சமீபத்தில் செகாமட்டில் மூன்று உயிர்களைப் பலிவாங்கிய விபத்தில் தொடர்புடைய டிரெய்லர் நிறுவனம் குறித்து உடனடியாக தணிக்கை மற்றும் விசாரணை நடத்துமாறு சாலைப் போக்குவரத்துத் துறை (RTD) மற்றும் நிலப் பொதுப் போக்குவரத்து முகமை (Apad) ஆகியவற்றுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மெத்தாம்பேட்டமைன் (methamphetamine) போதைப்பொருள் பரிசோதனையில் நேர்மறை முடிவைப் பெற்ற தனது…
சந்துபோங் மலையில் சிக்கிக்கொண்ட 12பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்
சந்துபோங் மலை ஏறிவிட்டு இறங்கிக் கொண்டிருந்தபோது வழியில் சிக்கிக்கொண்ட 12மலையேறிகளைத் தீயணைப்புப் படையினர் பத்திரமாக மலையடிவாரத்துக்கு அழைத்து வந்தனர். மாலை மணி 5.30 அளவில் அவசர அழைப்பு வந்தது என்றும் உடனடியாக எண்மர் அடங்கிய மீட்புக்குழு சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு அனுப்பப்பட்டனர் என்றும் தீயணைப்பு, மீட்புத் துறை பேச்சாளர் …
எம்பி சார்ல்ஸ் போலீஸ் புகார்: இசியின் செயல்கள் ஜனநாயகத்திற்கு தீங்கானவை
தேர்தல் ஆணையம் (இசி) செய்துள்ள தேர்தல் தொகுதி மறு சீரமைப்பினால் தொகுதிகளுக்கிடையிலான அளவில் காணப்படும் பெருத்த வித்தியாசம் நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கு தீங்கானது என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகு இன்று செய்த போலீஸ் புகாரில் கூறியுள்ளார். தமது கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியை மேற்கோள் காட்டிய…
பெர்சே, சிவப்புச் சட்டையினருக்கிடையில் மோதல்
முதல் முறையாக இன்று தெலுக் இந்தானில் பெர்சே ஆதரவாளர்களுக்கும் சிவப்புச் சட்டைக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. சிவப்புச் சட்டை தலைவர் ஜமால் முகமட் யூனுஸ் பெர்சே ஆதரவாளர்களிடமிருந்து ஒரு கொடியைப் பிடுங்க எத்தனித்த போது இம்மோதல் ஏற்பட்டது. லுமுட்டிலிருந்து தெலுக் இந்தானை நோக்கிச் சென்று கொண்டிருந்த பெர்சே…
ஜமால்- பெர்சே சர்ச்சை நிற்க வேண்டும்: தெங்கு அட்னான் கோரிக்கை
பெர்சேயும் செஞ்சட்டை இயக்கத் தலைவர் ஜமால் முகம்மட் யூனுசும் சர்ச்சையிடுவதை நிறுத்திக்கொள்ளாவிட்டால் கலவரம் வெடிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. “மனம் புண்படும்படி பேசாதீர்கள், இதுதான் நான் சொல்லக்கூடியது”, என அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கூறினார். “இவர் அவர் மனம் நோகுமாறு பேசுகிறார், அவர் இவருடைய …
இசி-இன் அதிகாரத்தைப் பறிப்பதைவிட அது சுதந்திரமாக செயல்படுவதுதான் முக்கியம்
சுதந்திரமாக செயல்படும் உரிமையை இழந்து பரிதவிக்கும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தைக் குறைப்பது இருக்கட்டும் அதற்குமுன் இசி இழந்து நிற்கும் சுதந்திரமாக செயல்படும் உரிமையைத் திரும்பப் பெற்றுக்கொடுப்பதுதான் முக்கியம் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். வியாழக்கிழமை பிகேஆர் எம்பி ரபிசி ரம்லி, கூட்டரசு அரசமைப்பில் திருத்தம் செய்து தேர்தல் ஆணையத்திடமிருந்து தேர்தல் …
