மலேசிய மருத்துவச் சங்கம், வழக்குகள் தீர்வு காணப்படாமலும் அல்லது எந்தவித முன்னேற்றத் தகவலும் வழங்கப்படாமலும் பல மாதங்களுக்கு இழுத்தடிக்கப்படக் கூடாது என்று கூறுகிறது. மலேசிய மருத்துவ சங்கம், புகாரளித்தவர் அல்லது சாட்சியாளர் ஒருவர் தனது புகாரைத் திரும்பப் பெறவோ அல்லது அதில் மாற்றம் செய்யவோ அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும்…
1எம்டிபி தொடர்பான போலி செய்திகளைப் பரப்பினால், அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்
தவறான செய்திகள், குறிப்பாக 1எம்டிபி தொடர்பான அவதூறு செய்திகள் வெளியிடுகின்ற தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தொலைத் தொடர்பு, பல்லூடக அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது, மலேசியத் தொலைத் தொடர்பு, பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) ஊடாக, தனது அமைச்சு இந்த விவகாரத்தைக் கண்காணித்து வருவதாக அதன் துணை அமைச்சர் ஜய்லானி…
கு நான்: தண்ணீர் பிரச்சனைக்கு ஹரப்பான் மற்றவர்கள் மீது பழி…
சிலாங்கூர் மாநிலத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனைக்கு மாநில மந்திரி பெசார் முகமட் அஸ்மின் அலி மத்திய அரசு, குறிப்பாக பிரதமர் நஜிப் ரசாக் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியிருப்பதை கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் நிராகரித்தார். அவர்கள் மற்றவர்கள் மீது குற்றம்…
பினாங்கு பிகேஆர், அமனா நான்கு இருக்கைகளை பெர்சத்துவுக்கு விட்டுக்கொடுக்கின்றன
பினாங்கு ஹரப்பான் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான இருக்கைகள் ஒதுக்கீடு குறித்து எதிர்க்கட்சிகளின் 10 ஆண்டு மாநில ஆட்சி கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இன்றிரவு நடக்கும் அந்நிகழ்ச்சியில் மாநில ஹரப்பான் தலைவர் லிம் குவான் எங் ஹரப்பான் இருக்கை ஒதுக்கீடுகள் குறித்த வதந்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி…
ரேலாவுக்கு ஒதுக்கீடு, படி அதிகரிப்பு, இன்னும் அதிகமாகத் தருவேன் என்கிறார்…
ரேலாவுக்கு (மக்கள் தொண்டர் படைப் பிரிவு) ரிம20 மில்லியன் கூடுதல் நிதி ஒதுக்கீட்டை இன்று பிரதமர் நஜிப் அறிவித்தார். இது இவ்வாண்டில் கொடுக்கப்பட்டு விட்ட ரிம100 மில்லியனுக்கு மேலாக கொடுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு சீருடைக்காக ரிம80 மில்லியன் கொடுக்கப்பட்டது, இவ்வாண்டு ரிம100 மில்லியன் கொடுக்கப்பட்டது. அந்த ரிம180…
மசீச பண்டார் துன் ரசாக்கை அம்னோவுக்கு விட்டுக்கொடுக்குமா?
