சர்சையை ஏற்படுத்தியுள்ள இலங்கை பணிப் பெண்னுக்கு சவுதி அரேபியா நிறைவேற்றிய…

இலங்கை பணிப்பெண்னான ரிசானா நஃபீக் 2005 ஆம் ஆண்டில் தனது பராமரிப்பில் இருந்த குழந்தையை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், சவுதி அரேபிய அரசாங்கத்தினால் அவருக்கு மரண தண்டனை தற்போது நிறைவேற்றப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. 4 மாத குழந்தையை கொலை செய்ததாக தன் மீது சுமத்தப்பட்ட…

பிரபாகரன் – கமல்ஹாசன் சுவரொட்டியால் திருச்சியில் பரபரப்பு!

இந்தியாவின் திருச்சியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் தென்னிந்திய நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் கைகுழுக்கிய வண்ணமுள்ள படத்தினைக் கொண்ட சுவரொட்டிகள்  ஒட்டப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விரைவில் திரைக்கு வரவுள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கான  சுவரொட்டிகளிலேயே  இப் படமும் சேர்க்கப்பட்டுள்ளது. குறித்த சுவரொட்டிகளில்  நடிகர் கமல்ஹாசனை…

ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இலங்கை அகதிகள் இந்தியாவில் கைது

ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முயன்ற இலங்கை அகதிகளை தமிழக காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். தமிழகத்தில் மதுரை, ராமேஸ்வரம் மண்டபம் பகுதிகளில் உள்ள பல்வேறு முகாம்களில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் ஒரு முகவர் மூலம் சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியா நாட்டிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டனர். இதற்காக 28 பெண்கள், 10…

யாழ் பல்கலைக் கழகம் மீண்டும் திறப்பு; மாணவர்கள் வருகை குறைவு

ஒரு மாத காலத்திற்கு மேலாக முடங்கியிருந்த யாழ் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும் மாணவர் வருகை மிகவும் குறைந்திருந்ததாகவே தெரிவிக்கப்படுகின்றது. பல்கலைக்கழகத்தின் சில வகுப்புகளுக்கான விரிவுரைகள் மட்டுமே நடைபெற்றதாகவும், இதனால் ஏனைய பாடநெறிகளில் பயிலும் மாணவர்கள் சிலர் பல்கலைக்கழகத்திற்கு வந்துவிட்டுச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை மீறப்படுகின்றது: கனேடிய அமைச்சர்

இலங்கையில் நீதித்துறை சுயாதீனம், அரசியல் நல்லிணக்கம், மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக் கூறல் Read More

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை காரணமாக இலங்கை அகதி தற்கொலை

ஆஸ்திரேலியா, பேர்த் நகரிலுள்ள அகதிகள் முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கை அகதியொருவர் தனது புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்நாட்டு செய்திச் சேவைகள் தெரிவித்துள்ளன. தற்கொலை செய்துகொண்ட நபரின் மனைவியும் பிள்ளையும் இலங்கையில் வசிப்பதாக…

யாழ் பல்கலைக் கழகம் மீண்டும் ஆரம்பிக்கப்படாவிட்டால்; அது மூடப்படும் :…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இன்று முதல் முழுமையாக செயற்படத் தொடங்கும் எனவும் கைது செய்யப்பட்டுள்ள நான்கு மாணவர்களும் தைப்பொங்கலுக்கு முன்னர் விடுவிக்கப்படுவார்கள் என தான் நம்புவதாகவும் இலங்கை உயர்கல்வி அமைச்சர் தெரிவித்தார். எனினும் இன்று திங்கட்கிழமை அப்பல்கலைக்கழகம் முழுமையாக செயற்பட ஆரம்பிக்காவிட்டால், அதை மூடுவது என்றும் கடந்த வாரம் நடைபெற்ற…

பள்ளிவாசலையும், முஸ்லிம்களையும் அகற்றக்கோரி புத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம்

அநுராதபுரத்தில் மல்வத்தை ஓயா என்னும் இடத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றையும், அங்கு வாழும் முஸ்லிம் குடும்பங்களையும் அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று புத்த பிக்குகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. அங்கு அமைந்திருக்கும் பள்ளிவாசல் மற்றும் மதரசா ஆகியவற்றை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும் அங்கு வாழ்ந்து வருகின்ற…

இலங்கையின் வடக்கே பள்ளிக்கூடங்களில் கற்பிக்க இராணுவத்தினர்!

