கே.எல். மளிகைக் கடைகளில் மது விற்பனைக்குத் தடை – மஇகா…

டிசம்பர் 15 முதல், நடைமுறைக்கு வரும் மதுபான உரிமங்கள் குறித்தப் புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்த கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டி.பி.கே.எல்) எடுத்துள்ள முடிவை கூட்டரசுப் பிரதேச மஇகா வரவேற்றுள்ளது. மேலும் இது, கோலாலம்பூரில் உள்ள மளிகைக் கடைகள், பல்வகை பொருள்கள் விற்கும் கடைகள் மற்றும் சீன மருந்துக் கடைகளில்…

`எது நாட்டிற்கு அதிகப் பாதிப்பை ஏற்படுத்துகிறது – ஊழலா மதுபானமா?’

நாடு முழுவதும் மளிகைக் கடைகள் மற்றும் பல்வகைப் பொருள் விற்பனைக் கடைகளில் மதுபானம் விற்பனை செய்வதற்கானத் தடையை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த அஹ்மத் மர்சுக் ஷாரியின் அறிக்கையை <em>பெட்ரியோட்</em> (தேசபக்தி) தலைவர் மொஹமட் அர்ஷத் இராஜி கண்டித்தார். அடுத்த ஆண்டு அக்டோபர் முதல், கோலாலம்பூரில் இத்தடையை அறிமுகப்படுத்தப் போவதாகக்…

`ஓய்வுபெற்ற ஜி.எல்.சி.க்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர், ஒருசிலருக்கு மாதம் RM180 மட்டுமே ஓய்வூதியம்’…

அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களில் (ஜி.எல்.சி.) வேலை செய்து, ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியத்தைப் புத்ராஜெயா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தொழிற்சங்கம் ஒன்று வலியுறுத்தியுள்ளது. இந்தக் குழுவினர் நீண்ட காலமாக அரசாங்கத்தின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டிருப்பதாக, மலேசிய சர்வதேசத் தொழிற்சங்க மன்றம் (UNI-Malaysia Labour Centre…

1எம்.டி.பி. – கோல்ட்மேன் சாச்ஸ், அரசாங்கம் இடையிலான இரகசியத்தன்மை விதி…

"இரகசியத்தன்மை விதி" காரணமாக, அரசாங்கம், 1எம்.டி.பி மற்றும் கோல்ட்மேன் சாச்ஸ் இடையேயான 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிட வேண்டாம் என்ற தேசிய கூட்டணி அரசாங்கத்தின் முடிவு குறித்து சுதந்திரமான பத்திரிக்கை மையம் (Pusat Jurnalisme Bebas - சி.ஐ.ஜே) கேள்வி எழுப்பியுள்ளது. அந்த முடிவில்…

இந்த வாரம் பட்ஜெட்`டுக்கான வாக்கெடுப்பு, பி.என். மீதான அம்னோவின் விசுவாசத்திற்கு…

மக்களவை | இரண்டு வார மக்களவை விவாதத்திற்குப் பிறகு, 2021 வரவு செலவு திட்டத்திற்கான முதல் வாக்கெடுப்பு இந்த வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் கூட்டணியான தேசியக் கூட்டணிக்கு இது ஒரு முக்கியமான சோதனைக் களமாக இருக்கும், குறிப்பாக அம்னோவின் ஆதரவில். 2021 வரவுசெலவு திட்டம் தொடர்பான…

`முஹைதீன்-அஸ்மினைச் சத்தமில்லாமல் ஆதரிக்கிறார் டாக்டர் எம்` – ஏ.எம்.கே.

பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம் மீதான தனது தாக்குதலை, பிரதமர் முஹைதீன் யாசின் மற்றும் பொருளாதார விவகாரத்துறை அமைச்சர் மொஹமட் அஸ்மின் அலியை ஆதரிப்பதன் மூலம் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமது வெளிப்படுத்தி வருகிறார் என பி.கே.ஆர் இளைஞர் (ஏ.எம்.கே.) விவரித்துள்ளது. பக்காத்தான் ஹராப்பானின் (பி.எச்.) வீழ்ச்சியை…

கோவிட் 19 : சபாவைவிட சிலாங்கூரில் அதிகப் புதியப் பாதிப்புகள்,…

இன்று மதிய நிலவரப்படி 1,041 புதிய கோவிட் -19 பாதிப்புகள் மற்றும் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சிலாங்கூரில் 402, சபாவில் 346 மற்றும் நெகிரி செம்பிலான் 121 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதேவேளையில், 1,405 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றைய 3 மரணங்களும்…

கருத்து : ‘தேசியக் கூட்டணி அரசாங்கம் ஓராங் அஸ்லியைப் புறக்கணிக்கிறது’

