சமீபத்தில் செகாமட்டில் மூன்று உயிர்களைப் பலிவாங்கிய விபத்தில் தொடர்புடைய டிரெய்லர் நிறுவனம் குறித்து உடனடியாக தணிக்கை மற்றும் விசாரணை நடத்துமாறு சாலைப் போக்குவரத்துத் துறை (RTD) மற்றும் நிலப் பொதுப் போக்குவரத்து முகமை (Apad) ஆகியவற்றுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மெத்தாம்பேட்டமைன் (methamphetamine) போதைப்பொருள் பரிசோதனையில் நேர்மறை முடிவைப் பெற்ற தனது…
ஜமால்: மரியாவிடம் மன்னிப்பு கேட்கமாட்டேன்
அம்னோவின் சுங்கை பெசார் தொகுதியின் தலைவரும் சிவப்புச் சட்டை அணியின் தலைவருமான ஜமால் முகமட் யுனுஸ் பெர்சேயின் தலைவர் மரியா சின் கோரியிருந்தவாறு தாம் அவரிடம் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்று கூறினார். இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) பெர்சேயில் ஊடுறுவியிருப்பதாகவும் அது அரசாங்கத்தைக் கவிழ்க்கப் போவதாகவும் ஜமால் விடுத்திருந்த…
அன்வார்: ஹராபானும் பெர்சத்துவும் பாஸுடன் பேச்சு நடத்தும்
பக்கத்தான் ஹராபனும் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து)வும் எதிரணியை வலுப்படுத்துவதற்காக பாஸ் கட்சியுடன் பேச்சு நடத்தும் என எதிரணி முன்னாள் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். இன்று காலை கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் தாமும் பெர்சத்து இடைக்காலத் தலைவர் முகைதின் யாசினும் சந்தித்தபோது மற்றவற்றோடு இது குறித்தும் …
அரசு அதிகாரிகள் எளிதாக தப்பித்துக் கொள்கிறார்கள்: இஏஐசி வருத்தம்
அமலாக்க அதிகாரிகளின் ஒழுங்கீனங்களை விசாரிக்கும் அமலாக்க நிறுவன நேர்மை ஆணையம்(இஏஐசி) தன்னுடைய பரிந்துரைகள் பெரும்பாலும் மதிக்கப்படுவதில்லை என வருத்தப்படுகிறது. ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் எளிய தண்டனைகளை விதிப்பதால் தவறு செய்தவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள் என இஏஐசி தலைவர் யாக்கூப் முகம்மட் சேம் கூறினார். வழக்கமாக, ஆணையம் விசாரணை …
அன்வாரைச் சந்தித்தார் முகைதின்
பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து) இடைக்காலத் தலைவர் முகைதின் யாசின் ஒரு வழக்குக்காக இன்று கோலாலும்பூர் உயர் நீதி மன்றம் வந்திருந்த பிகேஆர் ஆலோசகர் அன்வார் இப்ராகிமைச் சென்று கண்டார். நீதிமன்றத்தில் சாட்சிகளுக்கான அறையில் 30 நிமிடம் அன்வாருடன் முகைதின் பேசினார். அதன்பின்னர் செய்தியாளர்கள் அவரிடம் அச்சந்திப்பு குறித்து …
ஆயர் பானாசில் புகை கையெறிக் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன
நேற்று, கோலாலும்பூர் ஸ்தாபாக் பிபிஆர் அடுக்குமாடி வீடுகளின் குப்பைத் தொட்டியில் புகை கக்கும் இரண்டு கையெறிக் குண்டுகளை போலீசார் கண்டெடுத்தனர். அவை வெள்ளை பிளாஸ்டிக் தாளில் சுற்றப்பட்டு குப்பைத் தொட்டியில் போடப்பட்டிருந்தன. நேற்று பிற்பகல் 3.30-க்கு போலீசார் குற்றச்செயல்களுக்கு எதிராக ‘Op Cegah Jenayah’ நடவடிக்கையை மேற்கொண்டிருந்தபோது அக் …
