கமலை இயக்க விரும்பும் வெங்கட்பிரபு!

விஸ்வரூபம் படத்திற்கு பிறகு தன்னைத்தானே இயக்கிக்கொள்வதில் அதிக ஆர்வமாக உள்ளார் கமல். இந்த நிலையிலும், கமலை ஒரு படத்திலேனும் இயக்கி விட வேண்டும் என்று அவருக்கான கதை ஒன்றையும் ரெடி பண்ணி வைத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அவரைத் தொடர்ந்து இப்போது வெங்கட்பிரபுவும் கமலை இயக்கும ஆர்வத்தில் தான் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.…

தனுஷ்-சிவகார்த்திகேயன் நட்பில் பிளவு?

தனுஷ்-சிவகார்த்திகேயன் நட்பில் பிளவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சின்னத்திரை காம்பையராக இருந்து சினிமாவில் ஹீரோவாகியிருப்பவர் சிவகார்த்திகேயன். அந்த வகையில் டிவியில் இருப்பவர்கள் சினிமாவில் பெரிய அளவில் சாதிக்க முடியாது என்ற செண்டிமென்ட்டை உடைத்தெறிந்துவிட்டு தற்போது வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத…

படம் ஓடலேன்னா ரெஸ்ட்ராரெண்ட் நடத்தி பொழைப்பேன் – ஜீவா!

ஜீவா மிகப்பெரிய நம்பிக்கை வச்சு நடித்த படங்கள்தான் முகமூடி, நீதானே என் பொன்வசந்தம். இந்த படங்கள் வெற்றி பெறுகிறபோது தானும் மேல்தட்டு ஹீரோவாகி விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால், இரண்டு படங்களுமே சொல்லிவைத்தார் போல் தோல்வியடைந்து ஜீவாவின் மேல்தட்டு கனவை கலைத்து விட்டன. அதன்பிறகு என்றென்றும் புன்னகை,…

பிரபல நகைச்சுவை நடிகர் குள்ளமணி மரணம்!

நடிகர் குள்ளமணி (61) உடல் நலக்குறைவால் சென்னையில் புதன்கிழமை (டிச.25) காலமானார். 2 சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குள்ளமணி புதன்கிழமை உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே மரமடக்கி கிராமத்தைச் சேர்ந்த குள்ளமணி சிறு வயதிலிருந்தே நாடகங்களில் நடித்து வந்தார். சென்னையில்…

அதர்வாவுக்கு ஒரு மாத ஓட்ட பயிற்சி

பரதேசிக்கு பிறகு அதர்வாவின் சினிமா பயணம் புது மாதிரியாகி விட்டது. மற்ற இளம் ஹீரோக்களைப் போல், காதல், காமெடி என, நடிக்க விரும்பாமல் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் கதைகளில் கவனம் செலுத்துகிறார். இரும்புக்குதிரை என்ற படத்தில் அதிரடியான வேடத்தில் நடித்துள்ள அதர்வா, அடுத்தபடியாக ஈட்டி என்ற படத்தில், தடகள…

இளையராஜாவின் உடல் நிலை தொடர்ந்து கண்காணிப்பு

ஆஞ்சியோபிளாஸ்ட்டி - ஸ்டென்ட் சிகிச்சை செய்துகொண்ட இசையமைப்பாளர் இளையராஜாவின் (69) உடல் நிலை மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மலேசியாவில் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள கார்த்திக் ராஜாவின் இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையை திங்கள்கிழமை இளையராஜா பார்வையிட்டார். சிற்றுண்டி சாப்பிட்டபோது அவருக்கு தொடர்ந்து விக்கல் உண்டாகி, பின்னர் நெஞ்சுவலி…

என்னை மோசடி செய்து விட்டனர்: டி.ராஜேந்தர் பரபரப்பு புகார்

அமெரிக்க பாடகர் ஒருவரை ஒப்பந்தம் செய்து தருவதாக கூறி, 2 பேர் கோடிக்கணக்கில் தன்னை மோசடி செய்து விட்டதாக இயக்குனர் டி.ராஜேந்தர் சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். டைரக்டர் டி.ராஜேந்தர் சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவரது குறள் டி.வி. கிரியேசன் நிறுவனம்…

இசைஞானி இளையராஜா மருத்துவமனையில் அனுமதி!