பி இராமசாமி | மலேசியாவில் உள்ள ஓராங் அஸ்லி சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினைகளைப் பணத்தால் மட்டும் தீர்க்க முடியாது எனும் ஓராங் அஸ்லி ஆர்வலர்களின் கருத்தை நான் ஒப்புக்கொள்கிறேன். பிரிட்டிஷ் காலனித்துவக் காலத்தில், கம்யூனிஸ்டுகளின் ஆயுதமேந்திய கிளர்ச்சியை வேவுபார்த்து உளவுத்துறையிடம் வழங்கியதால் ஓராங் அஸ்லி சமூகத்திற்கு மரியாதை அளிக்கப்பட்டது.…

டாக்டர் எம் : அன்வர் என்னை நிராகரித்ததால், பிஎச் அரசாங்கத்தைக்…

பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம், தன்னை ஏற்க மறுத்ததால்தான் புத்ராஜெயாவைத் திரும்பப் பெறுவதற்கான பக்காத்தான் ஹராப்பானின் (பி.எச்.) முயற்சி தோல்வியடைந்தது என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமது கூறியுள்ளார். "தேசியக் கூட்டணி அரசாங்கத்தை அகற்றுவதற்கான முயற்சிகளைப் பி.எச். தொடர்கின்றது. எனது கட்சியும் எனது ஆதரவாளர்களும் இந்த முயற்சியில்…

அஸ்ரஃப் : `பெர்சத்து இல்லை என்றால் அம்னோவை நிராகரிப்போம்’, பாஸ்-சின்…

அம்னோ இளைஞர் தலைவர் அஸ்ரஃப் வாஜ்டி துசுகி, தேசிய முன்னணி தலைமைச்செயலாளர் அன்னுவார் மூசாவின் குற்றச்சாட்டை விவரித்தார், அம்னோவும் பெர்சத்துவும் நட்புடன் இருக்க வேண்டும் என்று பாஸ் வலியுறுத்தியது "தவறானது" என்று கூறியுள்ளார். "கடந்த புதன்கிழமை, தேசிய ஒற்றுமை (Muafakat Nasional) ஆலோசனைக் குழுவின் முடிவில், பூமிபுத்ரா, மாலாய்க்காரர்கள்…

கட்டுப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிகளை அனுமதிக்குமாறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு சேவை சங்கம் அரசிடம்…

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.பி) அமல்படுத்திய பின்னர், மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் ஏற்பாடு சேவைத் துறையில் சிறப்பு கவனம் செலுத்துமாறு, மலேசிய இந்திய நிகழ்ச்சிகள் ஏற்பாடு சேவை சங்கம் (எம்.ஐ.ஏ.இ.) பிரதமர் முஹைதீன் யாசினுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. காரணம், கோவிட் -19 தொற்றுநோய்யின் போது இந்தத் தொழில்துறை…

ரோன்95, ரோன்97 இரண்டு காசுகளும், டீசல் ஏழு காசுகளும் ஏற்றம்

ரோன்95 மற்றும் ரோன்97 பெட்ரோலின் சில்லறை விலைகள் லிட்டருக்கு இரண்டு சென்னும், டீசலின் விலை லிட்டருக்கு ஏழு சென்னும் உயர்ந்துள்ளது. இது இன்று நள்ளிரவு தொடங்கம், அடுத்த ஒரு வாரத்திற்கு நடைமுறையில் இருக்கும். பெட்ரோலியப் பொருட்களின் வாராந்திர சில்லறை விலையின் அடிப்படையில், ரோன் 95-க்கான புதிய விலை லிட்டருக்கு…

கோவிட் 19 : இன்று 958 புதியத் தொற்றுகள், 3…

நாட்டில், இன்று மதியம் நிலவரப்படி, 958 கோவிட் -19 புதியத் தொற்றுகள் மற்றும் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சபாவில் அதிக எண்ணிக்கையிலான (53.4 %) புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன, அதற்கடுத்த நிலையில் கிள்ளான் பள்ளத்தாக்கு (29.9 %) மற்றும் நெகிரி செம்பிலானில் (16%) எனப்…

கிளந்தானில் நாளை தொடங்கி பி.கே.பி.பி. – இஸ்மாயில் சப்ரி

கோவிட் -19 தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து, நவம்பர் 21-ம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி.) செயல்படுத்தப்பட்டதாக மூத்த அமைச்சர் (தற்காப்பு துறை) இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். இலக்கு அமைக்கப்பட்ட திரையிடலை நடத்துவதற்கும், மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையில் குடியிருப்பாளர்களின் நடமாட்டத்தைக்…

பி.டி.பி.டி.என். கடனை 30 விழுக்காட்டுக்கும் குறைவானவர்கள் திருப்பிச் செலுத்துகின்றனர்

தேசிய உயர்க்கல்வி நிதிக் கழகத்திடம் (பி.டி.பி.டி.என்.) கடன் வாங்கிய 1.5 மில்லியன் பேரில், 422,609 பேர், அதாவது 28.17 விழுக்காட்டினர் மட்டுமே, கடந்த அக்டோபர் தொடங்கி கடன்களைத் திருப்பிச் செலுத்துகின்றனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் RM37.65 மில்லியனாக இருந்த கடன் வசூல், தற்போது RM103.03 மில்லியனாக அதிகரித்துள்ளது, இது…