உலக வங்கி: 2017-இல் மலேசியப் பொருளாதாரம் மீண்டும் துள்ளல் நடை…
2017, 2018-இல் எண்ணெய் விலைகளும் ஏற்றுதிமதிகளும் உயர்வதைத் தொடர்ந்து மலேசிய பொருளாதார வளர்ச்சியும் மீட்சிபெறும் என எதிர்பார்க்கப்படுவதாக கிழக்கு ஆசியா, பசிபிக் வட்டார தலைமை பொருளாதார அதிகாரி சுதிர் ஷெட்டி கூறினார். கடந்த ஆண்டில் 5 விழுக்காடாக இருந்த மலேசிய பொருளாதார வளர்ச்சி விகிதம் 2016-இல் 4.2 விழுக்காட்டுக்குக் …
சஞ்சீவனுக்கு எதிரான மேல்முறையீட்டை போலீஸ் மீட்டுக்கொண்டது
மலேசிய குற்றச்செயல் கண்காணிப்புப் பணிப்படை (மைவாட்ச்) தலைவர் ஆர்.ஸ்ரீசஞ்சீவனைக் குற்றச்செயல் தடுப்புச் சட்ட(பொகா)த்தின்கீழ் தடுத்து வைப்பதற்காக கூட்டரசு நீதிமன்றத்தில் செய்திருந்த மேல்முறையீட்டை போலீஸ் இன்று மீட்டுக்கொண்டது. வழக்கைத் தொடரும் எண்ணமில்லை என்று அரசுத்தரப்பு வழக்குரைஞர் முகம்மட் சிந்தி நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து ஐவரடங்கிய நீதிபதிகள் …
1எம்டிபியுடன் தொடர்புள்ளதாகக் கூறப்படுவதை ஆஸ்திரேலிய வங்கி மறுத்தது
ஆஸ்திரேலிய வங்கி ANZ-க்கு 1எம்டிபி விவகாரத்தில் தொடர்பில்லை. இதை அவ்வங்கியின் தலைமை செயல் அதிகாரி ஷேன் எலியட் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் பொருளாதாரக் குழுவிடம் தெரிவித்தார். எலியட் வங்கியின் செயல்பாடு குறித்து நாடாளுமன்றக் குழுவிடம் விளக்கமளித்தார். “1எம்டிபியுடனோ அங்கு நடந்துள்ளதாகக் கூறப்படுவதுடனோ வங்கிக்கு எந்தத் தொடர்புமில்லை”, என்றாரவர். மலேசிய வங்கியான …
மரியா: ஜமால், மன்னிப்பு கேள், இல்லையேல் சட்ட நடவடிக்கை
பெர்சேயின் தலைவர் மரியா சின் அப்துல்லா சிவப்புச் சட்டைகளின் தலைவரும் சுங்கை பெசார் அம்னோ தொகுதி தலைவருமான ஜமால் முகமட் யுனுஸுக்கு அனுப்பியுள்ள வழக்கறிஞர் கடிதத்தில் மன்னிப்பு கோருமாறு அவருக்கு 48 மணி நேர அவகாசம் அளித்துள்ளார். மன்னிப்பு கோரத் தவறினால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும்…
சிவப்புச் சட்டை தலைவரை கைது செய்து குற்றம் சாட்ட வேண்டும்,…
சிவப்புச் சட்டை கூட்டத்தினரின் தலைவர் ஜமால் முகமட் யுனுஸ் மீது உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று 32 அரசாரா அமைப்புகள் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்காரை கேட்டுக்கொண்டுள்ளன. கடந்த வாரம், பெர்சே 5 வாகன அணியைப் பின்தொடர்ந்து அதில் பங்கேற்றவர்களுக்கு தொல்லை கொடுத்து,…
கோத்தா கினாபாலுவில் அரசு அதிகாரிகள் இருவர் கைது;ரிம3 மில்லியன் பறிமுதல்
குத்தகை வழங்கியதில் அதிகாரத்தைமீறி நடந்து கொண்டார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கோத்தா கினாபாலுவில் அரசாங்க உயர் அதிகாரிகள் இருவர் இன்று கைதானார்கள். அவர்களைக் கைது செய்த மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) அதிகாரிகள் அவர்களில் ஒருவரின் இரும்புப் பெட்டகத்திலிருந்து ரிம3 மில்லியனையும் கைப்பற்றினர். 51, 54 வயது நிரம்பிய அவ்விருவரும் அவர்களின் …