இசைஞானி இளையராஜா உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை பிரசாத் ஸ்டுடியோவிற்கு வந்த இளையராஜா, தனது புதிய படத்திற்கான பாடல் இசையமைப்பில் ஈடுபட்டிருந்தார். அதன் பின் டிசம்பர் 28ம் தேதி நடைபெற உள்ள விழாவிற்காக பாடல் கம்போசிங்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது…

விஜய் தான் உண்மையான கதாநாயகன் என பாராட்டிய தயாரிப்பாளர்கள்!

நடிகர் விஜய் தன்னை வைத்து ஆரம்பத்தில் படமெடுத்த ஐந்து தயாரிப்பாளர்களுக்கு தலா ஐந்து லட்சம் வீதம் ரூ. 25 லட்சம் உதவினர். விஜய் செய்த இந்த உதவியை தயாரிப்பாளர்கள், தமிழ் திரைப்பட துறையை சார்ந்தவர்களும் பாராட்டிய வண்ணம் உள்ளனர். ஆரம்பத்தில் படம் பண்ணி ஏணியாக இருந்த தயாரிப்பாளர்களை ஹீரோக்கள்…

இவன் வேற மாதிரி – சூப்பர் ஸ்டார் ரஜினி பாராட்டு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாராட்டு மழையில் நனைந்துள்ளது ‘இவன் வேற மாதிரி’. ‘எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கிய சரவணன், இப்போது விக்ரம் பிரபுவை வைத்து இயக்கியுள்ள படம் இவன் வேற மாதிரி. சமீபத்தில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சூப்பர்…

தலைமுறைகள் தயாரித்ததில் பெருமை; சசிகுமார்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலுமகேந்திரா இயக்கி நடித்திருக்கும் தலைமுறைகள் படத்துக்கு பரவலான பாராட்டுகளும், வரவேற்பும் கிடைத்து வருகிறது. ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டுக்குள் எடுக்கப்பட்ட படத்தின் வியாபாரம் இரண்டு கோடியை தாண்டி இருப்பதில் சந்தோஷத்தில் இருக்கிறார் தயாரிப்பாளர் சசிகுமார். இந்த சந்தோஷத்தில் அவர் கூறியது: லாப நோக்கத்திற்காக தலைமுறைகள்…

சினிமா ஜாம்பவான்களுக்கு அதிர்ச்சி அளித்த 2013

2013ம் ஆண்டு தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களுக்கு அதிர்ச்சி அளித்த ஆண்டாகவே அமைந்தது. சீனியர்கள் தங்களை மறு ஆய்வு செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தையும் 2013 ஏற்படுத்தி இருக்கிறது. அது பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம் மணிரத்னம்: இந்தியாவின் டாப் 10 இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கிய கடல் பல்வேறு…

தலைமுறைகள் – விமர்சனம்

பெரும் ஒளிப்பதிவாளர், எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் இயக்குநர்... என பண்முகங்கொண்ட பாலுமகேந்திரா, முதன்முதலாக நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் "தலைமுறைகள்! அவரே, இயக்குநர் எம்.சசிகுமாருடன் இணைந்து தயாரித்திருப்பதுடன் வழக்கம்போல ஒளிப்பதிவும் செய்து இயக்கியும் இருக்கும் இப்படத்தில் விசேஷம்... விழா வேத்திகளில் மட்டுமின்றி வீட்டிற்குள்ளேயும் கூட இதுநாள் வரை தொப்பியுடன்…

பிரியாணி – விமர்சனம்

உடனடியாக சாப்பிட ஏதாவது தேவை என்றால் "உப்புமா கிண்டுவார்கள்... கார்த்திக்கு உடனடியாக ஒரு வெற்றி தேவை என்பதால் "பிரியாணி கிண்டி இருக்கிறார்கள். ஆனால் உஷாராக கார்த்தியும், அவரது உறவு தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜாவும் அதை வெங்கட்பிரபுவை விட்டு சமைத்து, கார்த்தியின், "பிரியாணி, வெங்கட்பிரபுவின், "டயட் என விளம்பரப்படுத்தி வெற்றி…

தமிழ்மொழி காக்கும் மலேசியாவை தொடர்ந்து… மலேசிய கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் தாஜ்நூர்!!