ஜமாலுக்கு ஐஎஸ் தொடர்புண்டா; போலீசார் ஆராய வேண்டும், மசீச மகளிர்…
பெர்சேயில் ஐஎஸ் பயங்கரவாதிகள் ஊடுருவல் இருப்பதாகக் கூறும் சுங்கை புசார் அம்னோ தொகுதித் தலைவர் ஜமால் முகம்மட் யூனுசுக்கு அந்த இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புண்டா என்பதை போலீசார் ஆராய வேண்டும் என்று மசீச மகளிர் பகுதி கேட்டுக்கொண்டிருக்கிறது. அதன் தலைவர் ஹெங் சியாய் கை, ஐஎஸ் ஊடுருவல் …
எரிபொருள் கட்டணம் உயர்கிறது
நாளை முதல் ரோன்95 மற்றும் ரோன்97 பெட்ரோல் கட்டணம் ஒரு லீட்டருக்கு முறையே 10 சென் உயர்வு காண்கிறது, அதே வேளை, ஒரு லீட்டர் டீசல் 5 சென் உயர்வு காண்கிறது என்று ஓரியண்டல் டெய்லி கூறுகிறது. இன்று நள்ளிரவிலிருந்து ஒரு லீட்டர் ரோன்97 ரிம2.15க்கும், ஒரு…
வெளிநாட்டு மூலங்களிலிருந்து நன்கொடை பெறுவதைத் தடுப்பீர்: சீரமைப்புக் குழு பரிந்துரை
வெளிநாட்டுத் தரப்புகளிடமிருந்து அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் நன்கொடை பெறுவதைத் தடுக்க வேண்டும், அரசாங்கக் குத்தகைகளைப் பெறும் நிறுவனங்கள் எந்த வகை அரசியல் பங்களிப்பையும் செய்வதையும் தடை செய்ய வேண்டும். அரசியல் நிதியளிப்பு மீதான தேசிய ஆலோசனைக் குழு அதன் அரசியல் நிதியளிப்பு அறிக்கையில் முன்வைத்துள்ள 32 பரிந்துரைகளில் இவையும் …
‘ஜனநாயகத்துக்குக் குழி பறிப்பவர் நஜிப்’- மகாதிர் சாடல்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தம் எதிராளிகள் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்க்கப் பார்ப்பதாகக் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கும் வேளையில் அவரின் பரம வைரியான டாக்டர் மகாதிர் முகம்மட் ஜனநாயகத்தின் எதிரி நஜிப்தான் என்று சாடியுள்ளார். “நஜிப் அவரது அரசாங்கம் ஜனநாயக முறையில் அமைந்தது என்றும் அதை …
போட்டியிடும் திறன் குறைந்ததற்கு காரணம் 1எம்டிபி; மலேசியர்கள் அல்ல
உலகளவில் மலேசியாவின் போட்டியிடும் திறன் ஏழு இடங்களுக்கு இறக்கம் கண்டிருப்பதற்கு 1எம்டிபிதான் காரணமே தவிர கூட்டரசு அமைச்சர் ஒங் கா சுவான் கூறிக்கொண்டிருப்பதுபோல் பொதுமக்களின் குறைகூறல் காரணமல்ல என பாண்டான் எம்பி ரபிசி ரம்லி கூறினார். உலகப் பொருளாதார அரங்கின்(WEF) 138 நாடுகளை உள்ளடக்கிய அனைத்துலக போட்டியிடும் திறன் …
பௌத்த மயமாகும் தமிழர் தாயகம்; மறுக்க முடியாத ஆதாரங்கள் மூலம்…
ஜெனீவாவிலுள்ள ஐ நா மனித உரிமை கழகத்தின் 33வது கூட்டத் தொடரில் கலந்து கொண்ட உறுப்பு நாடுகள் மற்றும் சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் மத்தியில் பிரித்தானிய தமிழர் பேரவை சமர்ப்பித்த ஆவணங்கள் சிறிலங்காவின் முன்னைய அரசு மற்றும் இன்றைய "நல்லாட்சி" அரசின் நிலப் பறிப்பு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளது.…