பண்டார் துன் ரசாக் கோலாலும்பூரின் தெற்கே உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதி. அங்கு 1999-இலிருந்து மசீசதான் போட்டியிட்டு வருகிறது. 2008-இலும் 2013-இலும் அங்கு அது தோல்வி கண்டது. இம்முறை அது அத்தொகுதியில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளது. ஆனால், இம்முறை அம்னோவும் அத்தொகுதியைக் குறி வைத்துள்ளது. ஒரு …
ஆர்ஓஎஸ் அம்னோவுக்காக வேகமாக செயல்படுகிறது, ஹரப்பான் என்றால் இழுத்தடிக்கிறது: மகாதிர்…
அம்னோ அதன் கட்சி நெருக்கடிக்குத் தீர்வுகாண உதவுவதில் அதிவேகமாக செயல்படும் சங்கப் பதிவகம்(ஆர்ஓஎஸ்) எதிர்க்கட்சிகளைப் பதிவு செய்வதை மட்டும் இழுத்தடிக்கிறது என்று பக்கத்தான் ஹரப்பான் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட் சாடினார். ஆர்ஓஎஸ் பாரபட்சத்துடன் நடந்துகொள்வதற்கு இது தெள்ளத்தெளிவான எடுத்துக்காட்டு என்றவர் முகநூல் காணொளி ஒன்றில் குற்றஞ்சாட்டினார். “ஹரப்பான் …
இசி, ஆட்சேபனைகளைச் செவிமடுக்க மறுப்பது அரசமைப்பு மீறலாகும்
தேர்தல் ஆணையம் (இசி), தேர்தல் எல்லைகள் திருத்தி அமைத்த பிறகு அதற்கெதிரான ஆட்சேபனைகளைக் கேட்டு முடிக்காமல் இறுதி அறிக்கையைத் தயார் செய்தததன்வழி அரசமைப்பை மீறிவிட்டது. இவ்வாறு கூறிய பெர்சே இடைக்காலத் தலைவர் ஷாருல் முகம்மட் சாரி, சிலாங்கூரில் இரண்டாவது சுற்று விசாரணைகளில் இதுவரை 20விழுக்காடு ஆட்சேபனைகள் மட்டுமே செவிமடுக்கப்பட்டிருப்பதாகத் …
பெர்சத்து ஒரு மாதத்திற்குள் பதில் அளிக்க வேண்டும், இல்லையேல் பதிவு…
பெர்சத்து எழுப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில் மற்றும் தேவையான ஆவணங்கள் ஆகியவற்றை 30 நாள்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும், இல்லையேல் அக்கட்சியின் பதிவு இரத்து செய்யப்படும் என்று மன்றங்களின் பதிவாளர் (ரோஸ்) இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார். பெர்சத்து உறுப்பினர்களிடமிருந்து பெற்ற புகார்களைத் தொடர்ந்து கடந்த பெப்ரவரி…
குவான் எங்: ஹரப்பானும் பிரிம் கொடுக்க முடியும், பினாங்கைப் பின்பற்றுங்கள்
பக்கத்தான் ஹரப்பான் ஆட்சிக்கு வந்தால் பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி) இன்றி அதனால் 1மலேசியா மக்கள் உதவித் தொகை (பிரிம்) வழங்க முடியுமா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்குப் பதிலளித்த பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், ஜிஎஸ்டி இல்லாவிட்டாலும்கூட ஹரப்பானால் மக்களுக்குத் தொடர்ந்து உதவித் தொகை கொடுக்க முடியும் …
1எம்டிபி- தொடர்பு நிதிகளை மலேசியர்களுக்கே திருப்பிக் கொடுப்பீர்: சுவிட்சர்லாந்துக்கு என்ஜிஓ-கள்…
சுவிட்சர்லாந்தில் கோரிக்கையற்றுக் கிடக்கும் சுமார் ரிம400மில்லியனை மலேசியர்களுக்குத் திருப்பிக் கொடுப்பதா வேண்டாமா என்ற தீர்மானத்தின்மீது சுவீஸ் நாடாளுமன்றம் விவாதம் நடத்துவதற்கு முன்னதாக, மலேசிய என்ஜிஓ-கள் மலேசியர்களுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு சுவீஸ் எம்பிகளைக் கேட்டுக்கொண்டுள்ளன. “பறிமுதல் செய்யப்பட்ட நிதிகளைப் பறிகொடுத்த மக்களிடமே திருப்பிக் கொடுத்தல்” என்ற தீர்மானம் அடுத்த வியாழக்கிழமை …