ஐஎஸ் தலைவருக்கு விஷமூட்டப்பட்டதாக தகவல்
இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதியும் அவரின் முக்கிய உதவியாளர்கள் மூவரும் விஷ உணவருந்தி கவலைகிடமான நிலையில் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. ஈராக், நினவே பெ’ஆஜ் மாவட்டத்தில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவில் நஞ்சு கலந்திருந்ததாக பிரஸ்ட் டிரஸ்ட் அப் இந்தியா (பிடிஐ) கூறியது. அந்நால்வரும் விஷத்தால் …
முக்ரிஸ்: மகாதிர்- பேரரசர் சந்திப்பு இரகசிமானது; அதை மேலும் கிளற…
பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து), கடந்த மாதம் தன் கட்சி ஆலோசகர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கும் பேரரசருக்குமிடையில் நிகழ்ந்த சந்திப்பின்போது நடந்தது என்னவென்பதை அறிந்துகொள்ள முனையாது. குடிமக்கள் பிரகடனம் தொடர்பில் நடைபெற்ற அச்சந்திப்பு இரகசியமானது, அவ்வாறே அது இருக்க வேண்டும் என்று பெர்சத்து உதவித் தலைவர் …
சாபா எதிரணித் தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேற பணம் கொடுக்கப்பட்டதா? மறுக்கிறார்…
முன்னாள் அம்னோ உதவித் தலைவர் ஷாபி அப்டால் எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர்களின் கட்சியை விட்டு வெளியேற பணத்தை வாரி இறைத்தார் என்று கூறப்படுவதை பெனாம்பாங் எம்பி டேரல் லெய்கிங் மறுக்கிறார். எதிரணித் தலைவர்களுக்குப் பணம் கொடுப்பட்டதாக சரவாக் டிஏபி தலைவர் சோங் சியாங் ஜென் நேற்று குற்றஞ்சாட்டி இருந்தார்.…
சாபாவில் ஆகாயப் படை ஹெலிகாப்டர் பள்ளியில் விழுந்து நொறுங்கியது
இன்று காலை சாபாவில் பாலூங் இடைநிலைப் பள்ளித் திடலில் அவசரமாக தரை இறங்க முயன்ற அரச ஆகாயப் படை ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் எனச் செய்திகள் கூறுகின்றன. சமூக வலைத்தளங்களில் வலம் வரும் நிழல்படங்கள் ஒருவருக்குத் தலையில் காயம் பட்டிருப்பதைக் …
கைது செய்யப்பட்ட ஆஸ்திரேலியர்களில் ஒருவர் ஆசி அமைச்சின் ஆலோசகராம்
ஞாயிற்றுக்கிழமை கார் பந்தயத்தின் போது மலேசியக் கொடியை உள்ளாடையாக அணிந்து அநாகரிகமாக நடந்து கொண்டதற்காக கைதான ஒன்பது ஆஸ்திரேலியர்களில் ஒருவர் ஆஸ்திரேலிய அமைச்சர் ஒருவரின் ஆலோசகராம் . ஜேக் வாக்கர், அமைச்சர் கிறிஸ்டபர் பைனுக்கு தற்காப்புப் புத்தாக்க ஆலோசகராக பணியாற்றுகிறார். மலேசிய கிராண்ட் பிரி பந்தயத்தில் ஆஸ்திரேலியர் டேனியல் …
அமைதியான பெர்சேயுடன் சிவப்புச் சட்டைகளை ஒப்பிடுவது முட்டாள்தனமானது, எரிக் பால்சன்
கடந்த சனிக்கிழமை பெர்சே 5 இன் வாகன அணியை தாக்குவதற்கு சிவப்புச் சட்டையினரை அனுமதித்ததற்காக மனித உரிமைகள் வழக்குரைஞர் எரிக் பால்சன் அரசாங்கத்தை சாடினார். அமைதியான பெர்சே 5 வாகன அணிக்கு தொல்லை கொடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் சிவப்புச் சட்டையினர் பங்கேற்றனர் என்று அவர் கூறினார். பெர்சேயுடன்…
பேரணியில் கலந்துகொள்வதில்லை என்ற பாஸின் முடிவை பெர்சே மதிக்கிறது