இலங்கையின் வடக்கே பள்ளிக்கூடங்களில் இராணுவத்தினரைக் கொண்டு சிங்கள மொழியை கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. வருட இறுதி விடுமுறையின் பின்னர் முதலாம் தவணைக்காகப் பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்திருக்கின்றன. இந்தச் சந்தர்ப்பத்தில், வடமாகாண கல்வி அமைச்சின் அனுமதியோடு சிங்கள மொழியைக் கற்பிப்பதற்கான செயற்பாடு இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.…

‘தலைமை நீதிபதியை விசாரிக்க நாடாளுமன்ற குழுவுக்கு அதிகாரம் இல்லை’

இலங்கையின் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க இலங்கை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என, இலங்கை அரசியல் சாசனத்துக்கு நாட்டின் உச்சநீதிமன்றம் வழங்கிய விளக்கத்தின் மூலமாக, இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க தொடுத்த இரண்டு மனுக்களை விசாரணைக்கு…

அனைத்துலகத்தின் தலையீடு இல்லாமல் தீர்வு காணமுடியாது : TNA

இலங்கையில் தமிழர்களுக்கான ஓர் அரசியல் தீர்வை அனைத்துல சமூகத்தால் மட்டுமே கொண்டுவரமுடியும் என்றும் அதற்கான அழுத்தத்தை அனைத்துலக சமூகம் இலங்கை அரசுக்கு கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் சிறுபான்மையினருடன் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளும் ஆற்றல் இன்மையையும் விருப்பமின்மையையும் இலங்கை அரசாங்கம் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.…

இலங்கை நீதித்துறை குறித்து ஐநா சிறப்பு பிரதிநிதி கவலை

இலங்கையில் நீதிபதிகளும், நீதித்துறை அதிகாரிகளும் கூடுதலான அச்சுறுத்தல் மற்றும் தாக்குதலுக்கு உள்ளாகின்ற சம்பவங்கள், நீதித்துறையின் சுயாதீனத் தன்மைக்கு ஊறு ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடக் கூடும் என ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி கவலை வெளியிட்டுள்ளார். தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க மீது கொண்டு வரப்படுள்ள பதவி நீக்க…

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் சொந்த நாட்டிற்கே திரும்ப விருப்பம்

ஆஸ்திரேலியாவிற்கு படகு மூலம் சட்டவிரோதமான முறையில் சென்ற மேலும் 30 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் சொந்த நாட்டிற்கே திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களை நெஹ்ரூ தீவு முகாமிற்கு மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதன்போது நெஹ்ரூ தீவு முகாமில் இருப்பதைவிட இலங்கைக்கு திரும்புவது மேலானது என தாம் எண்ணுவதாக…

விசாரணைக்கு வருமாறு கஜேந்திரகுமாருக்கு TID அழைப்பாணை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கை பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவுக்கு விசாரணைக்கு வரவேண்டுமென்று அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு வருமாறு தனது வீட்டுக்கு கடிதம் வந்துள்ளதாகவும், ஆனால் அதற்கு முன்னதாகவே தான் வெளிநாடு சென்றுவிட்டதால், நாடு திரும்பிய பின்னரே விசாரணைக்கு சமுகமளிக்கமுடியும் என்று தனது கட்சியின்…

பிரபாகரன் படத்தை வைத்திருக்கவில்லை : பல்கலைக்கழக மாணவர்கள்

இலங்கையின் வடக்கே யாழ் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் தடைபட்டு இன்றுடன் ஒரு மாதம் பூர்த்தியாகும் நிலையில், அங்கு கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கான வழிவகைகள் குறித்து பல்கலைக்கழக நிரிவாகமும் மற்றும் சம்பந்தப்பட்டவர்களும் முயற்சி மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதன் ஒரு பகுதியாக, யாழ் பல்கலைக்கழகத்தின் முக்கிய பேராசிரியர்கள் குழு…