ரானாவில் மீண்டும் ஒரு நில நடுக்கம்
இன்று காலை மணி 8.09க்கு மீண்டும் ஒரு நில நடுக்கம் சாபாவை உலுக்கியது. ரிக்டர் கருவியில் 3.1 என்று பதிவான அந்த நில நில நடுக்கம் ரானாவுக்கு 16கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்ததாக வானியல் ஆய்வுத் துறை ஓர் அறிக்கையில் கூறியது. “நில நடுக்கத்தன் அதிர்வுகள் ரானாவில் உணரப்பட்டன”, …
டாக்டர் எம்: நஜிப் குறைந்தது 62 தவறுகள் செய்துள்ளார்
பிரதமர் நஜிப் ரசாக், 2009-ல் பதவி ஏற்றதிலிருந்து, குறைந்த பட்சம் 62 குற்றங்களைச் செய்துள்ளார் என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதிர் குற்றஞ்சாட்டினார். "நான் அவரது குற்றங்களைப் பட்டியலிட்டுள்ளேன். இன்றுவரை நஜிப் செய்த 60 தவறுகளை நான் கண்டறிந்துள்ளேன்," என்று நேற்று பக்காத்தான் ஹராப்பான் தேர்தல்…
ஜொகூர் பாகோவில், அம்னோ இயந்திரத்தின் மாபெரும் மாநாடு
14-வது பொதுத் தேர்தலுக்கான கட்சி இயந்திரத் தொடக்க குறியீடாக, அம்னோ இளைஞர் மற்றும் புத்திரி இயந்திரங்களை ஒன்று திரட்டும் தேசிய அளவிலான ஒரு மாபெரும் மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. ஜொகூர், பாகோவில் தேசிய இளைஞர் திறன் கல்வி நிறுவனத்தில் (ஐ.கே.பீ.என்) இடம்பெறவுள்ள அந்நிகழ்ச்சியை, பிரதமரும் அம்னோ தலைவருமான…
சனுசி ஜுனிட் காலமானார்
முக்ரிஸ் மஹாதீர் எஃப்.சி. முகநூலின் கூற்றுப்படி, பந்தாய் டாலாமில் உள்ள அவரது இருப்பிடத்தில், இன்று காலை அவர் காலமானார். சனிக்கிழமை, காலை 6 மணியளவில், அதிகாலை பிரார்த்தனைக்காக காத்திருந்தபோது, அவர் இறந்ததாக அவரின் மகன் சொன்னார். அவருக்கு வயது 75. கோலாலம்பூர், புக்கிட் டாமான்சாரா, சைடினா பள்ளிவாசலில் தொழுகைக்குப்…
ஹரப்பான் தேர்தல் அறிக்கை: நாடற்ற இந்தியர்களின் பிரச்சனை 100 நாள்களுக்குள்…
பக்கத்தான் ஹரப்பான் இன்றிரவு ஷா அலாமில் வெளியிட்ட அதன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடத்தக்க ஓர் அம்சம் இந்நாட்டிலுள்ள நாடற்ற இந்தியர்களின் நிலமைக்கு உடனடியாகத் தீர்வு காண்பதாகும். "ஹரப்பான் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றினால், நாடற்ற இந்தியர்களின் பிரச்சனை 100 நாள்களுக்குள் தீர்க்கப்படும்", என்று ஹரப்பான் தேர்தல் அறிக்கை கூறுகிறது. ஹரப்பான்…
சிலாங்கூரில் தண்ணீர் இல்லை, ஜோகூருக்கு இலவச தண்ணீரா? ஹரப்பான்மீது அமைச்சர்…
பக்கத்தான் ஹரப்பான் அதன் தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள இலவச தண்ணீர் உள்பட பல்வேறு வாக்குறுதிகளை ஜோகூர் மக்கள் நம்ப மாட்டார்கள் என்கிறார் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேன். “முந்தைய தேர்தல் அறிக்கைகளில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையே நிறைவேற்றவில்லை. இப்போது சொல்வதை எப்படி நம்புவது?”, என்றவர் வினவினார். ஹிஷாமுடின் இன்று நாடாளுமன்ற …
சிலாங்கூர் ஹரப்பான் தொகுதிப் பங்கீடு: இன்னும் ஆறு தொகுதிகளுக்குத் தீர்வு…
