ஆசிய அரியமண் ஆலை மீதான தீர்மானத்துக்கு அனுமதி

புக்கிட் மேராவில் கைவிடப்பட்ட Asian Rare Earth(ஏஆர்இ)ஆலையிலிருந்தும்,ஈப்போவில் புக்கிட் கெலேடாங்கில் உள்ள அவ்வாலையின் கழிவுகொட்டும் இடத்திலிருந்தும் மிதமிஞ்சிய அளவில் கதிரியக்கம் வெளிப்படுவதாகக் கூறப்படுவது பற்றி விவாதம் நடத்தக் கோரிக்கை விடுக்கும் தீர்மானத்தை மக்களவை ஏற்றுக்கொண்டிருக்கிறது. நேற்று, பத்து காஜா டிஏபி எம்பி போங் போ குவான் அத்தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.…

பாரிசானின் தோல்வி காலத்தின் கட்டாயம்!

ரஜிப்: கோமாளி, பாரிசான் புத்ரஜெயாவை இழக்குமா? கோமாளி: ரஜிப், உனக்கு கிலி பிடித்துவிட்டதுபோல் இருக்கிறது உனது கேள்வி. "நான் என்ன பிரதமரா? கிலி பிடிப்பதற்கு" என்று கேட்பதும் எனது காதில் விழுகிறது. நீ பிரதமராக இல்லாவிட்டால் கூட, மத்திய அரசை ஆளும் பாரிசானை கொண்டு நாட்டை சுரண்டும் பலருக்கு…

நஜிப்: தீங்கானது எனத் தெரிந்தால் அரசாங்கம் லினாஸை மூடும்

குவாந்தான், கெபெங்கில் அமையும் லினாஸ் அரிய மண் தொழில் கூடம் மக்களுடைய ஆரோக்கியத்துக்கும் சுற்றுச் சூழலுக்கும் கேடு விளைவிக்கும் என அறிவியல் ஆதாரங்கள் மெய்பிக்குமானால் அரசாங்கம் அந்தத் தொழில் கூடம் இயங்குவதற்கு அனுமதிக்காது எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். "நாங்கள் அதில் சமரசம் செய்து கொள்ள…

டைம் கண்ணோட்டம் விரிவான தேர்தல் மோசடியைப் பார்க்கத் தவறி விட்டது

"'நஜிப் வீரர்கள் இல்லாத ஜெனரல்' என தாங்கள் வருணித்துள்ளது மிகவும் பொருத்தமானது. மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் உள்ள எலிகளைப் போன்று நஜிப்-பை விட்டு ஒடுவது தான் அவரது சேவகர்களுக்கு உள்ள ஒரே வழியாகும்." டைம்: பிஎன்-னுக்கு  13வது பொதுத் தேர்தலில் மூன்று மாநிலங்கள் மட்டுமே பாதுகாப்பானவை ருபீ ஸ்டார்_4037:…

பினாங்கில் கெரக்கானின் தெங்-கிற்கு இடம் இல்லையா?

ஆரூடங்கள் உண்மையானால் அடுத்த பொதுத் தேர்தலில் பினாங்கில் அந்த மாநில கெரக்கான் தலைவர் களத்தில் இறக்கப்பட மாட்டார். பினாங்கில் உத்தேச முழு வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு கட்சித் தலைவர் கோ சூ கூன் -னிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறின. அந்தப் பட்டியலில் தெங்-கின் பெயர் இல்லை என…

பெர்ஜாசா 40-50 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும்

பார்டி பாரிசான் ஜும்மா இஸ்லாமியா செமலேசியா (பெர்ஜாசா) அடுத்த பொதுத் தேர்தலில் நாட்டின் பல மாநிலங்களில் குறிப்பாக கிளந்தானிலும் கெடாவிலும் 40-50 நாடாளுமன்றத் தொகுதிகளில் களம் இறங்கப் போவதாக இன்று அறிவித்தது. 20 இடங்களிலாவது வெற்றிபெற முடியும் என்று கட்சி நம்பிக்கை கொண்டிருப்பதாக 13வது பொதுத் தேர்தலுக்கான அதன்…