'தமிழ் மொழி காக்கும் மலேசியா', இது இசையமைப்பாளர் தாஜ்நூர், மலேசிய தமிழர்கள், மலேசியாவின் பெருமையை தமிழில் சொல்லும்படி உருவாக்கிய இசை ஆல்பத்தின் பெயர் ஆகும். இந்த இசை ஆல்பம் மலேசியாவில் இயக்குநர் பாரதிராஜா, பாடலாசிரியர்கள் பா.விஜய், சினேகன், இசை அமைப்பாளரும், ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியுமான ஏ.ஆர்.ரஹானா, பின்னணி பாடகர்கள் வேல்முருகன்,…

வெற்றி இரு மடங்கு நம்பிக்கை தரும்; தோல்வி இரு மடங்கு…

வெற்றி, இரண்டு மடங்கு நம்பிக்கை தரும்; தோல்வி, இரண்டு மடங்கு அனுபவம் தரும் என்று பேசினார் நடிகர் விஜய். தன்னுடைய 21 ஆண்டு கால திரைப் பயணத்தில் ஆரம்ப காலக் கட்டத்தில் தன்னை வைத்து படமெடுத்து வளர்ச்சிக்கு ஆதரவாக இருந்த 5 தயாரிப்பாளர்களுக்கு நன்றி கூறும் விதமாக தலா…

அஜீத், விஜய் வர மறுப்பு: வீரம், ஜில்லா பாடல்கள் தனியார்…

அஜீத், தமன்னா, விதார்த், பாலா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள படம் 'வீரம்'. 'சிறுத்தை' சிவா டைரக்ட் செய்துள்ளார். படம் பொங்கல் ரிலீஸ். விஜயா புரொடக்ஷன் வெங்கட்ராம ரெட்டி தயாரித்துள்ளார். விஜய், காஜல் அகர்வால் மோகன்லால் நடித்துள்ள படம் ஜில்லா. எஸ்.டி.நேசன் டைரக்ட் செய்துள்ளார். சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி…

பிரச்னையை கிளப்பிய ரஜினியின் பிறந்தநாள் போஸ்டர்

கடந்த டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர். சுவரெங்கும் போஸ்டர்கள் ஒட்டியும், பேனர்கள் கட்டியும் ரஜினி ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர். மேலும் நலத்திட்ட உதவிகள் பல வழங்கியும் விழாவை படு விமர்சையாக கொண்டாடினர். அவ்வாறு கொண்டாடப்பட்ட ரஜினியின் பிறந்த நாள் மூலம்…

நான் ரஜினியின் தீவிர ரசிகன்

நான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் என பாலிவுட் நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார். யஷ்ராஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஹிந்தியில் உருவாகியுள்ள "தூம்-3' திரைப்படம் வரும் 20-ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகிறது. அமீர்கான், அபிஷேக் பச்சன், கேத்ரினா கைஃப் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கியுள்ளார்.…

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை மீண்டும் சோதனை

சென்னை தியாகராய நகரில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் செவ்வாய்க்கிழமை மீண்டும் சோதனை செய்தனர். இது குறித்த விவரம்: வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது வருமான வரித்துறை அண்மைக்காலமாக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கல்வி நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்திய…

விஷால் பக்கம் திரும்பும் ‘ஆக் ஷன்’ பட இயக்குனர்கள்

'செல்லமே' படத்தில் அறிமுகமான விஷால், அதைத் தொடர்ந்து 'காலேஜ் ஸ்டூடன்ட்' என்றொரு அடையாளத்தை உருவாக்கி வைத்து இருந்தார். ஆனால், பாலாவின், 'அவன் இவன்' அவருக்குள் கொட்டிக்கிடந்த திறமையை வெளிப்படுத்த, விஷாலும் குறிப்பிடத்தக்க நடிகரானார். அதன் பின், அவர் நடித்த படங்கள் வெற்றி பெறாததால், தடுமாறி நின்றார். தற்போது, 'பாண்டியநாடு'…

கவுண்டமணி நாயகனாகும் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுண்டமணி ‘49-ஓ’ என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் தொடங்கியது. உடல்நலக் குறைவு காரணமாக சில காலம் நடிக்காமல் இருந்த கவுண்டமணி ‘வாய்மை’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். சாந்தனு நாயகனாக நடிக்கும் இப்படத்தில் கவுண்டமணி டாக்டராக ஒரு…

இளையராஜாவின் இசைக்கு எப்போதுமே நான் அடிமைதான்! – இயக்குனர் மகேந்திரன்

1978ல் முள்ளும் மலரும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மகேந்திரன். அப்படத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடித்திருந்தார். அதையடுத்து உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுகள், நெஞ்சத்தை கிள்ளாதே, மெட்டி, ஜானி, நண்டு உள்பட 12 படங்களை இயக்கியிருக்கிறார். 2006ல் இயக்கிய சாசனம் படத்திற்கு பிறகு அவர் படம் இயக்கவில்லை. இந்நிலையில், சமீபத்தில்…