கோயில் சிலைகளைச் சேதப்படுத்திய மருத்துவர் எதிர்வாதம் செய்ய பணிக்கப்பட்டார்
ஈப்போ செசன்ஸ் நீதிமன்றம், ஶ்ரீமுனீஸ்வரர் அம்மன் ஆலயச் சிலைகளை உடைத்துச் சேதப்படுத்தியதாகவும் கையில் தாக்குதல் ஆயுதமொன்றை ஏந்தியிருந்ததாகவும் குற்றஞ்சாட்ட 29வயது மருத்துவரை எதிர்வாதம் செய்யும்படி உத்தரவிட்டது. டாக்டர் ஃபாத்தி முன்ஷிர் நட்ஸ்ரிக்கு எதிராகக் குற்றம் சுமத்த தேவையான ஆதாரங்கள் இருப்பதாக நீதிபதி இக்மால் ஹிஷாம் முகம்மட் தாஜுடின் கூறினார்.…
போலீஸ் காவலில் இறந்தவர் உடல் இரண்டாவது பிணப் பரிசோதனைக்காக எச்கேஎல்…
இரண்டு வாரங்களுக்கு முன் போலீஸ் காவலில் இருந்தபோது இறந்த அஸ்ரி முகம்மட்டின் உடல் இரண்டாவது பிணப் பரிசோதனைக்காக இன்று கோத்தா பாருவிலிருந்து கோலாலும்பூர் மருத்துவமனை(எச்கேஎல்)க்குக் கொண்டு வரப்பட்டது. முதலாவது பரிசோதனையில் திருப்தி இல்லை என்று அஸ்ரியின் சகோதரி நோர்ஸியாஸ்மீரா முகம்மட் கோத்தா பாரு உயர் நீதிமன்றத்தில் மனு செய்து …
மலாய்க்காரரிடையே பிளவு அடுத்த தேர்தலில் டிஏபி-க்கு வாய்ப்பாக அமையுமா?
மலாய்க்காரர்கள் அரசியலில் பிளவுபட்டிருப்பது டிஏபி அரசியல் அரங்கில் கொடிகட்டி பறக்க வழிகோலும் என்று கூறப்படுவது குறித்துக் கருத்துரைத்த அம்னோ மூத்த தலைவர் தெங்கு ரசாலி ஹம்சா, இப்போது ஐந்து மலாய் அரசியல் கட்சிகள் இருப்பது அப்படிப்பட்ட எண்ணத்தைத் தோற்றுவித்திருப்பதாகக் கூறினார். “இப்படிப்பட்ட நிலைமையில் அடுத்த பொதுத் தேர்தலில் ஆதிக்கம் …
ஜெட் இயந்திரக் களவு, பணச்சலவை குற்றச்சாட்டுகளிலிருந்து இருவர் விடுதலை
அரச மலேசிய ஆகாயப் படையின் சார்ஜெண்ட் ஒருவரையும் ஒரு வணிகரையும் ஆகாயப் படையின் ஜெட் விமான இயந்திரங்கள் களவிலும் பணச் சலவை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாகச் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளிலிருந்து புத்ரா ஜெயா செஷன்ஸ் நீதிமன்றம் இன்று விடுவித்தது. என். தர்மேந்திரன், கே. இராஜேந்திரன் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு …
ஜாஹிட்: வறுமையில் வாடும் எல்லா தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பிரதிநிதிகளுக்கும் அரசாங்கம்…
துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, வறுமைப் பிடியில் சிக்கிக் கொண்டுள்ள முன்னாள் தேர்ந்தெடுப்பட்ட பிரதிநிதிகளுக்கு அரசாங்கம் கண்டிப்பாக உதவும் என்று உறுதி கூறினார். ரிம3,000-மும் அதற்குக் குறைவாகவும் பணி ஓய்வூதியம் பெறும் முன்னாள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மன்ற (முபாராக்) உறுப்பினர்களுக்கு உதவி தேவை என்று அதன் தலைவர் …
‘இசி வாக்காளர் பதிவைத் தடுக்க முயல்கிறதா?’
