
1963 மலேசிய ஒப்பந்தத்தின் (எம்ஏ63) முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு திருத்தம், அக்டோபர் 26-ம் தேதி திட்டமிட்டப்படி மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் கூறினார். எழுந்த குழப்பத்தை விளக்கிய அந்தச் சட்டத்துறை அமைச்சர், ஒத்திவைக்கப்பட்டது மசோதாவின் இரண்டாவது வாசிப்பு (RUU), இரண்டாவது…
5,828 புதியக் கோவிட்-19 நேர்வுகள்
சுகாதார அமைச்சு இன்று 5,828 புதிய கோவிட் -19 நேர்வுகளை அறிவித்துள்ளது. ஒட்டுமொத்த நேர்வுகள் இப்போது 2,426,050. கடந்த ஏழு நாட்களுடன் ஒப்பிடுகையில் நாடு முழுவதும் மருத்துவமனை சேர்க்கை எண்ணிக்கை 12.3 விழுக்காடு குறைந்துள்ளது. 6,630 புதிய நேர்வுகள் பதிவான நேற்றைய (அக்டோபர் 22) மாநில எண்ணிக்கை பின்வருமாறு…
தேசியக் கூட்டணி விரும்பும் இருக்கை இலக்கை ஏற்க முடியாது –…
மலாக்கா பிஆர்என் | ஷெரட்டன் நகர்வுக்குப் பிறகு உருவான கூட்டணியின் நிபந்தனைகள் ஏற்க முடியாத அளவுக்கு இருந்ததை அடுத்து, அம்னோ தேசியக் கூட்டணியை (தே.கூ.) நேரடியாக மலாக்காவில் எதிர்கொள்ள முடிவெடுத்தது. அம்னோவைச் சார்ந்த இரண்டு உள்நபர்கள் - கட்சித் தலைவருக்கு நெருக்கமான ஒருவர் உட்பட – தே.கூ.-ஆல் குறிவைக்கப்பட்ட…
எம்ஏ63 தொடர்பான மசோதா ஒத்திவைப்பு – வாரிசான் ஏமாற்றம்
1963 மலேசிய ஒப்பந்தம் (எம்ஏ63) தொடர்பான அரசியலமைப்பு திருத்த மசோதாவைத் தாக்கல் செய்வதை, அரசாங்கம் ஒத்திவைக்க முடிவு செய்ததில் தனது கட்சி ஏமாற்றமடைந்ததாக வாரிசான் தலைவர் ஷாஃபி அப்டல் கூறினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதேபோன்ற ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யத் தவறியதைக் கண்ட சபா மற்றும்…
பிஆர்என் மலாக்கா : பிஎன் அனைத்து இடங்களிலும் போட்டியிடலாம்
நவம்பர் 20-ஆம் தேதி நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்), 28 மாநிலத் தொகுதிகளிலும் தனது கூட்டணி போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தேசியக் கூட்டணியின் (தே.கூ.) தலைவர் முஹைதின் யாசின் தெரிவித்துள்ளார். தீபகற்பத்தைத் தளமாகக் கொண்ட தே.கூ. கட்சி, அதாவது பெர்சத்து, பாஸ் மற்றும் கெராக்கான் ஆகியவற்றால் இந்த விஷயம்…
நிர்வாகத்தில் இன, அரசியல் பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் – முன்னாள்…
இனம் அல்லது அரசியல் சார்பு அடிப்படையில் மக்களுக்கு வழங்கப்படும் உபசரிப்புகளை வேறுபடுத்தும் நடைமுறையை அரசாங்கம் நிறுத்த வேண்டிய நேரம் இது. மலாக்கா முன்னாள் முதல்வர் அட்லி ஜஹாரியின் கூற்றுப்படி, மக்கள் பிரதிநிதி என்ற முறையில், குறிப்பாக மலாக்கா மாநில அரசாங்கத்தின் நிர்வாகத்தில் இந்த விஷயம் நடக்கக்கூடாது. 60 ஆண்டுகளுக்கும்…