சிலாங்கூர் பக்கத்தான் ஹரப்பானின் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுகள் இன்னும் ஒரு நிறைவுக்கு வரவில்லை. நேற்று மூன்றாவது தடவையாக அப்பேச்சுகள் நடைபெற்றதாகக் கூறிய சிலாங்கூர் பக்கத்தான் செயலாளர் சுரைடா கமருடின், இன்னும் ஆறு தொகுதிகளை யாருக்கு ஒதுக்குவது என்ற விவகாரம் இழுத்துக்கொண்டே செல்வதாக தெரிவித்தார். சுங்கை பூரோங், சுங்கை பாஞ்சாங், …
‘மலேசியர்கள் பொருள் விலைகள் குறித்து பெருமைப்படலாம், சிங்கப்பூரில் விலைகள் 70விழுக்காடு…
மலேசியாவுடன் ஒப்பிடும்போது சிங்கப்பூரில் பொருள் விலைகள் 70 விழுக்காடு அதிகமாகும் என்பதை எண்ணி மலேசியர்கள் பெருமை கொள்ளலாம் என உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டு விவகார அமைச்சர் ஹம்சா சைனுடின் கூறினார். இன்று மக்களவையில், பொருள் விலைகளைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் கடப்பாடு குறித்து வினவிய ஜி.மணிவண்ணனுக்குப் பதிலளிக்கையில் அமைச்சர் …
சிஐடி தலைவர் விவகாரம் ஒரு தனித்த சம்பவம் அல்ல- டிஏபி…
பிள்ளைகளை வெளிநாடுகளுக்குப் படிக்க அனுப்பி வைத்த புக்கிட் அமான் சிஐடி தலைவர் வான் அஹ்மட் நஜ்முடின் அதற்காகும் செலவுகளை எப்படிச் சமாளிக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இப்படி கேள்வி கேட்கப்பட வேண்டிய போலீஸ் அதிகாரி இவர் ஒருவர் மட்டுமல்ல, இன்னும் பலர் இருக்கிறார்கள் என்கிறார் செகாம்புட் எம்பி …
மகாதீர் என் முன்னாள் சீஃபூ, என்றார் நஸ்ரி
மலேசியாகினி உடனான ஒரு சிறப்பு நேர்காணலில், சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜீஸ், பெயர்கள், இடங்கள் அல்லது பொருள்களைப் பற்றி கேட்கும் கேள்விகளுக்கு அவருடைய மனதில் தோன்றுவதை சட்டென அவர் குறிப்பிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. அப்போது கேட்கப்பட்ட கேள்விகளில், துன் டாக்டர் மகாதீர் முகமட்…
மகாதிர்: பெர்சே-இல் கலந்துகொண்ட பிறகு, நான் என் பார்வையை மாற்றிக்கொண்டேன்
பெர்சே 4 மற்றும் 5 பேரணிகளில் கலந்துகொண்ட பின்னர், பெர்சே தேர்தல் சீர்திருத்த கூட்டணி மீதான தனது கருத்துக்களில் மாற்றம் ஏற்பட்டதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் கூறினார். பெர்சே 3-க்குப் பிறகு, அப்பேரணியின் எதிர்காலம் மேலும் வன்முறையில் இருக்கும் என தான் கூறியதையும் மகாதிர்…
1எம்டிபி கேள்விகளை நிராகரித்த பண்டிகார் பதவி விலக வேண்டும்: டிஏபி…
தொழில் அதிபர் ஜோ லோ-வின் ஆடம்பரப் படகு கைப்பற்றப்பட்ட சம்பவம் மீதான அவசரத் தீர்மானத்தையும் 1எம்டிபி தொடர்பான கேள்விகளையும் நிராகரித்த மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா பதவி விலக வேண்டும் என மூன்று டிஏபி எம்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ங்கா கொர் மிங்(தைப்பிங்), ங்கே கூ ஹாம்(புருவாஸ்), …
பினாங்குச் சுரங்கப்பாதை வழக்கு: அம்னோ எம்பி ரிம3 மில்லியன் கையூட்டு…
பினாங்கு கடலடிச் சுரங்கப் பாதைத் திட்டம் மீதான விசாரணையை நிறுத்த அம்னோவின் பாலிங் எம்பி அப்துல் அசீஸ் ரகிம், ரிம3 மில்லியன் கையூட்டு பெற்றதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை என எம்ஏசிசி கூறியுள்ளது. “கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆராய்ந்து பார்த்ததில் அவருக்கு இவ்விவகாரத்தில் தொடர்பில்லை என்பது தெரிய வந்துள்ளது”, என …