தேர்தல் ஆணையம்(இசி) பல கட்டுப்பாடுகளையும் இடையூறுகளையும் ஏற்படுத்துவதன்வழி வாக்காளர் பதிவு நடவடிக்கைக்குக் குழி பறிக்கப் பார்க்கிறது என சிலாங்கூர் டிஏபி குற்றம் சாட்டியுள்ளது. அக்டோபர் 3-க்குப் பிறகு சிலாங்கூர் டிஏபி-இன் வாக்காளர் பதிவு இயக்கங்கள் அத்தனையையும் நிறுத்திக் கொள்ளும்படி இசி தெரிவித்திருக்கிறாம். சிலாங்கூர் டிஏபி தலைவர் டோனி புவா …
ரோஸ்மாவின் பெர்மாத்தாவைத் தற்காத்துப் பேசுகிறார் டிஏபி பிரதிநிதி
பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் தலைமையில் செயல்படும் பெர்மாத்தாவின் சிறார் செறிவூட்டும் திட்டத்தைத் தற்காத்துப் பேச புதிதாக ஒருவர் வந்துள்ளார். அவர்தான் சிலாங்கூர் டிஏபி சட்டமன்ற உறுப்பினர் இயோ பீ இன். டமன்சாரா உத்தாமா பிரதிநிதியான இயோ, சிறார்களின் தொடக்கநிலை பராமரிப்பிலும் கல்வியிலும்(இசிசிஇ) அரசாங்கம் செய்துள்ள முதலீட்டால் வரிச் …
எம் எச் 47மீதான அறிக்கை இன்று வெளியீடு
2014-இல் கிழக்கு யுக்ரேய்ன் வான்வெளியில் மலேசிய விமான நிறுவனத்தின் விமானமொன்று சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம்மீது விசாரணை நடத்திய அனைத்துலக சட்டக் குழு அதன் விசாரணை முடிவுகளை இன்று அறிக்கையாக வெளியிடும். ஆனால், அதில் சட்ட, அரசியல் சிக்கல்கள் காரணமாக சம்பத்துக்கு எந்தத் தரப்பும் பொறுப்பாக்கப்பட்டு குற்றம் சுமத்தப்படாது என்று …
திடீர் தேர்தல் இல்லை என்கிறார் பிரதமர், ஆனால்………..
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தம் அரசாங்கத்துக்கு அளிக்கப்பட்ட ஆளும் அதிகாரம் 2018-இல் முடிவுக்கு வரும்வரையில் திடீர் தேர்தல் நடப்பப்போவதில்லை என்று கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெர்லினில் செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது “எந்தவொரு தனிக் காரணத்துக்காகவும்” தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கில்லை என்று நஜிப் குறிப்பிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது. ஆனால், …
ஜெர்மனிக்கு மேலும் அதிகமான மாணவர்களை அனுப்புவது குறித்து மலேசியா பரிசீலிக்கும்
மலேசியா மேல்படிப்புக்காக மேலும் அதிகமான மாணவர்களை ஜெர்மனிக்கு அனுப்புவது குறித்து பரிசீலிக்கும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார். இப்போதைக்கு 634 பதிவுபெற்ற மலேசிய மாணவர்கள் ஜெர்மனியில் கல்வி பயின்று வருகின்றனர். “ஜெர்மனியில் டியுஷன் கட்டணம் இலவசம் என்று அறிகிறேன். மொழி ஒன்றுதான் பிரச்னை. மாணவர்கள் ஜெர்மன் …
தியான் சுவா தேச நிந்தனைக் குற்றம் புரிந்திருக்கிறார்: நீதிமன்றம் தீர்ப்பு
பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா மூன்று ஆண்டுகளுக்குமுன் ஒரு கருத்தரங்கில் ஆற்றிய உரை தேச நிந்தனைக் கருத்துகளைக் கொண்டது என கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. தியான் சுவா பயன்படுத்திய சொல்கள் தேச நிந்தனைச் சட்டம் பகுதி4(1) (பி)-இன்படி நிந்தனைக்குரியவை என நீதிபதி சுல்கர்னைன் ஹசான் …
ஆண்டு இறுதிக்குள் புதிய எதிரணிக் கூட்டணி அமையும்: முகைதின் கணிப்பு
ஊழல் நிரம்பிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் ஆளும் கட்சியிலிருந்து அதிகமான உறுப்பினர்கள் வெளியேறி வருவதால் ஆண்டு இறுதிக்குள் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணி அமைக்க முடியும் என முகைதின் யாசின் நம்புகிறார். புதிய கூட்டணி, பில்லியன் -டாலர் ஊழல் புரிந்துவிட்டு என்னதான் நெருக்குதல் கொடுத்தாலும் பதவியைவிட்டு அகல …