10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன, பாலசுந்தரத்திற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை

விமர்சனம் | சாதாரண மக்கள் நலனுக்காகப் போராடி வந்த வழக்குரைஞர் ஜி பாலசுந்தரம் கொடூரமாகக் கொல்லப்பட்டு, 10 ஆண்டுகள் கடந்துவிட்டன, ஆனால் இன்றுவரை அவருக்கு நீதி கிடைக்கவே இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன் ஒருநாள், அவரது வீட்டிற்கு வெளியே, காரில் இருந்து இறங்கியவரைக், கத்தியால் கொடூரமாகக் குத்தி கொன்றனர்.…

பாஸ் அம்னோவுடன் ஜிஇ15-க்குச் செல்லாது – அன்னுவார்

அடுத்த பொதுத் தேர்தலுக்கு (ஜிஇ), பாஸ் கட்சியுடன் மட்டும் களமிறங்க வேண்டும் எனும் அம்னோவின் திட்டம் இனி இல்லை என்று தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அன்னுவார் மூசா கூறினார். பெர்சத்து-வுடனும் அம்னோ கூட்டு சேர வேண்டும் என்று பாஸ் வலியுறுத்துவதே இதற்குக் காரணம் என்று அவர் சொன்னார்.…

நஜிப் : மக்கள் நலனுக்காக, துரோகி என்று அழைக்கப்படுவது ஓர்…

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் தலைவிதியைப் பாதுகாப்பதற்காக, அவருக்கு கெட்டப் பெயர் கிடைத்தாலும் ஏற்கத் தயாராக இருப்பதாகக் கூறினார். உண்மையில், நீண்ட காலத்திற்கு முன்பே "அத்தோக் மற்றும் அவரது கும்பல்" மூலம் பல்வேறு அழைப்புகளைப் பெற்றுவிட்டதாக அவர் கூறினார். "பல ஆண்டுகளுக்கு…

கோவிட் 19 : இன்று 1,290 புதியத் தொற்றுகள், 4…

நாட்டில், இன்று நண்பகல் வரையில், 1,210 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவான நிலையில், 878 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சபாவில் அதிக எண்ணிக்கையிலான (51.2 %) புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன, அதற்கடுத்த நிலையில் கிள்ளான் பள்ளத்தாக்கு (37.1 %) மற்றும் பேராக்…

சட்டமன்ற, ஆட்சிக்குழு உறுப்பினர்களின் சம்பளத்தைக் குறைக்க பினாங்கு ஆலோசித்து வருகிறது

கோவிட்-19 தொற்றுநோய் சவால்களை எதிர்கொள்ள, பினாங்கு ஆட்சிக்குழு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய அம்மாநில அரசு பரிசீலிக்க உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில், இதே நடவடிக்கையை மாநில அரசு நடைமுறைப்படுத்தியதாக மாநில முதல்வர் சோவ் கோன் யோவ் கூறினார். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சியினர் உட்பட…

2021 பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்ட முனைமுகத் தொழிலாளர்கள்

கடந்த நவம்பர் 6-ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2021-ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம், கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடிவரும் முனைமுகத் தொழிலாளர்களைப் (fronliners)  புறக்கணிப்பு செய்திருக்கிறது என்பதால், அதனை ஏற்க முடியாது என அரசு குத்தகைத் தொழிலாளர்கள் சங்கம் (ஜே.பி.கே.கே) தெரிவித்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்த்துப் போராடும் அனைத்து ஊழியர்களையும் முனைமுகத்…

‘சீனர்கள் அம்னோவை அதிகம் ஆதரிக்கிறார்கள்’, என்றக் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்குமா மசீச?

கருத்து | டிஏபி-ஐ விட, அதிகமான சீனர்கள் அம்னோவை ஆதரிப்பதாகக் கூறும் ‘எமிர் ரிசர்ச்’ ஆய்வின் கண்டுபிடிப்புகள் அபத்தமானவை, கேலிக்குரியவை, ஆனால் இதில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அம்னோவுக்கு மசீச-வைவிட இரண்டு மடங்கு அதிகமான ஆதரவு கிடைத்திருப்பது. மசீச-வுக்கு என்ன நேர்ந்தது? இந்தக் கேள்விக்குக் பதிலளிக்க மசீச…

ஏர் ஏசியா முதலாளி ஸ்காட்லாந்தில் உள்ள சொத்தை விற்கிறார்

ஏர் ஏசியா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தோனி ஃபெர்னாண்டஸ், ஸ்காட்லாந்து, அயர்ஷையரில் உள்ள, 2.5 மில்லியன் பவுண்டுகள் அல்லது RM13.55 மில்லியன் மதிப்புள்ள தனது சொத்தை விற்றதாகக் கூறப்படுகிறது. ஏஜென்சியை மேற்கோள் காட்டி, பெரித்தா ஹரியான் இணையச் செய்திகளின் படி, குயின்ஸ் பார்க் ரேஞ்சர்ஸ் காற்பந்து அணியின்…