ஆஸ்திரேலியாவில் ஈரான் மற்றும் இலங்கை தமிழ் அகதிகளிடையே கைகலப்பு

ஆஸ்ரேலியா, மனுஸ் தீவில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அகதிகளுக்கிடையே கிறிஸ்மஸ் தினத்தன்று ஏற்பட்ட கைகலப்பில் 7 பேர் படுகாயமடைந்துள்ளதாக ஆஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன. மனுஸ் தீவு அகதிகள் முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் ஈரான் அகதிகளுக்கும் இடையில் இம்மோதல் இடம்பெற்றுள்ளதாக ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பொவன் உறுதி செய்துள்ளார்.…

விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின்பேரில் 45 தமிழர்கள் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 45 தமிழர்களை இலங்கை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் சரணடையாது நீண்ட காலமாக தலைமறைவாக வாழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட…

ஆயுதம் ஏந்திய போலிஸ் பாதுகாப்புடன் கோவிலுக்கு வந்த இலங்கை அகதி

பூந்தமல்லி இலங்கை அகதிகள் முகாமிலிருந்து அகதி ஒருவர் தமிழக, புதுவை காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் திருநள்ளாறு கோவிலில் சனிக்கிழமை தரிசனம் செய்தார். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிக்கிழமையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீ சனீஸ்வரபகவானை தரிசிக்க வருவர். நிகழ்வாரம் சனிக்கிழமை காலை 12.45 மணிக்கு ஆயுதம் ஏந்திய…

இலங்கையில் வெள்ளத்தின் சீற்றம் இன்னும் குறையவில்லை; 41 பேர் பலி

இலங்கையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழையின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் ஆயிரக்கணக்கானவர்கள் அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள முகாம்களில் தங்கியுள்ளனர். வவுனியாப் பகுதியில் மட்டும் ஆயிரக்கணக்கானவர்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மழையின் காரணமாக வீடுகளில் நீர் புகுந்ததால் வீட்டை விட்டு வெளியேறியவர்கள் பாடசாலைகள்…

கடத்தப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு சிங்களப் படையினர் எச்சரிக்கை

இலங்கையின் கிழக்கே, திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் கிராமத்தில் மக்கள் இலங்கை பாதுகாப்புத் தரப்பினரால் எச்சரிக்கப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் கடந்த காலங்களில் கடத்தப்பட்டு காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஐ.நா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடமோ அல்லது வேறு வெளிநாட்டு நிறுவனங்களிடமோ முறைப்பாடு செய்யக்கூடாது என்றும் இராணுவத்தினர் எச்சரித்துவிட்டுச் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள்…

புலிகள் என்று பொய் சொல்லி ஈழத் தமிழர்களை கைது செய்கின்றனர்…

இலங்கைத் தீவில் வேதனைகளைச் சுமந்து, தமிழகத்தில் ஆறுதலும் அன்பான அரவணைப்பும் தேடி வந்த, ஈழத் தமிழ் இளைஞர்கள் மீது பொய்வழக்குப் போட்டு, சிறையில் அடைப்பது மனிதாபிமானமற்ற செயலாகும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; இலங்கை…

மழை வெள்ளத்தால் இலங்கையில் பெரும் பாதிப்பு; 13 பேர் பலி

இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் மண் சரிவுகள் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் பெண்கள், குழந்தைகள் உட்பட குறைந்தது 13 பேர் உயிழந்துள்ளார்கள். பத்து மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் காரணமாக சுமார் 90,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பலரை இன்னும் காணவில்லை என்று அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த…

இலங்கையில் கிழக்கே கரையைநோக்கி கடல்பாம்புகள் படையெடுப்பு- பீதியில் மக்கள்!

மட்டக்களப்பு: இலங்கையில் சிவப்பு மழை, விண்கற்கள் விழுதல், நாய்களின் மர்ம மரணம் போன்றவற்றைத் தொடர்ந்து புதிய பீதியாக கடல் பாம்புகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வந்திருக்கின்றன. தமிழர் பிரதேசமான இலங்கையின் கிழக்கில் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழ் உள்ள குளத்தில் பெரும் எண்ணிக்கையிலான பாம்புகள் நேற்று காலை படையெடுத்திருக்கின்றன.…