தூய்மையான நியாயமான தேர்தலுக்காக போராடும் பெர்சே, நவம்பர் 19-இல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள ஐந்தாவது பேரணியில் கலந்துகொள்வதில்லை என்ற பாஸ் கட்சியின் முடிவை மதிக்கிறது. “அவர்களின் முடிவை மதிக்கிறோம். (மனமாறி) திரும்பி வந்தால் அதையும் வரவேற்போம்”, என பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா மலேசியாகினியிடம் தெரிவித்தார். “பேரணி குறித்து …
முதுகில் குத்துவோர் அம்னோவுக்கு வேண்டாம்
அம்னோவுக்கு முதுகில் குத்துவோர் தேவையில்லை என்று கூட்டரசு பிரதேச அம்னோ இளைஞர் தலைவர் முகம்மட் ரஸ்லான் ரபி கூறினார். முகம்மட் எஸாம் முகம்மட் நூர், கட்சி ஊழல் ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதால் அதிலிருந்து வெளியேறுவதாகக் அறிவித்திருப்பதை அடுத்து ரஸ்லான் இவ்வாறு கூறினார். “அவர் செனட்டாராக்கப்பட்டார், நிர்வாகத்தை மேம்படுத்த …
லாஜிம் வெளியேறியதில் வான் அசிசாவுக்கு வருத்தம்தான்; ஆனாலும் அனைவரையும் ஒன்றிணைக்க…
சாபாவில் மாநிலத் தலைவர் லாஜிம் உகினும் மற்றவர்களும் புதிய கட்சி ஒன்றை அமைப்பதற்காக கட்சியிலிருந்து விலகிக் கொண்டிருப்பது வருத்தமளிப்பதாக பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் கூறினார். சட்டமன்ற உறுப்பினர்களோ நாடாளுமன்ற உறுப்ப்பினர்களோ எந்தக் கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ அந்தக் கட்சியைக் கைவிடுவது ஏற்கத்தக்கதல்ல என்றாரவர். ஆனாலும், …
போயும் போயும் மகாதிர்தான் கிடைத்தாரா ஜனநாயகம் பாடம் நடத்த?
ஒரு காலத்தில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் யாரையெல்லாம் சிறையில் தூக்கிப் போட்டாரோ அவர்கள் அவரிடமே சென்று ஜனநாயகப் பாடம் கற்பது வேடிக்கையாக இருக்கிறது என அம்னோ அமைச்சர் ஒருவர் எதிரணியினரைப் பார்த்து கேலி செய்கிறார். “மலேசிய வரவாற்றை அறிந்தவர்களுக்கு டாக்டர் மகாதிர் முகம்மட் ஜனநாயகம் பற்றிப் …
ஹாடி: இஸ்லாம் மட்டுமே ஆள முடியும்; மற்றவர்கள் “பாக் துருட்”
இஸ்லாம்தான் தலைவராகவும் ஆட்சியாளராகவும் இருந்தாக வேண்டும். இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் பின்பற்றுபவர்களாக (பாக் துருட்) இருக்க வேண்டும் என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறுகிறார். சமயத்தையும் அரசியலையும் வெவ்வேறாக தனிமைப்படுத்த வேண்டாம் என்று ஹாடி கூறியதாக சினார் ஹரியான் இன்று எழுதியுள்ளது. இஸ்லாத்திற்கு முன்னுரிமையளிப்பதற்கான மாற்றங்களைச்…
எதிரணி என்னதான் சத்தமிட்டாலும் அரசியல் நிதியளிப்புமீதான புதிய சட்டங்களைத் தடுக்க…
அரசியல் நிதியளிப்புமீதான புதிய சட்டங்கள் தொடர்பான 32 பரிந்துரைகளை பக்கத்தான் ஹராபான் முழுமூச்சாக எதிர்த்தாலும் தேசிய ஆலோசனைக் குழு அப்பரிந்துரைகளை அமைச்சரவையிடம் விரைவில் ஒப்படைக்கும். “ஆமாம். அதைத்தான் செய்யப் போகிறோம். அதனால் மக்களுக்கு நன்மை என்றுதான் நினைக்கிறோம்”, என அக்குழுவின் தலைவரும் பிரதமர் துறை அமைச்சருமான பால் லவ் …