நவம்பர் 15 முதல் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு லங்காவி திறக்கப்படும்
லங்காவி தீவுக்குச் செல்ல விரும்பும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள், நவம்பர் 15-ஆம் தேதி முதல் லங்காவி தீவு முன்னோடித் திட்டத்திற்கான சர்வதேச சுற்றுலா குமிழி மூலம் அனுமதிக்கப்படுவார்கள் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார். இன்று, கோவிட் -19 தொற்றுநோய் மேலாண்மை சிறப்பு குழு, சுற்றுலா, கலை…
`சாட்டை துரைமுருகனையும் ழகரம் சீதையின் மைந்தனையும் தமிழக அரசு விடுதலை…
தமிழக கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை உடைத்து, சட்டவிரோதமாக கேரளத்துக்குக் கடத்துவதைக் கண்டித்துப் பேசிய, "சாட்டை" வலையொளி பேச்சாளர் துரைமுருகனையும் பெரியாரின் மர்ம மறுபக்கம் எனும் தலைப்பில் ஈவே இராமசாமி நாயக்கரின் மாயத்தோற்றத்தச் சுக்குநூறாகி தகர்க்கும் வகையில் தக்க சான்றுகளுடன் இரண்டு காணொளிகளை வெளியிட்ட "ழகரம்"…
ஜாஹித் : அம்னோ-பெர்சத்து ஒத்துழைப்பு இல்லை
கடந்த அம்னோ பொது மாநாட்டில் இருந்து நீண்டகாலமாக முடிவு எடுக்கப்பட்டுவிட்டதால், பெர்சத்துவுடனான கட்சியின் ஒத்துழைப்பு குறித்து முடிவெடுப்பதில் எந்தத் தாமதமும் இல்லை என்று கூறினார். "பெர்சத்துவுக்காக, நாங்கள் ஒரு முடிவை எடுத்துள்ளோம். நாங்கள் அவர்களுடன் ஒருபோதும் இணைந்து வேலை செய்ய மாட்டோம். இது மிகவும் தாமதமாகாது ... முன்பு…
‘ஷெரட்டனின் நகர்வுக்குப் பிறகு பெர்சத்து இறந்துவிட்டது’ – ஆராவ் தலைவர்…
ஆரவ் பெர்சத்து டிவிஷன் தலைவர், அமீர் ஹசான் அக்டோபர் 15 முதல் கட்சியை விட்டு விலக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. நேற்றைய சினார் ஹரியான் செய்தியின்படி, பெர்சத்து அதன் அசல் போராட்டம் மற்றும் இலக்கிலிருந்து விலகி விட்டதாக அமீர் கூறியுள்ளார். "நான் இனி பெர்சத்து உறுப்பினர் அல்ல. ‘ஷெரட்டன்…
என்ஜிஓ : வாக்குறுதி அளிக்கப்பட்ட பாலின பாகுபாடு எதிர்ப்புச் சட்டங்கள்…
சில அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓ) பணியிடத்தில் பாலின பாகுபாடு எதிர்ப்புச் சட்டங்கள் இல்லாமை குறித்தும், அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, அரசாங்கம் முன்பு உறுதியளித்த பாலின பாகுபாடு சட்டங்கள் என்னவானது என்றும் கேள்வி எழுப்பியுள்ளன. அது சட்டத்தை மீறாதது போல் காணப்படுவதால், மலேசியாவில் உள்ள முதலாளிகள் ஊழியர்களுக்கு எதிராக, தெளிவாக…
`நோர்ஹிஸாமை வேட்பாளராகப் பெயரிட வேண்டாம்` – பிஎச் ஒப்புக் கொண்டது
பிஆர்என் மலாக்கா | அடுத்த மாதம் நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்), பக்கத்தான் ஹராப்பான் தங்கள் வேட்பாளர்களில் ஒருவராக நோர்ஹிஸாம் ஹசான் பக்தீயைப் பரிந்துரைக்க வேண்டாம் என்பதை ஒப்புக்கொண்டது. பிஎச் தலைமை மன்றத்தின் கூற்றுப்படி, மலாக்கா மாநில அரசு வீழ்ச்சிக்குக் காரணமான நான்கு முன்னாள் மலாக்கா சட்டமன்ற…
ஜிஇ15-இல் ஜொகூரில் 1 நாடாளுமன்றம் 2 சட்டமன்றங்கள் – ஜசெக…
நாட்டின் 15-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ15), ஜொகூர் மாநிலத்தில் ஜசெக கட்சியைப் பிரதிநிதித்து, இந்தியர்களுக்கு 1 நாடாளுமன்றமும் 2 சட்டமன்றங்களையும் வழங்க வேண்டும் எனும் கோரிக்கை ஜொகூர் ஜசெக இந்திய ஆதரவாளர்களிடமும் அக்கட்சியைச் சார்ந்த இந்திய உறுப்பினர்களிடையேயும் எழுந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. ஜொகூர் மாநிலத்தைப் பொருத்தமட்டில், ஜசெக வலுவாகவே…
மருத்துவமனையில் கோவிட் -19 நோயாளிகளின் சேர்க்கை அதிகரித்து வருகிறது
மாநிலங்களுக்கு இடையேயான பயணத்தை அரசாங்கம் அனுமதித்ததிலிருந்து, பல மாநிலங்களில் உள்ள பொது மருத்துவமனைகளில், கோவிட் -19 நோயாளிகளின் சேர்க்கை அதிகரித்து வருவதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அரசு மருத்துவமனைகள், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் உள்ள கோவிட் -19 தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை மையங்களில் (பி.கே.ஆர்.சி.), அக்டோபர் 11-இல்…
`பிஎச் எந்தவொரு கட்சியுடனும் ஒத்துழைக்கலாம்` – தியான் சுவா அழைப்பிற்கு…
மலாக்கா பிஆர்என்-இல், "வெற்றியைத் தரக்கூடிய எந்தவொரு தரப்புடனும்" பிஎச் இணைந்து பணியாற்றலாம் என்ற பி.கே.ஆர். உதவித் தலைவரின் அழைப்பை டிஏபி அமைப்புச் செயலாளர் அந்தோணி லோக் ஏற்கவில்லை. "அது தியான் சுவாவின் தனிப்பட்ட கருத்து. டிஏபியின் நிலைப்பாடு பிஎச் தலைமை மன்றக் கூட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. “முன்னாள் முதல்வர்…
மும்முனை போட்டி : ‘இன்று நாங்கள் முடிவு செய்கிறோம்`
பிஆர்என் மலாக்கா | தேசியக் கூட்டணி (பிஎன்), பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) மற்றும் அம்னோ என, மும்முனை போட்டியை மலாக்கா மாநிலத் தேர்தல் (பிஆர்என்) காணும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகத் தெரிகிறது. இன்று, அஹ்மத் ஜாஹித் ஹமிடி கூறியபடி, அம்னோ – தேசிய முன்னணியின் முடிவிற்காகத் தொடர்ந்து காத்திருக்க…
`அருள் கந்தா பிஏசி விசாரணைக்கு வருவதை யாரும் தடுக்கவில்லை` –…
முன்னாள் 1எம்டிபி தலைமை நிர்வாக அதிகாரி அருள் கந்தா கந்தசாமி, நிறுவனத்தின் பொதுக் கணக்குக் குழுவின் (பிஏசி) கணக்காய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஒருபோதும் தடை விதிக்கப்படவில்லை என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று தெரிவித்தது. 2016-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பிஏசி-இடம் வழங்கப்படுவதற்கு முன்பு, 1எம்டிபியின் தணிக்கை அறிக்கையைத் திருத்தியதாக குற்றம்…
காணாமல் போன RM25 மில்லியன் : சம்பந்தப்பட்ட எம்ஏசிசி அதிகாரி…
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) RM25 மில்லியன் பண இழப்பு வழக்கில் தொடர்புடைய முக்கியச் சந்தேக நபர், தற்போது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளிலும் விசாரிக்கப்படுகிறார். தடைசெய்யப்பட்ட பொருளை விநியோகிப்பதில், அந்த எம்ஏசிசி அதிகாரி ஈடுபட்டிருக்கலாம் என்பதற்கான அறிகுறிகளைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு, சந்தேக நபர் எரிமின் 5 மாத்திரைகள்…
மலாக்காவில் மாற்றத்தைக் கொண்டு வந்ததால் பிஎச் அவர்களை அழைத்தது –…
அம்னோ-பெர்சத்து தலைமையிலான மாநில அரசு வீழ்ச்சிகாண, மாநிலத்தில் மாற்றத்தைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததால், பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) தலைமை மன்றம் அந்த நான்கு மலாக்கா சட்டமன்ற உறுப்பினர்களையும் கொண்டாடியது என்று பிகேஆர் தலைவர் அன்வர் இப்ராகிம் கூறினார். நெகிரி செம்பிலான், போர்ட்டிக்சனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அன்வர், கடந்த…
`மைசெஜாத்திரா இன்னும் பாதுகாப்பாக இல்லை` – மென்பொருள் வல்லுநர்
பயன்பாட்டின் சார்பான மின்னஞ்சல்கள் மற்றும் ஒற்றை பயன்பாட்டு கடவுச்சொற்களை (ஒதிபி), மூன்றாம் தரப்பினர் கையாளுவதற்கு அனுமதிக்கும் பாதிப்பை மைசெஜாத்திரா கொண்டுள்ளது என்று மைசெஜாத்திரா பணிக்குழு கூறுகிறது. மைசெஜாத்திரா பணிக்குழு, ஒதிபி பிரச்சினையை நிவர்த்தி செய்ததாகவும், ஆனால் மின்னஞ்சல் தொடர்பாக இதுவரை எந்த எதிர்வினையும் கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளது. இந்தப்…
இட்ரிஸ், 3 சட்டமன்ற உறுப்பினர்கள் பிகேஆரில் சேர்வதில் ஏஎம்கே கெடா…
கெடா பிகேஆர் இளைஞர் (ஏஎம்கே) தலைவர் முகமது ஃபிர்டாவுஸ் ஜோஹரி, முன்னாள் மலாக்கா முதல்வர் இட்ரிஸ் ஹரோன் மற்றும் மற்ற மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் பிகேஆரில் இணைவதைத் தான் ஏற்கவில்லை என்று கூறினார். அவர்கள் நான்கு பேரும், மலாக்கா மாநில அரசைக் கவிழ்ப்பதில் முக்கியப் பங்கு வகித்தனர், மாநிலத்…
பாதுகாவலர் ஊதியப் பிரச்சினையில் தலையிட கல்வியமைச்சுக்கு வலியுறுத்து
பெர்லிஸில் உள்ள 10 பள்ளிகளில், பாதுகாவலர்களுக்குச் சம்பளம் வழங்குவதில் ஏற்படும் தாமதப் பிரச்சனையில் கல்வி அமைச்சு தலையிட வேண்டுமென அரசு ஒப்பந்த தொழிலாளர் வலைபின்னல் (ஜேபிகேகே) கேட்டுக் கொண்டுள்ளது. பாதுகாப்பு சேவை ஒப்பந்தம் வழங்கப்பட்ட தனியார் நிறுவனம், 38 பாதுகாவலர்களுக்கு இரண்டு மாதங்களுக்குச் சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.…
























